Monday, September 15, 2025

19th day after mahabharata war

படித்ததில் பிடித்தது!

பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்!
அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும்.

போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். 

தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள்.

மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். 

அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.

குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.

தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன.

மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின.

தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.

பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன். 

மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான்.

வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன.

அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.

'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. 

பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்' என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன்.

 ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை.

அர்ஜுனன் திகைத்தான்.

'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்' என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன்.

அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார்.

"அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. 

முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார்.

கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான்.

அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே' என ஒரு கணம் ஏங்கினான்.

"கர்மயோகம்' என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்?

இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை?

நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?' என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன்.

அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார்.

அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார்.

கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது.

எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர்.

யாருக்கும் எதுவும் புரியவில்லை.

''அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன.

அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன்.

நான் சாரதியாக அமர்ந்துகொண்டிருந்ததால்தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன.

படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு.

இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன்.

நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும்.

அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன்.

இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய்.

இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்!

தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய்.

என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்- காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன். 

இருந்தாலும், 

உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது.

அது தவறு.

இதோ... 
உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்'' என்று, 
நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன்.

அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம்

அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்துகிடந்தான்.

வாழ்க்கை எனும் ரதத்தினில், 
கடவுளை சரணடைந்தால், 
இறுதி வரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவிப்பிணியினை கடந்தேற, 
சாரதி போல் நம்மை நடத்தி செல்வார். 

எனவே அவனை கேள்வியேயில்லாமல் சரணடைவோம்.
 *மனதை கவர்ந்த பதிவு*

👉சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

👉பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

👉தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

👉பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

👉இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*

*👉பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*

👉செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

👉வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*

👉பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

*👉இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

*🙇ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

*🙏மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!* ********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********

Sunday, September 14, 2025

182 facts about Lord Shiva

#சிவபெருமான்_பற்றிய182_தகவல்கள்🙏
    1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)..

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது..

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி

57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்

58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்

59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்

60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்

61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்

62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு

64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி

65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்

66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய

67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம

68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)

69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்

70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்

71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி

72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்

75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்

76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81

77.பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்

79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி

80.அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி

82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி

84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்

85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்

86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்

87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்

89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்

90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி..

91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்

92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்

94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)

96.அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)

98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்

99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்

100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்

101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்

102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்

103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)

104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்

105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்

106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்

107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்

108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.

109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்

110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்

114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி

115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்

118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்

119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்

120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்..

121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்

122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்

123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்

124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்

125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்

126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்

127. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை

128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்

132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்

133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்

133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு

134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்

135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்

136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.

137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்

138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி

139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)

140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர்

141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்

142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)

143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி

145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்

146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை

147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)

148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)

149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)

150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்..

.
151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்

152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)

153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்

154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்

155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள்( திருவாரூர்)

157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்

158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்

160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்

161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்

162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்

164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்

165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)

166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்

167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்

168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)

169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14

170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்

171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.

172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி

173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்

174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்

175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி

176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்

177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி

178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்

179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்

180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்

181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64

182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்.
     #ஓம்நமசிவாய 🙏

Friday, September 12, 2025

Soordas story

ஸ்ரீ சூர்தாஸ்
தில்லி அருகே சிஹி என்ற கிராமத்தில் 1478 இல் அந்தப் பார்வையற்ற குழந்தை பிறந்தது.
பிறவிக்குருடர் ஆதலால் அவரை 
வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். 
தாய் தந்தை சகோதரர்கள் ஆதரவின்றி
ஆறு வயதில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சூர் தாஸ் மெதுவாக நடந்து உத்திர பிரதேசத்தில் 
ப்ரஜ் என்கிற ஊருக்கு வந்தார்.. 
கண்ணன் பிறந்த மதுரா அருகில் உள்ளது இந்த ப்ரஜ் கிராமம்.
சிறு வயதில் பெற்றோராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட சூர் தாஸ் தனிமையில் தான் வளர்ந்தார். 
ஒரு நாள் அவர் உட்கார்ந்திருந்த தெருவில் சிலர் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு சென்றது காதில் விழுந்தது.
" எனக்கும் கிருஷ்ணன் மேல் பாட வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? 
ஏன் முடியாது 
ஒரு நாள் என்னையும் கிருஷ்ணன் பாட வைப்பான்" என்ற நம்பிக்கையோடு மெதுவாக அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் ஒருவன்
"டேய் ஏன் எங்களை தொடர்ந்து வருகிறாய்?""
'கிருஷ்ணன் பாட்டு நீங்கள் பாடுவது பிடிக்கிறது. எனக்கும் உங்களை மாதிரி பாட ஆசையா இருக்கு"
"சரி வா" என்று அழைத்து சென்றது கூட்டம்.
இரவு வந்தது. 
சாப்பிட ஆகாரம் கொடுத்தார்கள். 
எதற்கு இந்த குருட்டு பையனை அழைத்து போகவேண்டும். அவனால் உபத்திரவம் தானே வந்து சேரும்" என எண்ணிய அந்த பக்தர் கூட்டம் மறுநாள் காலை அவரை அங்கேயே விட்டு விட்டு சென்றது.
ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டு கட்டி கிருஷ்ணன் பாடல்களை பாடினார் சூர்தாஸ். 
அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர் அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். 
இவரின் பாட்டை கேட்டு வருவோர் போவோர் கொடுக்கும் ஆகாரமும்
கிராமத்து பெண்கள் கொடுக்கும் உணவே பசியை போக்கியது.
மக்கள் பேசும் பேச்சுகள் காதில் விழுவது தான் உலக ஞானம்.
உன் பெயர் என்ன என்று கேட்டால் 
சூர் என பதிலாய் சொன்னான்.
சூர் என்றால் குருடன் என அர்த்தம்
அதனையே தன் பெயராக ஆக்கிக் கொண்டார்.
பதினாலு வயதில் 
இந்த குருடான பாலகனிடம் ஒருவர் ஏதோ கேட்க
இவர் சொன்னது நடந்தது.
மக்களுக்கு குறி சொல்ல சொல்ல
இவர்
சொன்னது நடந்தது. 
ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர். 
"இவர் ஒரு அதிசய பிறவி" என்று அந்த ஊரே கொண்டாடி நம்பிக்கை வைத்தனர்.
மாலை நேரத்தில் 
நேரம் கிடைக்கும் நேரத்தில்
கிருஷ்ணனை பற்றி இவர் பாடும் பாடலை கேட்க தனி கூட்டமும் வந்தது.
அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனின் சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கேயோ
காணாமல் போய் விட்டான்.
பஞ்சாயத்து தலைவன் திண்டாட சிலர் சூர் தாஸிடம் கேட்கலாமே என சொன்னவுடன்
சூர் தாஸ் 
முன் வந்து நின்று என் பையனை கண்டுபிடிக்க உபாயம் கூறுங்கள் என்றார்.
சூர் தாஸ்
மனதில் தோன்றிய ஏதோ ஒரு இடத்தின் பெயரை சொல்லி அங்கே போய் பார் உனக்காக அழுகிறான் என்று சொல்ல, 
அந்த பஞ்சாயத்து தலைவர் சூர்தாஸ் சொன்ன இடத்தில் சென்று பார்க்க அந்த பையன் அழுதுகொண்டு நின்றான். 
பஞ்சாயத்து தலைவர்
கிருஷ்ணர் அருளால் சூர் தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் அமைத்துக் கொடுத்தார்.
ஊர்க்காரர்கள் ஒரு தம்புராவை சூரதாஸிடம் கொடுத்தார்கள்.
அதை உபயோகித்துக் கொண்டே ஏதோ ஒரு சுருதியில் அதை சேர்த்து கூடவே கிருஷ்ணரை பாடுவார் சூர்தாஸ். 
சிஷ்யர்கள் பலர் சேர்ந்தார்கள். அவர்கள் தான் சூர் தாஸ் பாட பாட எழுதி வைத்தவர்கள்.
கிருஷ்ணரை பற்றி பாடிய
சுமார் எட்டாயிரம் பாடல்கள் கிடைத்துள்ளது.
கண்ணன் சூர்தாஸரை காண வந்து,
அவர் முன் அமர்ந்து
சூர்தாஸரே என்னை பாருங்கள்
என்றார்.
கண்களை திறந்து கிருஷ்ணரை பார்த்து கண்ணா கண்ணா என 
மகிழ்ச்சி அடைந்தார் 
கிருஷ்ணர்
சூர்தாஸரே என்ன வரம் வேண்டும் என கேட்க
சூர்தாஸரோ என்னை மீண்டும்
குருடனாக்கி விடுங்கள்
தங்களை கண்ட கண்கள் இனி யாரையும் பார்க்கவே கூடாது என வரம் கேட்க கிருஷ்ணரும்
ஆகட்டும் என்றார்.
சூர்தாஸர் மீண்டும் குருடரானார்.
ஒரு இரவு கண்ணன் சூர் தாசை 
"சூர் தாஸ் இங்கிருந்து கிளம்பி நீ பிருந்தாவன் வா. நான் அங்கே உனக்காக காத்திருக்கிறேன்." என்றார். 
சூர் தாஸ் தனியாக பிருந்தாவன் கிளம்புகிறேன் என சொன்னவுடன்
சிஷ்யர்கள் வருந்தினார்கள்.
"ஏன் எங்களை விட்டு போகிறீர்கள். நாங்கள் என்ன தப்பு, அவமரியாதை செய்தோம்?"
"அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் பிருந்தாவனம் செல்ல வேண்டும்
கிருஷ்ணர் அழைத்துள்ளார்" என்றார்.
வழியெல்லாம் கண்ணனை பாடிக்கொண்டே செல்கிறார். 
கிராமங்களில் மக்கள் சூர்தாஸரை இங்கேயே இருங்கள் என கேட்க
"என்னை கிருஷ்ணர் பிருந்தாவனம் அழைத்துள்ளார்" என்று ஒரே பதிலை அனைவரிடமும் சொல்கிறார்.
சூர்தாஸின் கால்கள் பிருந்தாவனத்தை நோக்கியே நகர்கின்றன. 
போகும் வழியில் காட்டில் ஒரு பெரிய பாழும் கிணறு ஓர் அடி எடுத்து வைத்தால் விழுந்து விடுவார்.
அவரை ஒரு சிறுவன் தடுத்து நிறுத்தினான்.
"யாரப்பா நீ"யென சூர்தாஸ் கேட்க
"மாடு மேய்க்கும் சிறுவன்" என சிறுவன் கூறியதும்
கிருஷ்ணா கிருஷ்ணா என பாடுகிறார். 
"என்னை பிருந்தாவனத்தில் கொண்டு சேர்த்து விடு கிருஷ்ணா" என கூறிய சூர்தாஸை
"எனக்கு மாடு மேய்க்கும் வேலை இருக்கிறது
பிருந்தாவன சாலை வரை வருகிறேன்.
இந்த 
குச்சியின் முனையை பிடித்து கொள்ளுங்க என சொன்ன சிறுவனிடம்
உன் கையை கொடுக்காமல்
குச்சியின் முனையை பிடிக்க ஏன் சொல்கிறாய் என சூர் தாஸ் கேட்டவுன்
சிரித்த சிறுவன்
மாடுகள் ஆபத்தில் சிக்கி கொண்டால் அப்படியே குச்சியை விட்டு விட்டு ஓட ஏதுவாக இருக்கும்
என்றார்.
குச்சியை பிடித்தவண்ணம் பேச்சு கொடுத்து வந்தவர் அந்த சிறுவன் கிருஷ்ணன் என்பதை ஊர்ஜிதம் செய்தார்.
பிருந்தாவனம் சாலை வந்துவிட்டது 
இப்படி செல்லுங்க என்று சொன்ன கண்ணனின் கையை தட்டுதடுமாறி பிடிக்கிறார் சூர்தாஸர்.
கையை விடுங்கள் என கூறி ஓடிய கண்ணனிடம்
என்றோ உன்னை என் மனதில் சிறை வைத்துவிட்டேன் என கூறிய சூர்தாஸை மகிழ்ச்சியோடு
கட்டிக்கொண்டார் கிருஷ்ணர்.
பிருந்தாவனம் வந்து சேர்ந்த சூர்தாஸ் 
பிருந்தாவனத்திலேயே கண்ணன் மேல் பாடல்கள் இசைத்தவாறு வாழலானார். 
அப்போது ஒருநாள் அவரைத் தேடிவந்தார், அவரது பாடல்களின் சிறப்பை அறிந்த இன்னொரு கவிஞரும் ஆசார்யருமான வல்லபாச்சாரியர். 
மதுராஷ்டகம் உள்ளிட்ட அற்புதமான கிருஷ்ண பக்தித் தோத்திரங்களை எழுதியவர்
வல்லபாச்சாரியர்
சூர்தாஸுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார். 
கோவர்த்தன் என்ற இடத்தில் உள்ள கண்ணன் ஆஸ்ரமான ஸ்ரீநாத் கோயிலில் அவரைப் பிரதான பாடகராகவும் நியமித்தார் வல்லபாச்சாரியார். 
அவரது எட்டுப் பிரதான சீடர்களில் சூர்தாஸ் முதன்மைச் சீடராகக் கொண்டாடப்படலானார். 
சூர்தாஸின் இசைப் பெருமை அறிந்து இசை ரசிகரான அக்பர், தாமே அவரைத் தேடிவந்து அவர் பாட்டைக் கேட்டதாகவும் வரலாறு சொல்கிறது. 
சூர்தாஸ், கண்ணனை மட்டுமே உறவாகக் கொண்டு, அந்த உறவின் ஆதாரத்திலேயே வாழ்வை நடத்தி இறுதியில் (1573 இல்) கண்ணனுடனேயே கலந்து விட்டார்.

