Saturday, March 30, 2024

Poonthanam

மோதிர அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN
உங்களுக்கு தான் தெரியுமே. நம் ஊரில் எண்ணற்ற சிதம்பரம், பழனி, மதுரை என்று ஊர்கள் பெயர் கொண்ட எத்தனையோ மனிதர்கள் இருப்பது போல் மலையாள தேசத்தில் வீட்டுப் பெயர் கொண்ட நிறைய பேர் இருக்கிறார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற வீட்டு பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் யாருக்கும் தெரியவில்லை. பரம கிருஷ்ண பக்தர். பக்கம் பக்கமாக நிறைய கிருஷ்ணன்மீது இனிமையாக மலையாளத்தில் ஸ்லோகங்கள் எழுதிக் குவித்தவர். பாவம் ஒரு குறை அவருக்கு வெகுநாளாக. மடியில் வைத்துக் கொஞ்ச ஒரு பிள்ளை இல்லையே?.கிருஷ்ணனிடம் முறையிட்டால் வீண் போகுமா? ஒரு பிள்ளை பிறந்தான். அவனுக்கு தக்க பிராயத்தில் அன்ன பிராசனம் ஏற்பாடு தடபுடலாக நடந்தது. சில நேரங்களில் நமது வாழ்க்கையில் கொஞ்சம் கூட எதிர் பாராத சில நிகழ்வுகள் ஏற்பட்டு நாம் நிலை குலைந்து போகிறோமல்லவா? இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலை பூந்தானத்தையும் விடவில்லை.
சொந்தம், சுற்றம், அக்கம் பக்கம் எல்லாரையும் கூப்பிட்டு அனைவரும் அனைவருமே வந்தாயிற்று. ஜே ஜே என்று ஜனங்கள் எல்லாரும் கூடியிருக்க அன்ன பிராசனம் நடக்க வேண்டிய நேரத்துக்கு ஒரு மணி முன்பாக அந்த குழந்தை இறந்து விட்டது. எவ்வளவு பெரிய பேரிடி. எப்படி பட்ட சோகம்??
"என்னப்பனே கிருஷ்ணா என்னடா இது? கதறினார் பூந்தானம் கிருஷ்ணனிடம்.
குருவாயூரப்பன் என்ன செய்தான்?
"பூந்தானம் உனக்கு கவலையே வேண்டாம். நானே உங்கள் பிள்ளை இனிமேல், எங்கே உங்கள் மடி, காட்டு வந்து உட்காருகிறேன்
குட்டி கிருஷ்ணன் பூந்தானம் மடியில் வந்து அமர்ந்து கொண்டான். "படுத்து கொள்ளட்டுமா" என்றான். தன்னை மறந்து ஆனந்த பரவசத்தில் பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து தெள்ளிய எளிய மலையாள கவிதை பிறந்தது.
"நம் உள்ளத்தில் என்றும் வந்து நடமாட கிருஷ்ணன் இருக்கும் போது தனியாக நமக்கு என்று ஒரு பிள்ளை எதற்கு?"என்று பூந்தானம் மனம் அமைதிகொண்டதும் கடல் மடையென்ன கவிதை பிறந்து அனைவரும் அந்த பக்த ரசத்தில் மூழ்க இது ஒருவருக்கு பிடிக்க வில்லை. அவர் தான் நாராயணீயம் எழுதிய பிரபல மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி தான் அவர். குருவாயுரப்பன் மீது நாராயணீயம் எழுதியவர்.
"இவனெல்லாம் ஒரு கவிஞனா சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இலக்கணம் தெரியாதவன்" என்று பூந்தானத்தை இகழ்ந்தார். குருவாயூரில் குடி கொண்டுள்ள கிருஷ்ணனுக்கு இது பிடிக்குமா? சும்மா இருப்பானா? என்ன செய்தான் தெரியுமா?
அடுத்த தடவை பட்டாத்ரி குருவாயூரில் தரிசனம் செய்ய வந்தபோது
"பட்டத்ரி, நான் சொல்கிறேனே என்று வருத்தப் படாதே. எனக்கென்னமோ உன் ஸம்ஸ்க்ரித இலக்கணம் தோய்ந்த ஸ்லோகங்களை காட்டிலும் பூந்தானத்தின் மலையாள பாஷையில் உள்ள பக்தி பூர்வ ஸ்லோகங்கள் ரொம்ப பிடிக்கிறதே நான் என்ன செய்யட்டும்" என்றான் கிருஷ்ணன். அதற்கப்பறம் பட்டத்ரி ஓடிச் சென்று பூந்தானத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது சாதாரண விஷயம்.
பூந்தானத்துக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணம் பரம சந்தோஷமான விஷயம். அவரிடமிருந்து பாகவத புஸ்தகத்தை பிரிக்கவே முடியாது. முடிந்த போதெல்லாம் தனது 90 வயசிலும், நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து குருவாயூர் போய் தரிசனம் செய்வார். அக்காலத்தில் நடந்து போகும்போது இருட்டு, காட்டுப்பாதையில் தான் நடக்கவேண்டும். இப்போது போல் பாதைகளோ தெரு விளக்கோ, சௌகர்யங்களோ கிடையாது. கள்வர்,கொள்ளைக்காரர்கள் பயம் எல்லோருக்கும் உண்டு. பகலில் நடப்பதற்கே பயந்து கொண்டு தான் நடப்பார்கள்.
ஒருநாள் பூந்தானம் குருவாயூருக்கு நடக்கும்போது வழியில் சில கள்வர்கள் பூந்தானத்தை வழிமறித்தார்கள். தன்னிட
மிருந்த ஒரு மோதிரம், சொல்ப பணத்தை கொடுத்துவிட்டார். அவர் தோளில் ஒரு சிறிய பை தொங்குவதைப் பார்த்த கள்வர்கள் அதை பிடுங்கிக் கொண்டார்கள். கதறினார் பூந்தானம். அது அவரை ஒரு வினாடி நேரமும் பிரியாத ஸ்ரீமத் பாகவத புத்தகம். அது தான் அவர் சொத்து. அதை கள்வர்களிடம் பறிகொடுக்க அவர் விரும்பவில்லை.
"ஐயா, அந்த பையில் இருப்பது என்னுடைய பாராயண புத்தகம், ஸ்ரீமத் பாகவதம். வேறு ஒன்றுமில்லை. தயவு செய்து என்னிடம் கொடுங்கள்"
"அந்த புத்தகத்தில் ஏதோ ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறான், அதனால் தான் அதைக்கொடுக்க மறுக்கிறான்" என்று கள்வர்கள் அதைத் திரும்ப தரவில்லை.
வேறு வழியின்றி " ஹரே கிருஷ்ணா, என் செல்வமே, ஆபத் பாந்தவா, நீ தான் எனக்கு உதவவேண்டும். உன்னைப்பற்றிய அந்த புத்தகம் எனக்கு எப்போதும் வேண்டுமே. தெய்வமே அதை மீட்டுக்கொடு " என்று கதறினார்.
அமைதியான அந்த காட்டுப் பகுதியில் எங்கோ குதிரையின் குளம்பு ஒலி கேட்டது. அடுத்த சில நிமிஷங்களில் ஒரு குதிரை வீரன் ஆயுதங்களோடு அங்கே தோன்றினான். கள்வர்கள் அவனை எதிர்கொள்ள முயற்சிப்பதற்குள் அத்தனைபேரையும் தாக்கி காயப்படுத்தினான் அந்த வீரன். அவனிடமிருந்து தப்பினால் போதும் என்று பூந்தானத்திடம் திருடிய அனைத்து பொருள்கள் அந்த புத்தகப்பை எல்லாவற்றையும் அவரிடமே போட்டுவிட்டு இருளில் கள்வர்கள் ஓடிவிட்டார்கள்.
ஆச்சர்யத்தோடு அந்த வீரனை வணங்கிய பூந்தானம் "ஐயா, தெய்வம் போல் வந்து எனக்கு உதவிய நீ யாரப்பா?"என்று கேட்டார்.
"நான் இந்த ஊர் ராஜாவின் ஒரு மந்திரி. இந்த பகுதி வழியாக வந்தபோது உங்கள் குரல் கேட்டு ஏதோ ஆபத்து என்று இங்கே வந்தேன். நான் போய் வருகிறேன்" என்று சொன்னான் அந்த குதிரை வீரன்.
"ஐயா , தயவு செய்து என் நன்றி காணிக்கையாக நான் கொடுக்கும் இந்த ஒரு சிறு வஸ்துவை நீங்கள் ஏற்று அங்கீகரிக் கவேண்டும்" என்று ஒரு சிறு மோதிரத்தை (கள்வர்கள் கவர்ந்து திருப்பி கொடுத்ததை) அந்த வீரனிடம் கொடுத்தார் பூந்தானம்.
"சரி அப்படியே ஆகட்டும்" என்று அந்த குதிரை வீரன் சிரித்துக்கொண்டே ஏற்று அந்த மோதிரத்தை தனது விரலில் அணிந்து கொண்டான்.
"குருவாயூர் நீங்கள் போகும்வரை உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராமல் நான் பாதுகாப்பேன். நீங்கள் பயமில்லாமல் செல்லலாம்" என்று சொல்லிவிட்டு குதிரை மேல் சென்றுவிட்டான் அந்த வீரன்.
குருவாயூரில் பிரதம அர்ச்சகர் கனவில் அன்றிரவு குருவாயூரப்பன் தோன்றி "நாளை கோவிலில் என் ஒரு விரலில் ஒரு மோதிரம் இருப்பதைக் காண்பீர்கள். அதை நாளை கோவிலுக்கு வரும் பூந்தானம் என்பவரிடம் கொடுத்துவிடவும் "என்று கட்டளையிட்டான்.
ஆச்சர்யத்தில் திளைத்து, திகைத்து, விழித்துக்கொண்ட அர்ச்சகர் அப்புறம் தூங்கவில்லை. எப்போது பொழுது விடியும் என காத்திருந்து சந்நிதிக்கு வழக்கமான நேரத்தில் ஓடினார். சந்நிதியை திறந்து முதலில் குருவாயூரப்பன் கை விரல்களை கவனித்தார். "அட, குருவாயூரப்பன் கனவில் சொன்னபடியே அவன் ஒரு மோதிரத்தை விரலில் அணிந்திருப் பதைக் கண்டு அதிசயித்தார். ஜாக்கிரதையாக அதை கழற்றி வைத்துக்கொண்டு பூந்தானம் வருவதற்கு ர காத்திருந்தார்.
"ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா" என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் பூந்தானம் தரிசனம் செய்தபோது அர்ச்சகர் அவரிடம் வந்து,
"ஸ்வாமி , இந்தாருங்கள் குருவாயூரப்பன் இதை உங்களிடம் தரச் சொன்னான்"
மோதிரத்தை கொடுத்து, நடந்ததைச் சொன்னபோது, "அட இது என் மோதிரமாயிற்றே, , நான் ஒரு குதிரை வீர மந்திரிக்கு அல்லவோ நேற்று கொடுத்தேன். அது எப்படி இங்கே வந்தது? என்று யோசித்தார். பரம கிருஷ்ண பக்தரான பூந்தானத் துக்கு குதிரை வீரனாக வந்து கூப்பிட்ட குரலுக்கு உதவியவன் குருவாயூரப்பனே என்று புரிந்தது. ஆனந்தத்தில் பேச முடியவில்லை. கண்ணீர் பெருகியது.
ஸ்ரீமத் பாகவதத்தில் 11.19.9ல் ஒரு ஸ்லோகம் :
तापत्रयेणाभिहतस्य घोरे सन्तप्यमानस्य भवाध्वनीश । पश्यामि नान्यच्छरणं तवाङ्‍‍घ्रि-द्वन्द्वातपत्रादमृताभिवर्षात् ॥ ९ ॥
tāpa-trayeṇābhihatasya ghore santapyamānasya bhavādhvanīśa paśyāmi nānyac charaṇaṁ tavāṅghri-dvandvātapatrād amṛtābhivarṣāt
தாப-த்ரயேணாபிஹதஸ்ய கோரே சாந்தாப்யமானஸ்ய பவத்வநீஷ பஷ்யாமி நாந்யச் சரணாம் தவங்ரி-
த்வந்த்வதபத்ராத் அம்ருதாபிவர்ஷாத்"
"ஹே கிருஷ்ணா, ஜென்ம மரண உபாதைகளில் அவதிப்பட்டு உழல்கிறேன். சகல துன்பங்களையும் சந்திக்கிறேன். நிர்க்கதியாக நிற்கும் எனக்கு உன் தாமரைப் பாதங்கள் எப்படி ஆனந்தமானவை தெரியுமா? அம்ருத மழையில் நனையும்போது உன் தாமரைப் பாதங்கள் தான் எனக்கு அம்ருதம் சொட்டும் குடை மாதிரி."🎉8

4 vedas - sivavakkiyar

சிவவாக்கியர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

பொன்னில்  வடித்த எழுத்து

சிவ வாக்கியர் ஒரு தனி ரக ஞானி. அவரது பாடல்கள்  ஒரு  தெளிந்த, ஆழமான,  நீரோடை போல சலசல என்று  ஒரே சீராக ஓடுபவை.  ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்து, தத்துவம் எல்லாம் ரொம்ப  எளிய தமிழில்  நாலே வரியில் தருவார்.
ஒரே வரி  ரெண்டு தடவை  திரும்பவும் வந்தாலும் அர்த்தம்  பிரமாதம். ஒரு சில சாம்பிள் பாடல்கள் படித்தாலே  அவர் திறமை புரியுமே.  ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு  பதம் இல்லையா?

