Wednesday, September 1, 2021

Lord Rama - Does he has connection with Tamilnadu or not? - An argument with evidences

வடநாட்டு கடவுள் இராமனுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் இந்த சங்கிகள். தமிழர்களுக்கும் இராமனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறியாத இந்த சங்கிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று புலம்பிக்கொண்டே என்னிடம் வந்தார் என் எழுத்துமீது பற்றுகொண்ட நண்பர் ஒருவர். இப்படியே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் என்னிடம், சகோதரரே நமது புலவர்களும் பேரரசர்களும் தமிழர்களின் பண்பாட்டு கலாச்சாரங்களை போற்றி பாதுகாத்து வந்துள்ளனரே இதுபற்றி எனக்கு கொஞ்சம் சொல்லி குடுங்களேன். உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன் என்றார்😞....!

எனக்கும் நேரம்போகவில்லை. எனக்கும் கொஞ்சம் Mind Relax ஆகும். ஆகவே.! சரி சொல்கிறேன் கேளுங்கள். ஆனால் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நிகழ்காலத்திலிருந்து ஆரம்பியுங்கள் சகோதரரே என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார். நானும் ஆரம்பித்தேன். அவரிடம் சொல்லச்சொல்ல எழுதவும் ஆரம்பித்தேன்....!🧘🚶🚶🚶

சமீபமாக சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞரும், அக்பர் நாமாவின் ஆசிரியருமான அபுல் பஸல் தன் அய்னி இ அக்பர் நூலில் ஜென்மஸ்தான் என்று அயோத்தி பற்றி குறிப்பிட்டிருப்பதாலும், ஜெசூட்ஸ் பாதிரியாரான ஜோஸப் டிபண்ட்தாலெர் (Joseph Tieffenthaler) 1740 ல் பயணம் மேற்கொண்டு அயோத்தியில் வழிபாட்டில் இருந்த குழந்தை ராமன் ஆலயம் இருந்தது பற்றியும் அவரது பயணக்குறிப்புகளில் குறிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையிலும்,எட்வர்ட் தார்ண்ட்டன், வில்லியம் பின்ச் போன்ற புகழ் பெற்ற வரலாற்று பயணிகளின் குறிப்புகளையும், அப்போதைய அயோத்தியா கெஸட்டியர்களையும் படித்து ஒப்பு நோக்கி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் மிக பிரமாண்டமாக அயோத்தியில் எழும்பிக்கொண்டிருக்கும் இராமர் கோவிலில் இருந்து ஆரம்பிக்கவா? சகோதரரே???

என்ன இவன் புதுசா பெயரெல்லாம் சொல்கிறான்??? இது கொஞ்சம் டேஞ்சர் ஸ்டோரி சகோ. ஆகவே இரு நூற்றாண்டுகளுக்கு முன்பான வரலாறுகளிலிருந்து ஆரம்பியுங்கள். என்றார்....!

நான் ஆரம்பித்தேன்.🧘🚶🚶🚶

"கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர் தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் 
நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே"

நிப்பாட்டுங்க! நிப்பாட்டுங்க! என்ன சகோதரரே இதுல ஸ்ரீராமர், தசரதர் என்றெல்லாம் வருகிறது எதாவது சமஸ்கிருத ஸ்லோகத்தை தமிழில் எழுதிட்டீங்களா???

சகோதரரே இது சமஸ்கிருத ஸ்லோகம் எதுவுமில்லை. திருவருட்பிரகாச வள்ளலார் எழுதிய திராவருட்பா எனும் பொக்கிஷத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா??? அவர் எழுதிய இராமநாமப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் வரும் வரிகள் இவை.

ஐய்யோ வள்ளலார் ராமரை புகழ்ந்து எழுதியிருக்காரா? வள்ளலார் ஆரிய ராமனுக்கு எதிரானவர்னு தானே சொல்லி குடுத்தாங்க. படுபாவிக ஏமாத்திட்டானுகளா? இல்ல நீங்க ஏமாத்துறீங்களா? ஒண்ணும் புரியலியே😓

இப்போ நான் தொடர்ந்து சொல்லணுமா இல்லை நிப்பாட்டணுமா சகோதரரே??? உங்களுக்கு சந்தேகம் இருந்தா வீட்ல போய் பொறுமையா நான் சொல்வது சரியா தவறா என்று #புகுத்து😉 ஆய்ந்துகொள்ளுங்கள்.

இந்த திருவருட்பா காலத்தால் பிந்தையது இல்லையா? அதுனால 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாடி இருந்து சொல்லி கொடுங்கள் என்றார்.

நானும் சோழர்கால கட்டிடக்கலைகள் பற்றி சொல்கிறேன் என்று கூறி ஆரம்பித்தேன்.🧘🚶🚶🚶

"திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக"

சகோதரரே! சகோதரரே! நிப்பாட்டுங்க. நிப்பாட்டுங்க சோழர் கட்டிடக்கலை பற்றி சொல்றதா சொல்லீட்டு இங்கயும் அயோத்தி ராமர்னு சொல்லீட்டு இருக்கீங்க??? ஏன்?