Thursday, September 11, 2025

Tell the truth at least at the time of death - Joke

மருத்துவமனையில் இறுதி மூச்சி வாங்கும் அப்பா கேட்கிறார் மகனிடம்: "என்னால் மறக்க முடியாத ஒன்று.. நீ ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாற்றினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..."
"அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?"

"இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?"

"நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.."

" ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன் இல்லையே?'"

"சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி"

"அது எப்படி?'

"நான் சேர்த்தது. 9. ஐ.."

😳😳😳😳

Reduce speech

*இன்றைய சிந்தனை*🙏🙏🙏🙏

சிந்தனை பெருக பெருக எண்ணம் உயரும்
எண்ணம் உயர உயர பேச்சு சுருங்கும்
பேச்சு சுருங்க சுருங்க செயல் சிறக்கும் 
செயல் சிறக்க சிறக்க புகழ் கூடும்      
புகழ் கூட கூட பொருள் சேரும்
பொருள் சேர சேர மகிழ்வு நிறையும்  
மகிழ்வு நிறைய நிறைய வாழ்வு மலரும்

வாழ்வு மலர மலர மமதை ஏறும் 
மமதை ஏற ஏற பேச்சு விரியும்
பேச்சு விரிய விரிய செயல் சுருங்கும்
செயல் சுருங்க சுருங்க புகழ் குறையும்
புகழ் குறைய குறைய செல்வம் கரையும்
 செல்வம் கரைய கரைய வாழ்வு இருளும்
 வாழ்வு இருள இருள சிந்தனை பெருகும்.....

*இது வாழ்க்கை எனும் வட்டம்*

மீண்டும் சிந்தனை பெருக பெருக.....

*ஆதலின் சிந்தித்து எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்*🙏🙏🙏🙏

Tuesday, September 2, 2025

Mahalaya Paksha questions and answers

🌑🌑🌑🌑🌑

*மஹாளய / பித்ரு பக்ஷ கேள்விகள்*
---------------------------------

1. தினமும் தர்ப்பணம் செய்பவர்கள் 15 நாட்களுக்கு செய்ய வேண்டுமா அல்லது 16 நாட்களுக்கு செய்ய வேண்டுமா?

சாஸ்திரங்களின்படி, இந்த இரண்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டவைதான். 15 அல்லது 16 நாட்களுக்கு செய்யலாம். இது உங்கள் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. நீங்கள் இப்போதுதான் முதல் முறையாக செய்ய ஆரம்பிக்கிறீர்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் என்ன வழக்கம் என்று தெரியவில்லை என்றால், 16 நாட்களுக்குச் செய்வது சிறந்தது. மஹாளயத்தில், 16 என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இடையே எந்த ஒரு "ஷூனிய திதி" அல்லது "அதிதி" வந்தாலும், தொடர்ச்சியாக 16 நாட்களுக்கு இடைவெளியின்றி தர்ப்பணம் செய்ய வேண்டும். 16 நாட்கள் நிறைவடையும் வரை எண்ணிக்கையை கவனித்து, இடைவெளி இல்லாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

2. என்னால் எல்லா நாட்களும் தொடர்ச்சியாக தர்ப்பணம் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது?

ஒரு நாள் சிரார்த்தம் செய்து, அதைத் தொடர்ந்து தர்ப்பணம் செய்யலாம். மஹாளயத்தில் ஒரு நாள் மட்டும் சிரார்த்தம் செய்வதை **"சக்ருண் மஹாளய சிரார்த்தம்"** என்று சொல்வார்கள். சம்ஸ்கிருதத்தில் **சக்ருத்** என்றால் **ஒருமுறை** என்று பொருள்.

3. நான் சக்ருண் மஹாளய சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்தால், அதற்கென்று குறிப்பிட்ட சிறப்பான நாட்கள் உள்ளதா?

பரணி நட்சத்திரம் வரும் நாள், வ்யதீபாத யோகம் வரும் நாள், அஷ்டமி திதி (இது மத்யாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது) மற்றும் த்ரயோதசி ஆகியவை முக்கியமான நாட்கள். இந்த நாட்களில் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்தால், கயாவில் சிரார்த்தம்/தர்ப்பணம் செய்ததற்கு சமம்.

4. 15 அல்லது 16 நாட்களுக்கும் தர்ப்பணம் செய்வதற்குப் பதிலாக, சில முக்கியமான 2-3 நாட்களை மட்டும் தேர்ந்தெடுத்து அந்த நாட்களில் மட்டும் தர்ப்பணம் செய்யலாமா?

மஹாளயத்தில் இரண்டு வகையான தர்ப்பணங்கள் மட்டுமே சாஸ்திரங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன - ஒன்று, வேத பண்டிதர்களை வீட்டிற்கு அழைத்து, சிரார்த்தம் செய்து, அன்றைய தினம் மட்டும் தர்ப்பணம் செய்வது. அல்லது 15 அல்லது 16 நாட்களும் தொடர்ந்து தர்ப்பணம் செய்து, அதனுடன் சேர்த்து ஒரு நாள் பண்டிதர்களை வீட்டிற்கு அழைத்து சிரார்த்தம் செய்வது. உங்களுக்கு விருப்பமான சில நாட்களை மட்டும் தேர்ந்தெடுத்து தர்ப்பணம் செய்ய முடியாது.

5. சக்ருண் மஹாளய சிரார்த்தத்தை தந்தையின் அல்லது தாயின் திதியில் செய்வது கட்டாயமா?

குறைந்தது ஒரு நாளாவது சக்ருண் மஹாளய சிரார்த்தம் செய்வது இந்த 15 நாட்களுக்குள் கட்டாயமானது (இது உங்கள் பெற்றோரின் திதியாகவும் இருக்கலாம்). இருப்பினும், பெற்றோரின் திதியைத் தேர்ந்தெடுப்பது கட்டாயம் இல்லை. அதிக பலன்களைப் பெற, மேலே 3வது கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள சுபமான காலங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

6. சக்ருண் மஹாளய சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் ஒரு நாளில் முடித்துவிட்டால், அமாவாசை அன்று மீண்டும் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டுமா?

ஒரு நாள் சக்ருண் மஹாளய சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்துவிட்டால், அமாவாசை அன்று நீங்கள் மீண்டும் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை. அமாவாசை தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும். ஆனால், 15 அல்லது 16 நாட்களும் தினமும் தர்ப்பணம் செய்பவர்கள், அமாவாசை அன்று மஹாளய தர்ப்பணமும் செய்ய வேண்டும். முதலில் அமாவாசை தர்ப்பணம் செய்துவிட்டு, பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.

7. சக்ருண் மஹாளய சிரார்த்தம் செய்வதற்குத் தேதி முடிவு செய்வதற்கான விதிகள் ஏதேனும் உள்ளதா?

நீங்கள் சக்ருண் மஹாளயத்தை (ஒரு நாள் மட்டும்) செய்யப்போகிறீர்கள் என்றால், பிரதமை முதல் சதுர்த்தி வரையிலான திதிகளைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. விதிவிலக்கு, உங்கள் பெற்றோரின் திதியோ அல்லது 3வது கேள்வியில் குறிப்பிடப்பட்ட சுப தினங்களோ இந்த நாட்களில் வந்தால் செய்யலாம். சதுர்தசி திதியையும் தேர்ந்தெடுக்கக்கூடாது.

8. சதுர்தசி திதியை ஏன் தேர்ந்தெடுக்கக்கூடாது?

மஹாளய சதுர்தசி திதியானது ஆயுதம், விபத்து, தற்கொலை, விஷம் போன்ற காரணங்களால் அகால மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

9. என்னுடைய தந்தை அல்லது தாய் பஞ்சமி, சஷ்டி போன்ற திதிகளில் இறந்திருந்தாலும், அவர்கள் 8வது கேள்வியில் கூறியதுபோல அகால மரணம் அடைந்திருந்தால், அவர்களுக்கு மஹாளயம் சிரார்த்தம் எப்போது செய்ய வேண்டும்?

அவர்களுக்கு நீங்கள் சதுர்தசி திதியில் மட்டுமே மஹாளய சிரார்த்தம் செய்ய வேண்டும். கேள்வி கேட்டதுபோல அவர்கள் இறந்த திதியில் செய்யக்கூடாது. அகால மரணம் அடைந்தவர்களுக்கு சதுர்தசி திதி ஒதுக்கப்பட்டுள்ளது, எனவே பெற்றோரின் திதியை பொருட்படுத்தாமல் அந்த நாளில் மட்டுமே செய்ய வேண்டும்.

10. இந்த சதுர்தசி அகால மரண மஹாளய சிரார்த்தம் செய்யும் போது வேறு ஏதேனும் கவனத்தில் கொள்ள வேண்டுமா?

ஆம், இந்த சிரார்த்தம் **ஏகோதிஷ்ட விதானத்தில்** செய்யப்படும். அதாவது, இந்த மஹாளயம் அகால மரணம் அடைந்தவருக்கு மட்டும் மற்றும் அவருக்கு முந்தைய மூதாதையர்களுக்கு மட்டும் செய்யப்படும். இதில் காருணிக பித்ருக்கள் வரமாட்டார்கள். உதாரணமாக, அவரது தந்தை, தாத்தா, தாய் போன்றவர்களுக்கு. உதாரணமாக, மேலே விவரிக்கப்பட்ட மற்ற மூதாதையர்களுக்கு, நீங்கள் வேறு ஒரு தனி நாளில் மஹாளயம் செய்ய வேண்டும்.

11. நான் 15 அல்லது 16 நாட்களும் தர்ப்பணம் செய்தால், தவிர்க்க வேண்டிய திதிகள் ஏதும் உள்ளதா?

இந்த விசேஷ விதிகள் அல்லது குறிப்பிட்ட நாட்களைத் தவிர்ப்பது என்பது, நீங்கள் வேத பண்டிதர்களை வீட்டிற்கு அழைத்து ஹிரண்ய சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்யக்கூடிய தேதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே பொருந்தும். எல்லா நாட்களிலும் தர்ப்பணம் மட்டும் செய்பவர்கள், 15 அல்லது 16 நாட்களுக்கு தொடர்ந்து மஹாளயம் முழுவதையும் செய்வார்கள். இந்த விதிகள் சக்ருண் மஹாளய சிரார்த்தம் செய்யும் தேதிக்கு மட்டுமே பொருந்தும்.

