#திருப்பாவையில்_திவ்ய_தேசங்கள்... பாகம் 1, பகுதி 2
#இரண்டாம்_பாசுரம்
திருப்பாவையின் இரண்டாம் பாசுரம் #வையத்து_வாழ்வீர்காள். இதில் நாச்சியார் தாம் நோற்க இருக்கும் நோன்பிற்கான க்ஷரத்துகளை அனைத்து ஆயர்குல சிறுமிகளுக்கும் விளக்குகிறாள். அப்படி விளக்கும்போது, முதல் க்ஷரத்தாக "பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி" என்றுரைத்து யாருடைய திருவடியில் பணிய வேண்டுமென்று உரைக்கிறாள்.
அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரைபலமோதப் பள்ளிகொள்கின்ற பிரானை (பெரியாழ்வார் திருமொழி 2.10) என்று கோதையின் திருதகப்பனார் ஸேவிப்பதும் திருப்பாற்கடல் நாயகனையே.
பாற்கடலில் பள்ளி கொண்டவன் என்றதனால் திருப்பாவையின் இரண்டாம் பாசுரம் கொண்டாடும் திவ்யதேசம் திருப்பாற்கடல் என்பது திண்ணம்.
திருப்பாவையின் முதல் இரண்டு பாசுரங்கள் கொண்டாடும் திவ்யதேசங்கள் தேஹாவசானம் முடிந்த பின்னர் அப்ராக்ருத சரீரத்துடன் மட்டுமே ஸேவிக்கக் கூடியவை. ப்ராக்ருத சரீரத்துடன் இவ்வுலகில் வாழும் போது ஸேவிக்க முடியாதவை.
தொடரும்
ஸ்ரீமதி பழவேரி ரமா ராகவசிம்ஹன், வைணவன்குரலில்
No comments:
Post a Comment