''ஸார்,  நான் நாலு வேதமும் படிச்சவன் என்று மார் தட்டிக் கொள்வோர்களில் ஒருவர்  எனக்குத்தெரிந்த  கிழக்கு தெரு மூணாம் நெம்பர்  வீட்டில் வாசலில் திண்ணையில் எப்போதும்   சீட்டாடிக்கொண்டு  நாலு பேரோடு  வம்படிக்கும் சுப்ரமணிய  சர்மா.  பிறர் தன்னை  அதிகம் படித்தவன்  விஷயம் தெரிந்தவன் என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்.  சொல்ல வைப்பவர்.  தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதை  அவரிடம் ஏராளம் இருந்ததில் என்ன ஆச்சர்யம்.
வேதத்தின் உட்பொருளான பிரம்மத்தை, பரம்பொருளை,  அறிந்தவர் எத்தனை பேர்?  
ஞானத்தை தரும் பரமனின் திருவடிகளை அதில் உணர்ந்து வணங்குபவர் எத்தனை பேர்?
வேதம் என்ற எழுத்தும் அதை மனதில் நெட்டுரு போட்ட தும் மட்டுமே அறிந்த முட்டாள்களே, உங்கள் செயல் எது போல தெரியுமா?   பால் தெரிகிறது, அதை பார்க்கும்  போதெல்லாம் அதனுள் தான்  தயிர்  வெண்ணெய் நெய்  எல்லாம் மறைந்திருக்கிறது என்ற எண்ணம், உண்மை மனதில் தோன்றாதவர்களைப்  போல.

மறையில் மறைந்திருக்கும் மாயவனை அறிந்து போற்றி வணங்கவேண்டும்.  தனது நெஞ்சிலே நஞ்ஜை நிறுத்திக் கொண்ட  நீல கண்டன் நமது நெஞ்சிலேயும் உள்ளானே. அந்த ஹாலஹால விஷமுண்ட  காலகாலனை அறவே மறந்துவிட்டு, ஐயோ காலன் வந்துவிடுவான்,ஆயுளைப்  பறித்துக்கொண்டு போய்விடுவான் என்று  அஞ்சி நடுங்கி ஓடுகிறீர்களே,  கால சம்ஹார மூர்த்தியை நினைத்தால்  கனவிலும் காலன்  நெருங்கமாட்டானே,  வேடிக்கையாக இருக்கிறதா?
பாரதி சொன்னானே  ''காலா என்னருகில் வா உன்னை என் காலால் உதைக்கிறேன்''  என்று அந்த  தைர்யம் வேண்டாமா நமக்கு? என்கிறார்  சிவ வாக்கியர்.                                
                                                           
''நாலுவேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே''
 
இன்னும் கொஞ்சம் உயர்ந்த யோக தத்வமும்   சொல்கிறார் சிவவாக்கியர்.   ப்ரம்ம  ஞானி யார்?  பிறக்கும் போதிலிருந்து  உள்ளே விளங்குகின்ற நாடி, பிராணனை, தூங்குகின்ற பாம்பாக சொல்வார்களே, அந்த குண்டலினியை பிராணாயாமத்தால் மூலாதார  சக்கரத் திலிருந்து மெள்ள மேலே எழுப்பி உச்சந்தலை  கபாலத்தில் உள்ள சஹஸ்ராரம் வரை கொண்டு சென்று  தாமரைத்  தேன் துளிகளை, அம்ருதத்தை ருசிப்பவன். அப்படிப்பட்ட யோக சக்தி கொண்ட யோகி, வயதற்றவன், விருத்தாப்பியனாகவோ, பாலகனாகவோ,  எப்படி இருந்தாலும்  அவன்  தேகம்  எப்போதும் ஜொலிக்கும்.   
காஞ்சி  மஹா பெரியவா பரமாச்சார்யரை   பார்த்திருக்கி றீர்களா?  --,அவர் தேகத்தை போல  தங்கமாக ஜொலிக்கும்.   அப்படியென்றால்  கல்ப கோடி வருஷம்  தவயோகியாக  உள்ள  பரமேஸ்வரனை ''பொன்னார் மேனியனே'' என்று  மனக்கண்ணால் கண்டு  ஏன் பாடினார்கள் என்று புரிகிறதா.  சிவன்  சதாசிவன். சதா த்யானத்தில்  மோனத்தவத் தில் லயிப்பவன்.  ஆனந்த  தாண்டவராயன்.
இது கற்பனை அல்ல. சர்வ சத்தியம், சத்தியம் சத்தியம் -  அந்த சிவன் மேல், பார்வதி  மேல் சத்தியம் என்கிறார்  சிவவாக்கியர்.             
 ''உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம்உண்மையே.''

Wednesday, March 27, 2024

Perspective - Positive story

Nice One. All should read.
One Story, Two Perspectives

A famous book writer sat in his study. He took out his pen and began to write:

"Last year, I had surgery to remove gallstones. I was bedridden for a long time.

In the same year, I turned 60 and was retired … quitting a company that I loved so much. I had to leave the job I've been doing for 35 years.

That same year I was abandoned by my beloved mother who passed away.

Then, still in the same year, my son failed his final medical exam because of a car accident.  Repair costs from the car damage marked the peak of bad luck last year."

At the end he wrote:
"What, what a bad year!"

The writer's wife entered the room and found her husband who was sad and pensive. From behind, the wife saw the husband's writing. Slowly she backed away and left the room.

15 minutes later she came back in and put down a piece of paper with the following words:

"Last year, my husband finally managed to get rid of his gallbladder which had been making his stomach hurt for years.

That same year, I am grateful that my husband was able to retire in a healthy and happy state of mind & body. I thank God he was given the opportunity to work and earn for 35 years to support our family.

Now, my husband can spend more of his time writing, which has always been his hobby.

In the same year, my 95 year old mother-in-law, without any pain, returned to God in peace.

And still in the same year, God protected our son from harm in a terrible car accident. Our car was seriously damaged by the accident, but my son survived without any serious injuries."
                                 
In the last sentence his wife wrote:
"Last year was a year full of extraordinary blessings from God, and we spent it full of wonder and gratitude."
                                       
The writer smiled with emotion, and warm tears flowed down his cheeks. He was grateful for a different point of view for every event he had gone through the past year. A different perspective of the same events now made him joyful.

Friends, in this life we must understand that it is not happiness or joy that makes us grateful. It is gratitude that makes us happy/joyful! Let's practise seeing events from a positive point of view and keep envy away from our hearts.

"We can complain because rose bushes have thorns, or rejoice because thorn bushes have roses."
 Abraham Lincoln

Good to re-read this article even though you may have read it before.🙏

Saraswati is Brahman - Sayanacharya



=====================
Shri Sayanacharya invokes Bhagavati Saraswati
=====================

चिदानन्दकलां वाणीं वन्दे चंद्रकलाधराम् ।
नैर्मल्यतारतम्येन बिम्बितां चित्तभित्तिषु ॥

~ भगवान् सायणाचार्य, माधवीय धातुवृत्ति

[I bow down to Vani, who is Chidananda-kalam ie manifestation of Chit-ananda roopi Brahman, who bears moon on her head and whose reflection in the intellect is varied based on the gradation in the latter's purity]

Brahman is Nirguna and Nirvishesha. However, for the benefit of the aspirants, Brahman manifests in a Sa-vishesha form. Bhagavati Saraswati, says Shri Sayanacharya, is one such manifestation of Chit-ananda-swaroopa Brahman.  Though, She is essentially the Parabrahman, She is beheld variously by the devotees based on how pure their intellect is. The more we purify our buddhi, the clearer will be the reflection of Bhagavati and the closer we ll be in realizing her true nature.

In the purest of the intellect, which is engaged in constant contemplation of the Mahavakyas, She manifests as the Brahma-vidya and liberates the aspirant from the shackles of samsara. Says Shri Anandagiri Acharya :

वाक्योत्थबुद्धिवृत्त्यभिव्यक्तं ब्रह्मैव ब्रह्मविद्या ।

~ मुण्डक भाष्य टीका

[ Brahma-vidya is verily the Brahman manifesting through the intellect engaged in contemplation of Mahavakyas]

This purest manifestation of the Brahman is regarded as the Devi tattva in Advaita Sampradaya. Bhagavatpada describes this very tattva as Uma-haimavati in his Kena bhashya, Anandagiri Acharya also clarifies it in the tika and the succeeding Acharyas like Swami Shankarananda, Swami Vidyaranya, Shri Sayanacharya and others have also held the same view.

Many thanks to Shri Divyasanu Pandey ji for helping in understanding the shloka 🙏🏻

contentment - HH Bharati teertha Maha Swamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 

இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது ஒன்றும் இன்பமயம் அல்ல. பிறகு அவைகளை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டும் : அதுவும் இன்பம் தரக்கூடிய காரியம் இல்லை. ஏதேனும் ஒரு காரணத்தினால் கஷ்டப்பட்டு சேகரித்த உடைமைகள் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டால், இருந்த கொஞ்ச நஞ்ச இன்பமும் போய், முடிவில் வேதனைதான் மிஞ்சும். 

ஆகவே உடைமைகளுக்கு ஆசைப்படுவது நல்லதில்லை. பழங்காலத்தில் வனத்தில் இருந்த ரிஷிகளுக்கென்று சொந்தம் ஏதும் கிடையாது. ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லையா என்ன? திருப்தி என்ற ஒன்றினால் தான் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள். 

புராணங்கள் பரம சிவபெருமானை ஒரு காளையின் மீது அமர்ந்து இருப்பவராகவும் புலித்தோலை உடுத்தி இருப்பவராகவும் மற்றும் உடலில் விபூதி பூசி இருப்பவராகவும் வர்ணிக்கின்றன. நாம் இந்த்ரியஸுகங்களிலிருந்து மனதை மறக்க வேண்டும் என்பது இதன் தாத்பரியம். நாம் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும் எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு இன்பம் கிடைக்கும். 

தனம் தானாகவே வந்தால் அதை நல்ல அல்லது தார்மீக காரியங்களுக்காக உபயோகப்படுத்தி வாழ்க்கையை சமநிலையில் நடத்தி வரவேண்டும். "இவ்வுலகில் யார் பணக்காரன், யார் ஏழை" என்ற கேள்விக்கு பதில் உண்டு. ஆசைகளற்றவனும் திருப்தி நிரம்பிய மனதுள்ளவனும் தான் பணக்காரன். இந்த குணம் இல்லாத மற்ற எல்லோரும் உண்மையில் ஏழைகள். 

ஆதலால் திருப்தி என்ற லக்ஷியத்தை உயர தாங்கி, இன்பத்துடன் செழிப்பாக வாழ்வது மிக்க நல்லது.

Parrot in Divya prabandam

திவ்யபிரபந்தத்தில் கிளிகள் பற்றி ஸ்ரீஆண்டாள்/ ஆழ்வார்கள் அலற்றியது. 🙏
எல்லே! *இளங்கிளியே* இன்னம் உறங்குதியோ, இன்னடிசிலோடு பாலமுதூட்டி*  எடுத்த என் *கோலக்கிளியை** 
உன்னொடு தோழமை கொள்வன், *பைங்கிளி* வண்ணன் சிரீதரன் என்பதோர்*  பாசத்து  அகப் பட்டிருந்தேன்* , *கூட்டில் இருந்து கிளி* எப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்* , 

 *செவ்வாய்க்கிளி* நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

பண்டு இவன் ஆயன் நங்காய்!  படிறன் புகுந்து*
என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்*  நுகர்ந்தானை உகந்து
அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர*  *கிளிபோல்* மிழற்றி நடந்து

முற்றிலும் *பைங் கிளியும்**  பந்தும் ஊசலும் பேசுகின்ற*    
சிற்றில் மென் பூவையும்  விட்டு அகன்ற செழுங் கோதைதன்னை

மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம்போல் *மடக்கிளியைக்* கைமேல் கொண்டு
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.

பந்தோடு கழல் மருவாள் *பைங்கிளியும்* பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
வந்தானோ திருவரங்கன் வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*

இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை*  ஏய்வாய மரகதம்போல் *கிளியின்இன் சொல்** 
அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே. 

உய்வான் உனகழலே தொழுது எழுவேன்*  *கிளிமடவார்* - 
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து* 

சொல்லாய் *பைங்கிளியே* ,
சுடர்ஆழி வலன்உயர்த்த,*
மல்லார்தோள்  வட வேங்கடவனைவர,*
சொல்லாய் *பைங்கிளியே* 

சொல் எடுத்துத் *தன் கிளியைச்* சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!     

மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே* *மென் கிளிபோல்* மிக மிழற்றும் என் பேதையே.

நுமதுவாயோ அதுஅன்றி வல்வினையேனும் *கிளியும்* எள்கும்-
ஆயோ?* அடும் தொண்டையோ, அறையோ இது அறிவு அரிதே. 

தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டுஇரங்கி* 
ஏரார் *கிளிக்கிளவி* எம்அனைதான் வந்து என்னைச்*
சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு

தளிர் நிறத்தால் குறைவில்லாத்  தனிச் சிறையில் விளப்பு உற்ற,* 
 *கிளிமொழியாள்* காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த,* 

ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை *ஒண்கிளியே** 
செரு ஒண் பூம் பொழில் சூழ்  செக்கர் வேலைத் திருவண்வண்டூர்

மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க*  எம்- 
குழறு பூவையொடும்*  *கிளியோடும்* குழகேலே*.  

பூவை *பைங்கிளிகள்* பந்து தூதை பூம் புட்டில்கள்,* 
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும்,

கையமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
மெய்யமர் காதல் சொல்லி *கிளிகாள்* ! விரைந்து ஓடிவந்தே?

இடைஇல்லையான் *வளர்த்தகிளிகாள்**  பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்  ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*அடையும் வைகுந்தமும் பாற்கடலும்   அஞ்சனவெற்பும் அவைநணிய* 
கடையறப்பாசங்கள் விட்டபின்னை அன்றி அவன்அவை காண்கொடானே.  

நன்குஎண்ணி நான்வளர்த்த  *சிறுகிளிப்பைதலே** 
இன்குரல் நீ மிழற்றேல்  என்ஆர்உயிர்க் காகுத்தன்*
நின்செய்ய வாய்ஒக்கும் வாயன் கண்ணன்கை காலினன்* 
நின்பசும்சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான். 

ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்*  ஒண்சுடரை 
ஒழிவுஇல்லா அணிமழலைக்  *கிளிமொழியாள்* அலற்றியசொல்* 
வழுஇல்லா வண்குருகூர்ச்  சடகோபன் வாய்ந்துஉரைத்த*  
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே.

எளிதாயினவாறுஎன்று  என்கண்கள் களிப்பக்* 
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்*
 *கிளிதாவிய* சோலைகள்சூழ்  திருப்பேரான்* 
தெளிதாகிய சேண்விசும்பு தருவானே.

शुकवाक्म्रृतम् श्रवणसुकम्- श्रीमद् भागवतम्
 ( கிளிமொழியால் சொல்லப்பட்ட செவிக்கினிய கண்ணமுது ஸ்ரீமத் பாகவதம்). அடியேன் தாஸன். ஸர்வம் ஸ்ரீதேசிகார்ப்பணம். 🙏🙏🙏🙏

Monday, March 25, 2024

facts about panguni uttiram

*பங்குனி உத்திரம் பற்றிய அற்புத சிறப்பான 35 தகவல்கள்*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன. பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

1. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

2. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்

3. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். 

4. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

5. சிவனின் தவத்தைக் கலைத்தால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். 

6. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்

7. பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.

8. ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.

9. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

10. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

11. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள். 

12. தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்- கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன. 

13. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

14. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான். 

15. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். 

16. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். அது போல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான்.

17. பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். 

18. காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

19. 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும்.

20. இந்த திருநாளில் லோபமுத்திரை அகத்திய முனிவரையும், திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தேவயானை வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும் ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று சுந்தபுராணம் கூறுகிறது.

21. திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளயார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், திருமணஞ்சேரி, கேரளத்தின் ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

22. திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க பிரம்மன் வேள்வி நடத்த சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்தரத்தில் மணக்கிறார். திருமண வைபத்தில் கன்னிகா தானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. இக்கோல சுதைச் சிற்பம்தான் எல்லா திருமண மண்டபங்களிலும் மணமேடையின் பின்புற சுவரில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு அழகிய அற்புதமான காட்சி இது.

23. சிவ-பார்வதி திருமணக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை தரிசித்தாலும், ஆலயங்களில் திருமண வைபவம் நடைபெறும் போது அதில் கலந்து கொண்டாலும் மங்களகரமான மண வாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழலாம். கன்னிகள் விரதமிருந்து இப்படி தரிசித்தால் விரைவில் திருமணம் கூடுவதுடன் நல்ல கணவன் கிடைத்து இனிமையான வாழ்வும் அமையும்.

24. பங்குனி உத்திரவிரதம் மேற் கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.

25. இந்த விரதத்தை கடை பிடித்துதான் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவி யான சரஸ்வதியையும் பெற்றார்.

26. பங்குனி உத்திரம் 
 நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.

27. நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலையும், காரையார் சொரி முத்தையனார் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடைபெற உள்ளது.

28. அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

29. உவமையற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு பல்குணன் என்ற திருநாமம் உண்டு. இது பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் வந்த பெயர்.

30. ஊன் உறக்கமின்றி கண் இமையால் நம்மைகாக்கும் இமையவர்கள் என ஸ்ரீதாயாரும், பாற்கடல் பள்ளி கொண்டோனும் போற்றும் நாள் பங்குனி உத்திரம். உத்திரம், தாயாரின் திருநட்சத்திரம்.

31 பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்னன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.

32. பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன.

33. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமேஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்றுதான்.

34. கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்றுதான் பூக்கும்.

35. திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.

Viswaroopa darshan

*"விஸ்வரூப தரிசனம்"*..  என்றால்,  
உங்களுக்கு தெரியுமா !?

ஒரு நாள்  அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு *விஸ்வரூப தரிசன*த்திற்கு சென்றிருந்தேன்.  
அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன்.  
என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர்.

தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் *15 பேர் கண் பார்வையற்றவர்கள்*.  
அந்த காலை நேரத்திலும்,  
அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது என்னை வியக்கவைத்தது.

நாங்கள் இங்கே நின்றிருக்க, எங்களுக்கு எதிர் வரிசையில் அவர்கள் நின்றிருந்தனர்.

*விஸ்வரூப தரிசனம் என்றால், அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள்*.  
அதாவது,  
இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. ( *'திருமஞ்சனம்'* என்னும் சொல்,  
இறை உருவங்களுக்கு நடைபெறும் *நீராட்டுதலை*க் குறிக்கும்.)

அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அர்ச்சகரிடம், "ஸ்வாமி… நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் அது யதார்த்தமானது.

திரை விலக்கப்பட்டதும் எங்களால் பகவானையும் பிராட்டியாரையும் பார்க்க முடியும்.  
ஆனால்,  
*பார்வையற்ற* இவர்களும் வந்திருக்கிறார்களே…?  
அதுவும் இந்த காலை வேளையில்? *இவர்களால் எதுவும் பார்க்க முடியாதே*…  
அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே…:exclamation:  
இதன் தாத்பரியம் என்னவோ?" என்று ஏதோ தனக்கு தோன்றியதை கேட்டுக்கொண்டிருந்தார்.

அர்ச்சகர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட, அவர்களுக்கு சற்று பக்கத்தில் சென்று நின்றுகொண்டேன்.

"நீங்கள் நினைப்பது தவறு.  
நம்மை விட பகவானை அவர்கள் அதிகம் உணரமுடியும்.  
சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்பதை 'தரிசனம்' என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம்.  
ஆனால்,  
*இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம்*.  :pray:

காலை முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார்.  
அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும்.  
அது தான் *விஸ்வரூப தரிசன*த்திற்கு உள்ள சிறப்பு.  
இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்கமுடியாவிட்டாலும்,  
*பகவான் இவர்களை பார்ப்பார்* அல்லவா?  
இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும்,  
*இறைவன் நம்மை பார்க்கட்டும்* என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்!" என்றார்.

*எப்பேர்ப்பட்ட தத்துவம்…*  
*எப்பேர்ப்பட்ட உண்மை….!*

காலஙகாலமாக கோவிலுக்கு செல்பவர்களுக்கு கூட *விஸ்வரூப தரிசன*த்தின் பொருள் தெரியுமா என்று தெரியாது.

ஆனால்,  
பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவனை சேவிக்க வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி உருகினேன்.:pray:

எனவே இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள்,....  
  
உங்கள் பகுதியில் உள்ள *தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசன*த்திற்கு சென்று வாருங்கள்.

விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து,  
உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.  
:

Monday, March 18, 2024

Jadaari in Vishnu temple



ஸ்ரீசடாரி மகிமை

பெருமாள் கோவில்களில் சடாரி சாத்துவதும் சிறப்பு. சடாரியின் மேல் இறைவனின் திருவடி பொறிக்கப்பட்டிருக்கும். இதனால் இறைவன் நம்மை ஆள்கிறான் என்ற பவ்யமும் குடிகொள்ளும். அஹங்காரமும் மட்டுப்படும். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர் அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார் என்று

திருமால் ஆலயங்களுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சந்நதிகளிலும் தீர்த்தம், திருத்துழாய் என்கிற துளசி அல்லது மஞ்சள் காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் அந்தந்த சந்நதிகளில் வழிபாடு பூர்த்தியானதாகக் கருதுவார்கள். 

சடாரி எனப்படுவது என்ன?

திருவடி அடியார்களைக் காப்பது திருவடி நிலை

திருவடி நிலையே பாதுகை

பாதுகையே சடாரி

சடாரியே நம்மாழ்வார்

பாதுகை, சடாரி, ஆழ்வார் எல்லாம் ஒன்றே

சடகோபன் என்னும் பாதுகை அல்லது சடாரி மூலமேதான் ஸ்ரீய:பதியான பகவான் திருவடிகளை நம் தலையில் சமர்ப்பித்துக் கொள்வது. யஸ்ய ஸாரஸ்வது: ச்ரோதோ வகுளாமோத வாஸிதம் சடாரி தம் உபாஸ்மஹே. சடம் என்பது ஒரு வகைக் காற்று (வாயு). அதன் ஸ்பரிசத்தால் ஞானம் மங்கி அஞ்ஞானம் மூடிக்கொள்ளும். அரி என்றால் சத்ரு(பகை). சடம் என்னும் காற்றைத் தம்மேல் படாமல் தடுத்து உத்தம ஞானியாய் அவதரித்தவர் நம்மாழ்வார். ஆகவே அவருக்குச் சடாரி என்ற பெயர் வழங்கிற்று. சடகோபன், சடஜித் என்பன போன்ற இதர சொற்களும் இதே பொருளைத்தான் தரும்.

வைணவ ஆலயங்களில் எம்பெருமான் திருவடிக்கு முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடி 'மகுடம்' சடாரி எனப்படுகிறது. அதற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? ஸ்ரீமன் நிகமாந்த மகாதேசிகன் அருளிச் செய்த ஸ்ரீமத் பாதுகா ஸஹஸ்ரத்தில் இரண்டாவது பத்ததியான ஸமாக்யா பத்ததியில் இதற்கான விளக்கத்தைக் காணலாம். ஆழ்வாரும் பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது. பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது. பாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி சம்பந்தம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.

இதை முதல் முதலில் காட்டியருளியவர் ஆளவந்தார். ஸ்ரீஸ்தோத்திர ரத்னம் ஐந்தாம் ஸ்லோகத்தில் வகுளாவிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா(மகிழம்பூவின் நறுமணம் வீசும் அந்த ஆழ்வாருடைய இணையடிகளை எனது தலையில் ஏற்று வணங்குகிறேன்) என்றதும் பெருமாள் திருவடிகளே அவர் சிரசில் சேவை சாதித்தனவாம். அந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தோன்ற அடுத்தபடியாக யந்மூர்த்நிமே பாதி (என் தலையில் பிரகாசிக்கிற) என்று அந்த பாதார
விந்தத்திற்குப் பாசுரம் பாடுகிறார். அந்தக் கருத்தையே தமிழில், 'சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் வள்ளல் தனித்திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபனருளாலே' என்று தனித்தமிழில் நமக்கு அருள்கிறார்.

இந்த வகையில், நமக்குப் பெருமாள் திருவடியை ஸ்பரிசம் அருளியவர்கள் இருவர். ஒருவர் ஆழ்வார், மற்றது பாதுகை. ஆகவே இருவருக்கும் சடாரி என்ற திருநாமம் இருப்பதில் வியப்பில்லை. ஆழ்வாருடைய அமுதத் திருவாய் ஈரத்தமிழைப் பயின்று எம்பெருமானை அடிபணிவோர்க்குப் பரமனருள் சித்திக்கும். அதற்குப் பாக்கியமில்லாதவர்களுக்கு, பாதுகை அப்பேற்றை அளிக்கிறது. சுவாமி தேசிகனின் பெருமைக்கு உவமை கூறும் திவ்ய ஸுக்தி அவர் வடமொழியில் அருளிச் செய்துள்ள 'பாதுகா ஸஹஸ்ரம்' என்னும் ஸ்தோத்திர மாகும். அதை அருளுவதற்கான காரணம் என்ன? பகவானுடைய திருவடி மகிமையை பக்தர்களாகிய நாம் அறிந்து உய்யும்படி தாய் போன்ற கருணையுடன் ஆயிரம் பாடல்கள் பாடினார் சடகோபன்.  

அந்த இன்தமிழ் ஆயிரத்துக்கு பிரதி சம்பாவனையாக ஆழ்வாருக்கு வட மொழியில் ஆயிரம் சமர்ப்பித்தார் நம் தேசிகன். எவ்வாறு பகவானுடைய திருவடிகளின் பெருமையை அவனுடைய பாதுகையான சடகோபனால் மட்டுமே கூறமுடியுமோ, அங்கனமே அந்த சடகோபனின் பெருமையை அவனுடைய பாதுகைகளான சீடன் மதுரகவியால் தானே கூறமுடியும்? இந்த வகையில் இவர் அருளிச் செய்த 'கண்ணிநுண் சிறுத்தாம்பின்...' ஒரு பகுதியைப் பார்க்கலாம். 'பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்' சடகோபனின் பெருமையை மிக எளிமையாக ஆனால், விளக்கமாக விவரிக்கும் இரு அடிகள் இவை. பகவானுக்கும் சடகோபனுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் இதுதான். செயல் திருந்தியவரையே பகவான் ஆட்கொள்வான்.