12. நான் ஹிரண்ய சிரார்த்தம் செய்தால், மஹாளயத்தின்போது எத்தனை வேத பண்டிதர்களை அழைக்க வேண்டும்?

6 பண்டிதர்களை அழைப்பதே சிறந்தது. அவர்கள்:
1. விஸ்வே தேவா (இவர்தான் பித்ருக்களை பூமிக்கு அழைத்து வருபவர்)
2. தந்தையின் வழி (3 தலைமுறைகள்)
3. தாயின் வழி (3 தலைமுறைகள்)
4. தாயின் தந்தை மற்றும் தாய் வழி (3+3 தலைமுறைகள்)
5. காருணிக பித்ருக்கள் (நெருங்கிய உறவினர்கள்)
6. மகா விஷ்ணு (சிரார்த்தத்தின் பாதுகாவலர்)

தற்போது பெரும்பாலான இடங்களில் 5 வேத பண்டிதர்கள் மட்டுமே வருகின்றனர், மகாவிஷ்ணு விருப்பத்திற்குரியதாகக் கருதப்படுகிறது, அவருக்கு பதிலாக விஷ்ணு பாதம் / சாலகிராமம் அல்லது கூர்ச்சம் வைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த காலத்தில் வேத பண்டிதர்களின் பற்றாக்குறை உள்ளது. ஆனால் 6 வேத பண்டிதர்களே சிறந்தது.

மேலும், இந்த 6 வேத பண்டிதர்களும் உங்கள் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது (மஹாளய சிரார்த்தம், தர்ப்பணம் செய்பவரின் கோத்திரம்).

13. இந்த காருணிக பித்ருக்கள் யார்?

இவர்கள் உங்கள் தந்தை மற்றும் தாய் வழியில் இறந்த உறவினர்கள், மாமா, தந்தை/தாயின் சகோதரர்கள்/சகோதரிகள் போன்றவர்கள். மஹாளயம் ஒரு சிறப்பு நேரம், அப்போது நீங்கள் அவர்களுக்கும் தர்ப்பணம் செய்து, அவர்களை திருப்திப்படுத்தி, அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறலாம்.

14. என் தந்தை உயிருடன் இருந்து, தாய் உயிருடன் இல்லையென்றால், எனக்கு மஹாளயம் பொருந்துமா?

இல்லை. உங்கள் தந்தைக்கு மட்டுமே இதைச் செய்யும் உரிமை உள்ளது.

15. என் தாய் உயிருடன் இருந்து, தந்தை உயிருடன் இல்லையென்றால், நான் என்ன செய்ய வேண்டும்?

தந்தை இறந்த முதல் வருடத்திற்குள், மஹாளயம் அல்லது அமாவாசை தர்ப்பணம் தொடங்காது. அவர் இறந்து முழு ஒரு வருடம் முடிந்த பிறகுதான் மஹாளயம் அல்லது அமாவாசை தர்ப்பணம் தொடங்கும், நீங்கள் அதை முதல் வருடத்திற்குப் பிறகு செய்யலாம்.

16. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த 15 நாட்களில் மஹாளய சிரார்த்தம் / தர்ப்பணம் செய்யத் தவறினால் என்ன செய்ய வேண்டும்?

தவிர்க்க முடியாத அல்லது அவசர காரணங்களால் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்யத் தவறியவர்களுக்கு, சாஸ்திரங்கள் ஒரு மாற்று காலத்தை அளிக்கின்றன. இது அடுத்த மாதமான ஐப்பசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷம் ஆகும். இது சந்திர மற்றும் சூரிய நாட்காட்டியின்படி முறையே அஸ்வின அல்லது துலா மாதம் ஆகும்.

மேற்கண்டவை இந்த மகத்தான சடங்கைப் பற்றிய சரியான புரிதலுக்காகவும், பொது விழிப்புணர்விற்காகவும் பதிலளிக்கப்பட்ட 16 முக்கிய கேள்விகள். OVN

இந்தக் கட்டுரையைப் பரப்பி, வேத கோஷம் தர்மத்தைப் பரப்ப உதவுங்கள்.

Courtesy: Vedaghosham

Sunday, August 31, 2025

Four names same meaning

Four sibling names, same meaning

As per the Mahābhārata, King Bhīmasena of Vidarbha had four children: Damayantī (दमयन्ती), Dama (दम), Dānta (दान्त), Damana (दमन). All these four names come from the same root √'dam' (दमुँ उपशमे) = "to be calm" or "to tame, to subdue, to conquer". They all have [almost] the same meaning. This is another example of how thoughtful our ancestors were in giving names to children. Let us understand each name one by one.

*Damayantī (दमयन्ती)*

Damayantī (दमयन्ती) means "she who subdues or conquers". दमयति (=दमयते) इति दमयन्ती (दम् + णिच् + शतृ + ङीप्). As per the Naiṣadhīyacarita (2.17), Damayantī was so named because with her beauty she subdued the pride of all beautiful women. In the Kumārī-sahasranāma of the Rudrayāmala-Tantra, Damayantī is name of Kumārī Devī.

*Dama (दम)*

The name Dama (दम) means "he who subdues or conquers". दाम्यतीति दमः (दम् + अच्). In the Viṣṇu-sahasranāma of the Mahābhārata's Anuśāsana-parvan, Dama is the 861st name of Viṣṇu (verse 13.149.105: धनुर्धरो धनुर्वेदो दण्डो दमयिता दमः). The Satyabhāṣya on this name says दमुँ उपशमे दैवादिकाद्धातोः पचाद्यच् प्रत्ययः कर्तरि.  

*Dānta (दान्त)*

The name Dānta (दान्त) means "he who has subdued or conquered [his senses]". दाम्यति स्म इति दान्तः (दम् + कर्तरि क्त). In the Śiva-sahasranāma of the Mahābhārata's Śānti-parvan, Dānta is a name of Śiva (verse 12.284.151: भूर्भुवः स्वरितश्चैव ध्रुवो दान्तो महेश्वरः). Nīlakaṇṭha says in his commentary on this name: दान्तो जितेन्द्रियः.

*Damana (दमन)*

Finally, the name Damana (दमन) also means "he who subdues or conquers". दमयति (=दमयते) इति दमनः (दम् + णिच् + ल्यु, सहितपिदमेः संज्ञायाम्). As per the Viṣṇu-sahasranāma of the Mahābhārata's Anuśāsana-parvan, Damana is the 190th name of Viṣṇu (verse 13.149.34: मरीचिर्दमनो हंसः सुपर्णो भुजगोत्तमः). Again, as per the Śiva-sahasranāma of the Mahābhārata's Anuśāsana-parvan, Damana is the 886th name of Śiva (verse 13.17.138: महाप्रसादो दमनः शत्रुहा श्वेतपिङ्गलः).

Illustration: Damayantī and the Swan by M. V. Dhurandhar (in "Tales from the Indian Epics")

Efforts in learning sanskrit - HH Bharati Teertha Mahaswamigal


Although *Sringeri Sr Shankaracharya, Sri Bharathi Teertha,* is sending out this message in Kannada, it can be easily understood even by the layman, even by the non-Kannada people. Because it is in Sanskritized Kannada. Also, there are English subtitles to help us understand his message.
      
     But, in this milieu, we should not forget, we should not overlook, the passion, the anxiety, the fervour, the urge, embedded in his voice, when he ASKS US ALL TO TAKE UP THE STUDY OF SANSKRIT LANGUAGE in right earnest. He does not discount the fact that it may be difficult. So what ?? Learning Veda Mantras, Music, Violin, or for that matter anything NEW, anything to the UNINITIATED, *Will be difficult.* We can overcome the difficulty with *our Effort, our Prayatna प्रयत्न*. Nay, not a One-Time Prayatna. *But a Nirantara Prayatna, निरन्तर प्रयत्न.*
          He also trashes the other frequently offered objection to learning Sanskrit. He says "Age can never ever be a barrier, if we have a Strong Will to Learn, and the Effort, the Prayatna to Learn.

      In the Bhagavad-Gita, Arjuna says, one of the most difficult thing in life, is *Control of our Mind - मनो निग्रहः* Arjuna says in the 6th Chapter, Shlokas 34 & 35 :

*चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढम् ।*तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् ।।*

Hey Krishna, how do I control this Mind, that is always vacillating, strong and intractable. I consider the Control of Mind as even very much more difficult than controlling Wind Force such as Hurricane, Cyclone or a Tornado.

*श्रीभगवानुवाच*

*असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् ।*
*अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते ।।*
Sri Krishna says,
    Undoubtedly Arjuna, I agree that Control of Mind is very difficult. (But, it is not something Impossible.) It is certainly possible through *PRACTICE,* and also a sense of *DETACHMENT.*

          If the Difficult Mind itself can be controlled with Practice, then why can't we learn Sanskrit with Practice.

            Without Prayatna nothing is Possible. With Prayatna nothing is Impossible.

       As the American poet, *H.W. Longfellow* says in his *A Psalm of Life,*

*Trust no Future, howe'er pleasant !*
*Let the dead Past bury it's dead !*
*Act, – act in the living Present !*
*Heart within, and God o'erhead !*

*Let us, then, be up and doing,*
*With a heart for any fate;*
*Still achieving, still pursuing,*
*Learn to labour and to wait.*


