Saturday, March 16, 2024

Panchapatram how to use it

🕉️

*பஞ்சபாத்திரம் - உத்தரணி*. *உபயோக முறைகள், மற்றும் ஆசமனம்*

#தர்மசாஸ்திரம்

நமோ நமஹ !

பஞ்சபாத்திரம் நம் வீடுகளில்,  நித்யகர்மானுஷ்டானங்களுக்கும், பூஜைகளுக்கும் உபயோகப்படுத்தும் பொருளாக இருக்கின்றது. 
இங்கு உங்களுக்கு தெரிந்த அதன்  உபயோகமுறையை சொல்ல போவது இல்லை. சில தெரியாத விஷயங்களை, தெளிவு படுத்த போகிறோம். 
*தர்ம சாஸ்திரம் (ஸ்மிருதி)*, நமது வேத ரிஷிகளால் இயற்றப்பட்டு, தெளிவான வழிமுறைகளோடு மட்டுமல்லாமல், அதில் உபயோகப்படுத்த வேண்டிய பாத்திரங்கள் மற்றும் வரைமுறைகளையும் எடுத்துரைத்துள்ளார்கள். இங்கே குறிப்பிட பட்டுள்ளளவைகளில்,  பஞ்சபாத்திரம்/உத்தரணியை எப்படி பயன்படுத்தக் கூடாது என்பதும் அடங்கும். 

1. பஞ்சபாத்திரம், உத்தரணியை அவரவர் தனித்தனியே உபயோகப்படுத்த வேண்டும். தந்தையுடையதை மகனோ, அல்லது மகனின் பஞ்சபாத்திரம், உத்தரணியை, தந்தையும் உபயோகப்படுத்தக்கூடாது. 

2. நீங்கள் ஆசமனம் செய்ய உபயோகப்படுத்தும், பஞ்சபாத்திரம், உத்தரணியை, மற்ற நித்யகர்மாக்களான, பூஜைகள், ஹோமங்களின் போது பகவானுக்கு அளிக்கும் பாத்யம், அர்க்யம், ஆசமனீயம், ஸ்னானம், ஆகியவற்றில் உபயோகப்படுத்தக்கூடாது. 

3. தேவதா பூஜை, ஹோமங்களின் போது செய்யும் உபசாரத்திற்கென தனியாக, பஞ்சபாத்திரம், உத்தரணியை வைத்திருக்க வேண்டும். 

4. ஸ்ரார்தம் செய்யும் போதும், உங்களின் பஞ்சபாத்திரம், உத்தரணியிலிருந்து, பிராம்மணாளுக்கு தீர்த்தம் போடுவதோ, உபசாரம் செய்வதோ கூடாது. அவர்களுக்கென, தனி பஞ்சபாத்திரம், உத்தரணியை கொடுக்க வேண்டும். 

5. சந்தியாவனத்தில், காயத்ரி தேவிக்கு கொடுக்கும் அர்க்யபிராதனத்தில், உங்கள் பஞ்சபாத்திரம், உத்தரணியிலிருந்தும், ஒரு கையாலும், கொடுக்க கூடாது. நீங்கள் ஆசமனம் செய்த, மிச்ச ஜலத்தை அர்க்யம் கொடுப்பது, மிக பெரிய பாபம் ஆகும். உங்கள் மகனுடையதோ அல்லது மற்றவரின் பஞ்சபாத்திரம், உத்தரணியையோ உங்கள் அனுஷ்டானத்திற்கு உபயோகப்படுத்தக் கூடாது எனும்போது, எப்படி காயத்ரி தேவீக்கு கொடுக்கலாம், அதுவும் ஒரு உத்தரணி மட்டும் ?

6. சாஸ்திரங்கள் தெளிவாக விளக்குகின்றன, சந்தியாவந்தனத்தில் நாம் எவ்வாறு காயத்ரி தேவிக்கு அர்க்யம் தர வேண்டும் என்பதை.
அது சொல்வது என்னவெனில்? 

