Sunday, August 29, 2021

Story of muchukunda chakravarti in tamil

முன்னொரு காலத்தில் ஒரு சிவராத்திரி நன்னாளில் வில்வ மரத்தின் மீது இருந்த ஒரு குரங்கு அந்த மரத்தில் இருந்து ஒவ்வொரு வில்வ இலையாக கிள்ளி கீழே போட்டது. விடிந்து பார்த்தால் அந்த மரத்துக்கு கீழ் ஒரு சிவலிங்கம். 

சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவலிங்கத்துக்கு வில்வத்தால் குரங்கு அர்ச்சனை செய்ததன் பலனாக அதன் பிறவி முடிந்ததும் மறு பிறவியில் அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்யம் அந்த குரங்குக்கு கிடைத்தது. தெரியாமல் செய்த பூஜைக்கு இவ்ளவு? பெரிய ஒரு யோகம் கிடைக்கும் என்பதை அந்த குரங்கு எதிர் பார்க்கவில்லை. 

அந்த குரங்கு மனிதனாக பிறக்கும் முன். ஈசனிடம் சுவாமி எனக்கு இன்னுமோர் வரம் வேண்டும் என்று கேட்டது. உனக்கு வேறு என்ன? வேண்டும் கேள் என்று ஈசன் சொல்ல அந்த குரங்கு. 

அடியேன் விரும்புவது பிறவா வரம் தான். அதை உங்களால் தர முடியுமா? எனக்கு மனித பிறவி வேண்டாம் என்று குரங்கு சொல்ல. அதற்கு ஈசன். யார்? யாருக்கு எந்த, எந்த நேரத்தில் எதை? தர வேண்டும் என்பது எனக்கு தெரியும். நீ மறுபிறவியில் மிகப்பெரிய சக்ரவர்த்தியாக பிறந்து வின், மண் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்ரவர்த்தியாக இருப்பாய். எனக்கு பல கோவில்களை நீ கட்டுவாய். உன்னால் இந்த மண்ணுக்கு ஆக வேண்டிய பணிகள் பல இருக்கிறது. அதனால் நீ வேறு ஏதேனும் வரம் கேள் என்று ஈசன் அந்த குரங்கை பார்த்து சொல்ல. 

அந்த குரங்கு. மனிதன் என்றாலே அவன் பேராசை, ஆணவம் இரண்டும் சேர்ந்த வடிவம். அவ்வாறு இருக்க. காடுகளில் எவ்வித கவலைகளும் இன்றி மரத்துக்கு மரம், கிளைகளுக்கு கிளை தாவி மிக சுதந்திரமாக சுற்றி திரிந்த நான் அடுத்த பிறவியில் மனிதனாக. அதுவும் அரசனாக வேறு பிறக்க போகிறேன். இது எனக்கு வரமா இல்லை சாபமா என்று தெரியவில்லை. அடியேன் மாமன்னனாக பிறந்தாலும். இந்த குரங்கு முகம் மட்டும் எனக்கு போக கூடாது. காரணம் மனிதன் என்றால் அவனுக்கு ஏதேனும் ஒரு குறை இருக்க வேண்டும். இல்லையேல் அவனுக்கு ஆணவம் அதிகமாக இருக்கும், மேலும் குறைகளே இல்லாத, கவலைகளே இல்லாத மனிதன் இறைவனை வணங்க மாட்டான். என்று கேட்க. அதனால் அந்த குரங்கின் விருப்பப்படி அந்த குரங்கு மறு பிறவியில் குரங்கு முகத்தோடு முசுகுந்த சக்ரவர்த்தியாக பிறந்தது. மன்னிக்கவும். முசுகுந்த சக்கரவர்த்தி அவர்கள் பிறந்தார்.

மாந்தாதா என்னும் முசுகுந்த சக்கரவர்த்தி எத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னர் என்றால்? 