Friday, August 29, 2025

Bhageeratha prayatna

🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ - பாகம் 19🌸-
அத்தியாயம்-9
 பகீரதனின் சாதனை
கங்கை நதி பூமிக்குக் கொண்டு வரப் படாத நிலையிலேயே காலமாகிய ஸகர மன்னனின் பேரன் அம்சுமான் பட்டத்திற்கு வந்தும் கூட தன்னுடைய மகன் திலீபனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு கடும் தவத்தை மேற் கொண்டான். ஆனால் கங்கை நதியைக் கீழே கொண்டு வர முடியவில்லை. அதன் பின்னர், அவனுடைய மகன் திலீபன் எவ்வளவோ முயற்சித்தும், கடும் விரதங்களை மேற்கொண்டும், கங்கை நதியை பூமிக்குக் கொண்டு வர முடியாமல் காலம் சென்றான். அவனுக்குப் பின் பட்டம் எய்திய பகீரதன், மகப்பேறு இல்லாத காரணத்தால், ராஜ்ய பாரத்தை மந்திரிகளிடத்தில் ஒப்படைத்து விட்டு, ஐந்து தீக்களுக்கு இடையே நின்று கடும் தவத்தைச் செய்யத் தொடங்கினான். அவனுடைய தவத்தின் வலிமையைக் கண்டு ப்ரம்ம தேவர் மகிழ்ச்சி அடைந்து அவனைப் பார்த்து , உன்னுடைய தவத்தினால், நான் பெரும் சந்தோஷமடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்" என்று கூறினார்.
ஸகர மன்னனுடைய மகன்கள் 60,000 பேருக்குத் தர்ப்பண நீரை நான் செலுத்த வேண்டும். அவர்களுடைய சாம்பல் கங்கை நீரினால் நனைக்கப் பட வேண்டும். எனக்கும் மக்கட்பேறை அளித்து எங்கள் சந்ததி வளர்வதற்கும் நீங்கள் அருள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
 ப்ரம்ம தேவர் " கடுமையான தவம் புரிந்தவனே பகீரதா! இக்ஷ்வாகு வம்சம் விருத்தி அடையும் வகையில் உனக்கு மக்கட்பேறு உண்டாகட்டும். கங்கை ஹிமவானுக்கு ப் பிறந்தவள், அவளைத் தாங்குவது என்றால், அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவள் பூமிக்கு வந்தால் தாங்க கூடிய சக்தி யாருக்கும் கிடையாது. சிவ பிரானைத் தவிர அந்தக் காரியத்தைச் செய்யக் கூடியவர் எவரும் இல்லை. அப்படி சிவ பெருமானால் தாங்கப் படாமல் கங்கை பூமியை அடைந்தால், பூமாதேவியினால் அதைத் தாங்க முடியாது. ஆகையால் கங்கையைத் தாங்க, சிவனுடைய சம்மதத்தை நீ பெற்றாக வேண்டும். அப்படிப் பெற்றால் கங்கையை நீ பூமிக்குக் கொண்டு வந்து விடலாம். உனக்கு மங்களம் உண்டாகட்டும்" என்று ஆசீர்வதித்தார்.
  இதையடுத்து பகீரதன், பரமசிவனை மனதால் நினைத்து கடும் தவம் புரிந்தான். உள்ளம் குளிர்ந்த சிவபிரான், அவன் முன் தோன்றி, உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். மலைகளின் அரசனாகிய ஹிமவானின் மகள் கங்கை பூமிக்கு வரும் போது , அவளை நான் என் தலையில் தாங்குகிறேன்." கவலையை விடு" என்று வரமளித்தார்.
 ப்ரம்மன் ஏற்கெனவே கூறியதற்கு இணங்க, தாங்க முடியாத வேகத்துடன் கங்கை, பிரவாகமாக ஆகாசத்தில் இருந்து பூமிக்கு இறங்கினாள். தன்னைத் தாங்குவதற்காக, தயாராக நின்ற சிவனையும் அடித்துக் கொண்டு போகும் வேகத்துடன் வீழ்வது என்ற எண்ணத்தோடு , கங்கை பாய்ந்து வந்த போது, பரமசிவன் அவளுடைய இறுமாப்பை அடக்க நினைத்தார். கங்கை அவளுடைய தலையில் வீழ்ந்தாள். ஆனால் அதன் பின்னர் அவள் எவ்வளவோ முயற்சித்தும், அவருடைய ஜடை முடியிலிருந்து, தப்பிக் கீழே இறங்க அவளால் இயலவில்லை.
 இப்படி கங்கை நதி சிக்குண்டதைக் கண்ட பகீரதன், மேலும் தவம் புரிந்தான். மீண்டும் அவனுக்கு அருள விரும்பிய சிவபிரான், தன் முடியிலிருந்து கங்கையை விடுவித்து, ப்ரம்மனால் சிருஷ்டிசெய்யப் பட்ட பிந்து சரஸ் என்னும் நீர் நிலையில் விட்டார். அப்போது கங்கை நதியில் ஏழு நீரோட்டங்கள் உண்டாயின. அவற்றில் மூன்று கிழக்கு திசையை நோக்கிச் சென்றன. மேலும் மூன்று மேற்கு திக்கை நோக்கிப் பாய்ந்தன. ஏழாவதான நீரோட்டம், பகீரத மன்னனைபின் தொடர்ந்து சென்றது.
 இந்த அற்புத காட்சியைக்காண தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், யக்ஷர்களும் கூடினார்கள். இப்படி தேவ கணங்களால் சூழப் பட்ட வானம் ஆயிரக் கணக்கான சூரியன்களுடைய பிரதேசமாகப் பிரகாசித்தது. பரமசிவனின் தலையில் விழுந்து, அங்கிருந்து பூமியில் பாய்ந்ததால், கங்கை நீர் பாவங்களைப்போக்க வல்ல புனிதத் தன்மை உடையதாக ஆயிற்று. சில சாபங்களின் காரணமாக, சொர்க்க லோகத்திலிருந்து பூமியை அடைந்திருந்த பலர், அப்பொழுது அந்த நதியில் நீராடி பாவங்களை நீக்கியவர்களாகி, நல்ல உலகங்களை அடைந்தார்கள். உலகமே கங்கை நீரால், புனிதமடைந்தது . பகீரதன் முன் செல்ல, அவனைப் பின் தொடர்ந்து கங்கை செல்ல, தேவர்களும் ராக்ஷஸர்களும் , கின்னரர்களும் கந்தர்வர்களும் , ரிஷிகளும் அப்சரஸ்களும், அதைத் தொடர்ந்து சென்றார்கள்.
 போகிற வழியில் கங்கை நதி, ஜஹ்னு என்ற பெயருடைய ஒரு பெரும் முனிவருடைய யாக பூமியை அழித்து விட்டது. இதைக் கண்டு கோபமுற்ற ஜஹ்னு முனிவர் தன்னுடைய மாபெரும் யோக சக்தியின் மூலமாக, அந்த கங்கை நதி நீரையே அப்படியே குடித்து விட்டார். தேவர்களும், ரிஷிகளும் இதைக் கண்டு திகைத்தனர். பின்னர் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க கோபம் தணிந்தவராக, ஜஹ்னு மஹரிஷி, கங்கை நீரை மீண்டும் வெளியே விட்டார். அதிலிருந்து கங்கை, ஜஹ்னு மஹரிஷிக்கு மகள் முறைஆவாள் என்று தேவர்களும் முனிவர்களும் வாழ்த்த, அதன் காரணமாக கங்கைக்கு " ஜான்ஹவி" என்ற பெயருமை் உண்டாயிற்று. மீண்டும் கங்கை, பகீரதனைப் பின் தொடர்ந்து சென்று, பாதாள லோகத்தை அடைய, அங்கே சாம்பலாகிக் கிடந்த ஸகரனின் மகன்கள் மீது அவள் பாய்ந்தாள். அதன் காரணமாக அவர்கள் சொர்க்க லோகத்தை அடைந்தார்கள்.
  ப்ரம்ம தேவர் இந்த மாபெரும் சாதனையைப் புரிந்த பகீரத மன்னனைப் பார்த்து," மனிதர்களில் சிறந்தவனே! உன்னுடைய சாதனையின் காரணமாக ஸகரனின் மக்கள் 60,000 பேரும் நல்லுலகை எய்தினார்கள். உன்னால் பூமிக்குக் கொண்டு வரப் பட்ட கங்கை, உனக்கு மகள் ஆகிறாள். ஆகையால் அவன் பெயர் " பாகீரதி" என்று விளங்குவதாக! தேவலோகத்தில் பாய்ந்து கொண்டிருந்த கங்கை, உன் முயற்சியின் காரணமாக பூவுலகிலும், பாதாளஉலகிலும், பாய்கிறாள். இப்படி மூன்று வழியாகப் பாய்வதால் " த்ரிபதகை" என்று அவள் போற்றப் படுவாள். உன் முன்னோர்களால் செய்ய முடியாத காரியத்தை நீ செய்து முடித்தாய். இதனால் உன் புகழ் பூமியில் என்றும் அழியாமல் இருக்கும்" என்று ஆசீர்வதித்தார்.
 பகீரதன் , சாத்திர விதிமுறைகளின் படி, சகர குமாரர்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தான்.
 இப்படி கங்கையின் வரலாற்றைக் கூறிய விச்வாமித்திரர், ராமா! இந்த வரலாற்றைக்கேட்பவர்கள் பெரும் புண்ணியம் எண்தியவர்கள் ஆவார்கள். ஆயுள், புகழ், செல்வம் , மக்கட்பேறு எல்லாவற்றையும் அளிக்க வல்லது இந்த வரலாறு. இந்த வரலாற்றை சிரத்தையுடன் கேட்பவன், தன்னுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியவனாகிறான்" என்று சொல்ல , அவர் கூறிய வரலாற்றைப் பற்றிய வியப்பைப் பரஸ்பரம், ராம லக்ஷ்மணர்கள் பரிமாறிக் கொள்ள, அன்றுஇரவு கழிந்தது. அடுத்த தினம் அவர்கள் ஓடத்தில் ஏறி, கங்கையைக் கடந்து அதனுடைய வடக்குக் கரையை அடைந்தார்கள். அங்கிருந்து பார்த்த போதே விசாலை என்கிற நகரம் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது. அது பற்றிய விவரங்களை ராம- லக்ஷ்மணர்கள் விச்வாமித்திரரிடம் கேட்க, அவர் முன்பு நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்" என்று கூறி, ஒரு பழைய வரலாற்றை எடுத்துச் சொல்லத் தொடங்கினார்.
 ( வால்மீகி ராமாயணத்தில் இவ்வளவு விவரமாக வருகிற விச்வாமித்திரரின் மூதாதையர் பற்றிய நிகழ்ச்சிகளும், கங்கை நதியின் வரலாறும், கம்ப ராமாயணத்திலும், துளசி தாஸரின் ராமாயணத்திலும், விவரிக்கப் படவில்லை. வால்மீகி ராமாயணத்திலோ இவை மிகவும் விஸ்தாரமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. நான்மேலே கொடுத்திருப்பது கூட, ஒரு சுருக்கமே தவிர, முழுமையான மொழி பெயர்ப்பு அல்ல)
தொடரும்… 
ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலிலிருந்து எடுத்தது.

Krishna tied

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -  நங்கநல்லூர் J K  SIVAN

21 கட்டுண்ட மாயன்.

கோகுலத்தில்  உகால்பந்த் ஆஸ்ரமம் என்று ஒரு ஸ்தலம். அங்கே தான் கண்ணனை யசோதை உரலில் கட்டிப்போட்டாள் . அங்கே அந்த  மர உரலை பார்த்தோம்.  5250 வருஷம் ஆனாலும் இன்னும் இருக்கிறது.  பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி உண்டு.  சந்தோஷமாக அதை தொட்டு கண்ணனை நினைத்து வணங்கினோம்.
கோபியர்கள்  எல்லோருமே  பால் தயிர்  வெண்ணெய், நெய்  போன்றவற்றை தயாரிப்பவர்கள், பெரிய பெரிய மண் பாண்டங்களில் அவற்றை சேமிப்பவர்கள்.  கிருஷ்ணனுக்கு வெண்ணெய்  என்றால் அளவற்ற விருப்பம். எவ்வளவு உண்டாலும் அவனுக்கு இன்னும் வேண்டும். 

ஒருநாள்  கோகுலத்தில்  நந்தபவனத்தில் யசோதை  தயிர் கடைந்து கொண்டிருக்கிறாள். தூங்கிக்கொண்டிருந்த கண்ணன் விழித்துக்கொண்டு அம்மாவைத்  தேடுகிறான்.  அந்த பெரிய  மாளிகையில் அவள் தயிர் கடையும் இடத்துக்கு தத்தி தத்தி  நடந்து செல்கிறான். யசோதை  தயிர் கடைந்து கொண்டிருக்கிறாள்.  அவளிடம் அவனுக்கு பால் குடிக்க வேண்டும். 

''கிருஷ்ணா, நீ அவள் தயிர் கடைவதை நிறுத்தி, அவள் மடியில் ஏறி படுக்கிறாய்.  ஆனந்தமாக  அவளிடம் பால் குடிக்கிறாய். பாதியில்  உன் தாமரைச் செவ்வாயைத் திறந்து சிரிக்கிறாய்.  அதற்குள்  யசோதைக்கு அடுப்பங்கரையில்  பாலைக்  காய்ச்சிக்  கொண்டிருந்தது ஞாபகம் வந்து, பால் பொங்குவதற்குள் அடுப்பை அணைக்க எழுந்து ஓடுகிறாள்.  கிருஷ்ணா,  உனக்கு கோபம் வந்துவிட்டது? வராதா பின்னே?  இப்படி பாதியில்  பால் குடிக்கும் போது  கொடுப்பதை நிறுத்திவிட்டு அம்மா எழுந்து போனால்? உன் கோபத்தை எப்படி வெளிப்படுத்தி னாய்?  உன் கண்ணில் அவள் தயிர் கடைந்துகொண்டிருந்த மத்து கண்ணில் பட்டது. அதை எடுத்து  அந்தப்  பெரிய  தயிர் சட்டியின் மேல்  வீசினாய்.  உன் அடியைத் தாங்குமா  தயிர் சட்டி?  மண்டையை போட்டு விட்டு  மோக்ஷம் அடைந்தது.  தயிர் வெள்ளம் எங்கும் ஓடியது.   உள்ளே பால் கொதித்து வழியும் சமயம். நல்லவேளை  பால் பாத்திரத்தை அடுப்பில் இருந்து  இறக்கி வைக்க முயலும்போது டமால் என்று தயிர் சட்டி உடையும் சத்தம் காதில் விழுந்தது.  என்ன ஆச்சு?  யசோதை வீட்டின் முன் கட்டுக்கு ஓடி வந்தாள்.   ''அடாடா,  அவள்  கடைந்துகொண்டிருந்த  தயிர் பானை உடைந்து கிடக்கிறதே. தயிர் அத்தனையும் உருண்டு ஓடுகிறதே. உன் சேட்டைகளில் இதுவும் ஒன்று  என்று சொல்லவேண்டுமா? 
என்ன சத்தம் என்று ஓடி வந்தவள் நீ தான் காரணம் என்று தெரிந்து  உன்னை தேடுகிறாள்.  குற்றம் நடந்த இடத்தில்  நீ  காணோம்.  எங்கே அந்தப் பயல்?  வேதங்களால் தேடப்படும் உன்னை அந்த அன்னை தேடினாள் . பின்புறம்  ஒரு உரல் மேல் உட்கார்ந்து கொண்டு  நீயும் சாப்பிட்டுக்கொண்டு ஒரு பூனைக்கும்   வெண்ணெய்  ஊட்டிக்  கொண்டிருந்தாய். உன்னைப்  பார்த்த போது யசோதைக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்?  கோபம் உச்சிக்கேறி விட்டது யசோதைக்கு.  ஒளி வீசும்  தாமரை முகத்தையுடைய  கண்ணா,உன்னை கர  கர வென்று பிடித்து இழுத்தாள்.  உன் நண்பர்கள் வேறு உன்னை சூழ்ந்து கொண்டு நீ இருக்கும் இடத்தில்  பூந்தேன் குடிக்க வட்டமிடும் வண்டுகள் போல் சுற்றிக்கொண்டு  இருந்ததை வேறு பார்த்தாள் .  நீ  பயந்தது போல் நடித்தாய்.  மாயா  ஜாலக்காரன் ஆயிற்றே நீ.   யசோதையின் கண்கள் கோபத்தோடு அங்கும் இங்கும் பார்த்தன.  வீட்டின் பின்புறம் தோட்டத்தில் அவள் கண்ணில்  ஒரு மரஉரலும்  சில  மணிக்கயிறுகளும்  தென்பட் டன.  கன்றுக்குட்டிகளை  கட்டிப் போட  உபயோகிப்பவை.