ஆனால், சடகோபனோ திருந்தத்தக்க பாங்கற்றவர்களையும் தாமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தண்டித்துத் திருத்தி பகவானின் திருவடிகளை அடையச் செய்வான். இந்தப் பெருமைக்கு மதுரகவியாழ்வாரே பிரதான உதாரணம். அதாவது, நம்மாழ்வாரும் இதர ஆழ்வார்களும் ஆயிரக்கணக்கிலே எம்பெருமானின் பெருமையைப் பாடியதாலேயே ஆழ்வார்கள் எனும் பெருமையைப் பெற்றார்கள். ஆனால், மதுரகவியாழ்வாரோ எம்பெருமானைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடாமல், குருவான நம்மாழ்வார் மீது பத்து பாசுரங்கள் பாடியே ஆழ்வார்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டார்.

சடாரி, பகவானுடையது மட்டுமின்றி, பிராட்டியினுடைய பாதுகைகளையும் குறிப்பதாகும். ஆனால், நம்மாழ்வாருக்குப் பின்னால் வந்த ஆழ்வார்
ஆச்சார்யர்களுடைய பாதுகைகளும் சடாரி என்றே குறிப்பிடப்படுகின்றன. ஆனால், இது தவறு. நம்மாழ்வார் மற்றும் பிற ஆழ்வாராச்சார்யார்களுக்கு அபசாரம் தோற்றுவிப்பது என்றும் ஒரு வாதம் உண்டு. அப்படியானால் அவர்களுடைய பாதுகைகளை என்ன சொல்லி அழைப்பது? அந்தந்த ஆச்சார்யார்களுடைய பாதுகைகளை அவர்களின் பிரதான சிஷ்யர்களின் திருநாமத்தைக் கொண்டே அழைக்க வேண்டுமென்று பெரியோர்கள் கூறுவர். இதை அடிப்படையாகக் கொண்டு

ஆழ்வார்கள்-ஆச்சார்யார்கள் பாதுகைகளின் திருநாமங்களுக்குச் சில 
உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கருடபகவான் சடகோபன்
ஆஞ்சநேயர் ராமதாசர் அல்லது
கம்பநாட்டாழ்வான்
சேனை முதலியார் சடகோபன்
ஆண்டாள் சடகோபன்
நம்மாழ்வார் மதுரகவிகள்
 மதுரகவிகள்                  
பொய்கையாழ்வார்         
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசைப்பிரான்
பெரியாழ்வார்
குலசேகரர்
தொண்டரடிப்பொடிகள் ராமானுஜன்
திருப்பாணாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரியநம்பி
திருக்கோட்டியூர்நம்பி
பெரிய திருமலை நம்பி
திருக்கச்சி நம்பி
திருவரங்க பெருமாள் அரையர்
பாஷ்யகாரர் முதலியாண்டான்
வேதாந்த தேசிகன் நயினாராசார்யார்
எம்பார் பட்டர்
பட்டர் நஞ்ஜீயர்
நம்பிள்ளை    வடக்கு திருவீதிப்பிள்ளை
வடக்கு திருவீதிப்பிள்ளை   -  லோகாச்சாரியார்
லோகாச்சாரியார்             -   மணவாளமாமுனிகள்

மணவாளமாமுனிகள் -  பொன்னடியாம்
செங்கமலம்.

பகவானுடைய திருப்பாதுகைகளுக்கு உரித்தான பெருமைகளெல்லாம் ஆழ்வார் ஆச்சாரியார்களுடைய திருப்பாதுகைகளுக்கும் உண்டு என்பதில் ஐயமேதுமில்லை. எனவே, கோயில்களுக்குச் செல்லும்போது அனைத்துச் சந்நதிகளிலும் சடாரி பெற்றுக்கொண்டு நம்மை புனிதப்படுத்திக் கொள்வது நமக்கு நல்ல கதியை அளிக்கும்.

வானமாமலையில் தெய்வநாயகனை நம்மாழ்வார் சரணாகதி செய்ததால் பெருமானின் சடாரியிலேயே நம்மாழ்வாரின் திருவுருவம் பொறித்துள்ளதைக் காணலாம். அதனால் இங்கு நம்மாழ்வாருக்கு தனிச் சந்நதி கிடையாது.

திருக்கடிகை என்ற சோளிங்கர், பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில் சடாரி ஒரு நாகம் போன்ற அமைப்பில் இருக்கும். ஆதிசேஷனே சடாரியாக விளங்குவதாக பெரியோர்கள் கருத்து.

ஸ்ரீபெரும்புதூரில் பகவத் ராமானுஜரின் முதன்மைச் சீடரான முதலியாண்டான் சடாரியாக அமைந்துள்ளதால் இத்திருக்கோயிலில் முதலியாண்டாருக்குச் சந்நதி இல்லை.

திருப்பதியில் பகவத் ராமானுஜரின் திருவுருவத்தை அவருடைய சீடர் அனந்தாழ்வார் பிரதிஷ்டை செய்ததால் அங்கு பகவத் ராமானுஜரின் சடாரிக்கு அனந்தாழ்வான் என்றே பெயர்.

சென்னை-நங்கநல்லூரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் வேணுகோபாலசுவாமி திருக்கோயிலிலும் நாகவடிவில் சடாரி அமைந்துள்ளது.

ஆழ்வார்களின் சடாரி, பகவத் ராமானுஜர் என்று மேலே குறிப்பிட்டுள்ளபடி அவதாரத் தலங்களில் ஆழ்வார்களின் திருவுருவங்களிலேயே பகவத் ராமானுஜரின் திருவுருவமும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

manakkal nambi & Ramanujar

நான்காவது ராமரும், நான்காவது லக்ஷ்மணரும்--ஸ்ரீ மணக்கால் நம்பி திருநட்சத்திரப் பதிவு
🙏🌺🍀🌸☘️🙏🏿
இன்று 24/02/2024,மாசி மகம்-- மகத்தான, மாசில்லாத, மணக்கால் நம்பி ஸ்வாமி திருநட்சத்திரம்.

ஸ்வாமியின் தனியன்: 
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
"அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||"

"பட்டத்து இளவரசாகிய யாமுனாசார் யரைத் தூதுவளை தந்து,மிக எளிதாகத்   திருத்திப் பணிகொண்ட ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்."

இவருக்கும் ஸ்ரீ ராமாநுஜருக்கும் உள்ள ஒற்றுமை ஆய்ந்து பார்ப்போம்.

1.நான்காவது ராமரும், நான்காவது லக்ஷ்மணரும்
         🙏👌👏👍🏻☝️💐🙏🏿
ஶ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள அன்பில் என்னும் ஊரின் கிராமப்பகுதியான
மணக்கால் என்னுமிடத்தில்(லால்குடி
யிலிருந்து 1 கி.மீ) அவதரித்தார்
 'ராம மிஸ்ரர்.' நாம் நாளும் ஸ்தோத்திரம் செய்யும் குருபரம்பரை ஸ்லோகத்தில் உள்ள ராம மிஸ்ரர் இவரே.இவர் "தாசரதி" என்றும் அழைக்கப்பட்டார்.
இவரை நம் சம்பிரதாயத்தில் நான்காவது
 ராமராக பரசுராமர்,சீதாராமர்,பலராமரு
க்குப் பின் கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீதேசிகன் ஸ்வாமி "யதிராஜ சப்ததி"
7 ஆவது ஸ்லோகத்தில்,

"அனுஜ்ஜித ஷமாயோகம்--
(பரசுராமர் பொறாமையால், ராமபிரானி
டமே சண்டையிட்டார்.கோபத்தால் சத்திரிய குலத்தையே அழித்தார்.ஆனால் மணக்கால் நம்பிகளிடம் இந்தக்
குணங்கள் துளியும் இல்லை)

அபுண்ய ஜனபாடகம்--
(ராமர் புண்ய ஜனங்கள் என்று அழைக்கப்
பட்ட ராட்சசர்களை அழித்தார்.நம்பி யாரையும் அழிக்கவில்லை.புண்யஜனங்
களுக்கு உபதேசித்தார்/உதவினார்).

அஷ்புருஷ்த மத ராகம்,(பலராமர் லெளகீகச் செயல்களில் அதிக ஈடுபாடு/ருசி வைத்தார்; நம்பி எதன் மேலும் பற்று/அக்கறை இல்லாமல் பகவத்/பாகவத/ஆசார்ய கைங்கர்யமே பிரதானமாக இருந்தார்)

தும் ராமம் துரியம் உபாஸ்மகே"--
(குறை/குற்றம் ஒன்றில்லாத நான்காவது ராமரான ராமமிஸ்ரரை உபாசிப்போம்)

என்று மணக்கால் நம்பியைக் கொண்டாடுகிறார்.

அந்த வகையில்ஆதிசேஷனின் அவதாரங்களான இளைய பெருமாள்
(லட்சுமணர்),பலராமர், லட்சுமணரின் அம்சமான ஆழ்வார் திருநகரி உறங்காப் புளிய மரம் ஆகியோருக்குப்பின் 
நான்காவது லட்சுமணர் நம் லட்சுமண முனி ராமானுஜர் ஆவார்.

அவர் ராமர்;இவர் ராம அநுஜர்(இளைய சகோதரர்) !
அவர் குலசேகரப் பெருமாள்; இவர் இளைய பெருமாள்--இளையாழ்வார் !!

2.மண்ணில் மார்புற, விழுந்த மஹநீயர்கள்:
🙏🌺🍀🌸☝️🙏🏿
மணக்கால் நம்பியின் ஆசார்யர்
ஶ்ரீ உய்யக்கொண்டாரின் தேவியர், இளமையிலேயே பரம பதம் அடைந்து விட்டதால்,அவருடைய குடும்ப காரியங்
களையும்,இரு திருக்குமாரத்திகளையும் கவனித்துக் கொண்டார் உத்தம சீடர் நம்பி.ஒரு நாள் காலையில்,
பெண்குழந்தைகள் இருவரையும் ஆற்றில் நீராடவைத்துக் கூட்டி வரும்போது வழியில் ஓரிடத்தில் சேறும்,சகதியுமாக இருந்தது.அவர்கள் அந்த இடத்தைத் தாண்ட முடியவில்லை.
நம்பிகள் அந்த சேற்றின் மீது குப்புறப் படுத்தார்.படியாய்க் கிடந்து,
குழந்தைகளை அவர்  முதுகின் மீது ஏறிச் செல்ல வைத்து, அந்த இடத்தைக் கடக்கச் செய்தார் ! அதனாலேயே அவர் மணல்(க்) கால் நம்பி ஆனார். என்றும்,அவர் இருந்த கிராமமும் மணக்கால் என்றழைக்கப்
பட்டது என்றும் ஒரு கூற்று உண்டு.!!

ஒரு சமயம்,ஶ்ரீரங்கத்தில் ராமாநுஜருக்கு  உணவில் விஷம் கலந்து விட்டனர்.(உஞ்ச விருத்தியின் போது).அந்த  சூழ்நிலையில் அவர்  பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது.
இதைச் செவியுற்ற ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பி,அருந்தவச்
சீடரைப் பார்க்க விரைந்து வந்தார்.தம் ஆசார்யர் வருகிறார் என்றறிந்து,(திருமேனி மிகத் தளர்ந்த நிலையிலும்)
அவரை எதிர்கொண்டு அழைக்க ராமாநுஜர் திருக்காவேரிக்குச் சென்றார். ஆசார்யரைக்கண்டவுடன்,அந்த மத்யான வெயிலில்,காவிரியின் சுடுமணலில் விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்.யாராவது தண்டம் சமர்ப்பித்தால்,ஆசி கூறி உடனே எழச்சொல்லி விடுவார்கள் பெரியவர்கள்.
ஆனால் ஆசார்யர் ஒன்றும் சொல்லாமல் சுற்றுமுற்றும் பார்த்தார்.சிறிதுநேரம்,
உடையவர் சுடுமணலில் கிடந்தார்.அங்கு சுற்றி நின்றிருந்தவர்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தனர்.
அப்போது கிடாம்பி ஆச்சான் என்பவர் ஓடி வந்து நம்பியைப்பார்த்து''இது,என்ன ஆசார்ய, சிஷ்ய நிஷ்டை''என்று கூறிவிட்டு,ராமாநுஜரை அள்ளி எடுத்துக் கொண்டார்.உடனே நம்பிகள் ''உம் போன்ற ஒருவர் வர மாட்டாரா,
என்று தான் காத்திருந்தேன்,"
என்று அவரைத் தழுவிக் கொண்டு,
"இனிமேல் நீரே உடையவரை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்.அவருக்குத் தளிகைசெய்வது, திருமேனியைக் 
கவனிப்பது போன்றவற்றைக் குறைவின்றி நடத்தி வாரும்"என்று
நியமித்தார்.