தேவர்களுக்கு பொதுவாக அசுரர்களால் தொல்லை வந்தால் தேவர்கள் விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்களிடம் உதவி கேட்பார்கள். அத்தகைய தேவர்கள் ஒரு மனிதனிடம் பலமுறை உதவி கேட்டார்கள் என்றால் அது புராண வரலாறில் முசுகுந்த சக்கரவர்த்தி மட்டுமே.

ஒரு முறை தேவலோகத்திலிருந்த அமிர்தம் அசுரர்களால் கவர்ந்து செல்லப்பட்டது. அதை மீட்டு கொண்டு வர தேவர்களின் தலைவனான இந்திரன் செல்கிறார். இந்திரன் இல்லாத நேரத்தில் இந்திரனின் தலைநகரான அமராவதியை அசுரர்கள் தாக்கக்கூடும் என்பதால் பாதுகாப்புக்கு யாரை வைக்கலாம் என்று இந்திரன் தனது அவையில் உள்ள அனைவரையும் கேட்ட பொழுது அணைத்து தேவர்களும் சொன்ன ஒரே................ வார்த்தை முசுகுந்தன் தானாம். ஏற்கனவே தேவ லோகத்துக்கு பல பிரச்சனைகள் வந்த பொழுது. அந்த நேரங்களில் தேவர்களின் தலைவன் இந்திரன் திக்கு, முக்காடிய பொழுது . முசுகுந்தன் தான் இந்திரனுக்கும், தேவர்களுக்கும் உதவி செய்தார். அதனால் மீண்டும் முசுகுந்தனை தேவேந்திரன் உதவிக்கு அழைக்க முசுகுந்தன் தனது நண்பனுக்கு உதவுவதற்காக ஓடோடி வந்தார். 

எதிர்பார்த்தது போல அசுரர்கள் அமராபதியைத் தாக்கினார்கள். 

அந்த அசுரர்களை முசுகுந்தன் திருப்பி தாக்கினார். முசுகுந்தனின் பராக்கிரமம் முன் ஈடு கொடுக்க முடியாத அசுரர் படை புறமுதுகிட்டு ஓடியது. 

அதன் பின் இந்திரனும் அமிர்தத்தை மீட்டு கொண்டு தேவ லோகம் திரும்பினார். 

இந்திரன் முசுகுந்தனை நோக்கி. நண்பா. நீ ஒரு முறை. இருமுறை அல்ல. பலமுறை என்னையும் இந்த தேவர் உலகையும் காப்பாற்றி இருக்கிறாய். அதனால் நான் உனக்கு ஏதேனும் ஒரு பரிசு கொடுத்தே ஆக வேண்டும் என்று இந்திரன் கேட்க. உடனே முசுகுந்தன். பொன், பொருள் போன்றவற்றை எதிர் பார்த்து நான் உனக்கு உதவி செய்யவில்லை. ஒரு நண்பனாக தான் செய்கிறேன். இதை நான் ஏற்கனவே உனக்கு பலமுறை சொல்லி விட்டேன் என்று சொல்ல. 

ஆனால் இந்திரனோ மிக பிடிவாதமாக. இல்லை நான் உனக்கு ஏதேனும் ஒரு பரிசை கொடுத்தே தீருவேன். நண்பன் பரிசு கொடுத்தால் நீ ஏற்று கொள்ள மாட்டாயா? என்று மீண்டும் இந்திரன் அன்பு தொல்லை செய்ய. முசுகுந்தன் இந்திரனை நோக்கி. நான் என்ன? பரிசு கேட்டாலும் நீ எனக்கு தருவாயா? 

இந்திரன். நீ எனது சிம்மாசனத்தையே பரிசாக கேட்டால் கூட நான் உனக்கு தருவேன்.தேவலோகத்தை ஆளும் தகுதி என்னை விட உனக்கு நிறையவே இருக்கிறது. 