கரப்யாம் தோயம், ஆத்யா, அஞ்சலினா தோயம், ஆத்யா

*கரப்யாம் (இரண்டு கைகளினாலும்), தோயம்(ஜலம்), ஆத்யா(எடுத்து), அஞ்சலினா(இரண்டு கைகளும் சேர்த்து, உள்ளங்கையில் ஜலம் எடுத்து).  இதை எப்படி செய்வது, என்ற சந்தேகம் எழும்?*

7. *நீங்கள் ஒரு சொம்பு/சின்ன கலசம் நிறைய ஜலம் எடுத்து, அதன் கழுத்து பகுதியை  இடது கைகளின் கட்டை விரல், ஆள்காட்டி, விரல்களால் பிடித்து, மற்ற விரல்களின் உதவியோடு தூக்கி, சற்றே சாய்த்து வலது கையையும் அஞ்சலி செய்வது போல் கோர்த்து, உள்ளங்கைகள் வழியாக காயத்ரி மந்திரம் ஜபித்து, அர்க்யம் விடவும்.* 
நாம் இரு கைகளினாலும், நிறைய ஜலத்தை காயத்ரி தேவிக்கு அர்க்யமாக விடுவது, மிகவும் உத்தமமானது. அதை விடுத்து, இன்று பலர் செய்வது போல், ஒரு உத்தரிணி ஜலம் நாம் ஆசமனம் செய்த பஞ்சபாத்திரத்திலிருந்து,
கொடுப்பது முறையன்று. 

8. அதேபோல, சந்தியாவந்தனத்தில் நவக்ரஹ தேவதா தர்ப்பணத்திலும், நமது பஞ்சபாத்திரத்திலிருந்து, ஒரு உத்தரணி ஜலம் விடுவது கூடாது. எண் 7ல் கூறியுள்ளபடி, இதிலும் செய்ய வேண்டும். குறைந்தது 1 முதல் 1 1/2 லிட்டர் ஜலம் சொம்பில் வைத்துக் கொண்டு, சந்தியவந்தன அர்க்யமும், நவக்ரஹ தேவதா தர்ப்பணமும் செய்ய வேண்டும். இந்த ஜலம் விடுவதற்கு தக்கவாறு, பெரிய தாம்பாளம் வைத்துக் கொள்ள வேண்டும். 

9. மார்ஜனம் செய்ய ப்ரோஷிக்கும் போது, *ஆபோஹிஷ்டா மயோபுவ*, மற்றும், 
 *ததிக்ராவண்ணோ* விற்கும் உத்தரணி தீர்த்தம் பஞ்சபாத்திரத்திலிருந்து எடுத்து செய்வது கூடாது. இதற்கென தனி கிண்ணமோ, அல்லது சிறு தட்டோ பயன்படுத்த வேண்டும் சந்தியாவந்தனத்தில் மார்ஜன ப்ரோக்ஷணத்திற்கு..

10. அதேபோல, உங்கள் ஆசமன பாத்திரத்தின் ஜலத்தை, மற்றவர்கள் மீது ப்ரோக்ஷணம் செய்யக் கூடாது. 

11. அதேபோல, பிரம்ம யஞ்ய தேவ-ரிஷி-பித்ரு, தர்ப்பணிங்களிலும் ஒரு உத்தரணி ஜலம் பஞ்சபாத்திரத்திலிருந்து எடுத்து விடக்கூடாது. நிறைய ஜலம் சொம்பில் எடுத்துக் கொள்ளவும்.     (இரண்டு சொம்பும் உபயோகப்படுத்தலாம்). நிறைய தர்ப்பணங்கள், இரு கைகளையும் இணைத்து அஞ்சலி முறையில் விடுவதால், 3முதல் 4 லிட்டர் வரை ஜலம் தேவைப்படும். 

