*ஸ்ரீவராஹ சரம ஸ்லோகம்*
ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம்|
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்:
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்:|
*(எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில் என்னை அவன் நினைக்கத்தேவை இல்லை, நானே அவனை வந்து கூட்டிச்செல்வேன். "அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்".*
*எப்பொழுதும் மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும். எவன் ஒருவன் என் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ அவனை கைவிடேன் என்கிறான்!*
*அந்திமக் காலத்தில் நானே வந்து, அவனை உத்தமகதிக்கு அழைத்துச் செல்வேன் என்கிறார் வராஹஸ்வாமி!*
🙏🙏🙏
No comments:
Post a Comment