முசுகுந்த சக்ரவர்த்தியோ. எனக்கு இந்த அற்ப சிம்மாசனம் தேவை இல்லை. நீ தினமும் பூஜை செய்யும் என் அப்பன் தியகராஜரின் திவ்ய மங்கள விக்ரஹம் வேண்டும். அதை எனக்கு பரிசாக உன்னால் தர முடியுமா? என்று முசுகுந்தன் இந்திரனை பார்த்து கேட்க. இந்திரன் இதை துளியும் எதிர் பார்க்கவில்லை. காரணம் இந்திரன் தனது பதவி, இந்திர லோகம், அமிர்தம் அனைத்தை விட சிவபெருமானது அந்த தியாகராஜ திரு உருவத்தை தான் மிகவும் நேசித்தார். 

சிவனது பல வடிவங்களில் தியாகராஜ வடிவமும் ஒன்று. சிவனுக்கு தியாகராஜர் என்னும் பெயர் எதனால்? வந்தது. 

பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட நஞ்சை ஈசன் உண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்தாரே. அது எத்தகைய? ஒரு மகத்தான தியாகம். அதனால் தான் சிவ பெருமானுக்கு தியாகராஜர் என்னும் பெயர் வந்தது. 

இந்திரனுக்கோ அந்த தியாகராஜரை கொடுக்க விருப்பம் இல்லை. சிவன் நஞ்சுண்டு நீலகண்டன் ஆன பின் அவரிடம் இருந்து சுயம்புவாக வெளிப்பட்ட வடிவமே அந்த தியாகராஜர் உருவம். அந்த தியாகராஜ உருவத்தை திருமால் பல ஆண்டுகள் தன் மார்பினில் வைத்து பூஜை செய்துள்ளார். பின் அந்த தியாகராஜரை திருமாலிடம் இருந்து இந்திரன் பெற்று கொண்டார். அத்தகைய தியாகராஜரை முசுகுந்தனிடம் கொடுக்க இந்திரன் விரும்பவில்லை. அதனால் இந்திரன் ஒரு தந்திரம் செய்தார். 

அந்தச் தியாகராஜர் போலவே ஒரு 6 தியாகராஜர்களை முசுகுந்தன் முன் வைத்து. அந்த தியாகராஜர்களோடு முசுகுந்தன் விரும்பிய தியாகராஜரையும் வைத்து, முசுகுந்தனுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்ளுமாறு இந்திரன் சொன்னார்.

ஏழு தியாகராஜர்களும் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்த்ததும், எதனையெடுப்பது என்று தெரியாமல் முசுகுந்தன் மயங்கினார். சிவபெருமானை மனதில் வணங்கி, ஒரு தியாகராஜரை கைகளில் எடுத்தார். முசுகுந்தன் கையில் எடுத்த அந்த தியாகராஜரே முசுகுந்தன் விரும்பிய தியாகராஜர் இந்திரனும் முசுகுந்த சக்ரவர்த்தியின் பக்தியை பாராட்டி. இந்த ஏழு தியாகராஜர்களையும் நீயே எடுத்து கொள் என்று கொடுத்து விட்டார்.

முசுகுந்தன் தேவலோகத்தில் இருந்து கொண்டு வந்த 7 திவ்ய மங்கள தியாகராஜர் விக்ரஹங்களில் முதலில் வெளிப்பட்ட அந்த தியாகராஜரை திருவாரூரில் வைத்தார். மீதி 6 ஐ. திருநள்ளாறு, நாகபட்டினம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகிய ஊர்களில் வைத்து கோவில் கட்டினார். 

சப்த என்றால் 7.விடங்க என்றால் உளியால் செதுக்கப்படாத என்று பொருள். முசுகுந்தன் முன் இந்திரன் வைத்த அந்த 7 தியாகராஜர் விக்ரஹங்களுமே உளியால் செதுக்கப்படாத சுயம்பு வடிவங்களே.
..........
{ஆருரா தியாகேசா }

No comments:

Post a Comment