Tuesday, July 23, 2024

Nrusimha vaibhavam

4003--ந்ருஸிம்ஹ வைபவம்

(15)   ராமாயணத்தை பார்ப்போம்.  வெளியிலபார்த்த ராமனைப் பற்றியதாக தோன்றும்.  ஆனால உள்ள ந்ருஸிம்ஹ மயம்.  அது எப்படி தெரிகிறது. மாரீசனுடைய சஹாயத்தை நாடி ராவணன் மாரீசனை கோரிவருகிறான். மாரீசன் மஹாமாயாவி.  மாரீசனைப் பார்த்து "நீ எனக்காக  ஒரு உபகாரம் பண்ண வேண்டும். ஸீதையை அபகரிக்கணும்." என்றான். அப்ப மாரீசன் சொல்றான். ‌*"சுலபா புருஷா ராஜன் ஸததம் ப்ரியவாதின:  அப்ரயஸ்ய து பத்யஸ்ய  வக்தா ஸ்ரோதா ச துர்லப;"* உலகத்தில் ப்ரியமான வார்த்தைகள் எத்தனை பேர் வேணும்னாலும் சொல்லலாம். ஹிதத்தை சொல்றவா ரொம்ப குறைவு. ப்ரியம் என்பது செவியளவில் இன்பம் பயக்கும்.  அனுஷ்டித்தால் அனர்த்தம் தான். பல கஷ்டங்கள் வரும். ஹிதம் என்பது இருதயத்தைப் போய் தொடும். கேட்க சிரமமாக இருக்கும். அதை அனுஷ்டித்தால் நன்மை விளையும்.  ஹிதம் கேட்பதற்கு கஷ்டமாயிருந்தாலும் அதனால் உயர்ந்த பலன் உண்டாகும். ப்ரியம் கேட்க  ஆனந்த மாயிருக்கும். அதனால ஏற்படக் கூடிய விளைவோ பல துன்பங்கள் அனுபவிக்க நேரிடும்.  ஹிதம் என்பது கடுக்காய் கஷாயம் போல. பருகுவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் உடலில் பல வ்யாதிகளைப் போக்கி ஆரோக்கியம் அளிக்கும். ப்ரியம் என்பது காபியைப் போல். பருகும் போது இனிப்பாயிருக்கும்.  ஆனால உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். ஒருத்த ருக்கு ப்ரியமான வார்த்தை சொல்பவர்கள் நிறைய பேர் கிடைப்பார்கள்.ஆனால் ஹிதமான வார்த்தை கேட்பவர்களும் கூறுபவர்களும் கடினம்.  அவரவர்களுக்கு ப்ரியமான வார்த்தைகளை பேசினால் சந்தோஷப்படுவார்கள். ஆனால் நன்மை பயக்கக் கூடிய ஹிதமான வார்த்தைகள் கேட்பவர்களும் சொல்பவர்களும் மிகவும துர்லபம்.  . அதை தான் இங்க மாரீசன் சொல்றான்.  நான் ஹிதத்தை சொல்றேன். கேள். ராவணனை நோக்கி மாரீசன் மேலும் கூறுகிறான்." நீ யாரை அபகரிக்க  நினைக்கிறாயோ அந்த  ஸீதை யார் மடியில உட்கார்ந்திருக்காள் என்று எண்ணுகிறாய். ராமனுடைய மடியில் என்றா,?  "தஸ்ய சா நரஸிம்ஹஸ்ய  ஸிம்ஹோரஸ்கஸ்ய பாமினி౹" ராமனை யாரென்று நினைக்கிறாய்.இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய மகாராஜா தசரதன் மகனான ராமனுடைய மடியில் உட்கார்ந்திருக்கா என்று தப்பு கணக்கு போடாதே.  "தஸ்ய சா நரஸிம்ஹஸ்ய"  நரம் கலந்த சிம்ஹமமாக அவதாரம் பண்ணாதே அவனுடைய மடியில உட்கார்ந்திருக்கிறாள் ‌அவன் கிட்ட நெருங்க முடியாது.

