Thursday, January 11, 2018

Speak harsh words to bad people

நீதிவெண்பா - 22
================

"துன்னு மிருமலுந் துர்ச்சனரு மொக்குமே!
 மன்னு மினிமையான் மாறாகிப் - பன்னுங் 
 கடுவுங் கடுநேர் கடுமொழியுங் கண்டாற் 
 கடுக வசமாகை யால்!" 

பொருள்: முறையே பொருந்திய தித்திப்பால் அல்லது இன்மொழியால் ஏறு மாறாகி, தாழ்வாகக் கூறும் கசப்பையும், விஷத்துக்கொப்பான வன்மொழியையும் கண்டால், விரைவில் வசப்படுதலால், உடலில் நிலைத்த இருமல் நோயும், துஷ்டரும் ஒப்பாவார். 

கருத்துரை: இனிமைக்கு வசமாகாத இருமல் நோயைப்போல, இன்சொல்லுக்கு வசமாகார் துஷ்டர். இருமல் நோயாளர், தித்திப்பான பொருளை உண்டால், நோய் அதிகமாகும் என்பது அனுபவ சித்தம். கசப்பான பொருளையுண்டால், இருமல் நோய் வசப்படும். அதுபோல, வன்மொழி பேசினாலன்றித் துஷ்டர் கட்டுப்படமாட்டார். 

#நீதி_வெண்பா

No comments:

Post a Comment