#திருப்பாவையில்_திவ்ய_தேசங்கள்... பாகம் 1, பகுதி 10
"நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற"என்ற பத்தாம் பாசுரத்தில் நாச்சியாரின் அநுபவம் நம்மாழ்வாரின் அநுபவத்தினை ஒத்திருப்பது ப்ரத்யக்ஷம்.
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுஉற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான்என்னை முற்றப் பருகினான்
கார்ஒக்கும் காட்கரைஅப்பன் கடியனே
(9-6)
நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரமாகும் இதில் எம்பெருமானைக் கண்டால் கண்டவுடன் வாரி அணைத்துக் கொள்வேன் என்று நம்மாழ்வார் ஸேவிக்கிறார். ஆனால் அவர் விஷயத்தில் (ஒவ்வொரு ஆச்ரிதர்களின் விஷயத்திலும்) தான் பாரித்திருந்து தன்னுடைய மனோரதமே தலைக்கட்டப் பெறுகிறான் அந்த ஸத்ய ஸங்கல்பன்.
ஸேதநலாபம் ஈச்வரனுக்குப் புருஷார்த்தம். அதனால் பரஸமர்ப்பணம் எனும் ஸாத்யோபாயத்தினை (ஸாத்யமாகும் உபாயம்) செய்தவர்கள் அதற்கு மேல் வேறொரு உபாயத்தினை செய்யவேண்டிய அவச்யம் கிடையாது. #நாராயணனே_நமக்கு_பறை_தருவான் என்று அவனடி பணிந்த க்ருதக்ருத்யர்களாதனால் "நாற்றத் துழாய்முடி நாராயணன் - நம்மால் போற்றப் பறை தரும்" என்று பரம விச்வாஸத்துடன் மற்ற சிறுமிகளை அழைக்கிறாள் நாச்சியார். இப்படி இவர்களுள் மஹா விச்வாஸத்தினை உண்டு பண்ணித்தான் இவர்களைக் கைக்கொண்டான் என்பது இந்தப் பதங்களின் ரஹஸ்யார்த்தம். அதனால், திருப்பாவையின் பத்தாம் பாசுரம் ஏற்றித் தொழுவது #திருக்காட்கரை_திவ்ய_தேசத்தினையே.
திருப்பாவையில் திவ்ய தேசங்கள் எனும் இந்தத் தொடரின் முதல் பாகத்தில் (முப்பது பாசுரங்களில்) முதல் பத்து பாசுரங்கள் குறிக்கும் திவ்ய தேசங்கள் எவையென்று பார்த்தோம். மற்ற பாசுரங்கள் காண்பிக்கும் திவ்ய தேசங்கள் எவையெவையென இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களில் காண்போம். அடுத்த வைணவன்குரல் இதழ் கிடைக்கப்பெறும் வரை சிறிய இடைவேளை.
#கோவிந்தன்_ஒருவனுக்கே_சரண்_என்றாள்_வாழியே
#நம்மையுடைய_நாராயணனை_ஆண்டாள்_வாழியே
ஸ்ரீமதி பழவேரி ரமா ராகவசிம்ஹன், வைணவன்குரலில்
No comments:
Post a Comment