குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 104
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
எம்பார் ஸ்வாமி கையை தூக்கியதற்கான காரணம் சொன்னார்.
" இத்தனை காலமாக உபந்யாஸம் துக்கு வர மறுத்த ஒருவர் திடீரென்று வர முடிவு செய்தார னால் அதற்கு காரணம், ' வர வேண்டும் ' எனாறால் புத்தியை அவருக்கு கொடுத்த பகவான்தான்" என்றார்.
பகவான் ! சாஸ் திர ரீதியாகப் பார்த்தோமானால் ஒவ்வொரு கர்மாவிலேயும் ஐந்தாவது காரணமாக இருக்கிறான். ஒரு உபன்யாஸம் நடப்பதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன. இவை ஐந்தும் கூடினால்தான் உபன்யாஸம் நடக்கும்.
முதலா காரணமா சரீரம் உபன்யாசம் சொல்பவர், கேட்கும் பாகவதோத்தமர்கள் சரீரம் அவ்விடத்திற்கு வர வேண்டும் அல்லவா?
இரண்டாவது காரணம் வாக்கு என்கிற இந்த்ரியம். அது வேலை செய்ய வேண்டும். அது போல கேட்கிற திறனும் வேலை செய்ய வேண்டும். இந்த்ரியங்கள் இரண்டாவது காரணம் .
இந்த்ரியங்கள் தாமாகவே இயங்குமா? இயங்காது.. அவற்றை ஏவக்கூடிய மனஸ் என்பது மூன்றாவது காரணம்.
மனமும் தானாக செயல்படாது. அதை ஏவக்கூடிய ஜீவாத்மா - என்கிற நம்முள்ளே இருக்கக்கூடிய நாமாகிற ஆத்மா ... நான்காவது காரணம் . அந்த ஜீவாத்மாவையையும் ஏவக்கூடிய அந்தராத்மாவுக்கு இருக்கிறது - அதுவே பரமாத்மா. அவன் சங்கல்பித்தால்தான் எதுவுமே நடக்கும் என்பதால் அவனே ஐந்தாவது காரணம்.
தேர்த்தட்டிலே அமர்ந்திருந்த அர்ஜுனன் பார்த்து பரமாத்மா சொன்னான், " இப்படி சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே!! நீ இவ்வாறு இருப்பதால் யுத்தம் நின்று போய்விடும் என்று நினைக்கிறாயா...' கௌரவர்கள் அத்தனை பேரையும் அழிக்க நான் சங்கல்பித்திருக்கிறேன். நீ இச்செயலுக்கு வெறும் நிமித்தம் தான். நான் சங்கல்பித்துள்ளேன் இவர்களை அழிக்க. அன்று அரக்கு மாளிகையில் இவர்கள் உங்களை அழிக்க நினைத்தார்களே.. முடிந்ததா? முடியவில்லையே... காரணம் என்ன.... நான் சங்கல்பிக்கவில்லையே! இன்று சங்கல்பித்திருக்கிறேன் - கௌரவர்களுக்கு அழிவு என்பதை "
பகவானே இப்படிச் சொன்னதாலே, பகவத் சங்கல்பம் இருந்தால்தான் நாம் ஒரு காரியத்தை நிறைவேற்ற முடியும் என்பது தெளிவாகிறது.
இதைத்தான் சாஸ்திரம் எடுத்துச் சொல்கிறது. ஆனால் சொல்கிற போது புரிகிற மாதிரி இருக்கிற விஷயம், கேட்கிற போது புரிகிற மாதிரி இருக்கற விஷயம்... அந்த இடத்தை விட்டு போதும் மறந்து போகிறது. எல்லாவற்றையும் நாம்தான் பண்ணுகிறோம் என்ற எண்ணம் வந்து விடுகிறது.
இந்த உலகம் மாயா ஜகன் மோகினி !! இது நம் பக்கத்தில் இருந்து கொண்டு சித்ரவதை செய்கிறதை. சத் விஷயங்களை நினைக்க விடாமல் பண்ணுகிறது. புராண வைராக்கியம், ஸ்தான வைராக்கியம் என்று சொல்லுவார்கள்.
புராண வைராக்கியம் என்றால் உபன்யாஸம் முடிந்து ஒன்பது மணிக்கு இருக்கிற வைராக்கியம். சொல்கிறவர்களுக்கு சரி, கேட்கிற வர்களும் சரி, அந்த வைராக்கியம் வாழ்க்கையிலே கடைசிவரை இருந்தால் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்
No comments:
Post a Comment