Friday, November 26, 2021

Wrong pronunciation in sanskrit could lead to blunders - Few examples

நண்பன் சூரியநாராயணன்..மத்யமர்.ஓய்வு பெற்ற வங்கீ முதுநிலை மேளாளர்...கடந்த வாரம் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கையில்..வேதங்களில் சமஸ்கீருத ஒலி உட்சாடனம் பற்றி நீண்ட நேரம் அலைப்பேசீயில் பேசீக் கொண்டிருக்க கிடைத்த தகவல்களின் திரட்டு இது.. ஸம்ஸ்க்ருத மந்திரங்கள் - கவனம் தேவை:-

1. மந்திரங்களில் வரும் *ந* மற்றும் *ந:* ( _*நஹ *_) இரண்டிற்கும் பொருள் வேறுபாடு இருக்கிறது. 
*ந:* என்றால் _*எங்களுக்கு*_.

*ந* என்றால் _*இல்லை/வேண்டாம்*_.

காயத்ரி மந்திரத்தில் வரும்
_தியோ யோ ந: ப்ரசோயதாத்_ என்பதில் *நஹ* என்று ஸ்பஷ்டமாகச் சொன்னால் 'எங்கள் புத்தியைத் தெளிவாகப் பிரகாசிக்கச் செய்யட்டும்'. *ந* என்று உச்சரித்தால் 'பிரகாசிக்கச் செய்ய வேண்டாம்' என்றப் பொருள் வந்துவிடும். 

2. Express bus, fast food என்பதை தமிழில் *துரித* பேருந்து, *துரித* உணவு என்று எழுதுகிறார்கள். அது *துரித* அல்ல. _*த்வரித*_ என்றிருக்க வேண்டும். 'த்வரித' என்றால் _*உடனடி/விரைவு*_.

அப்படியென்றால் *துரித* என்றால் என்ன பொருள்? 

*பாபம்* என்று பொருள். சங்கல்ப மந்திரத்தில் வருமே : _'மமோபாத்த ஸமஸ்த_ *துரித* _க்ஷயத்வாரா_.. '

கடவுள் பூஜைக்கு வேண்டியது ஸம்ஸ்க்ருதமா, தமிழா? தமிழில் பூஜிப்பதாக முயற்சி செய்தாலும் பெருவாரியான துதிச் சொற்களும் மூல மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும். 

ஆதி வீர சைவர்கள் சார்பாக என்றுச் சொல்லிக் கொண்டு சிலர் தமிழில்தான் துதிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு தமிழே சரிவரத் தெரியாது என்றுப் புரிய வரும். 

சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரச் சொல்லாம் _'நமச்சிவாய'_ என்பதும், விஷ்ணுவுக்கான எட்டெழுத்து மந்திரமான _'ஓம் நமோ நாராயணாய'_ இரண்டுமே ஸம்ஸ்க்ருதம்தான். 

அது 'நமச்சிவாய' அல்ல _*நமஹ சி'வாய*-. 'சிவன் வணக்கம்', 'சிவனுக்கு வணக்கம்' என்று பொருள். தமிழில், 'சிவனே', 'சிவா' உண்டே தவிர சிவா _*ய*_ என்று வராது. இந்த *_ய*_ என்பது ஸம்ஸ்க்ருத மொழியின் _*நான்காம் வேற்றுமை*_ உருபாகும்.

'ஓம் நமோ நாராயணாய' வில் வரும் *ய* வும் 'ஓம் நாராயண வணக்கம்' அல்லது 'ஓம் நாராயணனுக்கு வணக்கம்' என்றப் பொருளில். 

சம்ஸ்க்ருதத்தின் சொல் புணர்ச்சி (ஸந்தி) விதிப்படியே _*நமஹ நாராயணாய*_ என்பது _*நமோ நாராயணாய*_ என்று மாறி வருகிறது. 

தீவிர சைவ சித்தாந்தத்தின் ஆதி ஆகமம் எனப்படும் தமிழ் நூலான _*திருமந்திரத்தில்*_ சிவாய என்று ஸம்ஸ்க்ருத வடிவமே வந்துள்ளது. மந்திரம் என்பதே வடசொல்தான். திருமந்திரம் நூல் முழுவதிலும் 75℅க்கும் மேலாக ஸம்ஸ்க்ருதச் சொற்களே அமைந்துள்ளன. 

ஸம்ஸ்க்ருதம் இல்லாமல் மந்திரம் இல்லை.: *சிவா* & ஸ்ரீ ராம *ஜெயம்* :

1. டாக்டர் சிவா என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது நினைவிருக்கலாம். *சிவா* என்று எழுதினால் ஸம்ஸ்க்ருதச் சொல் அமைப்பின்படி அது முதலாம் வேற்றுமை அமைப்பின்படி _*பெண்பால்*_ சொல்லாகும். _சிவா, ராமா_ என்பவை விளி வேற்றுமை என்னும் 8ஆம் வேற்றுமையும் ஆகாது. தமிழில் 8ஆம் வேற்றுமைக்கு _*சிவனே, ராமனே*_ என்றே வரும். ஸம்ஸ்க்ருதம் ஆயின் _*ஹே சிவ, ஹே ராம*_ என்றே வரும். சிவா, ராமா என்று சொன்னால் அது பெண்பால் பெயர்கள் _*ராதா, கீதா*_ என்பது போல. சிவ, ராம என்றே எழுதுவோம். 

2. நோட்புக்கில், திருமண அழைப்பிதழ் களில், வீட்டு பூஜையறையில், வாசலில் கோலம் போடும் போது
ஸ்ரீ ராம _*ஜெயம்*_ என்று பலர் எழுதுகின்றனர். 
அது _*ஜெயம்*_ அல்ல. _*ஜ ய ம்*_.

ஜயம் என்றால் வெற்றி, வெல்வது. 

_*ஜெயம்*_ என்றால் _வெல்லப் படுவது_ (தோல்வி அடைவது). ஸம்ஸ்க்ருதத்தில் 'எ' உயிரொலி கிடையாது. 'ஏ' எனும் நெட்டொலி மட்டுமே. எனவே _ஜெயம்_ என்று எழுதினால் _*ஜேயம்*_ என்று ஒலித்து தோல்வியை வேண்டுவதாய் பொருள் வந்துவிடும். 
*ஸ்ரீ ராம ஜயம்* என்றே எழுதுவோமாக.

ஜயம் தமிழில் எப்படி ஜெயம் ஆகிப் போனது? 

அது சில நூறு வருடங்களுக்கு முன்னர் இங்கு மதம் பரப்ப வந்த பாதிரியார்கள் தமிழ் கற்று பைபிளை தமிழில் எழுதிப் பிரசுரம் செய்த பணியில் நேர்ந்த ( கூடவே, தெலுங்கு, மலையாள, கன்னட மொழி உச்சரிப்பின் கலப்பினாலும்) நேர்ந்துவிட்ட அவலம். யேசுவின் ரத்தம் ஜயம் என்பதை _*ஐ, ஜ*_ வேறுபாட்டைக் காட்டுவதாக நினைத்து _யேசுவின் ரத்தம்_ _*ஜெயம்*_ (தோல்வி) என்று எழுதிவிட்டனர். 

பலம் பெலம் ஆயிற்று. றக்கை - ரெக்கை ஆயிற்று. ரவி - ரெவி ஆயிற்று. சிந்தூரம்- செந்தூரம் ஆயிற்று. ஜன்மம் - ஜென்மம் ஆயிற்று. 

ஜயம் சரி. ஜெயம் தவறு.
 நன்றி..R.சூரியநாராயணன்

No comments:

Post a Comment