Thursday, May 29, 2025

How to remember sAma,DAna, bhEda & danda - HH Chandrashekhara Bharati Mahaswmigal

*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
 
*இரண்டாம் பாகம்*
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*8.எல்லோரிடத்தும் அன்பு*
 
ஸ்ரீமத் ஆசார்யாரின் அன்பு மிகவும் பரந்தது. எல்லோரிடத்திலும் செல்லக்கூடிய இயல்பு வாய்ந்தது. இவ்வன்பைப் பெறுபவர்கள் தங்கள் தங்கள் யோக்கியதைக்கு தகுந்தபடி அதை அனுபவிக்கக்கூடிய நிலைமையிலேயே எளிதில் அமைந்து உதவும்.
 
ஒரு ஸமயம் ஒரு சிறுவன் ஸ்ரீமத் ஆசார்யாரை தரிசிக்க நேர்ந்தது.
 
மஹா: இப்பொழுது என்ன புஸ்தகம் வாசிக்கிறாய்? சிறுவன்: ஹிதோபதேசம்.
 
மஹா: உபாயங்கள் எதெல்லாம்? சிறுவன்: ஸாமம், பேதம், தண்டம்.
 
மஹா: இன்னொன்று உண்டு.
 
சிறுவன்: ஆம். தானம்.
 
மஹா: சரியாகிவிட்டது. ஆனால் உபாயங்கள் நான்கு என்று மாத்திரம் தெரிந்து கொண்டிருக்கிறாய். அவைகளுக்குள் கிரமமாக ஒரு வரிசையுண்டு. அந்த வரிசைக்கும் தாத்பர்யமுண்டு, என்று தெரிந்துகொள்ளவில்லை யென்று தெரிகிறது. நீ அதையும் தெரிந்து கொண்டிருந்தால் இந்த தயக்கம் ஏற்பட்டிராது.
 
சிறுவன்: வரிசைக்கு என்ன தாத்பர்யம்?
 
மஹா: இப்போது ஒரு சிறிய சுலோகம் சொல்கிறேன். அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வாயானால், உபாயங்களின் வரிசைக் கிரமம் தவறாது. ஞாபகத்தில் வைத்துக் கொள்வாயா?
 
சிறுவன்: அப்படியே ஆகட்டும். என்ன சுலோகம்?
 
 மஹா: *अधीष्व बालकाधीष्वः* [வாசி, குழந்தாய், வாசி.]
 
*दास्यामि तव मोदकान्* [(வாசித்தால்) உனக்கு கொழுக்கட்டைகள் தருவேன்.]
 
*अस्याः मैं वा प्रदास्यामि* [(இல்லையானால்) அவைகளை வேறு யாருக்கேனும் கொடுத்து விடுவேன்.)
 
*कर्णावुत्पाटयामि ते* ( (அது மாத்திரமல்ல) உன் காதுகள் இரண்டையும் திருகுவேன்.]
 
இந்நான்கினுள் முதலாவது ஸாமம் (பிரியத்தோடு செய்யும் உபதேசம்), இரண்டாவது தானம் (வெகுமதி பெற ஊக்கமளிப்பது), மூன்றாவது பேதம் (பிளவை உண்டாக்க. முயல்தல்), நான்காவது தண்டம் (பலாத்காரம்) என்று தெரிகிறதோ இல்லையோ? இதுதான் இயற்கையாக ஏற்பட்ட வரிசைக் கிரமம். ஆகையால்தான் இவ்வரிசையில் உபாயங்கள் கூறப்படுகின்றன. அவை நான்கு என்பது மாத்திரமின்றி இவ்வரிசையில் அமைந்துள்ள நான்கு என்று அறிந்துகொள்ள வேண்டும். இந்த சுலோகத்தை மறக்காமல் ஞாபகத்தில் நன்கு வைத்துக் கொள்ளவும்.
 
*தொடரும்…*

No comments:

Post a Comment