3)தூது விடுத்து,வைணவம் வளர்த்த, தூய்மனத்துப் பெரியோர் !!
🙏🌺🍀🌸☘️🙏🏿
நம் சம்பிரதாயத்தில் தூதுக்கு ஒரு தனிவலிமை உண்டு.
ஶ்ரீராமாயணத்தில் ஆஞ்சநேயர் தூது,மஹாபாரதத்தில் பகவான் கிருஷ்ணரின் தூது என்று.அந்த வகையில் இந்த நான்காவது ராமர்,சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னராக விளங்கிய ஆளவந்தாருக்கு "தூதுவளைக் கீரையையே" தூது அனுப்பினார்.மன்னரை ஒரு சாமான்யர் எளிதில் சந்திக்க முடியாததால், அவருக்குப் பிடித்தமான தூதுவளைக் கீரையை அரண்மனைக்குத் தினமும் கொடுத்துவந்தார் ராம மிஸ்ரர்.
திடீரென்று ஒருநாள் நிறுத்திவிட்டார்.
இதனால் ஆளவந்தாருக்கு ஆர்வத்தைத் தூண்டி,இவரை அழைத்து வரச்செய்து சந்திக்கும், சூழ்நிலையை உண்டாக்கி விட்டார்.அந்த முதல் சந்திப்பையும்,
அதனால் ஏற்பட்ட மற்ற சந்திப்புகளை யும், பயன்படுத்தி அரசருக்கு,
ஶ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி எடுத்துரைத்து, ஶ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்து,பெரிய பெருமாள் முன்னர் நிறுத்தி விட்டார்.அன்று வந்தவர் அங்கேயே இருந்து விட்டார்.அரசர் ஆளவந்தார், "பரமாசார்யர்" ஆளவந்தாராகி விட்டார்.

ராமாநுஜர் தம் உத்தமசீடர் முக்குறும்பு அறுத்த கூரத்தாழ்வானை 
பெரியகோயில் நம்பியிடம், தூது அனுப்பி அவரிடம் இருந்த கோயில் பொறுப்பையும்,சாவியையும் வாங்கினார்.சாவி மட்டுமா கிடைத்தது? அரசர் ஆளவந்தார் ஆசார்யராக மலர்ந்ததைப்போல்,பெரிய கோயில் ஜீயர்,"திருவரங்கத்து அமுதனார்" ஆக மலர்ந்தார்..நாம் நாளும் சேவித்து இன்புறுவதற்கு "இராமானுச நூற்றந்தாதி" என்னும் பிரபன்ன காயத்ரியைப் பாடிக் கொடுத்தார்.

4.பகவத் கீதைக்கு பாஷ்யம் சொன்ன, ஞானாசார்யர்கள்:
🙏👌👏☝️👍🏻🙏🏿
தூதுவளை கொடுத்து அரண்மனைக்குள் சென்ற மணக்கால் நம்பி 
ஆளவந்தாருக்கு பகவத் கீதையின் 18 அத்யாயங்களையும் ஒவ்வொரு முறையும் வரிசையாக விளக்கி உரைத்து அவரைத் திருத்திப்பணி கொண்டார். 
நம் போன்றோரைத் திருத்திப் பணி
கொள்ள நவரத்தினங்களை வழங்கிய எம்பெருமானார் அருமையான
"கீதா பாஷ்யம்" அருளிச் செய்தார்.

5.பெண் குழந்தைகளைப் பேணிக்காத்த பேராளர்கள்
🌺🌸🌺🌸🌺🌸
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பெண் குழந்தைகளைப் பேண வேண்டும்(Beti Bachao) என்பதை அரசாங்கம் அடிக்கடி,
அறிவுறுதத வேண்டிய நிலையில் உள்ளோம்.ஆனால் ஆயிரம் ஆண்டுக
ளுக்கு முன்னரே பெண்குழந்தைகளை மணக்கால் நம்பி எப்படிப் போற்றினார் என்று (குறிப்பு 2)பார்த்தோம்.

உடையவரின் ஆசார்யர் பெரியநம்பி ஸ்வாமியின் திருக்குமாரத்தி,
அத்துழாய்க்குப் புகுந்த வீட்டார் பல பிரச்சினைகளைஏற்படுத்தினர்.அந்தக் காலத்து வழக்கப்படி,பெண் வீட்டுச் சீர்வரிசையுடன் "சீதனவெள்ளாட்டி" என்று ஒருவரை,வேலக்காரர்(காரி) ஆகவும் அனுப்ப வேண்டும்.பெரிய நம்பிகளுக்கு அவ்வாறு அனுப்பும் அளவு வசதியில்லை.ஆனால் புகுந்த வீட்டார் அத்துழாயிடம் அடிக்கடி சொல்லிக் காட்டினர்.எனவே அவர் தம் தந்தை
யாரிடம் முறையிட்டார்.அவர் 'என்னிடம் சொல்லி என்ன பயன்?உன் அண்ணன் ராமாநுஜரிடம்சொல்'என்றார்.ராமநுஜர் உடனே அதற்கு ஏற்பாடு செய்தார். அதுவும் எத்துனையோ பேர் இருக்க,
தமக்கு மிக வேண்டியவரும்,
துறவியாகி அனைத்து ஆசைகளயும் விட்டாலும் முதலியாண்டானை விட முடியாது என்று சொல்லும் அளவுக்கு,
உயர்ந்த ஆசார்யர் முதலியாண்டானை அனுப்பி வைத்தார்.

மேலும் உடையவர் காலத்தில் பல பெண்களுக்கு--கூரத்துஆண்டாள்,
பொன்னாச்சியார்,அம்மங்கி அம்மாள்,
திரிபுராதேவியார்,கொங்கில்பிராட்டியார்-சம்பிரதாய விஷ்யங்களில் முக்கியத்துவம் கொடுத்தார்.

6.குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழிக்குத் தனியன் பாடிய சான்றோர் :
    📢📢📢📢📢📢📢📢📢📢
ஸ்ரீராமரைப் பாடிய குலசேகர ஆழ்வாரின் "பெருமாள் திருமொழி"க்கு இரண்டு தனியன்கள் பாடப்பட்டுள்ளன.ஒன்றை நான்காவது ராமர் பாடினார்.
மற்றொன்றை நான்காவது லக்ஷ்மணர்-- உடையவர் பாடினார்.

(i)"ஆரம் கெடப்பரன் அன்பர்கொள்ளார்
என்று அவர்களுக்கே,
வாரம் கொடுகுடப் பாம்பின்கை
இட்டவன் மாற்றலரை,
வீரம் கெடுத்து செங்கோற் கொல்லி
காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே! "--மணக்கால் நம்பி

"அரசரின் நவரத்ன மாலை ஒன்று கேட்டுப் போக, அதனை ஸ்ரீவைஷ்ணவர்கள் திருடியதாக மந்திரிகள் பழிசுமத்த, 'ஸ்ரீவைஷ்ணவ பாகவதர்கள் என்றும் களவு செய்ய மாட்டார்கள்" என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு, நல்ல பாம்பு இருக்கும் குடத்தில் கைவிட்டு பாகவதர்
களின் பெருமையை உணர்த்தினார், மன்னர்களுக்கு,மன்னராக விளங்கிய,
சேரநாட்டின் மன்னர் குலசேகராழ்வார்!"

(ii)இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே !
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 
குலசேகரன் என்றே கூறு !!--ராமாநுஜர்.

7.லக்ஷ்மணரை ஆராதித்த ராமர் !
      🌹🌻🌼🌺☘🍀🌱🌹
நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் கொடுத்த பவிஷ்யதாசார்யர் ராமாநுஜர் விக்ரகம்,உய்யக்கொண்டார் வழியாக மணக்கால் நம்பியை அடைந்தது.
மணக்கால் நம்பி அந்த விக்ரகத்துக்கு
திருவாராதனை செய்து கொண்டிருந்து,
தம் அந்திமக் காலத்தில் ஆளவந்தாரிடம் ஒப்படைத்தார்.அந்த விக்ரகத்தை வைத்தே ஆளவந்தார் காஞ்சியில் ராமாநுஜரை அடையாளம் கண்டு,
"ஆம் முதல்வன்" என்று கொண்டாடினார்.

8.மணக்கால் நம்பிகள் வாழி பாசுரம்:
       💐🌼🌻🌷🌺🌹🌺🌹💐
"நேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே !
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே !
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே !
தமிழ்நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே !
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே !
நீணிலத்தில் பதின்மர்கலை நிறுத்தினான் வாழியே !
மாசி மகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே !
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியவே!!!"

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜதாசன்).

Purandara dasar story

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி...!?
சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன். 

கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி. கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும். 

ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கிறது. இதெல்லாம் இறைவன் திரு விளையாடல்...! 

ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது. 

கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார்.  அற்புதமான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர்!

அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும். 

"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'

மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு. 

"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான். 

அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக். 

அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.

அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்ட மாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம். 

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி. 

அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.

அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.

 பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள். 

ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டு கொள்ளவே மாட்டார். 

பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன். 

""ஐயா... தர்மப் பிரபுவே...''

ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?

""ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...''

""டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன். 

""ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...'' 

""போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.

தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார். 

ஒருநாள், ""உங்களிடம் யாசகம் வாங்காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

"இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். ""இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...'' 

அந்தக் காசைப் பார்த்துவிட்டு, ""பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன். 

ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.

""நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார்.

அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான். 

அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.

""பவதி... பிக்ஷாம் தேஹி...''

ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.

""என்ன வேண்டும் சுவாமி?''

""அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை. 

ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா... 

உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...''

"பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.

""அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின் போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே? 

அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.

"அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?'

சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி. 

அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது.

""இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன்.

கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக்.

சிறிது நேரம் கழித்து, ""ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார்.

அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.

உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.

மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.

""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?' 

கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடுவதைவிட சாவதே மேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள். 

""தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-

விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள். 

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர் போல மீண்டும் தனது அடகுக் கடைக்குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார். 

அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங் கள்...' என்று கேட்டால் என்ன செய்வது? 

மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.

மறுநாள் காலை! 

கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான்.

""ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான்.

ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சி னார்.

 ""ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.''

""சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...''

கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார். 

அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.

""என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?''

""சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்.... 

நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...''

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.! 

கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்...! 

அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது. 

"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?

 போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். 

இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.

 பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....' 

 புரந்தரதாசர்  ஸ்ரீனிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார். 

ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார். 

தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார். 

அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார். 

கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர்.

சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.

நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார். 

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற் குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே. 

அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. 

அப்படிப்பட்ட மகான் புரந்தர தாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.......

Rama darshan to Tulasidasar

*துளசிதாசரின் ஸ்ரீ ராம தரிசனம்*

ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகாலட்சேபம் சொல்வார்

ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார்.

அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது.

அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப்பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார்.

அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் என கேட்டது

துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனம் தான் அது. அதற்கு இந்த ஆவியா உதவப் போகிறது என்றெல்லாம் யோசிக்காமல் கேட்டு விட்டார், எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்று.

*ராமாயணம் கேட்க வரும் ஆஞ்சநேயர்*

அதற்கு ஆவி பதில் கூறியது. 'இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே' என்றது. எப்படி? என கேட்டார் துளசிதாசர். உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. எனக்கு தெரியாதே என்றார் தாசர்.

ஆம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே உட்கார்ந்திருக்கும் ஜனங்களுக்கு அப்பால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். நீங்கள் வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து ஜனங்கள் திரும்பும்போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் போவார்.

அவர் எப்படி இருப்பார்? என்று துளசிதாசர் கேட்டார். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது, ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி வருவார். அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

*ராமன் எப்போ வருவாரோ?*

அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தாசர் கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருப்பவரை பார்த்து விட்டார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி, ராமன் எப்போது வருவாரோ? என்று வழிமேல் விழி  வைத்து காத்திருக்கிறார். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் வினவுகிறாள். புலம்புகிறாள். ஏமாற்றி விடாதே ராமா!

*சபரி புலம்பல்*

ராமா! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா?

உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? என்ன அபச்சாரம். நான் உன்னை தேடி வர முடியாதே! யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் தாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம்.

*காலை பிடித்துக் கொண்ட தாசர்*

பின் வெகு நேரம் ஆயிற்று. துளசி தாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர்.

எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ! அஞ்சன புத்ரா! என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது. தாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் 'கண் விழித்து நான் எங்கிருக்கிறேன்' என்று வினவினார்.

*சித்ர கூடத்தில் ராம ஜபம்*

இதுதான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராமஜபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நான் இருப்பேன். எனக்கு என்ன வேறு வேலை என்று கூறினார் அனுமன். பின் மறைந்து விட்டார். தாசரும் ராமஜபம் செய்தார்.

*எப்படி இருப்பார் ராமர்?*

ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.

மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன்மேல் நின்று கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள். தாசர் எத்தனையோ ராஜாக்களை பார்த்திருக்கிறார். தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் தாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய் விட்டனர்.

*ராமனுக்கு ஈடாவாரா?*

ஆமாம். பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, லட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும், மார்பில் தங்க கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார்கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.

சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து 'ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே என்றார் தாசர். என்ன இது உமது பக்கமாகத்தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார்.
அவர்கள் ராம, லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் 'ராமன் உமது இஷ்டப்படி தான் வர வேண்டுமா? அவர் இஷ்டப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். வாயு குமாரா? இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன்.