இதுவும் சோழர்களின் கட்டிடக்கலை சம்பந்தமானதுதான் சகோதரரே. அதாவது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள காமாக்ஷி அம்மன் சந்நிதியில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில் இது ஏற்கனவே இராமர் கோவிலாக இருந்ததாகவும் அது இடிந்துவிட்டதால் பிற்காலத்தில் அதை காமாட்சி அம்மன் கோவிலாக கட்டியுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
அதாவது இதற்கு சான்றாக பொ.ஆ. 941 ஆம் ஆண்டில் முதலாம் பராந்தகச் சோழனின் 34 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட இன்று காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டு கூறுவதாவது, 

திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக கொடுத்த தகவல் உள்ளது.இங்கே இராமன் இருக்குமிடம் அயோத்தி என்பதால் அயோத்தி நின்றருளிய ஸ்ரீராகவன் என்று சான்று பகிர்வதாக குடந்தை சேதுராமன் கூறுகிறார்...!

ஐய்யோ சோழர்களின் கட்டிடக்கலையிலும் இராமர் கோவிலா தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னானுக. இங்க பார்த்தால் சோழர்களே இராமர் கோவில் கட்டியிருக்காங்களே😞🚶🚶🚶. சரி விடுங்க சகோ பாண்டியர்களின் கட்டிடக்கலை பற்றி சொல்லுங்க...!

சரி சொல்றேன் கேளுங்க...

"ஸ்ரீ ராகவேந்திர பெருமாளுக்கு வைத்த பத்துமா நிலம்"

ஐய்யய்யோ நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க. என்ன நீங்க வள்ளலார்ல துவங்கி சோழர்கள், பாண்டியர்கள் என்று எல்லா இடத்திலும் இராமரை அடையாளப்படுத்துறீங்க? இராமரை முன்னிறுத்தாத வரலாறே இல்லையா? தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னானுக, நீங்க என்னடான்னா வள்ளலார் முதல் சோழர்கள் பாண்டியர்கள்னு தொடர்பு படுத்திக்கிட்டே போறீங்க🤔 சரி சொல்ல வந்ததை முழுமையா சொல்லுங்க....!

அதாவது பொ.ஆ 863 ல் பாண்டியன் மாறஞ்சடையனின் இரண்டாம் ஆட்சியாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி மனோன்மனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் இராமர் கோவிலுக்கு நிலதானம் அளிக்கப்பட்ட தகவல் உள்ளது. இந்த கல்வெட்டின் காலத்தை குடந்தை சேதுராமன் அவர்கள் இது வரகுணன் காலத்து கல்வெட்டாக இருக்கலாம் என்று எழுதியதோடு பொ.ஆ 864 க்கு முன்பே தமிழகத்தில் இராமர் கோவில்கள் இருந்துள்ளது என்ற தகவலை இக்கல்வெட்டுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார்.....!

ஆதாரம் : (South Indian Inscription volume 14)

ஐய்யோ தெரியாம வந்து சிக்கிக்கிட்டமோ 😞 இனிமேல் இந்த வாட்சப், முகநூல் பார்த்து வரலாறு பேசுறத நிப்பாட்டணும் முதல்ல. சரி சகோதரரே எங்கள் முப்பாட்டன் முருகன் பற்றி சொல்லி குடுங்களேன்...!

முருகன் பற்றியா??? 🧘🚶🚶🚶 சரி சொல்றேன் கேளுங்க...!

"எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனதாருயிர்வருக அபிராம
இங்கு வருக அரசேவருக முலை
உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன்"

- திருப்புகழ்

சகோதரரே நான் முருகனை பற்றிதானே கேட்டேன்? ஆனால் இதில் ரகுநாயகன், அபிராமன், கோசலை என்றெல்லாம் வருகிறதே?

அதாவது கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இந்தக் கட்டத்தை அருணகிரி நாதர் வர்ணித்து முருகனுடன் ஒப்பிடுகிறார்.

அடக்கடவுளே எங்கள் முப்பாட்டன் முருகனை புகழும் இடத்திலும் இராமனா? இது என்ன சோதனை? இது கண்டிப்பாக பார்ப்பனர்கள் எழுதியதாகத்தான் இருக்க வேண்டும். 

சகோதரரே இது திருப்புகழில் வரும் பாடலாகும். இதை எழுதியவர் ஆகச்சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதர்.

அங்கேயும் போச்சா 😞 சித்தர்கள் பற்றி சொல்லுங்க ( மனசுக்குள்ள இங்க எப்படி இராமர் வறாருனு பாத்துக்குறேன்🤫)

சரி சொல்றேன் கேளுங்க. கையை இந்த கம்பில பிடிச்சுக்கோங்க சகோதரரே.🧘🚶🚶🚶

"நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேதூ? ராம ராம ராம என்ற நாமமே"

எதே😳😳😳 இங்கேயும் இராமநாமமா??? ஐயய்யோ தெரியாம வந்து மாட்டிக்கிட்டேனே. மானமுள்ள தமிழ் பிள்ளைகள் யாராவது இருந்தால் வந்து என்னை காப்பாத்துங்களேன். இராமனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லைனு நான் சொன்னா சோழர்கள் பாண்டியர்கள், அருணகிரிநாதர் முதல் சித்தர்கள் வரை தொடர்புபடுத்துறானே முடியலயே😞🚶🚶🚶

சகோதரரே இது சித்தர் சிவவாக்கியர் எழுதியது. அவர் இதுமட்டுமின்றி இன்னும் பல பாடல்கள் இராமரைப்பற்றி பாடியுள்ளார். அவற்றையும் சொல்லவா???