ராமனை ஹிரண்ய கசிபுவை ஸம்ஹரித்த நரஸிம்ஹனாக காண்கிறேன்.   "வ்ருக்ஷே வ்ருக்ஷே பஸ்யாமி" .  அவனை நெருங்க முடியாது என்றான்.  எங்கும் அவனை பார்க்கிறேன்.  மரங்கள் தோறும், வ்ருக்ஷங்கள் தோறும் ந்ருஸிம்ஹ னாகப் பார்க்கின்றேன் என்றான். மாரீசன்ராமனை ந்ருஸிம்ஹனாக கொண்டாடு கிறான். 

 (16)    அடுத்து சுக்ரீவன் ராமனை பரீட்சை செய்கிறான். சப்ததால வ்ருக்ஷங் களை பேதிக்கச் சொல்றான். துந்துபி என்ற அசுரனுடைய கங்கால கூட்டம். எலும்புக்  கூட்டம் தூக்கி எறியச் சொல்றான்.  ரத்தமும் சக்ஷதையுமாக குவிந்து கிடக்கிறது.   அது ஒரு காலத்தில வாலியினால் அடித்து வீழ்த்தப்பட்டவன்.  அவன் தூக்கி எறிந்தான் . மாம்சத்தோடே எலும்புக்கூடு உலர்ந்து குவியலாக மலைபோல் கிடக்கிறது. யாராலும் அதை துளிகூட அசைக்க முடிய வில்லை.  ராமனை விட்டு அதை எடுத்து தூக்கி எறியும்படி சொல்றான். ராமனுடைய பலத்தை பரீட்சிக்கிறான். ‌*"த்ருடகடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்காள கூட தூர விக்ஷேப தக்ஷ தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தரசலன விஸ்வஸ்த ஸுஹ்ருதாஷயா" * அந்த எலும்பு குவியலை பரமாத்மா தனது இடது திருவடி சுண்டு விரலால லேசாக அமுக்கினான். அது நூறு காததூரத்திற்கு அப்பால் போய் விழுந்தது. அதற்கப்புறம் சரத்தைப் பூட்டி ஏழு சால வ்ருக்ஷங்களை அம்பினால்  துளைத்தான். ஒரே அம்பினால் ஏழு மரங்களையும் துளைத்தான் அந்த சமயம் ஏழு இருடீகங்கள்,  ஏழு சமுத்திரங்கள்,  ஸப்த மருத்துக்கள்,  ஏழு குலாசலங்கள்  ஏழு பர்வதங்கள்,  ஸப்த ரிஷிகள் எல்லாம் நடுநடுங்கின. ஏனென்றால் இந்த ராம பாணத்துக்கு ஏழு என்ற லக்னம் இலக்காயிற்றோ. இவனுடைய அம்புக்கு ஏழு என்ற இலக்கிலுள்ள வஸ்துக்களெல்லாம் இலக்காகி விடுமோ என்று பயந்தன. அப்படி ஏழு வ்ருக்ஷங்க ளையும் தன் ஒரே அம்பினால் பேதித்தான். அப்பொழுது சுக்ரீவன் கை குலுக்கினான். முதலில ராமனை வணங்கவில்லை.  கை குலுக்கினான். இப்ப அவன் திருவடியில் சரணாகதி பண்ணினான். விழுந்து இப்ப சொல்றான். *."தவ ப்ரஸாதாத் ந்ருஸிம்ஹராகவா ஸ்ரீயாம் ராஜ்யம்ச சமாப்னுயாம்யஹம்" * .."நீ வெறும் ராகவனில்லை. ந்ருஸிம்ஹ ராகவன். நரம் கலந்த சிங்கமதான ந்ருஸிம்ஹாவதாரம் பண்ண ராகவன். அந்த நரசிம்ஹனுடைய பலம் உன்னிடம் இருக்கிறது.  இல்லை யென்றால் வாலியைக் கொல்லக்கூடிய சக்தி உனக்கு ஏற்பட்டிருக் காது. உன்னை நான் விச்வசிக்கிறேன். என்க்கு எல்லாம் கிடைக்கப்போகிறது.  சுக்ரீவன்  ராமனை ந்ருஸிம்ஹ ராகவன் என்று கூப்பிட்டான். முதல்முதல்ல ந்ருஸிம்ஹ ராகவன் என்று கூப்பிட்டவன் சுக்ரீவன் தான். அதற்கு முன் யாரும் அவ்வாறு கூப்பிட்டதில்லை.
