ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலமான
#சிருங்கேரி
#சாரதாம்பாள்( சரஸ்வதி தேவி) திருக்கோயில் வரலாறு:
பெறற்கரிய பிறவியாம் மானிடப் பிறவியெடுத்து உயர்ந்த நிலையையும் அடைந்தவன் கூட ஸாஸ்வதமான பரமானந்த நிலையைப் பெற வேண்டுமானால் அவனுக்கு ஒரு நல்ல குரு தேவை. ஸத்குருவின் பெருமைகளைக் கூறியதோடு நில்லாமல் தானும் குருபக்தியையும், குருசேவைகயையும் சிரமேற் கொண்டொழுகினார் ஆதிசங்கரர்.
அத்தகைய பெருந்தகையால் நிறுவப்பட்டதும், குரு சிஷ்ய பரம்பரையில் இன்றும் குரு காட்டிய வழியில் நமது ஸனாதனமாகிய ஹிந்து வைதீக ஸம்பிரதாயங்களைக் கைக்கொண்டு செயல்படுவதும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஆகும்.
சிருங்கேரி சாரதா பீடம் அல்லது சிருங்கேரி சாரதா மடம் தென்னிந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம். யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர். பெருவாரியான ஸ்மார்த்தர்கள் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை பின்பற்றுகிறார்கள். கிபி 1336ல் விஜயநகரப் பேரரசை நிறுவ வழிகாட்டிய வித்யாரண்யர், இம்மடத்தின் தலைமைப் பொறுப்ப்பில் இருந்தவர்.
மங்களூருவிலிருந்து 105 கி. மீ. தொலைவிலும், பெங்களூரிலிருந்து 303 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிருங்கேரியில் துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது. மட வளாகம் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் உள்ள சிவாலயங்களைக் கொண்டுள்ளது.துங்கா நதியின் வடக்குக் கரையில் உள்ள மூன்று முக்கிய சன்னதிகள் உள்ளன. தெற்குக் கரையில் மடாதிபதியின் குடியிருப்பும், முந்தைய மடாதிபதிகளின் அதிஷ்டான சன்னதிகளும், சத்வித்யா சஞ்சீவினி சம்ஸ்கிருத மஹாபாதசாலாவும் உள்ளன.
மூலவர்: சாரதாம்பாள் (சரஸ்வதி தேவி)
தீர்த்தம்: துங்கபத்திரை ஆறு
ஊர்: சிருங்கேரி
மாவட்டம்: சிக்மகளூர்
மாநிலம்: கர்நாடகா
புராண வரலாறு:
ஆதி சங்கரர் துங்கா நதிக்கரையோரம் நடந்துபோய்க்கொண்டு இருக்கும் போது அவர் பார்த்த காட்சி- தவளைக்கு வெயிலின் கொடுமை தெரியாமல் இருக்க நாகம் குடைபிடித்த காட்சி- பகைமை உணர்ச்சி இல்லாமல் ஒற்றுமையாகப் பாம்பும் தவளையும் இருப்பதைப் பார்த்து சாரதா பீடத்தை அமைக்கச் சிறந்த இடம் என்று ஆதிசங்கரர் பீடத்தை அமைத்து 12 ஆண்டு காலம் தன் சீடர்களுக்கு இங்கிருந்து அத்வைதத்தைக் கற்பித்தார்.
வரலாறு :
அத்வைத வேதாந்தத்தின் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், சனாதன தர்மம் மற்றும் அத்வைத வேதாந்தத்தைப் பாதுகாக்கவும் அதைப் பிரச்சாரம் செய்யவும் இந்தியாவில் நான்கு பீடங்களை நிறுவினார். அவை தெற்கில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் (கர்நாடகம்), மேற்கில் துவாரகா சாரதா பீடம் (குஜராத்), கிழக்கில் பூரி கோவர்தன் பீடம் (ஒடிசா) மற்றும் வடக்கில் பத்ரி ஜோதிஷ்பீடம் ஆகும்.