ஐயய்யோ வேண்டவே வேண்டாம். சமண காப்பியங்கள் பற்றி சொல்லுங்க. 

நானும் ஆரம்பித்தேன்...!

"மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே"

நிறுத்துங்க நிறுத்துங்க நிறுத்துங்க. இதில் இராமனைப்பற்றியோ இராமயணத்தை பற்றியோ இல்லை தானே? (ஏதோ பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்)

சகோதரரே இளங்கோவடிகளால் எழுதப்பட்ட இந்த சிலப்பதிகார வரிகளில் இராமனோ, இராமயணமோ வருகிறதா? என்பதை நான் அப்பாடலுக்கு கூறும் விளக்க உரைகளில் உள்ளதா என்று நீங்களே பாத்து தெரிஞ்சுக்கோங்க🙂

பொருள் : மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம்
தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்?!!அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?

ஐயய்யோ நான் ஊருக்கு போறேன்.! ஐய்யயோ நான் ஊருக்கு போறேன்.! தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தம் உண்டு நான் ஒத்துக்குறேன். பீளீஸ் சார் என்ன விட்ருங்க😥🚶🚶

இருங்க சகோதரரே எங்க போறீங்க? சங்க இலக்கியத்தை கூட ஒரு சேம்பிள் பார்த்துட்டு போகலாம்.😉
சொல்றேன் கேளுங்க...!

"அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்"

அதாவது உன்பொதி பசுங்குடையார் என்ற சங்கப்புலவர் இந்த புறநானூற்று வரிகளால் சொல்வது என்னவெனில்,

பெரிய சுற்றத்துடன் கூடிய பாணன் ஒருவன் வறுமையில் இருந்தான். அவன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையை அடைந்து, அதன் முன்னே நின்று, கிணைப்பறையைக் கொட்டி வஞ்சித்துறைப் பாடல்களைப் பாடினான். அவனைக் கண்டவுடன், இளஞ்சேட்சென்னி, அப்பாணனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பல அரிய அணிகலன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பரிசாக அளித்தான். வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார், அவன் வழங்கிய பொருள்களை எல்லாம் கண்டவுடன் அவற்றை ஆர்வத்தோடு எடுத்து, விரல்களில் அணிவனவற்றைக் காதிலும், காதில் அணிவனவற்றைக் விரல்களிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையிலும் அணிந்து கொண்டனர். மிகுந்த வலிமையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை, வலிய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த, சிவந்த முகமுடைய குரங்குகளின் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்து மகிழ்ந்தனர். அதுபோல், பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவர்களின் வறுமையைக் களையும் நேரத்தில், பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய துன்பம் நீங்குமாறு, நாங்களும் அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்....!

இதுமட்டுமின்றி அகநானூறு, பழமொழி நானூறு போன்ற இன்னபிற சங்க இலக்கியங்களிலும் இராமனைப்பற்றியும் இராமாயணத்தைப் பற்றியும் குறிப்புகள் உண்டு என்பதை கூறிக்கொள்வதோடு தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தம் உண்டு என்பதை வள்ளலார் துவங்கி சித்தர்கள், காப்பியக் கவிகள் முதலான சங்கால புலவர்கள் வரை நன்கு அறிந்திருந்தனர் என்பதை மேற்கூறிய தரவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்...!

சரிங்க சார் நீங்க சொன்னது புருஞ்சுபோச்சு. தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தம் உண்டு என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஒரு கண்டிசன்😥

நமக்கு இங்கே நடந்த விவாதத்தை யாருக்கும் சொல்லக்கூடாது சரியா?

அவ்வளவுதானா? #செஞ்சிட்டா போச்சி😉🧘🚶🚶🚶

இதற்கு கைமாறாக நீயும் ஒன்று செய்ய வேண்டும் சகோதரரே..!

என்ன சார் செய்யணும்?

இதுபோல் இராமனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பிரிவினை பேசித்திரியும் பிரிவினை வியாதிகளை கண்டால் கல்லால் அடிக்கணும் சரியா?

கண்டிப்பா அடிக்கிறேன் சார். இது நீங்கள் இவ்வளவுநேரம் சொன்ன தகவல்களுக்கு தட்சிணையா நெனச்சி பண்றேன்.

ஆக இன்றுமுதல் நீயும் சங்கி, காவி தீவிரவாதி, இந்துத்துவாவின் சேவகன், RSS காரன், பாஜக காரன் என்று அன்போடு அழைக்கப்படுவாய்...!

ஜெய்ஸ்ரீராம்.

No comments:

Post a Comment