எல்லாம் சரி. நீர் போய் மந்தா கினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும் ராமன் வருவாரா? பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார். ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார்.

*நதியில் நீராடுதல்*

இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார்.

எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் அவர்.

சந்தனம் கேட்ட ராம, லட்சுமணன்

சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள். (வடதேசத்தில் கங்கை முதலிய நதி தீர்த்தக் கரையில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர் களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சிணை  வாங்கிக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது). அதற்கென்ன! நாமம் போட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைக்கிறார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். இவர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் மெய் மறந்து விட்டார்.

அந்தப் பையன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்த வனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந் திருந்திருந்த படித் துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி. அது கூவியது.

'சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர"

(பொருள்: சித்ரகூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.)

இதைக் கேட்டு துளசிதாசர் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர்.🙏🙏🌹

Saturday, March 16, 2024

Panchapatram how to use it

🕉️

*பஞ்சபாத்திரம் - உத்தரணி*. *உபயோக முறைகள், மற்றும் ஆசமனம்*

#தர்மசாஸ்திரம்

நமோ நமஹ !

பஞ்சபாத்திரம் நம் வீடுகளில்,  நித்யகர்மானுஷ்டானங்களுக்கும், பூஜைகளுக்கும் உபயோகப்படுத்தும் பொருளாக இருக்கின்றது. 
இங்கு உங்களுக்கு தெரிந்த அதன்  உபயோகமுறையை சொல்ல போவது இல்லை. சில தெரியாத விஷயங்களை, தெளிவு படுத்த போகிறோம். 
*தர்ம சாஸ்திரம் (ஸ்மிருதி)*, நமது வேத ரிஷிகளால் இயற்றப்பட்டு, தெளிவான வழிமுறைகளோடு மட்டுமல்லாமல், அதில் உபயோகப்படுத்த வேண்டிய பாத்திரங்கள் மற்றும் வரைமுறைகளையும் எடுத்துரைத்துள்ளார்கள். இங்கே குறிப்பிட பட்டுள்ளளவைகளில்,  பஞ்சபாத்திரம்/உத்தரணியை எப்படி பயன்படுத்தக் கூடாது என்பதும் அடங்கும். 

1. பஞ்சபாத்திரம், உத்தரணியை அவரவர் தனித்தனியே உபயோகப்படுத்த வேண்டும். தந்தையுடையதை மகனோ, அல்லது மகனின் பஞ்சபாத்திரம், உத்தரணியை, தந்தையும் உபயோகப்படுத்தக்கூடாது. 

2. நீங்கள் ஆசமனம் செய்ய உபயோகப்படுத்தும், பஞ்சபாத்திரம், உத்தரணியை, மற்ற நித்யகர்மாக்களான, பூஜைகள், ஹோமங்களின் போது பகவானுக்கு அளிக்கும் பாத்யம், அர்க்யம், ஆசமனீயம், ஸ்னானம், ஆகியவற்றில் உபயோகப்படுத்தக்கூடாது. 

3. தேவதா பூஜை, ஹோமங்களின் போது செய்யும் உபசாரத்திற்கென தனியாக, பஞ்சபாத்திரம், உத்தரணியை வைத்திருக்க வேண்டும். 

4. ஸ்ரார்தம் செய்யும் போதும், உங்களின் பஞ்சபாத்திரம், உத்தரணியிலிருந்து, பிராம்மணாளுக்கு தீர்த்தம் போடுவதோ, உபசாரம் செய்வதோ கூடாது. அவர்களுக்கென, தனி பஞ்சபாத்திரம், உத்தரணியை கொடுக்க வேண்டும். 

5. சந்தியாவனத்தில், காயத்ரி தேவிக்கு கொடுக்கும் அர்க்யபிராதனத்தில், உங்கள் பஞ்சபாத்திரம், உத்தரணியிலிருந்தும், ஒரு கையாலும், கொடுக்க கூடாது. நீங்கள் ஆசமனம் செய்த, மிச்ச ஜலத்தை அர்க்யம் கொடுப்பது, மிக பெரிய பாபம் ஆகும். உங்கள் மகனுடையதோ அல்லது மற்றவரின் பஞ்சபாத்திரம், உத்தரணியையோ உங்கள் அனுஷ்டானத்திற்கு உபயோகப்படுத்தக் கூடாது எனும்போது, எப்படி காயத்ரி தேவீக்கு கொடுக்கலாம், அதுவும் ஒரு உத்தரணி மட்டும் ?

6. சாஸ்திரங்கள் தெளிவாக விளக்குகின்றன, சந்தியாவந்தனத்தில் நாம் எவ்வாறு காயத்ரி தேவிக்கு அர்க்யம் தர வேண்டும் என்பதை.
அது சொல்வது என்னவெனில்? 

கரப்யாம் தோயம், ஆத்யா, அஞ்சலினா தோயம், ஆத்யா

*கரப்யாம் (இரண்டு கைகளினாலும்), தோயம்(ஜலம்), ஆத்யா(எடுத்து), அஞ்சலினா(இரண்டு கைகளும் சேர்த்து, உள்ளங்கையில் ஜலம் எடுத்து).  இதை எப்படி செய்வது, என்ற சந்தேகம் எழும்?*

7. *நீங்கள் ஒரு சொம்பு/சின்ன கலசம் நிறைய ஜலம் எடுத்து, அதன் கழுத்து பகுதியை  இடது கைகளின் கட்டை விரல், ஆள்காட்டி, விரல்களால் பிடித்து, மற்ற விரல்களின் உதவியோடு தூக்கி, சற்றே சாய்த்து வலது கையையும் அஞ்சலி செய்வது போல் கோர்த்து, உள்ளங்கைகள் வழியாக காயத்ரி மந்திரம் ஜபித்து, அர்க்யம் விடவும்.* 
நாம் இரு கைகளினாலும், நிறைய ஜலத்தை காயத்ரி தேவிக்கு அர்க்யமாக விடுவது, மிகவும் உத்தமமானது. அதை விடுத்து, இன்று பலர் செய்வது போல், ஒரு உத்தரிணி ஜலம் நாம் ஆசமனம் செய்த பஞ்சபாத்திரத்திலிருந்து,
கொடுப்பது முறையன்று. 

8. அதேபோல, சந்தியாவந்தனத்தில் நவக்ரஹ தேவதா தர்ப்பணத்திலும், நமது பஞ்சபாத்திரத்திலிருந்து, ஒரு உத்தரணி ஜலம் விடுவது கூடாது. எண் 7ல் கூறியுள்ளபடி, இதிலும் செய்ய வேண்டும். குறைந்தது 1 முதல் 1 1/2 லிட்டர் ஜலம் சொம்பில் வைத்துக் கொண்டு, சந்தியவந்தன அர்க்யமும், நவக்ரஹ தேவதா தர்ப்பணமும் செய்ய வேண்டும். இந்த ஜலம் விடுவதற்கு தக்கவாறு, பெரிய தாம்பாளம் வைத்துக் கொள்ள வேண்டும். 

9. மார்ஜனம் செய்ய ப்ரோஷிக்கும் போது, *ஆபோஹிஷ்டா மயோபுவ*, மற்றும், 
 *ததிக்ராவண்ணோ* விற்கும் உத்தரணி தீர்த்தம் பஞ்சபாத்திரத்திலிருந்து எடுத்து செய்வது கூடாது. இதற்கென தனி கிண்ணமோ, அல்லது சிறு தட்டோ பயன்படுத்த வேண்டும் சந்தியாவந்தனத்தில் மார்ஜன ப்ரோக்ஷணத்திற்கு..

10. அதேபோல, உங்கள் ஆசமன பாத்திரத்தின் ஜலத்தை, மற்றவர்கள் மீது ப்ரோக்ஷணம் செய்யக் கூடாது. 

11. அதேபோல, பிரம்ம யஞ்ய தேவ-ரிஷி-பித்ரு, தர்ப்பணிங்களிலும் ஒரு உத்தரணி ஜலம் பஞ்சபாத்திரத்திலிருந்து எடுத்து விடக்கூடாது. நிறைய ஜலம் சொம்பில் எடுத்துக் கொள்ளவும்.     (இரண்டு சொம்பும் உபயோகப்படுத்தலாம்). நிறைய தர்ப்பணங்கள், இரு கைகளையும் இணைத்து அஞ்சலி முறையில் விடுவதால், 3முதல் 4 லிட்டர் வரை ஜலம் தேவைப்படும். 

12. நம் முன்னோர்களுக்கு அமாவாஸ்யை தர்ப்பணம் செய்யும் போதும், நம் பஞ்சபாத்திரலிருந்து ஜலம் எடுத்து விடக்கூடாது. எண் 7ல் கூறியுள்ளது போல் தர்ப்பணங்கள், இரு கைகளையும் இணைத்து அஞ்சலி முறையில் விடுவதால், நிறைய ஜலம் சொம்பில்  தேவைப்படும். ஜலம் விழும்போது, நம் வலது ஆள்காட்டி விரல், மற்றும் கட்டை விரல் வழியாக விட வேண்டும். ஒரு கையால் விடுவது கூடாது. நம் முன்னோர்களை த்ருப்தி படுத்தும் தர்ப்பணம் செய்வதற்கென தனியாக பாத்திரங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். 

13. தேவ கார்யங்களுக்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்கள், பித்ரு கார்யங்களுக்கும் மாற்றி
உபயோகிக்க கூடாது. இரண்டிற்கும் தனித்தனியாக வைத்திருந்து உபயோகப்படுத்த வேண்டும். உங்கள் ஆசமனத்திற்கு உபயோகப்படுத்தும் பாத்திரம் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தேவ காரிய செட், பித்ரு காரிய செட் என தனியே பிரித்து வைத்து உபயோகிக்க வேண்டும். 

14. ஆகையால், உங்கள் பஞ்சபாத்திரம், உத்தரணி, நீங்கள் செய்யும் ஆசமனத்திற்கு மட்டும் தான். மற்ற விஷயங்களுக்கு உபயோகிக்க கூடாது. மற்ற கர்மாக்களான, அர்க்ய ப்ரதானம்/தர்ப்பணம்/ப்ரோக்ஷனம்/மார்ஜனம் போனாறவற்றிற்கு, தனிப் பாத்தரங்கள் உபயோகம் செய்ய வேண்டும். 

இன்றைய காலத்தில், நிறைய பேர் ஒரு பஞ்சபாத்திரம்,
 உத்தரணியிலேயே சந்தியாவனம் முழுவதையும் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான முறையாகும். தேவதைகளும், பித்ருக்களும் ஜலத்தை அம்ருதம் (தெய்வீக அம்ருதம்) என அறிவுறுத்தி, நமக்கு அதிகளவில் கிடைக்குமாறு செய்தது, நாமும் அதிக அளவில் திருப்பி தர வேண்டும் என்ற காரணத்திற்காகவே! ஆனால், நாம் ஒரு உத்தரணி கொடுக்கின்றோம். 
பலரும் இன்றைய காலகட்டத்தில், உபாகர்மா(ஆவணி அவிட்டம்) கூட, 
ஒரு பஞ்சபாத்திரம், உத்தரணி, தட்டுடனே செய்கிறார்கள். இவையனைத்துமே, நம் வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டதை, ஒட்டாதவாறு நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததே, இதற்கு காரணமாகும். 

நாங்கள், வேத கோஷம் மூலமாக
ரிஷிகள் வாக்கியப்படி உள்ள நித்ய கர்மானுஷ்டானங்களை, பயிற்றுவிக்கிறோம். செய்ய வேண்டியனவும், மற்றும் தவிர்க்க வேண்டும் என்று சூத்திரங்களில் தரப்பட்ட விஷயங்களை விளக்கமாகவும், தத்வார்த்தமாகவும் எடுத்து சொல்கின்றோம். 

நாங்கள் பல்வேறு விதமான முகாம்கள், பல ஊர்களிலும், ஆன்லைன் மூலமாகவும், சாஸ்திர விதிப்பபடி உள்ள  நித்ய கர்மானுஷ்டானங்களான, சந்தியாவந்தனம், பிரம்மயக்ஞம், 
புண்ட்ர தாரண விதி(விபூதி/நாமம்), ஸ்னான விதானம், விரத அனுஷ்டானம், பண்டிகை கொண்டாடும் வழிமுறைகள், தேவதா பூஜா விதானங்கள், போன்ற சில முக்கியமானவற்றயும், இதேபோல் மேலும் பலவிதமான  பயிற்சிகளையும், கற்று தருகிறோம்.

எங்களோடு இணைவதற்கு, கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.


🕉️

patteeswaram temple & sambandar

இன்று *ஈசன் அளித்த அற்புத தரிசனம்*

*தேனுபுரீசுவரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர் மாவட்டம்.*

சுவாமிமலைக்கு அருகில்  உள்ளது இந்த தலம்.

திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம் பெற்றது.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 23வது தலம்.

பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. 

ஞானசம்பந்தருக்கு, ஈசன்  முத்துப்பந்தல் அளித்து,அந்த முத்துப்பந்தல் நிழலில் வரும் அழகைக்காண நந்தியை விலகி இருக்கும்படி உத்தவிட்ட தலம்.

விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இத்தலத்தில் தான். 