ஸ்ரீஆதி சங்கரர், இந்தியா முழுவதும் பயணம் செய்தபோது, சிருங்கேரியில் துங்கா நதிக்கரையில் கருவுற்ற தவளையை வெப்பமான வெயிலில் இருந்து காக்க ஒரு பாம்பு குடை போல் காத்து நிண்றதைக் கண்டதாக புராணங்கள் கூறுகின்றன. அகிம்சை என்பது ஒரு புனித ஸ்தலத்திற்கு ஏற்றது எனக் கருதி, ஸ்ரீ ஆதி சங்கரர் தனது முதல் பீடத்தை சிருங்கேரியில் நிறுவ முடிவு செய்தார். சிருங்கேரி விபாண்டக முனிவரின் மகனான ரிஷ்யசிருங்க முனிவருடனும் தொடர்புடையது.
சிருங்கேரி மடத்தின் முதல் மடாதிபதியாக ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியாரை ஶ்ரீ ஆதி சங்கரர் நியமித்தார். தற்போதைய 36 வது ஜகத்குரு ஆச்சார்யா ஜகத்குரு பாரதி தீர்த்த மஹாஸ்வாமி ஆவார். இவரது குரு ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமி ஆவார்.
ஆதி காலத்தில் துங்கபத்திரா நதியின் நடுவில், மலைப்பாறையில் கூரையினால் வேயப்பட்டு ஸ்ரீ யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டு சந்தன மரத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீ தேவியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின் வித்யாரண்யரை அடுத்து வந்த ஆச்சாரியர்களால் கற்களால் மேலே கோபுரம் எடுத்துக் கட்டப்பட்டது. 1906ல் மைசூர் மகாராஜா முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
சாரதாம்பாள் கோவில் நுழைவாயில், கோபுரம், பிரதட்சிணம் செய்ய மூடிய பாதையுடன் கூடிய விஸ்தாரமான ஹால், பெரிய கல் தூண்கள், வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சாரதா தேவி வியாக்யான தர்ம சிம்மாசன ஸர்வஜன பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளாள். சாரதாம்பாள் குரு ரூபமாக அருள்கிறாள். கையில் அமிர்த கலசம், புத்தகம், அக்ஷர பீஜங்களைக் குறிக்கும் ஜபமாலை, ஜீவன், பிரம்மனைக் குறிக்கும் சின்முத்திரையுடன், உபநிஷத அறிவின் ஒளியாக, பிரம்ம வித்யாவாக விளங்குகிறாள். ஸ்ரீயந்திரத்தில் அமர்ந்துள்ளதாலும், லலிதா திரிபுர சுந்தரியாகவும் சாரதா பரமேஸ்வரியாகவும் துதிக்கப்படுவதாலும், தினம் லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி சொல்லி பூஜை செய்யப்படுகிறது. ஸ்ரீசாரதாம்பாள் பிரம்ம வித்யாவாக பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களது சக்தியான சரஸ்வதி, லக்ஷ்மி, உமை ஆகியோர்களுடன் துதிக்கப்படுகிறாள்.
இக்கோவிலில் சாரதாம்பாள் சகுண பிரம்மமாக கருதப்படுவதாலும், எல்லாவித சக்திகளுடன் இருப்பதாலும் சுவாமி, அம்பாள் யாவும் ஸ்ரீசாரதா பரமேஸ்வரியே என வணங்கப்படுகிறாள். சாரதா நவராத்திரி விழா இக்கோவிலில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி ஒன்பது நாளும் ஒன்பது வித வாகனத்தில் தேவி அலங்கரிக்கப்பட்டு 9ம் நாள் சரஸ்வதி பூஜையன்று மிகவும் சிறப்பாக வழிபாடு நடத்தப்படும். தற்போது 36வது பீடாதிபதியாகிய ஸ்ரீ ஜகத்குரு பாரதி தீர்த்த ஸ்வாமிகளின் தலைமையில் மடம் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. மடத்தில் ஆசார்யர்களால் மாணவர்களுக்கு வேதம், உபநிஷதம், சமஸ்கிருதம் என யாவும் போதிக்கப்படுகின்றன. காசி, கயை, ஹரித்வாரம், சென்னை, திருப்பதி, ராமேஸ்வரம் எனப் பல இடங்களில் இம்மடத்தின் கிளைகள் உள்ளன. யாத்திரீகர்கள் தங்க வசதி, இலவச மருத்துவமனை, மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு உயர்தரக் கல்வி, வேதாந்தப் பாடங்கள் கல்லூரிகளில் போதிக்கப்படுகின்றன. ஆன்மீக வளர்ச்சிக்காகப் பத்திரிகைகள், இதழ்கள், நூல்கள் வெளியிடப்படுகின்றன. வருடந்தோறும் சிறந்த பண்டிதர்களைக் கொண்டு நடத்தப்படும் 'சதஸ்' மிகச் சிறப்பானது.