என் தெய்வமே, எவர்க்கும் இதுவரை தோன்றாத ஒரு எண்ணம் அந்த புண்யவதி யசோதா என்கிற பாக்ய சாலிக்கு
 தோன்றியது. உன்னைக் கட்டிப்போட வேண்டும் என்று முடிவெடுத்தாள் .  உன்னோடு சேர  வேண்டும், உன்னோடு பிணையவேண்டும் என்று எத்தனையோ யோகிகள், மஹான்கள், ரிஷிகள் காத்திருக்கிறார்கள்.   எவர் பிடிக்கும் அகப் படாதவன்  நீ.     

கயிறு நீளம்  போதவில்லை உன்னைக் கட்ட,  பல கயிறுகள் எடுத்து முயன்றாள்.  உன்னைக் கட்ட  எந்த கயிறுக்கும் நீளம் போதவில்லையே?  ஒரு சில அங்குலங்கள் குறைவாகவே இருந்தன.  என்னப்பனே ,ஹரி,  யசோதையின் கோபி மார் தோழிகள் கூடிவிட்டனர்.   சிரித்துக்கொண்டே உன்னைக் கட்டிப்போடும் காட்சியை வேடிக்கை பார்த்தார்கள்.  கயிறுகள் ஒவ்வொன்றாய் எடுப்பதும் உன்னைச்  சுற்றுவதும், அது போதாமல் எறிந்துவிட்டு அடுத்த கயிற்றை எடுத்து உன் இடுப்பில் சுற்றுவதுமாக  வியர்க்க  விறுவிறுக்க  யசோதை கஷ்டப்படுவதை கண்டு சிரிப்பு வந்தது.  பாவமாக  இருந்தது, உன்னைக் கட்டிப் போடுவதும்,  அவள்  கட்டிப்போட முயல்வதும்  ரெண்டுமே தான்.   உன் உருவம்   எவராலும்  கட்டிப்போட  முடியும்படி  யானதா?  பாவம் அம்மா, என்று அவள் மேல் பரிதாபத்தோடு உன்னை கட்டும் அவள் முயற்சிக்கு இடம் கொடுத்தாய்.
கட்டுண்ட மாயன் நீ.  எதற்கும் எவருக்கும் கட்டுப்படாதவன்  நீ   பாசத்துக்கு  கட்டுப்பட்டாய்.  பாசம்  என்றாலும் கயிறு தானே. 
''அப்பாடா, இந்த விஷமக்காரனுக்கு தக்க தண்டனை கொடுத்தாகிவிட்டது'' என்று ஒருவழியாக திருப்தி பெருமூச்சுடன் யசோதை  உன்னை அந்த கல்  உரலோடு சேர்த்து கயிற்றால் உன்  இடுப்பை கட்டிவிட்டு உள்ளே சென்றாள்.   எல்லோர் எதிரிலும் ''நீ செய்கிற விஷமத்துக்கு இது தான் தண்டனை. இங்கேயே  கொஞ்ச நேரம்  கட்டுண்டு கிட. அப்போது தான் புத்தி வரும்'' என்று சொன்னாள் . நீ  காதில் வாங்கவில்லை.   உரலுக்கு  உள்ளே நீ ஒளித்து  வைத்திருந்த வெண்ணையை எடுத்து ரசித்து சாப்பிட ஆரம்பித்தாய்.  

 எந்த பாச  பந்தத்தோடும் பிணை படாமல் இருப்பவர்களுக்கு தானே நீ  தென்படுபாய்.  எந்த பிணைப்பும் அற்றவர்கள்  தானே உன்னை அடைய முடியும்?   உன்னை  இணைபிரியாத  பாசபிணைப்பில் உள்ள   அன்னை யசோதா எப்படி  உன்னைத் தனியாக  பிரிந்து இருக்க கட்டிப்போட்டாள் ?''  இது தான் உன் தாமோதர லீலை தான். தாமம் என்றால் கயிறு உதரம் என்னால் வயிறு.   கண்ணா, நீ  எதிரே பார்த்தாய். நெடிதுயர்ந்த ரெண்டு அர்ஜுனன் (மருத)மரங்கள்  அருகருகே நிற்பது  கண்ணில் பட்டது. அதே நேரம் உன் கடமை  உனக்கு நினைவுக்கு வந்தது.   நளகூவரன், மணிக்ரீவன் எனும் குபேரனின் ரெண்டு புத்திரர்களும்  தகாத செயலால் நாரதரிடம் சாபம் பெற்றதும், துவாபர யுகத்தில்  உன்னால் தான் சாப விமோச னம் என்பதும் புரிந்தது.

மர உரலில் கட்டுண்ட கிருஷ்ணன்  மெதுவாக  உரலை இழுத்துக்கொண்டு அந்த  இரு மரங்களை நோக்கி தவழ்ந்தான். இரு மரங்களுக்கிடையே நுழைந்தான். அவன் சிறிய உருவம் அவனால்  இடைவெளியில் எளிதாக புக முடிந்தது. உரலால் நுழைய முடியவில்லை, இடம் போதவில்லை.  நீ கயிற்றை பலமாக இழுத்தாய்.  உரல் மரங்களை இடித்து அழுத்தியது. உன்  பலம் தாங்காமல் இரு மரங்களும்  சாய்ந்து விழுந்தன.  குபேர புத்திரர்கள் சாப விமோசனம் பெற்று உன்னை வணங்கி விண்ணுலகு சென்றார்கள்.  

தடால் என்று   பெரிய மரங்கள் விழுந்த சப்தம் கேட்டு யசோதை ''ஐயோ குழந்தைக்குஎன்ன ஆபத்தோ'' என்று ஓடிவந்தாள். பெரிய மரங்கள் விழுந்து கிடக்க , நீ கயிறும் உரலுமாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதை பார்த்து ஓடிவந்து கயிற்றை அவிழ்த்து உன்னை  அணைத்துக்  கொண்டாள். ''பகவானே  என் குழந்தையை  மரங்கள் அடியில் மாட்டிக்கொண்டு  நசுங்காமல்  காப்பாற்றினாய்'' என்று இரு கை கூப்பி  ஆகாசத்தை நோக்கி வேண்டிக்கொண்டாள்.  உன்னை அவள் ஆகாசத்தில் தேடுவதை நீ  வேடிக்கை பார்த்தாய்.

Sanskrit poets - Poem

कवयस्तु निरङ्कुशाः
*****************
(१)
छन्दोलक्षणरक्षार्थं स्थापयन्ति च कुत्र किम्।
सृजन्ति तु मनोज्ञार्थं कवयोतो निरङ्कुशाः।।
(२)
शब्दशास्त्रकृतां नीतिं कर्तृकर्मक्रियाक्रमम्।
अनादृत्य प्रगुम्फन्ति कवयोतो निरङ्कुशाः।।
(३)
कोमलपदजालेन पद्यं गुम्फन्ति सुन्दरम्।
मनो हरन्ति सर्वेषां कवयोतो निरङ्कुशाः।।
(४)
विचित्रभावसंयुक्तमलंकारसमन्वितम्।
रचयन्ति सुपद्यानि  कवयोतो निरङ्कुशाः।।
(५)
ध्वनिरीतिगुणव्यङ्ग्यैः सुकवितां रसाप्लुताम्।
रचयन्ति बुधप्रीत्यै कवयोतो निरङ्कुशाः।।
                    (व्रजकिशोरः)

Be optimistic like this student

During my School days ...

All my teachers used to stand & take the classes .. You know why ? Respect .. They respected me so much! 

My teachers used to often request me to bring my father as they were afraid of telling me anything, lest they offend me!

My teachers were very fond of reading what I had written .. In fact they would make me write it a hundred times so that they could read it again & again!

Several times my teachers threw their valuable chalks towards me without my even asking for it! 

Many times my teachers made me stand outside the class to ensure 'Z' category security while they were teaching!

Many a time I have been honoured / elevated by asking me to stand up on the bench so that all others could look up to me!

I have lost count if the number of times I was given a break from class to enjoy the sunshine & fresh air outside, when others were sweating profusely in the sweltering heat inside the classroom. 

Teachers often told me: Why do you come to school ? Why can't you do something else instead? What a way of appreciating & acknowledging that I knew everything!

Dedicated to those visionary teachers. They knew me better than I know myself. 🤓

Thursday, August 28, 2025

Sridhara Venkatesa Aiyyaavaal - Story

மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்.

 இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு, 

ஊர் ஊராக சென்று இறைநாமத்தை பரப்பி, உபந்யாசங்கள் செய்து வந்தார்.

 திருவிசலூரில், வெங்கடேச ஐயாவாள் தங்கியிருந்த போது அவருடைய உபந்யாசங்களையும், நாம மகிமையையும் கேட்டு, மக்கள் ஆனந்தப்பட்டனர். 

அப்போது, அந்த ஊரில் இருந்த சிலர், மிக ஆடம்பரமாக, கோகுலாஷ்டமி விழா கொண்டாடினர்; 

கண்ணன் படத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர். 

ஊர்வலம், ஸ்ரீ ஐயாவாள் வசித்த, குடிசை வீட்டை நெருங்கிய போது, கண்ணனை தரிசிக்கும் ஆவலில், வெகு வேகமாக வெளியே வந்தார் ஸ்ரீ ஐயாவாள். 

அவர் மீது பொறாமை கொண்ட ஊர்வலக்காரர்களோ, பக்தியில்லாத உங்கள் தீபாராதனைக்காக, கண்ணன் காத்திருக்கவில்லை. 

உங்கள் வீட்டில், தீபாராதனை எடுக்க முடியாது... என்றனர். 

ஸ்ரீஐயாவாளோ அமைதியாக, என் பக்தியை பற்றி கண்ணனுக்கு தெரியும்... என்று கூறி, வீட்டினுள் சென்று விட்டார். 

ஊர்வலக்காரர்களோ, உங்களுக்கு பக்தி இருந்தால், எங்கே கண்ணனைக் கூப்பிடுங்கள்; வருகிறானா பார்க்கலாம்... என்று வம்பு செய்தனர்.

 ஸ்ரீஐயாவாள், தயங்காமல், ஊர்வலத்தில் அவர்கள் சுமந்து வந்த படத்தில் இருந்த கண்ணன் படத்தை நெருங்கி, இந்தீவா எனும் ஸ்லோகத்தை மனமுருக சொல்லி, வீட்டின் உள்ளே சென்று விட்டார். 