  (17)       மால்யவான் என்ற பர்வத குகையிலிருந்து பகவான் வெளியில வரான். .வால்மீகி வர்ணிக்கிறார். 
* "சிம்ஹோ கிரி குஹாஸயா" *
பர்வத குகையிலிருந்து ந்ருஸிம்ஹம் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கானாம்.   ஆண்டாள் திருப்பாவையில் ந்ருஸிம்ஹனுடைய பாசுரத்தில் இதை அப்படியே வர்ணிக்கிறாள்.
**" மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்/ சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து / வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதரி/ மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு/ போதருமாபோலே நீ பூவைப் பூவண்ணா/ நின் கோயில் நின்று இங்கனேப்
போந்தருளி/ கோப்புடைய சிங்காசனத்திருந்து/ யாம் வந்த காரியம் ஆராய்ந்தருளேலோ  ரெம்பாவாய்//*"
     ஆண்டாள் தன்னுடைய 30 பாசுரங்களில் வந்த காரியம் ஆராய்ந்து அருள வேண்டும்" என்று பிரார்த்தித்த பாசுரம் ந்ருஸிம்ஹ னுடைய  பாசுரம் தான்.  நாம் வந்த காரியத்தை ஆராய்ந்து அருளக் கூடியவன் நரசிம்ஹன் ஒருவனே. அந்த லக்ஷ்மி நரஸிம்ஹன் நம்முடைய ஹ்ருதய குகைக்கள் அமர்ந்திருக்கிறான்.  பர்வத குகைக்குள் எழுந்தருளியிருக்கிறான் எங்கும் குஹாவாசம் செய்கிறவன் நரஸிம்மன்
**".குஹாசசாய குஹ்யாய குஹ்யவித்யா ஸ்வரூபினே/ குஹராந்தே விஹாராய
ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் ॥" *"
சோளங்கிபுரத்தில குகைக்குள்ளே இருக்கிறான்.  கடிகாசலத்தில குகைக்குள்ள இருக்கான்.  யாதகிரில குகைக்குள்ள இருக்கான். எங்கும் குஹாவாசம். அஹோபிலம்.  அஹோபலம். அஹோன்னா ஆச்சரியம். பிலம்னா குகை." தெய்வமல்லா செல்லவொன்னா  சிங்கவேள்குன்றமே" என்கிறார் திருமங்கையாழ்வார். பர்வதங்கள் எல்லாம் வேதம் என்றால் மலை குகைகள் வேதாந்தங்கள். உபநிஷத்துக்கள் . உபநிஷத்தாகிய குகைக்குள் இருப்பவன் ந்ருஸிம்ஹன் என்பது ஸ்பஷ்டம் . உபநிஷத் ப்ரதிபாத்ய தேவதை லக்ஷ்மி நரஸிம்ஹன்.   குகைக்குள்ள வாசம் பண்றான். குகைக்குள்ளே இருந்து வெளியில வரத பார்த்தா ராமன் ந்ருஸிம்ஹனா காட்சிஅளிக்கிறான்.  வால்மீகி வியக்கிறார்.