சங்கரர் மடத்தை ஸ்தாபித்தபோது சிருங்கேரி கிராமத்தை தீயசக்தி மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க நான்கு திசைகளிலும் நான்கு கோயில்களை அமைத்தார். கிழக்கில் கால பைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், தெற்கில் துர்கை, வடக்கே காளி ஆகியோருக்குக் கோயில்கள் கட்டினார். சாரதாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள வித்யா சங்கரர் ஆலயம் கலை, நுணுக்க வேலைப்பாடுகளுடன் கற்களால் மிக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அளவற்ற ஆன்மீக அதிர்வலைகளை உடையது இவ்வாலயம். இங்கு வந்து தரிசித்தால் மன அமைதியையும், ஆன்மீக உணர்வுகளையும் ஒருவர் நன்கு உணர முடியும். திரும்ப ஒருமுறை சிருங்கேரி செல்ல மாட்டோமா என்ற ஆர்வத்தையும் ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறாள் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள்.
கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி சங்கராச்சார்யார் ஸ்ரீஸ்ரீ மஹாசன்னிதானம், ஸ்ரீ சன்னிதானம் ஆகியோரின் பரம அனுக்கிரகத்தால் 1977-ம் ஆண்டு நவம்பர் 14, 15 அன்று பூஜை செய்யப்பட்டு, 1978-ம் ஆண்டு ஸ்ரீ பீடத்தின் கிளையை நிறுவதற்காக வாங்கப்பட்டது. 1979-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி (தை மாதம் அசுவதி நட்சத்திரம்) அன்று வைதீக முறைப்படி மகாகும்பாபிஷேகம் நடந்தேறியது. 1995-ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தேறியது.
சிருங்கேரி மடத்தில் உலகிலேயே மிகப்பெரிய வீணை உள்ளது. இந்த வீணைக்கு சார்வபவும வீணை என்று பெயர். தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை கடந்த 2003-ம் ஆண்டு சிருங்கேரி மடத்துக்கு வழங்கப்பட்டது. 10 அடி நீளம், 76 செ.மீ. அகலம், 74 செ.மீ. உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது. நாட்டிய சாஸ்திரத்தில் வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்குப் பேர் சிருங்காரம். சிருங்காரம் என்றால் அழகு என்று அர்த்தம் வரும். சிங்காரி அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்தில் இருந்து வந்த ரீங்காரம்தான் சிருங்கம் + கிரி = சிருங்கேரி.
சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் 'பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.
அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம் பாவுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14-ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.
சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது. 17. யசூர் வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது. கோவில் கட்டிடம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணத்தால், தென் இந்திய இந்து கலாச்சார கட்டிடக்கலைப்படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது. அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் யாவும் தமிழ்நாட்டு சிற்பக் கலையினை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்ற வற்றை இந்த புனித தலத்தில் கொண்டாடுகின்றனர். ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.