ஊர்வலம் அடுத்த வீட்டு வாசலை நெருங்கியதும், படத்திலிருந்த கண்ணனை காணவில்லை;

 கண்ணாடியும் சட்டங்களும் மட்டுமே இருந்தன.

 ஊர்வலத்தில் வந்தவர்கள் நடுங்கிப் போய், ஸ்ரீஐயாவாளிடம் ஓடினர். 

அங்கே, அந்த படத்திலிருந்ததைப் போலவே, ஒரு கிருஷ்ண விக்ரகத்தை ஊஞ்சலில் வைத்து,

 மிகுந்த அன்போடு கண்ணனை புகழ்ந்து பாடி, துதித்துக் கொண்டிருந்தார்.

 ஸ்ரீ ஐயாவாளின் தூய்மையான பக்தியைக் கண்டு, ஊர்வலம் நடத்தியோர், 

அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

 அடியாரின் பக்தியை வெளிப்படுத்துவதற்காக, கண்ணன் நடத்திய திருவிளையாடல் இது. 

கடந்த, 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்.

 இவர் கண்ணனை புகழ்ந்து பாடிய துதிப்பாடல், டோலோ நவரத்ன மாளிகா எனப்படுகிறது.

Krishna eating sand

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -  நங்கநல்லூர்  J K SIVAN 
20  ''  உடனே  வாயைத் திற டா...''
கண்ணன்  என்றால்  உடனே  நாம் நினைக்கும் ஸ்தலங்கள், கோகுலம், பிருந்தாவனம், மதுரா, பர்ஸானா ,துவாரகை. இதில் கோகுலம்  அவன் சிறு குழந்தையாக  இருந்தபோது புரிந்த லீலைகள்  நிறைந்த க்ஷேத்ரம்.   கோகுலத்தில்  நான் கண்டு அதிசயித்த  ஒரு க்ஷேத்ரம்  பிரம்மாண்ட  காட். இங்கே தான் அகில பிரபஞ்சத்தையும் ப்ரம்மாண்டத்தையும்,  தனது வாயில் யசோதைக்கு கிருஷ்ணன் காட்டிய ஸ்தலம். எனவே  பிரம்மாண்ட காட்  என்று இதற்கு பெயர்.  யமுனைக்கரையில் உள்ளது.  மதுராவிலிருந்து 15 கி.மீ.  பஸ்ஸில் சென்றோம்.  பஸ்ஸிலிருந்து  பிரம்மாண்டமான யமுனை, அதன் ஒரு கரையில் படித்துறை தெரிந்தது.  இது நந்தபவன் எனும் கிருஷ்ணன் வீட்டிலிருந்து  அருகாமையில் உள்ளது. இங்கே  கிருஷ்ணன்  தோழர்களுடன் விளையாடினான். அங்கே  ஆல , அரச, நாவல்பழ  மரங்கள் அநேகம் உண்டு. இங்கே  பிரம்மாண்ட பிஹாரி ஆலயம் உள்ளது.ஒருநாள் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.  நம் ஒவ்வொருவர் வீட்டிலும்   பொடிசுகள் இருக்கிறதே.  பெண்ணோ  ஆணோ. அடடா  ஒன்றைரை  ரெண்டு வயசான  அதுகள்  பண்ணுகிற   விஷமம்  தாங்க முடியாது.  அதே சமயம்  அவற்றின் விஷமம்  பார்ப்பதற்கு  ஆனந்தமாகவும் இருக்கும்.  அவர்கள் இல்லாமல் வீடு  சோபை  இழந்துவிடும்.   பெரிசுகளால்  அவற்றோடு  ஓடி  ஆடி  சமாளிக்க முடியா விட்டாலும்  தூக்கிக் கொஞ்சுவதில் எந்த குறைவும் இருக்காது.  துறுதுறுவென்று இருக்கும்  அந்த சிறு குழந்தைகளே இப்படி என்றால்  கிருஷ்ணனின்  விஷமம், அதுவும் அவன் நண்பர்களோடு  மொத்தமாக  அவர்கள் ஒன்று சேர்ந்தால்  எப்படி இருக்கும் ??   கோகுலத்தில்  யசோதாவுக்கு  ஒவ்வொரு வினாடியும் ஏதாவது ஒரு  கிருஷ்ண விஷம சமாச்சாரம் தான். அவளால்  அந்தப்  பொடியனின்  விஷமம்  தாங்கமுடியவில்லை.  கொஞ்சம்  பெரிய  பையன்கள்  விளையாடும்போது  தானும் அவர்களோடு  இணைவான். அவர்களோ முதலில்  அவனை  லட்சியம் செய்ய வில்லை.  போகப் போக  மூர்த்தி சிறிதானாலும்  விஷம  கீர்த்தி   பெரியதாக  தென்படவே  இந்தப் பயலை  கூட்டு  சேர்த்து கொண்டார்கள். அவன் அம்மாவுக்கும்  இது சௌகர்யமாக இருந்ததே.   வெளியே  சென்றுவிடுவானே,  கொஞ்ச நேரமாகவாவது  அவன் விஷமம்  வீட்டில் இருக்காதே. கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாமே என்று. 
ஒருநாள்   நந்த மஹாராஜா வீட்டிலிருந்து  அருகே யமுனைக்கரையில்  இருந்த  எத்தனையோ மரங்களில்  ஒரு  நாவல் பழ மரம்  அந்த விஷமக்கார  சிறுவர்களிடம்   மாட்டிக்  கொண்டது.   மரத்தில்  நிறைய  பழங்களை  பார்த்து விட்டார்கள்.  பெரிய  பையன்கள்  மரம் ஏறினார்கள்.   சிறுவன் கண்ணன்  மரத்தில்  ஏற  முயற்சி செய்தபோது. அந்த விஷமக்கார சிறுவர்களின் தலைவன்   ஒரு கட்டளை இட்டான்.
 "டேய் ,கிருஷ்ணா,  நீ  சின்னவன்,  மரத்தில்  ஏறாதே.  நாங்கள்  மேலே  ஏறி  கிளைகளை உலுக்கும் போது கீழே  பழங்கள் நிறைய  விழும் .  நீ  அந்த பழங்களை எல்லாம்  பொருக்கி சேகரி. பிறகு  நாங்கள்  இறங்கி வந்தவுடன் அனைவரும்  பங்கு போட்டு  திங்கலாம்."
"சரி"  என்று தலையாட்டிவிட்டு  பழங்கள்  மேலேயிருந்து கீழே மண்ணில்  உதிர்ந்ததும்  ஒவ்வொன்றாக  அப்படியே  மண்ணுடன்    சேர்த்து கிருஷ்ணன்  தின்று கொண்டிருந்ததை ஒரு  பயல்  மரத்திலிருந்து  பார்த்து விட்டான். 
 "டேய்,  எல்லாரும்   அங்கே  கீழே  நடக்கிற அக்ரமத்தை பாருங்கடா.  முக்காவாசி  பழத்தை  அந்த  கிருஷ்ணன்  எடுத்து  வேகமாக  தின்று கொண்டிருக்கிறான். ''
தலைவனுக்கு கோபம் வந்தது.  
"இந்த கிருஷ்ணன் ரொம்ப  மோசம். எவ்வளவு  சாமர்த்தியம்  பார்த்தாயா. எப்போ  இவன்  நம்பளை ஏமாத்தினானோ  அவனை பத்தி அவன்  மண்ணு திங்கறான் என்று அவ அம்மாவிடம்  போய் சொல்லிடறேன். அவள்  அவனுக்கு   நல்லா  முதுகிலே டின் கட்டிடுவா" என்று  தனது  திட்டத்தை  சொன்னான் .

மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்ததும்  மீதி பழங்களை எடுத்து தின்றார்கள்.   தலைவன் ஓடிச்சென்று  கிருஷ்ணன் வீட்டில் நுழைந்து  அவன் தாயிடம்  மரத்தடியில் நடந்ததை சொன்னான். 
யசோதைக்கு  கோபம் வந்ததை விட   ''ஐயோ, இந்த சின்ன குழந்தை கிருஷ்ணன் மண்ணை தின்றுவிட்டானே,  உடம்பில்போய் அது என்ன கோளாறு செய்யுமோ.  அவனுக்கு ஏதாவது நோய் வந்தால் என்னால்  தாங்க முடியாதே என்ற கவலையும் வேறு சேர்ந்துவிட்டது.  வேகமாக  அவனோடு  நாவல் மரத்தடிக்கு வந்தாள் .
மரத்தடியில்  பையன்கள்  கூட்டம்.  நடுவே  தரையில்  கிருஷ்ணன்   நடு  நாயகமாக   அமர்ந்திருந்தான்.  வாய்  நிறைய  பழங்கள்.   ஏற்கனவே கருப்பு பையன்.   உதடு  கன்னம், தாடையில் எல்லாம்  கருநீல  நாகப்பழ   கலர்  மண்ணோடு கலந்து  சாறு அப்பி கிடந்தது.
" கிருஷ்ணா, உன்னோடு  ஒரு நாள்  கூட  நிம்மதி கிடையாது எனக்கு  . எப்பவும்  ஏதாவது  ஏடாகூடம் பண்ணுகிறாய். .  வாய்  நிறைய  இவ்வளவு  மண்ணு  தின்றால்   உடம்பு என்னத்துக்கு  ஆகும்.  திற  வாயை'' ''அம்மா  நான் மண்ணு  தின்னவில்லை '  என்று  தலையாட்டினான்.  
பேசவில்லை. பேசமுடியாதவாறு  வாய் நிறைய  நாகப்பழம்.

'' அடம்  பிடித்தால்  பிச்சுடுவேன்  பிச்சு.  மரியாதையா  வாயை த் திற.''  அவன் முகத்தருகே இரு கைகளை  அவன் கன்னங்களில் வைத்து   உட்கார்ந்து கொண்டாள்  யசோதை. '''திறடா  வாயை . சீக்கிரம் ''
 கண்கள் மலங்க மலங்க நீர் சேர,  அவளைப்  பார்த்தன.  தலையை  மீண்டும்  முடியாது என்று அசைத்தான். 
'' பிடிவாதமா  பண்றே.  இப்ப பார்''
 யசோதா  கிருஷ்ணன்  வாயை  கையால்  அழுத்தி திறந்தாள்.  வாயை  நன்றாக  இறுக்கமாக மூடிக்  கொண்டான். எதிர்ப்பு தெரிவித்தான்.  பலமாக  அவன் உதடுகளை  இரு கைகளாலும் பிரித்தாள் .  வாய் மெதுவாக திறந்தது.  உள்ளே  எவ்வளவு  மண் இருக்கிறது  என்று கவலையோடு குனிந்து  பார்த்தாள் யசோதை. . 

மண்ணைத்தேடிய  அவளுக்கு  மார்பு  படபட என்று  அடித்துக்கொள்ள,  கண்கள் இருள, கை கால்  நடுங்க,  தலை சுற்றியது. கிருஷ்ணன்  வாயில்  மண் அல்ல மண்ணுலகம் விண்ணுலகம் இந்த  பிரபஞ்சமே தெரிந்தது.  அனைத்தும்  சுழன்றது.  இதோ  தெரிகிறது,  இந்த ஊர்  யமுனை,  எங்கோ இருக்கும்  கங்கை,  ஹிமாசலம்,  இதோ  ஆயர்பாடி  கூட  தெரிகிறதே  அவள்  வீடு, நந்தபவனம், யமுனை நதிக்கரை,  அந்த மரம், அதன் கீழே  அவள்,  எதிரே  தரையில் உட்கார்ந்து கொண்டு  கிருஷ்ணன், திறந்த  வாய்,  அந்த  திறந்த வாய்க்குள்  மீண்டும்  பிரபஞ்சம்,  திரும்ப திரும்ப  அளவில்லாத  பிரபஞ்சம்.. எல்லாம்  ஏதோ ஒரு வேகத்தில்  சுழல்கிறதே. மேலே சூரியன்  வானம் மேக மண்டலங்கள் எல்லாமே  சுற்றுகிறதே .." 
 யசோதை  கையை  அவன் வாயில் இருந்து  எடுப்பதற்குள்  அவளே  தரையில்  மயங்கி விழுந்தாள்.  அவன்  மீண்டும்வாயை மூடிக் கொண்டு சிரித்தான்.  சற்று நேரத்தில்  தெளிவு பெற்ற  யசோதா   தானே  சுதாரித்து கொண்டு எழுந்தாள்.    எதிரே  சாதுவாக உட்கார்ந்திருக்கும்  பூனை போல  அசையாமல் இருந்த  கிருஷ்ணன் மேல் பார்வை போயிற்று.  சிறு குழந்தை, ஆசைமகன்  அவளைப்  பார்த்து சிரித்தான்.  
''என்  கிருஷ்ணா, நீ  யார்...? யசோதாவின்  வாய்  மெதுவாக  நடுக்கத்தோடு  தழுதழுத்தது.  பேச்சு தடுமாறியது.  கைகள் அவனை  அணைத்தது...  கண்களில்  வழிந்தது  ஆனந்தக் கண்ணீராகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம் இவன் தெய்வம்  என்று வாய் அவளுக் குள் முணுமுணுத்தது.   ஹரே கிருஷ்ணா...நாமும் வணங்குவோம்.

