Sunday, August 24, 2025

Thevur temple

தினமும் ஒரு கோவில்

தேவபுரீஸ்வரர் கோயில் 
திருத்தேவூர் (தேவூர்)

மூலவர்: தேவபுரீசுவரர், தேவகுருநாதர்,கதலிவனேசர்
அம்பாள்: மதுரபாஷினி, தேன்மொழியம்மை
தீர்த்தம்: தேவதீர்த்தம்
விருட்சம் வாழை
ஊர்: தேவூர்
மாவட்டம்; நாகப்பட்டினம் 

தேவர்கள், வழிபட்டதால், இப்பெயர்.

குபேரன் வழிபட்டு, சங்கநிதி, பதுமநிதி பெற்ற தலம். 

இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர்

குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இறைவன் வணங்கப்படுகிறார். 

கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்
கோவிலின் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. 

கௌதமர் வழிபட்ட லிங்கம் இங்கு உள்ளது

ஸ்தலவிருட்சம் கல்லிலேயே வளரும் அதிசய வாழைமரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது.

ராவணன் குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்ற அமிர்த கலசங்களை எடுத்துச் சென்றான். குபேரன் தேவூர் தலத்து இறைவனை செந்தாமரைப் புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டதால் குபேர கலசங்களைத் திரும்பப் பெற்று மீண்டும் குபேர பட்டத்தைப் பெற்றான். குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட ஸ்தலம் இது.

செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம்.

இந்திரன் இந்திர பட்டத்தை இழந்தபோது, இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்றான். 

பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் என தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும்.

இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர்வரும் என்று எண்ணுபவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும். 

இழந்த செல்வம் திரும்ப கிடைக்க வழிபட வேண்டிய தலம்.

திருமணமாகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபாட்டால் பலன் பெறலாம்.

அமைவிடம் 

திருவாரூரில் இருந்து நாகப்பட்டிணம் செல்லும் சாலை வழியில் கீவளூரை அடைந்து, அங்கிருந்து திருத்துளைப்பூண்டி செல்லும் சாலையில் சென்றால் தேவூரை அடையலாம். திருவாரூர் - வலிவலம் நகரப்பேருந்து தேவூர் வழியாகச் செல்கிறது

No comments:

Post a Comment