முப்பத்திரண்டு (32) அப்படிங்கற எண்ணுக்கு ஸ்ரீவைஷ்ணவத்துல ஒரு ஒசத்தி உண்டு. இந்த 32 விஷயங்கள் தான் ஸ்ரீவைஷ்ணவத்தை தாங்கி பிடிச்சுண்டிருக்க ஒசத்தியான அங்கங்கள்.
ஸ்ரீவைஷ்ணவ தத்வங்கள் 23 மற்றும் 9 கோட்பாடுகள் சேர்ந்தா முப்பத்தி ரெண்டு கூட்டுத் தொகை வரும். அந்த 9 கோட்பாடுகளுள் 3 ஜீவாத்மாக்களைப் பத்தி, 3 பெரிய பிராட்டியைப் பத்தி, 3 பெரிய பெருமாளை பத்தி.
பகவத் கீதையில் இருக்க பதினெட்டு அத்தியாயங்கள், பிரம்ம சூத்திரத்தில் இருக்க நாலு அத்தியாயங்கள் மற்றும் நம்மாழ்வார் திருவாயமொழிலே இருக்க பத்து அத்தியாயங்கள் - ஆக மொத்தம் 32 விஷயங்கள்
நம்மளோட உபநிஷதங்கள் மோக்ஷ வித்யைகள்ன்னு 32 விஷயங்களை சொல்றது
பெருமாள் திருவாராதனத்துல பண்ணக் கூடாத அபச்சாரங்கள்னு 32 விஷயங்கள் சொல்லப்பட்டுருக்கு
நம்மளை கரை சேக்கற விஷயமான பாதுகா சஹஸ்ரம் 32 அத்யாயங்களா பிரிக்கப்ட்டுருக்கு
பாதுகா சஹஸ்ரத்துலே வர்ற ஒவ்வொரு ஸ்லோகமும் பெரிய பெருமாளோட பாதுகையை வர்ணிக்கற அழகை இன்னிக்கெல்லாம் சேவிச்சுண்டு இருக்கலாம். பெருமாளோட திவ்ய திருமேனியின் அழகைப் பத்தி இல்லே, அவனோட சாத்துப்படியை பத்தி இல்லே, அவன் திருமேனிலே ஏள்ளியிருக்க திருவாபரணங்களை பத்தி இல்லே. இதெல்லாத்தையும் விட்டுட்டு நேரே அவரோட திருவடிகளைத் `தாங்கின்றுக்க பாதுகையை அணு அணுவா ரசிக்கற ஒசத்தியான விஷயம் தான் பாதுகா சஹஸ்ரம். பாதுகையே.. நீ இப்பிடி இருக்கியே.. நீ அப்பிடி இருக்கியே... அப்படின்னு ஒவ்வொரு ஸ்லோகமும் அர்த்தம் புரிஞ்சிண்டு சேவிச்சோமானால் மனசை உருக்கும்.
ஸ்ரீ வைஷ்ணவ கோயில்களுக்கு போறோம். அங்கே சடாரி சாதிக்கறது அப்படின்னு ஒரு வழக்கம் இருக்கு. பெருமாள் தாயார் ஆசார்யன் மற்றும் அந்தந்த சந்நிதிகள்ல ஏள்ளியிருக்க எம்பெருமான்களோட திருவடிகளை தலைல சேத்துக்கறதுக்கு பேர் தான் சடாரி சாதிச்சுக்கறது. பெருமாள் சந்நிதிக்கு போகும் போது அந்தப் பரமனோட திருவடிகளை கண்ணாரக் கண்டு 'இந்தத் திருவடிகள் தானே என்னை கரை சேக்கப் போறது' அப்படின்னு மனசார நினைச்சுக்க சொல்றா பெரியவா. நாமெல்லாம் அங்கேர்ந்து தான் வந்தோம். அங்கே தான் போய் சேர போறோம். சேரனும்.