  (18)     ஆஞ்சநேயன் ந்ருஸிம்ஹ பக்தனா ராம பக்தனா? ந்ருஸிம்ஹ பக்தன்றது ஸ்பஷ்டமாக தெரியும்.  அதை ஓவ்வொறு க்ஷேத்திரத்திலும் பார்க்கலாம். கடிகா சலம் என்ற சோளங்கிபுரத்துக்கு போனா அங்க பெரிய மலை சின்ன மலை. பெரியமலைல ந்ருஸிம்ஹன். சின்ன மலைல ஆஞ்சநேயன். ஆஞ்சநேயன் யோக தசையில அமர்ந்து எம் பெருமானை தியானம் பண்கிறான் நாமக்கல்ல ந்ருஸிம்ஹன் அழகாக குகைக்குள் இருக்கான். அவனுக்கு நேரே ஆஞ்சநேயன் ந்ருஸிம்ஹனுடைய திருவடியை சேவித்துக் கொண்டிருக்கிறான்.எந்த ந்ருஸி ம்ஹ க்ஷேத்ரத்துக்கு நாம் போனாலும் அங்க கைகுவித்த வண்ணம் சேவித்துக் கொண்டிரு க்கிறான் ஆஞ்சநேயன்.  ஆஞ்சநேயன் ந்ருஸிம்ஹ பக்தன் என்பது ஸ்பஷ்டம். ராமாயண காலத்திலும் இதை பார்க்கலாம். ஸீதாபிராட்டி கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஜலம் வடிகிறது.  அப்ப ஆஞ்சநேயன் ஸீதாபிராட்டி கிட்டபோய் சொல்கிறான்.  . ," அம்மா எதற்காக அழுகிறீர்கள். அழக்கூடாது.  உங்கள் துயர் துடைக்க  என் முதுகில் நரஸிம்ஹன் வரப் போகிறான் தங்கள் துயர் துடைக்க" என்றான்.  ராமன் வரப்போரான் என்று தானே சொல்லணும்.  ந்ருஸிம்ஹன் வரப்போறான் என்கிறான். ஆஞ்சநேயன் சொல்லின் செல்வன். அவன் வாக்கில் அமங்களமான வார்த்தையே வராது. அமங்களமான வார்த்தை களை பேசக்கூடாது. ஆஞ்சநேயனை த்யானம் பண்ணால் நம் வாக்கில் எப்பவும் மங்களமான வார்த்தையே வரும்.