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது.

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும். 

இங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு கேது செவ்வாய் தோசங்கள் நீங்கும்.

அன்னை
ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீபல்வளைநாயகி ...அன்பே உருவானவள்...கேட்ட வரம் தரும் அம்பாள்

*திருஞான சம்பந்தர் முத்துப்பந்தல் பெற்றது*

திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வரும் நேரத்தில் திருச்சத்திமுற்றத்தில் வழிபட்ட பின் இத்தலத்துக்கு வந்தார்.அப்போது வெயில் காலமாதலால் சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தன.

வெயிலின் கொடிய வெப்பத்தை தணிக்க இத்தலத்து பட்டீசர் பூதகணங்கள் மூலமாய் அழகிய முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார். ஞானசம்பந்தர் இறைவன் அருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலில் வந்தார். ஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காணவும், திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்கவும் பெருமான் நந்தி தேவரை விலகி இருக்க கட்டளையிட்டார். நந்தியும் விலகியது.

ஞானசம்பந்தர் பரவசத்தில் இறைவனை வணங்கி ஆனந்தப்பெருவெள்ளத்தில் பாடல் மறை எனத்தொடங்கும் பாமாலையை பாடி தலத்தில் தங்கினார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் ஆனிமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

காமதேனுப்பசுவின் புத்திரி பட்டி பூசித்ததால் பட்டீச்சரம் என்று பெயர் ஏற்பட்டது.

*ராமருக்கு சாயகத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலம்.

*பராசக்தியே தவம் செய்து வழிபட்ட தலம்.

Sunday, March 10, 2024

PANCHAPATRAM- UDDHARNI AND ITS USES & ACHAMANA

PANCHAPATRAM- UDDHARNI AND ITS USES & ACHAMANA

#dharmashastram

Namo Namah !

Panchapatram is widely used in most of our households for various Nitya karmas, poojas etc. But we are not here to tell you what you know, rather we are here to tell you what you may not know. Dharma Shastras (Smritis) written by our Vedic Rishis give a complete direction for our anushtanas on not only the steps but also about the vessels used for the same and their uses. So here is what you should not do with Panchapatram and Uddharni.

1. Panchapatram for each family member should be separate. Father cannot use son's Panchapatram and vice versa.

2. You cannot use your panchapatram that you use for achamana and other Nityakarma, for offering Padhya, Arghya, Achamaneeya, Snana etc to Bhagavan during pooja or homam.

3. Panchapatram for Devatas in Pooja should be different and you should not use your  panchapatram to offer various upacharams to Bhagavan in Pooja.

4. Your panchapatram cannot be used to offer theertha and other upachaarams to brahmanas during Shraddha. You should buy and give them a separate panchapatram for their use.

5. You cannot do Arghya pradhana during Sandhyavandana to Gayatri Devi with your Panchapatra water and Uddharni using a single hand. This is a very big paapam as you are offering your achamana balance jalam to Gayatri Devi as Arghya. When your son himself cannot use your achamana patram for his achamana or jalam for his anushtanas, how can you offer Arghya that too just 1 uddharni to Gayatri Devi in Sandhyavandanam?

6. Shastra is clear when it comes to guiding us for giving Arghya to Gayatri Devi in Sandhyavanadana. It says

Karabhyam Toyam aadaya Anjalina toyam aadaya

Karabhyam (with both hands) Toyam (water) aadaya (take) in Anjali posture (Anjali means join both hands together and take water) so both hands when joined together, water should be taken, filling both the palms. You may ask how to do this?

7. You need to take a chombu /small kalasham filled with water and catch the neck of this chombu between your left hand index finger/forefinger and left thumb and lift it, tilt it a bit while holding both hands together in Anjali posture so that water flows out, filling both palms. Then chant Gayatri and do Arghya pradanam. Both hands fully filled with water - this is what we need to offer to Gayatri devi in each arghya  and not 1ml water with Uddharni, which most people do today with the achamana water

8. Similarly for Navagraha Devata Tarpana in Sandhyavanadana, you should not use your Achamana panchapatra and you should not do tarpana with Uddharni pouring 1ml water.  Same method as said in step 7 should be followed here. Minimum 1 to 1.5 litres of water should be offered in Sandhyavandana Arghya pradana and Navagraha Devata Tarpana. For this you need to keep a big tambalam which can hold this flowing water.

9. The self-maarjana "Apohista Mayo Bhuvah" and Dadhikravinno" should not be done from Uddharani water from Panchapatra. You should keep some water in a separate small cup for performing this Marjana during Sandhyavandana.

10. Similarly your Achamana Patra jalam/water in which you have done Achamana cannot be used for prokashanam on others.

11. Similarly in Brahmayagna Deva-Rishi-Pitru Tarpana, you cannot offer water with 1 uddharni each from your Panchapatram. You need to keep adequate water in your chombu (you may even need 2 chombus) as there are multiple tarpanas and they all have to be done with both hands joined together in Anjali posture. 3-4 litres of water may be required in Brahmayagna Deva-Rishi-Pitru Tarpana.

12. You cannot do Amavaasya Tarpana offering to your forefathers from your panchapatram in which you have done achamana. Also, Amavasya tarpanam should be with both hands joined together as Anjali to take water as explained in step 7. And the water should flow out from the index finger and thumb of the right hand. One-handed Tarpana is not allowed. You need to keep a separate chombu/ vessel for offering tarpana in Amavasya to your forefathers.

13. Vessels used for Deva karyam should not be used I for Pitru karyam and vice versa. You need to keep a separate set of paatrams (kinnam, chombu, plate) etc for Pitru karyam and must be used only for pitru karyams. Your personal achamana panchapatram can be same, but all other vessels should be different.

14. Thus your panchapatram and uddharni are for only your use and only for Achamanam. You cannot do anything else with it. For all karmas requiring Arghya pradana / tarpana / prokshana/ marjana etc separate vessels need to be used.

Most people today do Sandhyavandana with just one panchapatram uddharni and one small plate, which is incorrect. Devatas and Pitrus have regarded water as Amrutham (divine nectar) and have given this in abundance to us so that we give them back in abundance. But unfortunately we use just one-one Uddharni to do all these. Many people also perform Upakarma (Avani Avittam) in the same way with just a plate and panchapatram, uddharni. All these are miles aways from Shastras and have come into common practice due to lack of guidance.

At Veda Ghosham we actively train people on Nityakarma as prescribed by our ancient Rishis in Sutras, with minute details of do's and don'ts in our daily Nitya karma-anushtanas with indepth meaning and tattva.

We run camps in various cities and also online classes on Nityakarmas like Sandhyavandanam, Brahmayagnam, Pundra Dharana Vidhi (Vibhuti/Namam), Snana Vidhanam,  Vrata Anushtanam, Festivals celebration as per Shastras, Devata Poojai to name a few and many more like this.

Feel free to look us up at www.vedaghosham.com 

Thursday, March 7, 2024

Thiruvanaiikkaval temple


https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88_3/023-033

23. ஆனைக்கா அகிலாண்டேசுவரி

ராமனுக்கும் சீதைக்கும் மிதிலையில் திருமணம் நடக்கிறது. அவர்களது மணக்கோலத்தைப் பாடுகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

மன்றலின் வந்து மணித் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன்துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தே

என்பது பாட்டு. இந்தப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் என் உள்ளத்தில் ஒரு சந்தேகம் எழுவது உண்டு. எப்படி ராமன் சீதை இருவரும் போகமும் யோகமும் ஒன்றிய நிலையில் இருந்தார்கள்? எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் எண்ணுவேன் நான். இந்தச் சந்தேகம் என் உள்ளத்தில் மட்டுமே எழவில்லை. அன்னை பார்வதிக்குமே எழுந்திருக்கிறது. ஆகவே யோகம் போகம் அவற்றின் உண்மைகளைப்பற்றி ஒரு சந்தேகத்தையே கிளப்பி, அதற்கு விடையை இறைவனிடமே கேட்டிருக்கிறாள். அவரும் உடனே அதற்கு விடை சொல்லவில்லை. 'நீ பூலோகம் சென்று அங்குள்ள ஞானத்தலத்தை அடைந்து தவஞ்செய். அங்கு நான் வந்து உனக்கு உபதேசம் செய்து உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து வைக்கிறேன்' என்று உத்தரவு போட்டிருக்கிறார். இறைவன் கட்டளைப்படியே ஞானபூமியை நாடிவருகிறாள் அன்னை. காவிரிக்கரையிலே முனிவர்களெல்லாம் இருந்து தவம் செய்யும் ஒரு சோலையைக் கண்டு அங்கு தவம் செய்ய முனைகிறாள். இன்பத்தைத் தருகின்ற முத்தியின் தன்மையைத் தெரிந்து கொள்ள வந்தவள் ஆதலின் இனிய சுவை உடைய நீரையே திரட்டி லிங்கத் திருவுரு அமைத்துக் கொள்கிறாள்.

அந்த அப்புலிங்கத்துக்கே அபிஷேகம் முதலியன செய்து ஆராதனை பண்ணுகிறாள். இவள் தன் தவத்துக்கு இரங்கி அண்ணல் இந்தக் காவிற்கு வந்து சந்தேகத்துக்கு விளக்கம் கூறுகிறார். அவர் கூறும் விளக்கம் இதுதான். 'உலகங்கள் எல்லாம் என் அருள் வழியே நடப்பன. நடனத்தைப் பிறருக்குக் கற்பிக்க விரும்பும் நடன ஆசிரியன் முதலில் தானே நடனம் ஆடிக்காட்டுதல் போல, உலக மக்களுக்கு யோக நிலையையும் போக நிலையையும் பயிற்றுவிக்க நானே நடத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. உலகில் உள்ள ஆன்மாக்களெல்லாம் போகத்தை நுகர உன்னை மணந்து தழுவிப் போசியாகவும், அதே சமயத்தில்யோகசித்தி பெற்றுயோகியாகவும் மாறுகிறேன்' என்கிறார். ஆம்! யோக நிலையில் இருக்கும் இறைவன் போகியாகவும் காட்சி தரும் ரகசியம் இதுதான் என்று அன்னை அறிகிறாள். இந்த விளக்கத்தை அன்னை அகிலாண்டேசுவரி பெற்ற இடம் தான் திரு ஆனைக்கா. அந்த ஆனைக்காவுக்கே செல்கிறோம் நாம் இன்று.

ஆனைக்கா காவேரிக்கரையில், காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள தீவில் உள்ள தலம். திருச்சி ஜங்ஷனிலிருந்து வடக்கே நாலுமைல் தொலைவில் இருக்கிறது. ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கி, கிழக்கே நாலு பர்லாங்கு நடந்தால் கோயிலுக்கு வந்துசேரலாம். ஆனைக்காவை, திருவானைக்காவல் என்றும் திருவானைக் கோயில் என்றும் மக்களும் நெடுஞ்சாலைப் பொறியாளர்களும் அழைப்பார்கள், ஆனைக்கா என்றால் யானை வதிந்த காடு என்றுதான் பொருள். அதனாலேயே அத்தலத்தை கஜாரண்யம் என்றும் புராணங்கள் கூறும். இத்தலத்துக்கு ஏன் ஆனைக்கா என்று பெயர் வந்தது என்று தெரியத் தலவரலாற்றைக் கொஞ்சம் படிக்கவேணும்.

கைலையிலுள்ள இரண்டு கணநாதர்கள் ஏதோ சாபம் பெற்ற காரணத்தால் யானையாகவும் சிலந்தியாகவும் வந்து பிறக்கிறார்கள் இந்த ஞானபூமியிலே. இருவரும் அன்னை அகிலாண்டேசுவரி ஸ்தாபித்த அப்புலிங்கத்தை வழிபடுகிறார்கள். லிங்கமோ ஒரு நல்ல நாவல் மரத்தடியில் காவிரிக்கரையில் இருக்கிறது. ஆற்றுத் தண்ணீரைத் தன் துதிக்கையாலே மொண்டு கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறது யானை. மரத்தின் தழைகள் இறைவன் மேல் விழாதவாறு நூல் பந்தல் இடுகிறது சிலந்தி. சிலந்திக்கு யானைமீது கோபம். ஆதலால் சிலந்தி யானையின் துதிக்கையுள் நுழைந்து கபாலம் வரை ஏறி யானையைக் கடிக்கிறது. யானை வேதனை தாங்கமாட்டாமல் தன் துதிக்கையை ஓங்கி அடிக்கிறது. அதனால் சிலந்தியும் மடிகிறது. யானையும் துடிதுடித்து விழுந்து இறக்கிறது.

ஆனால் இவர்கள் இருவரது பக்தியையும் மெச்சி, இவர்களுக்கு முத்தி அளிக்கிறான் இறைவன். முத்தி பெற்ற யானையின் ஞாபகார்த்தமாகவே இத்தலம் ஆனைக்கா ஆகிறது. சிலந்தி மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கிறது. அந்தப் பிறவியிலும் யானை மீது கொண்டிருந்த பகையை மறக்காமல், யானை ஏற இயலாத மாடக் கோயில்களாகவே எழுபது கட்டுகிறான் சோழமன்னன், எழுபது கோயில்களில் படி ஏற இயலாத யானையும் ஒரு கோயிலைத் தன்னுடையதாக -ஆனைக்காவாகவே - ஆக்கிக் கொள்கிறது. இத்தனையும் கூறுகிறார் நாவுக்கரர்.

