Saturday, May 18, 2024

which Divya Desai Thiruppavai 3 speaks?

#திருப்பாவையில்_திவ்ய_தேசங்கள்....பாகம் 1, பகுதி 3

#மூன்றாம்_பாசுரம்

      "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" எனத் தொடங்கும் திருப்பாவையின் மூன்றாம் பாசுரத்தில் உலகளந்த உத்தமன் கொண்டாடப்படுகிறான்.

      பரம பாவனனான ஸர்வேச்வரன் மந்த்ர ரூபமானவன். மந்த்ரங்களிலே உயர்ந்தது திருமந்திரம். மந்த்ர ரூபியானவனை திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தினைக் கொண்டு அநுக்ஷணமும் ஸேவித்தால் இம்மைக்கும் மறுமைக்கும் உய்வு. இப்படி திருவஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தினைக் கொண்டு ஸேவிக்கப்பட வேண்டியவன் என்று திருமங்கைமன்னன் ஆச்ரிதர்களுக்குக் காண்பிப்பது த்ரிவிக்ரமனை.

      மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே (பெரிய திருமொழி 2-10) என்று ஸேவித்து திருமங்கைமன்னன் உலகளந்தானின் ப்ரதாபத்தினை ப்ரஸ்தாபிக்கிறார். இதனை ப்ரமாணமாகக் கொண்டு நோக்கினால், திருப்பாவையின் மூன்றாவது பாசுரம் கூறும் ஓங்கி உலகளந்த உத்தமன், திருமங்கைமன்னன் அன்று திருக்கோவிலூரில் ஸேவித்தவனே. இந்தப் பாசுரம் கொண்டாடுவது திருக்கோவலூர் திவ்ய தேசத்தினையே என்பது திண்ணம்.

                     தொடரும்
            ஸ்ரீமதி பழவேரி ரமா ராகவசிம்ஹன், வைணவன்குரலில்

No comments:

Post a Comment