 (19)   ராமனே தன்னை எங்காவது நரஸிம்ஹனாக சொன்ன இடம் உண்டான்னா உண்டு.  விபீஷணன் சரணாகதி. விபீஷணனை சேர்த்துக் கொள்ளலாமா கூடாதா என்ற விவாதம்.  சுக்ரீவன் முதல் தடை. அவனை சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவன் மூத்த சகோதரனுக்கு துரோகம் செய்தவன் என்று  வாதாடுகிறான். அப்போது தர்மம் பேசுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் என்றானாம் ராமன்.  ஏனென்றால் சுக்ரீவனே தன் மூத்த சகோதரன் வாலியை விட்டு வந்தவன் தானே.  பசு தன் கன்றுக்குட்டியிடம் வைத்திருக்கும் பாசம் வாத்ஸல்யம். அது தன் குட்டிக்கு பால் கொடுக்கும். அதுவே மற்றுமொறு கன்றுக் குட்டியை ஈன்றெடுத்தால்  அந்த புதிய குட்டி பால் குடிப்பதற்கு முதல் கன்று தடையாக இருந்தால் பசு அந்த முதல் கன்றை முட்டித்தள்ளும். அவ்வாறே நீ எனக்கு ரிசியம்ருக பர்வதத்தில் கிடைத்த முதல் கன்றுக் குட்டி. அப்பொழுது உன்னை ரக்ஷித்தேன். இப்பொழுது விபீஷணன் வந்திருக்கிறான. ஸமுத்ர தீரத்தில் கிடைத்த இரண்டாவது கன்றுக்குட்டி. நீ விபீஷணனுக்கு தடையாக இருந்தால் உன்னை புறக்கணிப்பேன் என்றான் ராமன். சரணாகதி பண்ண வனை ரக்ஷித்துத் தான் தீருவேன் என்றான் பரமாத்மா. அப்போது சொல்லின் செல்வனின அனுமன் கூறினான்.
*  " அபயம்" என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின், கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாது? கொற்ற வேந்தே "*  மாருதியின் வார்த்தையைக் கேட்டவுடன் தான் ராமனுக்கே மூச்சு வந்ததாம். கிணற்று ஜலம் ஸமுத்ரத்தில் கலந்தால் ஸமுத்ரஜலத்துக்கு  என்ன ஆகுமோ சமுத்திரத்தின் உப்பு சக்தி போய்விடுமோ என்று சமுத்திரம் பயப்பட்டால் அந்த மாதிரி விபீஷணன் வந்து சேர்ந்தால் என்ன ஆகுமோ என்று தாங்கள் பயப்படலாமா என்று கேட்டான் ஆஞ்சநேயன். ஆஞ்சநேயனுடைய வார்த்தை தான்
பரமாத்மாவிற்கு ஆனந்தமாயிருந்ததாம். "மாருதி வினய வார்த்தை செவிமடுத் தமிழ்தில்"  மாருதியின் வார்த்தை தான் அமுதமாயிருந்ததாம் பரமாத்மாவிற்கு. "ஸ்ருத்வா வாயுஸுதஸ்ய ஹா!" என்கிறார் வால்மீகி.  வால்மீகி குமாரனுடைய வார்த்தையை கேட்டதும் தான் பரமாத்மாவிற்கே மூச்சு வந்ததாம். அவர்கள் எல்லாம் பேசும்போது மூச்சு நின்று விட்டதாம்.  அப்போது ராமன் கூறுகிறான். "சுக்ரீவா! என்ன யாருன்னு நினைச்ச.  நான் நினைத்தால் இந்த  குரஙகினத்தை எல்லாம் கூட அழைச்சிண்டு வந்து இந்த அலை கடலிலே  அணைகட்டி அக்கறை போக வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை. நான் இப்பொழுது நினைத்தால்  சங்கல்பித்தால் ‌*"பிசாசான், தானவான், யக்ஷான், ப்ருதிவ்யான் சைவ ராக்ஷஸான் ౹ அங்குல்யக்ரேண தான்ஹன்யாமிச்சன் ஹரிகணேச்வர॥ "*
இங்க  பரமாத்மா என்ன சொல்றான்-- பிசாசர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள் யாரா யிருந்தாலும் என்னுடைய விரல் நுனியினாலேயே நசுக்கி விடுவேன்" என்கிறான்.  இராமபிரான் சொல்கிற வார்த்தை. இராமபிரான் கையில் கோதண்டம் வைத்திருக்கிறான்.  அம்புறாத் தூணியிலே அம்புகள் இருக்கின்றன.  இவன் என்ன சொல்லணும். ஒரே ஒரு சரத்தைப்பூட்டி என் பாணத்துக்கு இலக்காக்குவேன் என்று சொல்ல வேண்டியதாயிருக்க விரலின் நுனியினால் அழிப்பேன் என்றான். விரலின் நுனியில் என்ன இருக்கிறது. நகங்கள். நகங்களா லேயே முடிப்பேன். ந்ருஸிம்ஹாவதார தசையில் பஞ்சாயுதங்களே நகங்கள். பகவான் ந்ருஸிம்ஹனாக அவதாரம் செய்த போது சங்கம், சக்கிரம் போன்ற பஞ்ச ஆயுதங்களும் அவனுடைய நகங்களாயின. அதனால அந்த ஆயுதங்களுடைய பலம் அந்த நகங்களுக்கு உண்டாயிற்று. நகங்களை ஆயுதமாகக் கொண்டவன் ந்ருஸிம்ஹன். நகங்களால் ஹிரண்ய ணை சம்ஹாரம் செய்தான் ந்ருஸிம்ஹன். ஆக ராமன் தன்னை யாரென்று வெளிப்படுத்தி னான். ந்ருஸிம்ஹ தசையில் பஞ்சாயுதங்கள் நகங்களாயின.