சிலந்தியும் ஆனைக்காவில்
திருநிழல் பந்தல் செய்து
உலந்து அவண் இறந்தபோதே
கோச் செங்கணானுமாக
கலந்தநீர் காவிரிசூழ்
சோணாட்டு சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார்
குறுக்கை வீரட்டனாரே

என்று திருக்குறுக்கை என்னும் தலத்தில் பாடுகிறார்.

இனி, கோயிலுள் செல்ல முனையலாம். நல்ல தென்னஞ்சோலைக்கு நடுவே கோயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்குக் கீழ்ப்புறத்திலே உள்ள ஊர்களின் பெயரே, திரு வளர்ச்சோலை, உத்தமர்சேரி என்று. இந்தப் பெயர்களைச் சொல்லும்போதே நா இனிக்கும். இந்தக் கோயிலுக்கு ஐந்து பிரகாரங்கள். மேற்கேயிருந்து கிழக்கு நோக்கி வரும்போது முதல் இரண்டு பிராகாரங்களிலும் உள்ள கோபுர வாயிலைக் கடந்துதான் வரவேண்டும். அந்தப் பிரகாரங்களில் மக்கள் குடியிருக்கும் வீடுகள் நிறைந்திருக்கும். மூன்றாம் பிரகாரத்திலிருந்து தான் கோயில் மண்டபங்கள் ஆரம்பமாகின்றன, என்றாலும், நான்காம் பிரகாரத்து மதில்தான் பெரிய மதில். இந்த மதிலையே திருநீற்று மதில் என்று கூறுகிறார்கள்.

விசாரித்தால் இம்மதில் கட்ட மன்னன் முனைந்த போது, சித்தர் ஒருவர் தோன்றி வேலை செய்தவர்களுக்கெல்லாம் திருநீற்றையே கூலியாகக் கொடுத்திருக்கிறார். அத்திரு நீறே பின்னர் ஒவ்வொருவர் கையிலும் பொன்னாக மாறியிருக்கிறது. இப்போதும் கோயிலில் நமக்குக் கொடுக்கும் திருநீறெல்லாம் பொன்னாக மாறுகிறது என்று மட்டும் ஆகிவிட்டால் கோயிலுக்கு வருவார் தொகையே பெருகிவிடாதா?).

ஏகபாத திரிமூர்த்தி

இந்த மதிலை எல்லாம் கடந்து வந்தால் வட பக்கம் ஆயிரக்கால் மண்டபத்தைக் காண்போம். அதற்கு எதிரே ஒரு பெரிய மண்டபத்தை அடுத்துத் திரி மூர்த்திகள் கோயில். அங்கு சென்று படி ஏறினால் ஓர் அதிசயம் காத்து நிற்கும், ஆம்! பிரும்மா, விஷ்ணு, சிவன் எல்லோருமே லிங்கத் திருவுருவிலே தனித் தனி கோயிலில் இருப்பார்கள். இந்த மூவரும் சேர்ந்த திரு உருவம் ஒன்றும் அங்குள்ள தூணில் இருக்கும். அதனையே ஏகபாத திரிமூர்த்தி என்று கூறுவார்கள். இத்திரிமூர்த்திகளையும் வணங்கியபின் துவஜஸ்தம்ப மண்டபத்துக்கு வருவோம். அந்த மண்டபம் பிரும் மாண்டமான மண்டபம். அம்மண்டபத்தை நான்கு பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணுக்கும் மேல் எட்டுச் சிங்கங்கள் மண்டபத்தையே தாங்கி நிற்கும். மேலும் இத்தூண்களில் எல்லாம் தலவரலாறுகளைத் தெரிவிக்கிற சிற்ப வடிவங்கள் உண்டு. இவற்றையெல்லாம் கண்டு அதிசயித்த பின்னரே அடுத்த சோமாஸ்கந்த மண்டபத்துக்குச் சென்று அந்தப் பிரகாரத்தைச் சுற்ற வேணும். அப்படிச் சுற்றி வரும்போது கீழ்ப்புறம் கருவறை மேல் கட்டப்பட்ட விமானத்தை ஒட்டி வெண்நாவல் மரம் ஒன்று விரிந்து பரந்திருக்கும். இதனை இரும்பு அழி போட்டுப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

இங்கு சம்பு முனிவர் இருந்து தவம் செய்திருக்கிறார். இந்த மரத்தின் அடியிலேயே இறைவன் வதிவது காரணமாக இத்தலத்துக்கே சம்புகேசுவரம் என்ற பெயரும் நிலைத்திருக்கிறது. இதனையும் கடந்து மேற்கு நோக்கி வந்தே கருவறை வாயில் செல்லவேணும். இறைவன் மேற்கே பார்க்க லிங்க வடிவில் மிகத் தாழ்ந்த இடத்தில் இருக்கிறார். அவர் சந்நிதிக்குமுன் ஒன்பது துவாரங்கள் கொண்ட ஒரு கல் பலகணி உண்டு. அதன் வழியாகத் தரிசித்த பின்னரே தென்பக்கம் உள்ள வாயில் வழியாக அந்தராளம் செல்லவேணும். அங்குநான்கைந்து பேர்கள் நிற்பதே மிக்க சிரமம். ஆதலால் முன் சென்றவர் எல்லாம் வெளிவரும் வரையில் காந்திருந்தே பின் சென்று வணங்குதல் கூடும். இங்கோ எப்போதும் நீர் பொங்கிக் கொண்டேயிருக்கும். அர்ச்சகரும் தண்ணீரை எடுத்து வெளியே கொட்டிக் கொண்டே யிருப்பார். அன்னை பிடித்தமைத்த அப்புலிங்கம் அல்லவா, அங்கு நீர் பொங்கி வழிவதில் வியப்பு என்ன? இப்படி அப்பு வடிவிலும், லிங்க வடிவிலும் உள்ள இறைவனை வணங்கி வெளியே வரும் போது,

தென்னானைக் காவானை தேனைப்
பாலை, செழுநீர்த்திரளைச்
சென்று ஆடினேனே

என்று நாவுக்கரசரோடு சேர்ந்து நாம் பாடிக்கொண்டே வரலாம்.

இனி நாம் கிழக்கு நோக்கி நிற்கும் அகிலாண்டேசுவரி சந்நிதியை நோக்கி விரையலாம். இத்தலத்திலேயே இறைவனாம் அப்பு லிங்கத்தைவிட அருள் பாலிக்கும் பெருமை உடையவள் அகிலாண்டநாயகிதான். அவள் 'அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும் பின்னரும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயில்.' ஆதலால் மற்றப் பிரகாரங்களை எல்லாம் கடந்து அவள் சந்நிதிக்கே வந்து சேரலாம். அவளை எதிர்நோக்கி இருப்பவர் சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்தாபித்த விநாயகர். அன்னையின் வடிவம் நல்ல கம்பீரமான வடிவம், கருணை பொழிகின்ற திருமுகம். வணங்கும் அன்பருக்கெல்லாம் அட்டமா சித்திகளை அருளுகின்றவள். இவ்வன்னையைத் தாயுமானவர் வணங்கியிருக்கிறார், பாடியிருக்கிறார்.

அட்டசித்தி நல் அன்பருக்கு அருள
விருது கட்டிய பொன் அன்னமே!
அண்டகோடி புகழ்காவை வாழும்
அகிலாண்டநாயகி என் அம்மையே

என்பது அவரது பாட்டு. இந்த அம்மையே இறைவனைப் பிரதிஷ்டை செய்து பூஜித்ததாக வரலாறு. அதனால் இன்றும் உச்சிக்காலப் பூஜையின்போது இந்த அம்மன் கோயில் அர்ச்சகர் பெண் வேடந்தரித்து இறைவனைப் பூஜிக்கிறாராம்! ஆம், திருவாரூரில் அர்ச்சகர் தேவேந்திரனைப்போல ராஜகம்பீர உடை அணிந்து தியாகராஜரைப் பூஜிப்பது போல. இந்த அப்புலிங்கம் என்னும் அமுதலிங்கரும், அன்னை அகிலாண்டநாயகியும் தங்கள் சொத்தைப் பராமரித்துக் கொள்வதிலே மிக்க அக்கறை உடையவர்கள் என்றும் தெரிகிறது. அதற்கு ஒரு சிறு கதையும் இருக்கிறது. அக்காலத்தே உறையூரிலிருந்து அரசாண்ட சோழ மன்னன் ஒருவன், இந்த அன்னையையும் அத்தனையும் வழிபட வந்திருக்கிறான் தன் மனைவியுடன். மனைவியின் கழுத்தில் கிடந்த முத்தாரத்தை இறைவனுக்கு அணிந்தால் அழகாயிருக்குமே என்று எண்ணியிருக்கிறான்.

இந்த எண்ணத்தோடேயே வருகிற வழியில் காவிரியில் நீராடி இருக்கிறார்கள் அரசனும் அரசியும், குளித்து எழுந்தால் அரசி கழுத்தில் இருந்த முத்தாரத்தைக் காணோம். கழுத்திலிருந்து நழுவி ஆற்றில் விழுந்திருக்கிறது. தேடிப்பார்க்கிறான் அரசன்; கிடைக்கவில்லை. பின்னர் சோர்வுடனேயே கோயிலுக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். சந்நிதியில் வந்து சேர்ந்தபோது அங்கு இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுகிற நேரமாக இருந்திருக்கிறது. காவிரியிலிருந்து குடத்தில் நீர் கொண்டுவந்து திருமுழுக்கு நடக்கிறது. என்ன அதிசயம்! அந்தக் குடத்துக்குள்ளிருந்து முத்தாரம் இறைவன் முடிமேவேயே விழுகிறது. மன்னனும் அரசியும் இறைவனது அளப்பரிய கருணையை வியக்கிறார்கள்.

வழக்கமாக எல்லாச் சிவன் கோயில்களிலும் நடக்கும் திருவிழாக்கள் இக்கோயிலில் உண்டு. இத்துடன் பங்குனி மாதம் சித்திரை நாளில் பஞ்சப்பிரகார உற்சவம் என்று ஒன்று சிறப்பாக நடைபெறும். அன்று ஒரு வேடிக்கை; இறைவன் பெண் வேடத்தோடும் இறைவி ஆண் வேடத்தோடும் திருவீதி உலா வருவர். ஏன் இந்த வேடம் இவர்கள் அணிகிறார்கள் என்பதற்கு ஒரு புராண வரலாறு உண்டு, பிரமன் தான் படைத்த பெண்ணொருத்தியின் அழகிலே மயங்கி நிறை அழிகின்றான். அதனால் படைத்தல் தொழிலே செய்ய முடியாமல் திணறுகிறான். தன் தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்புப் பெறத் தவம் செய்கிறான். தவத்துக்கு இரங்கிய இறைவன் இறைவியோடு பிரமன் முன்பு எழுந்தருள்கிற போதுதான் இப்படி வேடம் தரித்து வந்திருக்கிறார்கள். ஆம். இறைவனுக்கு ஒரு சந்தேகம், இந்தப் பிரமன் இறைவியின் அழகைக் கண்டு மோகித்தால் என்ன செய்வது என்று. இந்த வேடத்தில் இவர்களைக் கண்ட பிரமன் வெட்கித் தலைகுனிகிறான். பின்னர் அவன் விரும்பிய வண்ணமே அருள் பெறுகிறான். இந்தச் சம்பவத்தை நினைவூட்டவே இந்தப் பஞ்சப் பிரகார உற்சவம், அதில் இந்த வேடம்!

இத்தலத்துக்கு சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள். சம்பந்தர் இத்தலத்தில் இருந்து கொண்டே கயிலாயம், மயேந்திரம், ஆரூர் முதலிய தலங்களையும் நினைத்திருக்கிறார்; பாடியிருக்கிறார்.

மண்ணது உண்ட அரிமலரோன் காணா வெண்ணாவல் விரும்பு மயேந்திராரும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூரர் ஆதி ஆனைக்காவே

என்பது அவரது தேவாரம். செழு நீர்த்திரளாம் அப்பு லிங்கரை அப்பர் பாடியதைத்தான் முன்பே கேட்டிருக்கிறோமே. சுந்தரரும்,

அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை, நாளும்
இறைவன் என்று அடி சேர்வார்
எம்மை ஆளுடையாரே.

என்று பாடிப் பரவியிருக்கிறார். இப்பாடல்களை யெல்லாம் பாடிக்கொண்டே கோயிலை வலம் வரலாம்; வெளியேறியும் வரலாம்.

இக்கோயிலில் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளை ஆராய்ந்து இந்தக் கோயிலைக் கட்டியவர்கள், நித்திய நைமித்தியங்களுக்கும், நந்தா விளக்குகளுக்கும் நிபந்தங்கள் ஏற்படுத்தியவர்களையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பிற்காலத்து சோழர், பாண்டியர், ஹொய்சலர், விஜயநகர மதுரை நாயக்க மன்னர்களைப் பற்றி எல்லாம் பலப்பல கல்வெட்டுக்கள், ஹொய்சல மன்னர்களைப் பற்றிய கல்வெட்டுகள் அதிகம். கடந்த 1960-ம் வருஷம் சிறப்பாகக் குடமுழுக்கு விழா நடந்திருக்கிறது. காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சார்ய சுவாமிகளே இருந்து நடத்தி வைத்திருக்கிறார்கள்.