தகுந்த அதிகாரி (ஆசான் - குரு) முகமா ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தை சந்த்தை சொல்லிண்டு பாராயணம் பண்றது அவசியம். பாதுகையை தலைல தாங்கிக்கறவாளைப் பார்த்து தேவர்களும் பயப்படறாளாம் எங்கே தங்களோட பதவியே பறிபோயிடப் போறதோன்னு. தாங்களும் ஓடி வந்து பெருமாளோட பாதுகையை தங்களோட சிரஸுல சேத்துக்கறாளாம்.
பாதுகா சஹஸ்ர ஸ்லோகங்களை சொல்றவாளுக்கு கிடைக்காத நல்ல பலன்களே இல்லேன்னு சொல்லலாம். பணம், பதவி, பட்டம், ஆரோக்கியம், பேர் புகழ், பரமபதம்னு இம்மைலையும் மறுமைலயும் எல்லாத்தயும் அனுக்கிரஹம் பண்ண வல்லது ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம். ராமனோட பாதுகைகளை தன்னோட சிரஸுல சேத்துண்டதுனால தானே பரதனுக்கு உயர்வு உண்டாச்சு.
பெருமாளோட திருவடிகள்ல தான் விஷயமே இருக்கு. அனுமன் சிறிய திருவடி ஸ்ரீ கருடன் பெரிய திருவடிங்கறோம். பெருமாளோட திருவடிகளுக்கு ஆபரணமா இருக்கறதுன்னா பாதுகைகளுக்கு எவ்ளோ சுகூர்த்தம் இருக்கணும். நம்மளோட சிறுமையை மனசார உணர்ந்தோம்னா, அவன் தான் பரமாத்மா அப்படின்னு மனசார புரிஞ்சுதுன்னா, சரணாகதி ஒண்ணு தான் கரை சேர்றதுக்கான வழி அப்படின்னு தெள்ளத் தெளிவா புரிஞ்சுதுன்னா, அவனோட திருவடிகளை விடவே மாட்டோம். அவனோட பாதுகையின் உயர்வை தெளிவா புரிஞ்சிண்டதுனால தான் நம்மளோட பெரியவாள்ளாம் நித்யம் கோவில்களுக்கு போய் பெருமாளை சேவிச்சுட்டு தீர்த்தம் சடாரி வாங்கிண்டு வந்தா. எவ்வளவோ சக்தியை தங்களுக்கு விடாமே சேத்துண்டு இருக்கா.
துரியோதனன் க்ருஷ்ணனோட தலைமாட்டுல நின்னதுனால தான் அந்தப் பரமனோட திருஷ்டி தன் மேல படாம தோத்துப் போனான். அவனோட திருவடிகளே ஒசந்தது அப்படின்னு விஷயம் தெரிஞ்சு திருவடிகள் பக்கமா உக்காந்துண்ட அர்ஜுனனனுக்கு ஜெயம் உண்டாச்சு. அவன் தலைக்கு மேலே யாராலயாவது ஏறி உட்காரத் தான் முடியுமா?
ஸ்ரீ ஆண்டாள் சேவிச்சதைப் போல "செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ! திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் அங்கனிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேல்"
இந்த விஷயமறிஞ்சு தான் எப்பவும் ப்ரஹ்லாதாழ்வானும் தன்னோட கையை கூப்பிண்டு அந்த ந்ருஸிம்ஹனோட காலுங் கீழயே நின்னான். தன்னோட திருஷ்டி (பார்வை) படற இடத்துலே இருக்கறவாளை அவன் கண்கொண்டு பாக்காம இருப்பதில்லை. கடாக்ஷிக்காம விடுவதில்லை. அவனுடைய கடாக்ஷம் கெடைச்சுடுத்தானால் வேறென்ன வேணும்? வேண்டியதெல்லாம் தான் இருக்குமே. அவன் மட்டுமே வேணும்னு நெனைச்ச ப்ரஹ்லாதனுக்கு எல்லாம் கெடைச்சுதே. குடுத்தானே அந்தப் பரமன். கேட்டு கேட்டு குடுத்தானே அந்த ந்ருஸிம்ஹன். காருண்யன். பக்திப் பிரியன். அநாத ரக்ஷகன். ந்ருஸிம்ஹா.. ந்ருஸிம்ஹா.. உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன்... சரணாகதோஸ்மி.tks Latha bhashyam
No comments:
Post a Comment