12. நம் முன்னோர்களுக்கு அமாவாஸ்யை தர்ப்பணம் செய்யும் போதும், நம் பஞ்சபாத்திரலிருந்து ஜலம் எடுத்து விடக்கூடாது. எண் 7ல் கூறியுள்ளது போல் தர்ப்பணங்கள், இரு கைகளையும் இணைத்து அஞ்சலி முறையில் விடுவதால், நிறைய ஜலம் சொம்பில்  தேவைப்படும். ஜலம் விழும்போது, நம் வலது ஆள்காட்டி விரல், மற்றும் கட்டை விரல் வழியாக விட வேண்டும். ஒரு கையால் விடுவது கூடாது. நம் முன்னோர்களை த்ருப்தி படுத்தும் தர்ப்பணம் செய்வதற்கென தனியாக பாத்திரங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். 

13. தேவ கார்யங்களுக்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்கள், பித்ரு கார்யங்களுக்கும் மாற்றி
உபயோகிக்க கூடாது. இரண்டிற்கும் தனித்தனியாக வைத்திருந்து உபயோகப்படுத்த வேண்டும். உங்கள் ஆசமனத்திற்கு உபயோகப்படுத்தும் பாத்திரம் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தேவ காரிய செட், பித்ரு காரிய செட் என தனியே பிரித்து வைத்து உபயோகிக்க வேண்டும். 

14. ஆகையால், உங்கள் பஞ்சபாத்திரம், உத்தரணி, நீங்கள் செய்யும் ஆசமனத்திற்கு மட்டும் தான். மற்ற விஷயங்களுக்கு உபயோகிக்க கூடாது. மற்ற கர்மாக்களான, அர்க்ய ப்ரதானம்/தர்ப்பணம்/ப்ரோக்ஷனம்/மார்ஜனம் போனாறவற்றிற்கு, தனிப் பாத்தரங்கள் உபயோகம் செய்ய வேண்டும். 

இன்றைய காலத்தில், நிறைய பேர் ஒரு பஞ்சபாத்திரம்,
 உத்தரணியிலேயே சந்தியாவனம் முழுவதையும் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான முறையாகும். தேவதைகளும், பித்ருக்களும் ஜலத்தை அம்ருதம் (தெய்வீக அம்ருதம்) என அறிவுறுத்தி, நமக்கு அதிகளவில் கிடைக்குமாறு செய்தது, நாமும் அதிக அளவில் திருப்பி தர வேண்டும் என்ற காரணத்திற்காகவே! ஆனால், நாம் ஒரு உத்தரணி கொடுக்கின்றோம். 
பலரும் இன்றைய காலகட்டத்தில், உபாகர்மா(ஆவணி அவிட்டம்) கூட, 
ஒரு பஞ்சபாத்திரம், உத்தரணி, தட்டுடனே செய்கிறார்கள். இவையனைத்துமே, நம் வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டதை, ஒட்டாதவாறு நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததே, இதற்கு காரணமாகும். 

நாங்கள், வேத கோஷம் மூலமாக
ரிஷிகள் வாக்கியப்படி உள்ள நித்ய கர்மானுஷ்டானங்களை, பயிற்றுவிக்கிறோம். செய்ய வேண்டியனவும், மற்றும் தவிர்க்க வேண்டும் என்று சூத்திரங்களில் தரப்பட்ட விஷயங்களை விளக்கமாகவும், தத்வார்த்தமாகவும் எடுத்து சொல்கின்றோம். 

நாங்கள் பல்வேறு விதமான முகாம்கள், பல ஊர்களிலும், ஆன்லைன் மூலமாகவும், சாஸ்திர விதிப்பபடி உள்ள  நித்ய கர்மானுஷ்டானங்களான, சந்தியாவந்தனம், பிரம்மயக்ஞம், 
புண்ட்ர தாரண விதி(விபூதி/நாமம்), ஸ்னான விதானம், விரத அனுஷ்டானம், பண்டிகை கொண்டாடும் வழிமுறைகள், தேவதா பூஜா விதானங்கள், போன்ற சில முக்கியமானவற்றயும், இதேபோல் மேலும் பலவிதமான  பயிற்சிகளையும், கற்று தருகிறோம்.

எங்களோடு இணைவதற்கு, கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.


🕉️

No comments:

Post a Comment