⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
🔶ஒரு ஞானியிடம் சொல்லப்பட்டது:
"அங்கே ஒரு தவயோகி தண்ணீர் மேல நடக்கிறார் ."
அவர் பதிலளித்தார், "அது ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் ஒரு மரப்பலகை கூட தண்ணீரில் மிதக்கும்."
மக்கள் சொன்னார்கள் :
" ஒரு தவ யோகி வானத்தில் பறக்கிறார் "
அவர் பதிலளித்தார்,
"அதுவும் ஒரு பொருட்டல்ல. ஈக்கள் கூடத் தான் வானத்தில் பறக்கிறது"
அவர்கள் அவரிடம் கேட்டார்கள் :
*"அப்படியானால் அதிசயம் என்பது எது.?"*
அவர் பதிலளித்தார்,
*மக்களிடையே இயல்பாக வாழ்வது தான்...!*
அவர்களின் தீங்கை சகித்துக் கொள்வது,
உங்கள் தார்மீகக் கொள்கைகளை இழக்காமல் இருப்பது,
நீங்கள் பொய் சொல்லவோ, திருடவோ, துரோகம் செய்யவோ, ஏமாற்றவோ, புறம் பேசவோ கூடாது,
மக்களின் இதயங்களை உடைக்கவோ கூடாது."
இத்தகைய குணங்களைக் கொண்ட மனிதனாக இருப்பதுதான் உண்மையான அதிசயம் " என்று அதிசயமான பதிலைக் கூறினார்.
நற்காலை வணக்கம்
🌸🙏🙏🙏🙏🙏🌸
No comments:
Post a Comment