நூலகம் :
சிருங்கேரி மடத்தின் முதல் தளத்தில் நூலகம் ஒன்று உள்ளது. இதில் பண்டைய சமஸ்கிருதக் கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் சுமார் 500 பனை ஓலைச் சுவடிகளும், மிகப்பெரிய காகிதக் கையெழுத்துப் பிரதியும் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சமஸ்கிருதத்தில் உள்ளன. இந்த கையெழுத்துப் பிரதிகள் அத்வைத தத்துவத்தும், சமஸ்கிருத இலக்கணம், தர்மசூத்திரங்கள், நெறிமுறைகள் மற்றும் கலைகள் போன்ற செவ்வியல் பாடங்களுடன் தொடர்புடையவை ஆகும்.
ஆலயத்தில் வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் இருக்கின்றன. நவராத்திரி முதலிய விசேஷ நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்க ரதப் பவனி உண்டு. பக்தர்கள் பணம் கட்டினால் வெள்ளிக்கிழமைகளில் தங்கரத, வெள்ளி ரத சேவை கிடைக்கும்.
சிருங்கேரியில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது சங்கர ஜெயந்தி. ஏப்ரல், மே மாதங்களில் வைகாச சுக்ல பஞ்சமியன்று கொண்டாடப்படுகின்றது. வியாஸ பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ணாஷ்டமி, விநாயக சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாப விரதம், உமா மகேஸ்வர விரதம், சாதாம்பாள் அபிஷேக, ரத சப்தமி ஆகியவை குறிப்பிடும்படியான திருவிழாக்கள்.
மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் சந்திர மவுலீசுவரருக்கு சுவாமிஜி பூஜை செய்வார். ரிஷ்யசிருங்க பர்வதம் ஒரு பச்சைப் பசேல் வனப் பிரதேசம். மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள். கடுமைமான கோடையில் கூட, ஜிலு ஜிலுவென்று அருமையான சீதோஷ்ண நிலை, மனதிலும் உடலிலும் எப்போதும் ஒரு நிம்மதி நிலவ வைக்கும் சூழல் உள்ளது. இங்குள்ள அத்வைத ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள், வேதம், உபநிடதம், சாஸ்திரம், தர்க்கம் முதலான மேன்மையான சமஸ்கிருத நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. இங்கு வேத பாடசாலை மாணவர்களும் அயல்நாட்டினரும் அமைதியாக அமர்ந்து நூல்களை ஆராய்ந்து குறிப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
குரு நிவாஸ் என்ற பிரம்மாண்ட அழகிய கட்டிடத்தில் ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதீ தீர்த்த மகா சுவாமிஜி காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். சிருங்கேரிக் கோவில்களையும் மடத்தையும் நிர்வகிக்கும் சாரதா பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் அருமையான தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைவான வாடகையில் கிடைக் கின்றன. வரும் யாத்ரீகர்கள் யார் வேண்டு மானாலும் வரிசையில் நின்று தங்கள் ஊர், பெயரைப் பதிவு செய்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம். வெள்ளிக்கிழமை தோறும் விசேஷமாக ஸ்ரீசக்கர பூஜை நடத் தப்படுகிறது. அது அற்புதமான தெய்வீக அனுபவமாக இருக்கும்.
வித்யா சங்கரர் கோவிலின் அமைப்பு திராவிட, ஹொய்சாள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது. கோவில் மண்டபத்திலேயே கூட்டம் கூட்டமாக குழந்தைகளை கைபிடித்து அரிசியில் எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கிறார்கள். அன்னை சரஸ்வதியின் சன்னதியில், அறிவுக் கண் திறக்கும் இந்த பாரம்பரிய சடங்கை அனைத்து பக்தர்களும் எளிய முறையில் நடத்திக் கொள்ள வசதி செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். துங்க பத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரை அருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
படித்துறையில் மீன் கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம். சிருங்கேரியில் மூவாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய நேர்த்தியான, சுத்தமான, காற்றோட்டமுள்ள உணவுக் கூடம் இருக்கிறது. சுடச்சுட சாதம், பூசணிக்காய், கத்தரிக்காய் என கலந்து கட்டிய சாம்பார், ரசம், ஒரு பாயசம், இனிப்பு, மோர் என்று எளிய உணவுதான். சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்க கோபுர கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்ப்பகிரகத்தின் விமானத்தில் அமைந்த தங்க கலசங்களுக்கு, பாரதி தீர்த்த சன்னிதானம் மற்றும் சன்னிதானம் விதுசேகர பாரதி அபிஷேகம் செய்தனர்.
சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பாரதி சுமார் 1900-ல் நெல்லை மாவட்டம் கோடகநல்லூருக்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை "தட்சண சிருங்கோ" என்று வர்ணித் தார். இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும், மிகவும் பழமையானதும் ஆகும். சிருங்கேரியில் தங்கம், வெள்ளி தேர்கள் உள்ளன. பெருமாள் வராக உருகக் கொண்டு கடலுக்குள் புகுந்து தன் இரு கொம்புகளால் பூலோகத்தை மீட்டு தூக்கி நிறுத்திய போது அவரது இரு கொம்புகளும்-சிருங்கம் பதிந்த புண்ணிய பூமி அதனால் சிருங்கேரி எனப்பெயர் பெற்றது. துங்கா நதியினால் புனிதமானதாகிய சிருங்ககிரி பல மகான்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வேத சாஸ்திரங்களைக் குறைவறக்கற்ற எண்ணற்றோர், சிருங்க கிரியில் சங்கரரின் அருகாமையில் இருந்து சாஸ்திர ஞானம் பெற்றார்கள்.
ஸ்ரீசுரேஸ்வரர், ஸ்ரீபத்மபாதர், ஸ்ரீ கஸ்தாமலகர், ஸ்ரீதோடகர் ஆகிய நான்கு சீடர்களுடன் பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்ரீசங்கரர், சிருங்கேரியில் வாசம் புரிந்தார். சிருங்ககிரி காசி தலத்திற்கு நிகரானது. கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்பது தொன்மை யான பழமொழியாகும். சிருங்கேரி மடத்துக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருதடவையாவது சிருங்கேரிக்கு சென்று வழிபடுவதை அவர்கள் முதன்மை கடமையாக வைத்துள்ளனர். சிருங்கேரி சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகளின் பூர்வாச்சிரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. இவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் கன்னடம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் பேசுவார். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், மேல்மங்கலம், பெரியகுளம், கோவை, கல்லிடைகுறிச்சி, பத்தமடை, வத்தலகுண்டு, நாகர்கோவில், கரூர் ஆகிய 11 ஊர்களில் சிருங்கேரி சாரதா மடத்துக்கு கிளைகள் உள்ளன. சாரதாதேவியின் கிருபையால் தர்மநெறி ஆன்ம நெறி பாரதம் முழுவதும் புத்துயிர் பெற்று உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே சிருங்கேரி சாரதா பீடத்தின் லட்சியமாகும்.
சாரதா பீடத்திற்கு பல்வேறு மரபைச் சேர்ந்த மன்னர்கள் கொடைகளை வழங்கியுள் ளார்கள். விஜயநகர மன்னர்கள், ஐதராபாத் நவாப்புகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார்கள், மராட்டிய பேஸ் வாக்கள், கேரள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். பிரிட்டிஷ் அரசும் இந்த மடத்திற்கு தனது பங்கை செய்துள்ளது. மிகச்சிறந்த கல்விமான்களாகவும், மதாச்சாரியார் களாகவும் விளங்கிய வித்யா தீர்த்தர், பாபதி தீர்த்தர், வித்யாரணயர், நரசிம்மபாரதி, சந்திர சேகர பாரதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இந்த மடத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்கு பவர் ஆதிசங்கரர். இங்குள்ள 'சார தாம்பாள் கோவில்' திராவிடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜனார்த் தனர் கோவில் விஜயநகர மன்னர்களின் காலத்தை சேர்ந்தது.
நடை திறக்கும் நேரம் :-
தினமும் காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.
அமைவிடம்:
சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது. மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம்.
ஓம் சக்தி 🙏🙇
No comments:
Post a Comment