Wednesday, August 27, 2025

Two parents for Krishna

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 

19.  இரு பெற்றோர்கள்   

வசுதேவர் யதுகுல  மன்னன்.  போஜ மன்னன் குலத்தில் பெண்ணெடுத்து  அவருக்கும்   தேவகிக்கும் கல்யாணம் ஆன அன்றே  ஊர்வலத்தில் மனைவியின் சகோதரன் கம்சன் தானே  ஊர்வலத் தேரை ஓட்டினான்.  அப்போது தான்  அவன் அசரீரி ஒன்றை கேட்க  நேர்ந்தது.    ''அடே கம்சா,  நீ தேரை ஒட்டிக்கொண்டு போகிறாய், அதில் அமர்ந்திருக்கும் உன் சகோதரி தேவகியின் எட்டாவது மகனால் தான் உனக்கு மரணம்''..  இதன் விளைவாக சகோதரியையும்  அவள் கணவனையும் கல்யாண ஊர்வலத்தன்றே  சிறையில் அடைத்தான். அவர்களுக்குப்  பிறந்த ஆறு குழந்தைகளும்  கம்சன் வாளுக்கு பலியாயின. 

ஸ்ரீ மந் நாராயணனே மதுராபுரி சிறையில்  வசுதேவரின் எட்டாவது   பிள்ளை  கிருஷ்ணனாக  வந்து பிறந்ததும்  நாராயணன் இட்ட கட்டளைப்படியே வசுதேவர்  அவனை இரவோடு இரவாக  கோகுலத்தில் நண்பன் நந்தகோப மஹாராஜா வீட்டில் யாருக்கும் தெரியாமல் கொட்டும் மழையில் யமுனை வழிவிட  அங்கே  யசோதை அருகே  அவனை விட்டு விட்டு  அவளுக்குப்  பிறந்திருந்த  பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு  மதுராவுக்கு  கம்சன் அரண்மனைச் சிறைக்கு திரும்பினான்.  இப்படிப்பட்ட  துர்பாக்கிய நிலை உலகில் எவருக்குமே ஏற்பட்டதில்லை.  ஆனால்  எல்லாமே  நாராயணன் கிருஷ்ணனாக பிறந்து அவன் இட்ட கட்டளைப்படி நடந்தது.

கோகுலத்தில் நந்தமஹாராஜா வாழ்ந்த  நந்த பவன் நந்தகிராமத்தில் மதுரா ஜில்லாவில்  அழகாக ஒரு கோவிலாக இருக்கிறது.   நந்திஸ்வரர் மலையில் உள்ள பிரதான அரண்மனை.  அங்கிருந்து பர்ஸானா 9 கிமீ.  லக்ஷக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கும் இடங்கள் இவை.  நந்தகோபன் யசோதை இருவரும் வழிபடப்படும் ஒரே கோவில் இது. 
5000 வருஷ முந்தைய சம்பவம் இது.  இப்போது இருக்கும் சிவப்புக்கல்  மாளிகை  ராஜா ரூப சிங்  கட்டியது. இந்த வீட்டை பற்றி முன்பே விவரமாக எழுதி இருக்கிறேன்.  84 தூண்கள் கொண்டது.கிருஷ்ணன் பலராமன் விளையாடிய வீடு. அந்த வழ வழ தூணை கட்டிக்கொண்டு சுற்றி சுற்றி கண்ணன் விளையாடியதால்  அத்தனை பக்தர்களும் தூண்களைக் கட்டிக்கொண்டு பிரிய மனமில்லாமல் ஆனந்த கண்ணீருடன் திரும்புகிறார்கள்.  ராதா வா வந்து கிருஷ்ணனோடு விளையாடு என்று யசோதை அழைத்து பலமுறை  பர்ஸானாவிலிருந்து  ராதை இங்கே வந்து வீட்டில் விளையாடி இருக்கிறாள். கண்ணனுக்கு உணவு சமைத்திருக்கிறாள்.  இந்த வீட்டில்  தான் பூதனை வந்து கண்ணனை மடியில் இட்டுக்கொண்டு விஷம் தடவிய முலைப்பால் ஊட்டி இருக்கிறாள்.  கிருஷ்ணனைக் கொல்ல வந்த அந்த அரக்கியை  கிருஷ்ணன் கொன்று மோக்ஷத்துக்கு அனுப்பினான்.  சிவனே  கிருஷ்ணனை பார்க்க இங்கே வந்து நந்தீஸ்வர மலையாக நிற்கிறார்.
ஒரு சம்பவம் சொல்கிறேன்; 
வசுதேவருக்கும்  சேர்த்து  கோகுலத்தில்  நந்த பவனத்தில்   நந்தகோப மஹாராஜா தனக்கு பிள்ளை பிறந்ததை விமரிசையாக கொண்டாடினார்.   அவரது  பெண் குழந்தை மாற்றப்பட்டு  கிருஷ்ணன் அங்கே வளர்வது  வசுதேவரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.  வேத கோஷங்கள் முழங்கின. பிரதான ஜோசியர்களை கூப்பிட்டு ஜாதகம் கணிக்க சொன்னார்.   எல்லோரும் குளித்து புத்தாடைகள் உடுத்து பலவித உணவு பண்டங்கள் பரிசுகள் அனைவருக்கும்  விநியோகித்து ஆர்வமாக ஜோசியர் என்ன சொல்லப்போகிறார் ஜாதகம் கணித்து என்று ஆவலோடு காத்திருந்தார்கள்.   ஏராளமான பிராமணர்கள்  தானம் பெற காத்திருந்தார்கள். ரெண்டு லக்ஷம் பசுக்களை அலங்கரித்து தங்க வெள்ளி நகைகள் பூட்டி  தானம் பண்ணினார்  நந்த மஹாராஜா.பித்ருக்கள், தேவதைகள் எல்லோருக்கும் திருப்தியாக  மரியாதை பண்ணினார்.மலை மலையாக  எங்கும்  தானியங்கள், நவமணிகள். எல்லோருக்கும்  வழங்கினார்கள். . மேள தாள வாத்தியங்கள் முழங்கின.  கம கமவென  பன்னீர்  கலந்த சந்தனம் அள்ளி அள்ளி வாரி தெளித்தார்கள்.

தெருவெல்லாம் அழகிய மாக்கோலம் வண்ண வண்ண கண்கவரும்  ஓவியங்கள். எங்கும் பூக்கள், மாவிலை தோரணங்கள்.  பசுக்கள், கன்றுகள் காளைகள் எல்லாம் குளித்து கொம்புகளில் வண்ணம் பூசிக் கொண்டு  கழுத்தில் மாலைகளோடு
நடந்தன. கோகுலம் கிராமம்  பூரா எல்லோர் இல்லத்திலும்  விழா கோலம். ஊரே  திரண்டு நந்த மஹாராஜா வீட்டில் தான் காணப்பட்டது.  எல்லோரும்  கண்ணனைப் பார்த்துவிட்டு  ''செல்வமே  நீ நீடூழி வாழ்ந்து எங்களையெல்லாம் ரக்ஷிக்க வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டார்கள்.  ஒருவர் மேல் ஒருவர் வெண்ணையை கட்டி கட்டியாக  வீசி விளையாடி மகிழ்ந்தார்கள்.எங்கும் சங்கீத வித்துவான்கள்  சுகம் சங்கீத்.  வாத்தியங்கள் விதவிதமாக ஒலித்தன.நாட்டிய பெண்கள் நர்த்தனமாடினார்கள்.

''நாராயணா மஹா விஷ்ணு, என் குழந்தைக்கு தீர்க்காயுசு கொடுத்து காப்பாற்றப்பா''என்று நந்தகோபன் வேண்டிக் கொண்டபோது மஹாவிஷ்ணு, நாராயணன் தான் தனது மகன் கிருஷ்ணன் என்று  அவருக்கோ  யசோதைக்கோ  வேறு யாருக்குமே தெரியாதே.  வசுதேவன் மனைவி ரோகிணியும் அங்கே இருந்தாள்.  கண்ணன் பிறந்ததை அவளும் கொண்டாடினாள் . அவள் மகன் பலராமனும் அவளோடு குட்டி தம்பியைப் பார்த்து  பூரித்து  போனான். மகிழ்ந்தான்.

குழந்தை பிறந்தநாள் கொண்டாடிய பிறகு நந்தகோபன் பேரரசன் மதுரா ராஜ்ய கம்சனுக்கு கப்பம் கட்ட  புறப்பட்டார் .
ஒரு விஷயம்:

தேவகிக்கு  எட்டாவது குழந்தை ஒரு பெண் என்று தெரிந்தும் அவளைக் கொல்ல  முயற்சித்து யோகமாயாவே அந்த  குழந்தையாதலால் அவனிடமிருந்து  தப்பித்து ''முட்டாள் கம்சா,  உன் யமன் எங்கோ வளர்கிறான். அனாவசியமாக  உன் சகோதரியை வதைக்காதே'' என்று  எட்டு கரங்களோடு காட்சி தந்து எச்சரித்த போது கம்சன் ஆடிப்போய்விட்டான். வசுதேவரையும் தேவகியையும்  சிறையிலிருந்து விடுவித்து  அவர்கள் வீட்டுக்கு அனுப்பி காவலில் வைத்தான்.

நண்பன்  நந்தகோபன்  மதுராவுக்கு  வந்ததை அறிந்து வசுதேவர் நந்தகோபனை  சந்திக்க  அவன்  தங்கியிருந்த  இடம் சென்றார். நந்தகோபன் வசுதேவரைக்  கட்டி அணைத்தார் .  வசுதேவரின் இரு மகன்களும்  (பலராமனும் கிருஷ்ணனும்) நந்தகோபன் வீட்டில் வளர்கிறார்கள். அவர்களை பற்றி அறிய ஆவல். ஆனால் நேரடியாக கிருஷ்ணனைப் பற்றி கேட்க முடியாதே. பரம ரஹஸ்யம் அல்லவா?   ஊரில் எல்லோரும் சுகமா, வீட்டில் எல்லோரும் சுகமா.  நாட்டு மக்கள் நலமா என்று சுற்றி வளைத்து கேட்டார்.  எல்லோரும் சுகம் என்று அறிந்து மகிழ்ந்தார்.

''நண்பா, வசுதேவா ,  பாவம்  நீயும்  தேவகியும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நான் அறிவேன்.ஊரில் எல்லோரும்  பேசுகிறார் களே.  பிறந்த பிள்ளைகள் அனைவரையும்  கொடியவன் கம்சனுக்கு இரையாக கொடுத்த பெற்றோர்களாச்சே நீங்கள். எட்டாவது கடைசி குழந்தை பெண்  என்றும் பார்க்காமல் கொல்ல  முயன்றானாம். அது காளி அம்சமாம். அவன் கையிலி ருந்து நழுவி வானில் பறந்ததாம். நமது கர்ம வினைகள் தாம் நம் வாழ்வை இப்படி சிதறடிக்கிறது. இதை எல்லாம் உணர்ந்த ஞானி நீ. அதனால்  வந்த துன்பம் அனைத்தும்  ஏற்றுக்கொண்டு  எங்கள் ஊரிலிருக்கும் அனைவரின் நலம் பற்றி அன்போடு
ஆர்வமாக  விசாரிக்கிறாய்.. நாங்கள் யாவரும் நலம், என் வீட்டில் என் குழந்தைகள் சந்தோஷமாக வளர்கிறார்கள். ஊரில் யாருக்கும் எந்த துன்பமும் இல்லை'' என்கிறார் நந்தகோபர்.

