Saturday, November 13, 2021

Kurai onrumai part105

குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 105
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
ஆனால் அப்படி இருப்பதில்லையே... வீட்டிற்கு போனதும் தூக்கம். விடியற்காலை எழுந்து பார்த்தோமானால் கேட்டதற்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இல்லாமல் வாழ்க்கை ஓடுகிறது.
ஸ்மசானத்தில் சிதையில் சரீரத்தை வைத்து ஹோமாதிகளையெல்லாம் பண்ணி, பிரதக்ஷிணமாக வரும்போது நினைப்பதும் ' எப்படிப்பட்ட மஹான் இவர்...! என்ன வாக்கு..எப்பேர்பட்ட காரியங்களையெல்லாம் பண்ணினார். இவருக்கே இந்த கதி.. நம் கதையெல்லாம் என்ன ஆகுமோ? என்று வைராக்கியம் வருமாம்.
ஸ்மசானத்திற்கு போனால் ஏதாவது நீர் நிலையிலே ஸ்னானம் பண்ணிவிட்டு வீட்டிற்கு வர வேண்டும் என்பது சாஸ்த்திரம். அப்படி தலைமுழுகும்போது, ஸ்மசானத்தில் ஏற்பட்ட வைராக்கியத்திற்க்கும் சேர்த்து ஒரு முழுக்கு ! மறுபடியும் வீட்டிற்கு வந்து பழைய வாழ்க்கை. இதுதான் ஸ்மசானன வைராக்கியம்.
பரமாத்மா தான் எல்லாவற்றையும் செயல் படுத்துகிறான். அவனின்றி ஓரணுவும் அசையாது என்று தெரிந்து கொண்டால் நம் மனதில் விசனம் ஏற்படுமா..? மனம் எகிறி எகிறி குதிப்பதற்கு அவகாசம் கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காது. அவன் மீது பூரண நம்பிக்கை கொள்ள வேண்டும். மற்ற விஷயங்களை பற்றிக் கூடாது.
காஞ்கிபுரத்திற்கு பிரும்மோத்சவத்திற்கு போனவர் கள் பார்த்திருக்கலாம் காட்சியை. பரமாத்மா கருடாரூடனாய் இருப்பான். உத்ஸவம் தை சேவிக்க யாத்ரா கர் வருவார். பெரிய மூட்டையயுடன் வருவார். ஏற்கனவே சேவித்து முடித்த ஒருவரிடம் தன் மூட்டையை கொடுத்துவிட்டு,' இதைப் பார்த்துக்கொள். சேவித்து விட்டு வருகிறேன் ' என்று புறப்பட்டு போய்விடுவார். போகிறவன் வேத பாராயணம் கோஷ்டி பின்னால் சுற்றுலாப்போய் , சந்நிதியெல்லாம் சென்று பார்த்துவிட்டு அவர் திரும்பி வர நான்கு மணி நேரம் ஆகிவிடும் !
மூட்டையை வாங்கிக் கொண்டவர் பாடு திண்டாட்டம்! ஏனென்றால் அதை ரக்ஷிக்க வேண்டும் என்ற விசாரம் அவருடையது. முட்டையை இறக்கி வைத்தவர் நிர்ப்பயமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இப்படித்தான் எல்லாவற்றையும் நாம் பிடித்து வைத்துக் கொண்டோம் னால் அவஸ்தை! எதுவுமே என்னுடையது இல்லை என்று அவனிடம் ஒப்படைத்து விட்டால் நன்றாக நிர்ப்பயமாக தூங்கலாம். 
நிர்ப்பரோ, நிர்பயோஸ்மி! பளுவுமில்லை, பயமுமில்லை. அவன் சர்வக்ஞன் என்பதை உணர்ந்தாலன்றி இந்நிலை ஏற்படாது. ' நீயே என் ரக்ஷகன். உன்னையன்றி என்னை ரமிப்பவன் யார் ' என்று அவனை அடிபணிய தொழ வேண்டும்.
திருமழிசை ஆழ்வார், 'நீ என்னையன்றி இல்லை கண்டாய் நாரணனே, நான் உன்னையன்றி இல்லை' .
" புகலொன்றில்லா அடியேன் நின் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே " என்ற திருவேங்கடவனிடத்தில் நம்மாழ்வார் தஞ்சம் புகுகிறார். பகவான் கீதையில் சொல்கிறான்' வாஸுதேவன் தான் எல்லாம் என்று சொல்லக்கூடிய ஒருவன் கிடைப்பதே அரிது ...' ' அப்டி ஒருவன் கிடைத்தால் நான் அவனை எளிதில் விடுவேனா?" என்று கேட்கிறான்' அடடா என்ன உதார ஹ்ருதயம்!! என்று சிலாகித்து வர்ணிக்கிறான்.
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.

No comments:

Post a Comment