(20)      .ஸ்வாமி தேஸிகன் அழகாக சொல்கிறார். **,"ப்ரத்யாதிஷ்ட புராதன ப்ரஹரண க்ராம க்ஷணம் பாணிஜை:/ அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட
மஹிமா வைகுண்ட கண்டீரவ: யத்ப்ராதுர்பவனாத வந்த்யஜடரா யாத்ருச்சிகாத் வேதஸாம்/யா காசித்  ஸஹஸா மஹூசுர க்ருஹஸ்தூணா பிதாமஹ்யபூத்॥ **
பரமாத்மாவிற்கு புதுமையில் மோகம். எப்பவும் ஒரு சங்கையும் சக்கரத்தையும் கையில ஏந்தி வருபவன் என்ற பழமையை மாற்ற வேண்டும் என்று எண்ணம்.  அதனால நகங்களையே பஞ்சு ஆயுதங்களாக ஆக்கிக்கொண்டான்.  சக்கரம்னா கையில பிடிச்சிக்கணும். ஆயுதங்கள்னா கையில பிடிச்சிக்கணும். இது உதறி னாலும் விடாது அது மாத்திரமில்ல   இது இங்க வந்து அந்த தூண்ல வந்துதான் இந்த நரம் கலந்த சிம்ஹமாக வேஷம் போட்டுன்டுதா என்றால் அப்படி இல்லை. வைகுண்டத்திலே இருந்து கிளம்பிவரும்போதே வேஷம் போட்டுண்டு வந்தது.

  (21)      ஏன் கரடி முகமும் மனித ரூபமாகவும் வரக் கூடாதான்னா குழந்தை ப்ரஹ்லாதன் என்ன சொன்னான் தன் தகப்பனிடம். நான் காட்டிற்குச் சென்று அரியை வணங்குவேன்   பூஜிப்பேன் என்று சொன்னான்.  அரி என்றால்சிங்கம். பக்தர்கள் எந்த உருவில் விரும்பு கிறார்களோ அந்த ரூபத்தில் வருவான். மற்றும் ஹிரண்யகசிபு அசுரனா யிருந்தும் மிருக குணம் கொண்ட வனாயிருந்தான்.  ப்ரஹ்லாதன் அசுரனாக இருந்தும் மனித குணமுள்ளவன். அதனால பரமாத்மா நரம் கலந்த சிம்ஹமாக ஆவிர்பவித்தான்.  மற்று மொரு அகடித கடனா சாமர்த் தியம். இது  தாயாரை பாட்டியாக்கிக் கொண்டுப் பிறந்தான். . எப்படின்னா ப்ரஹ்மாவினுடைய அப்பா யார். பரமாத்மா. இப்ப பரமாத்மா விற்கு அம்மா இந்த ஸ்தம்பம். அப்பாவை பெற்றெடுத்த அம்மா. இந்த தூண் பரம்மாவிற்கு பாட்டியாயிற்று. பிறக்கும்போதே பாட்டியாக்கிக் கொண்டே பிறந்தது இந்த  குழந்தை. "ஸ்தூணா  பிதாமஹ்யபூத்" ஒரு தூண்  ஒரு அசேதனமான வஸ்து பாட்டியாயிற்றே. பிதாமஹியாயிற்று. இவனுக்கு ஸ்தம்ப டிம்பன்னு பேர். கம்பக் குழந்தை. கம்பத்திலிருந்து தோன்றியதால் ந்ருஸிம்ஹனுக்கே கம்பன்னு‌ பெயர்.   (.....

No comments:

Post a Comment