''ரொம்ப  நன்றி நந்தகோபா,  கம்சனை சந்தித்து  கப்பம் கட்டியாகிவிட்டதா? அப்படி  என்றால் உடனே  ஊர்  திரும்பு.  எனக்கு  என்னவோ  கோகுலத்திற்கு நீ உடனே திரும்ப வேண்டும் என்று தோன்றுகிறது.  அங்கே  நீ இல்லாத நேரம்  ஏதோ சில அசம்பாவிதங்கள் நேரலாம் என்று மனதில் படுகிறது. உடனே போ''

வசுதேவர் வீடு திரும்பினார்.  நந்தகோபனும்  கோகுலம் திரும்பினார். கம்சன் அனுப்பிய பூதகி ஏற்கனவே  வீட்டில் இருப்பது அவருக்கு  வீட்டில் நுழைந்தபோது தான் தெரிந்தது. வசுதேவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிந்தது.

parAnnEna mukham dagdham - Sanskrit

|| *ॐ* ||
              " *सुभाषितरसास्वादः* "
----------------------------------------------------------------------------
          " *कलिमहिमा* " ( ८२)
 -------------------------------------------------------------------------
*श्लोक*----
   " परान्नेन  मुखं  दग्धं  हस्तौ  दग्धौ  प्रतिग्रहात् ।
     परस्त्रीभिर्मनो  दग्धं  कुतः शापः  कलौ  युगे " ।। ( वृद्धचाणक्यशतकम् )
--------------------------------------------------------------------------------------
*अर्थ*----
    इस  कलियुग  में  परान्नसेवन  करके  लोगों  का  मुख  जल  गया  है ।
दान  ले ले   कर  सब  लोगों  के  हाथों  में  छाले  पड  गये  है ।
और  परस्त्री  के  चिन्तन  से  सबका  मन  भी  जल  गया  है ।
इस  कलियुग  को  किसका  शाप  लग  गया  है  पता  नही ।
------------------------------------------------------------------------
*गूढ़ार्थ*----
कितना  भीषण  वास्तव  सुभाषितकार  ने  हमे  बताया  है ।
आज  लोग  घर  में  कम  बाहर  ज्यादा  भोजन  करने  लगे  है ।
परान्न  की  तो  संकल्पना  ही  नष्ट  हो  गयी  है ।
दान  देना  कोई  नही  चाहता  किन्तु  लोनरूपी  दान  हर  कोई  चाहता  है।
और  परस्त्री  मातेसमान  यह  उक्ति  तो  कब की  नष्ट  होकर  किसी  पुराने  जमाने  की  लगने  लगी  है । 
सुभाषितकार  ने  हमे  आयना  ही  दिखाया  है ।
--------------------------------------------------------------------
*卐卐ॐॐ卐卐*
----------------------------
डाॅ. वर्षा  प्रकाश  टोणगांवकर 
पुणे /  महाराष्ट्र 
----------------------------------
🍂🌱🍂🌱🍂🌱🍂🌱🍂🌱🍂🌱🍂

Tuesday, August 26, 2025

Vedas are apaurusheyaa

*वेदानाम् अपौरुषेयत्वम्* MM Sri Subrahmanyam Korada

Here is an old post ---

वेदानाम् अपौरुषेयत्वम् ----
व्याकरणम् - पूर्वमीमांसा - वेदान्तः - न्यायः - वैशेषिकम् - भारतम् - उपनिषत्

 

व्याकरणम् --

What is the meaning of अपौरुषेयः --

पुर अग्रगमने (तुदादिः) - 'पुरः कुषन् ' (उणादिः) - पुरुषः - 'ञ्नित्यादिर्नित्यम् ' आद्युदात्तः ।

 'सर्वपुरुषाभ्यां णढञौ ' (पा 5-1-10) - पुरुषात् वधे (वार्तिकम्) 

अत्यल्पमिदमुच्यते - पुरुषाद्वध इति । पुरुषात् वध - विकार - समूह - तेनकृते - ष्विति वक्तव्यम्। पौरुषेयो वधः । पौरुषेयो विकारः । पौरुषेयः समूहः । तेन कृतं पौरुषेयम् ।

(पुरुष + ढञ् = पौरुषेयम् , ' ञ्नित्यादिर्नित्यम् ' - आद्युदात्तस्वरः )

Here Panini did not mean the पुरुष of सांख्यम् etc --

Kaiyata -- पुरुषश्च लोकप्रसिद्धः पाण्यादियुक्तः इह गृह्यते । न तु सांख्यादिशास्त्रप्रसिद्धः, तत्र प्रत्ययस्यादर्शनात् ।

Therefore, अपौरुषेयम् means - not done/authored by a person/human being.

 

Under तेन प्रोक्तम् ( पा 4-3-101) - Patanjali says - वेदs are not authored, rather they are नित्य् ---

तेन प्रोक्तम् 

प्रोक्तग्रहणम् अनर्थकम् (वा) ग्रन्थे च दर्शनात् (वा) 

भाष्यम् -- छन्दो'र्थं तर्हीदं वक्तव्यम् । न हि छन्दांसि क्रियन्ते , नित्यानि छन्दांसि ।

 

कर्तुः अस्मरणात् तेषामित्यर्थः -- कैयटः

छ्न्दो'र्थमिति चेत्तुल्यम् (वा)

भाष्यम् -- छन्दो'र्थमिति चेत् तुल्यमेतद्भवति । ग्रामे ग्रामे कालकं कालापकं च प्रोच्यते त्त्र अदर्शनात् । न च तत्र प्रत्ययो दृश्यते ।

ग्रन्थे च दर्शनात् । यत दृश्यते ग्रन्थः सः, तत्र 'कृते ग्रान्थे' इत्येव सिद्धम् ।

ननु चोक्तम् - न हि छन्दांसि क्रियन्ते नित्यानि छन्दांसि इति ।

यद्यपि अर्थो नित्यः , या त्वसौ वर्णानुपूर्वी सा अनित्या । तद्भेदाच्चैतद्भवति - काठकम् कालापकम् मौदकम् पैप्पलादकम् इति ।

 

Kaiyata explains --

महाप्रलयादिषु वर्णानुपूर्वीविनाशे पुनरुत्पद्य ऋषयः संस्कारातिशयात् वेदार्थं स्मृत्वा शब्दरचनां  

विदधतीत्यर्थः ।

नागेशः -- काठकेत्यादि । अर्थैक्ये'पि आनुपूर्वीभेदादेव काठककालापकादिव्यवहार इति भावः।

This is what is meant by - मन्त्रकृत् (नमो वाचे या चोदिता .... नमो मन्त्रकृद्भ्यः ) ।

 

A caution - we must be careful in interpretation --

दृष्टं साम ( पा सू 4-2-7) ) does not mean - the साम seen by वसिष्ठ etc.

Kaiyata - कलिना दृष्टमिति । यस्य साम्नो विशिष्टकार्यविषये विनियोगो ज्ञानातिशयसंपत्त्याकलिना अज्ञायि तत्तेन दृष्टमित्युच्यते ।

 

वाक्यपदीयम् (46, जातिसमुद्देशः , पदकाण्डः) -- 

ज्ञानमस्मद्विशिष्टानां सर्वं सर्वेन्द्रियं विदुः ।

अभ्यासान्मणिरूप्यादि विशेषेष्वेव तद्विदाम् ॥

( नेदानीम् इन्द्रियैरेव पश्यन्ति । घ्राणतः शब्दं शृणोति पृष्ठतो रूपाणि पश्यति अङ्गुल्यग्रेण सर्वेन्द्रियार्थानुपलभते .... उपनिषत्) ।

At the end of every महाप्रलय (not acceptable to पूर्वमीमांसकs - यः कल्पः स कल्पपूर्वः / न कदापि अनीदृशं जगत्) - the Vedas disappear and the sages with their तपश्शक्ति and योगिप्रत्यक्षम् , would discern the वेदमन्त्रs and propagate the same - and the Mantras are named after them- मन्त्रकृतः/मन्त्रद्रष्टारः-- प्रतिमन्वन्तरं चैषा श्रुतिरन्या विधीयते ।

 

वेदान्तः ---

अत एव च नित्यत्वम् ( ब्र सू 1-3-29)

शाङ्करभाष्यम् -- स्वतन्त्रस्य कर्तुः अस्मरणादिभिः स्थिते वेदस्य नित्यत्वे देवादिव्यक्तिप्रभवाभ्युपगमेन तस्य विरोधम् आशङ्क्य अतः प्रभवात् इति परिहृत्य इदानीं तदेव वेदनित्यत्वं द्रढयति - अत एव च नित्यत्वम् इति । अत एव नियताकृतेः देवादेः जगतः वेदशब्दप्रभवत्वात् वेदशब्दनित्यत्वमपि प्रत्येतव्यम् ।

तथा च मन्त्रवर्णः --

यज्ञेन वाचः पदवीयमायन् तामन्वविन्दन् ऋषिषु प्रविष्टाम् ( ऋग्वेदः 10-71-3) इति स्थितामेव वाचम् अनुविन्नां दर्शयति . वेदव्यासश्चैवं स्मरति --

युगान्ते'र्हितान् वेदान् सेतिहासान् महर्षयः ।

लेभिरे तपसा पूर्वम् अनुज्ञातः स्वयंभुवा ॥इति -- महाभारतम् - शान्ति 210-19

 

Veda itself clearly says --

अस्य महतो भूतस्य निःश्वसितम् एतद्यद् ऋद्वेदो यजुर्वेदः सामवेदॊsथर्वाङ्गिरसः (बृहदा. उप 2-4-10)

 

पूर्वमीमांसा --

1-1-7-27 -- वेदांश्चैके सन्निकर्षं पुरुषाख्याः - पू प सू

Some scholars argued that Vedas are written as there are names such as कठ, कलाप etc.

28 -- अनित्यदर्शनाच्च - पू प सू

In Veda there is proof to show that it is non-eternal - there are names of some people like - बबर, son of प्रावाहणि, खुसुरविन्द son of उद्दालक, who are mortal.

29 उक्तं तु शब्दपूर्वत्वम् - सि सू

It is already stated that वेद has got अध्ययनपूर्वकत्वम् । There has been uninterrupted chain of गुरुशिष्यपरम्परा - nobody who has independently recited Veda.

30 आख्या प्रवचनात् - सि सू 

काठक , कालापक etc संज्ञs due to specialization .

 

वैशेषिकs and नैययिकs hold that वेदs are पौरुषेय --

वैशेषिकम् --

1-1-3 -- तद्वचनात् आम्नायस्य प्रामाण्यम्

Since धर्म is defined clearly Veda is an authority.

6-1-1 बुद्धिपूर्वा वाक्यकृतिर्वेदे

6-1-2 ब्राह्मणे संज्ञाकर्म सिद्धिलिङ्गम्

9-2-13 - आर्षं सिद्धदर्शन च धर्मेभ्यः

Due to performance of धर्म ordained by Veda ऋषिs got the perfect knowledge of पदार्थs.

 

न्यायदर्शनम् --

मन्त्रायुर्वेदप्रामाण्यवच्च तत्प्रामाण्यम् - आप्तप्रामाण्यात् 1-1-68

शब्द - दीप - ज्ञानानां स्वतः प्रामाण्यम् - इति स्पष्टं लघुमञ्जूषायाम् । नैयायिकानां परतः प्रामाण्यम् तु अनवस्थादोषजुष्टत्वात् हेयमेव ।

धन्यो'स्मि 



Dr.Korada Subrahmanyam
Prof of Sanskrit (Retd)
Chairman , Bharateeya Vidvat Parishat
Ph:09866110741