_______________________________________
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர*
*தெய்வத்தின் குரல்*
__________________________________
( *1818*) *30.05.2021
*தெய்வ விஷயம்*
பகுதி - 12
_________________________
*தெய்வ ஸாக்ஷி*
பகுதி - 11
_________________________
*ஸாக்ஷி கோபால்*
- பகுதி - *4*
_________________________
*'ஸாக்ஷிநாதேச்வரர்'*
_________________________
*ஸ்ரீமஹாபெரியவா*
*Volume 7*. *பக்கம்* *802*
****************************************
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி*
*(*மஹா பெரியவா அருளுரை*)*
*தெய்வ விஷயம்*. (12)
(புதிய பகுதி தற்போது சென்று கொண்டிருப்பது)
*தெய்வ சாக்ஷி*. (11)
*ஸாக்ஷி கோபால்* (4)
(இந்த பாகத்தின் நேற்றைய கடைசி உரைகள் மீண்டும் ஒருமுறை இன்றும்)
புது மாப்பிள்ளை கேட்பதை மாமனார் மறுக்க முடியுமா? 'பெண்ணைக் கொடுத்தாயோ, கண்ணைக் கொடுத்தாயோ?" என்று வசனம். பெண்ணைக் கொடுத்த காஞ்சீபுர ராஜர் கண்ணனையும் கொடுத்தார்!
மாப்பிள்ளை தன்னுடைய ராஜ்யத்துக்குப் பத்னியோடும் பகவானோடும் திரும்பினார். புரியில் ஏற்கெனவே பிரஸித்தமான ஜகந்நாத ஸ்வாமி இருந்ததால் அவருக்குப் போட்டியாக ஸாக்ஷி கோபால் அங்கே இருக்க வேண்டாம், தனி ராஜாவாக அவர் வேறே ஊரில் கோவில் கொள்ளட்டும் என்று அவர் நினைத்தார். க்ருஷ்ணன் பெயரில் முகுந்தபுர் என்று ஒரு க்ஷேத்ரம் அவருடைய ராஜ்யத்திலிருந்தது. அதை அடுத்துள்ள ஊரில் முக்யமான ஆலயம் எதுவுமில்லாததால் அங்கே ஸாக்ஷி கோபாலுக்குக் கோவில் கட்டி ப்ரதிஷ்டை பண்ணினார்.
அதுவே இப்போது ஸாக்ஷி கோபால் என்று வழங்கும் க்ஷேத்ரம்.
யு,பி.மட்ராவிலிருந்து தமிழ்நாட்டுக் காஞ்சிக்கு வந்து அப்புறம் ஒரிஸ்ஸாவில் தன் பெயரிலேயே ஊரை உண்டாக்கிக் கொண்டு தங்கி விட்ட ஸாக்ஷி கோபால், 'தேசிய ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு' என்று கோஷம் போடுவதெல்லாம் அவரது குழந்தைகளாக அனைவரும் பக்தியில் ஒன்று சேர்ந்தால்தான் முடியும் என்பதற்கும் ஸாக்ஷியாக இருக்கிறார்!
பாகம் முடிவு.
*ஸாக்ஷி நாயகேஸ்வரர்*
பரமசிவனும் தமிழ்நாட்டு ஸ்தலங்கள் இரண்டில் ஸாக்ஷி சொல்லி அவற்றிலொன்றில் ஸாக்ஷி நாயகேஸ்வரர் என்றும், மற்றதில் ஸாக்ஷி நாதேச்வரர் என்றும் பெயர் பெற்றிருக்கிறார். இரண்டுமே தஞ்சாவூர் ஜில்லாவிலிருக்கும் ஊர்கள்தான்.
ஸாக்ஷி நாயகேஸ்வரர் இருப்பது அவளிவணல்லூர். 'வள வள என்று இதென்ன பேர்?' என்று வேடிக்கையாயிருக்கிறதா? 'அவள் இவள் நல்லூர்' என்பது தான் ஸந்தியில் 'அவளிவணல்லூர்' என்றாயிருக்கிறது. 'அவள் தான் இவள்' என்று ஸ்வாமியே ஸாக்ஷி சொல்லி ஒரு பெரிய சர்ச்சையைத் தீர்த்து வைக்கும் பாக்யத்தைப் பெற்ற நல்ல ஊர் 'அவளிவணல்லூர்.'
நீடாமங்கலத்திலிருந்து தஞ்சாவூர் போகிற வழியில் சாலியமங்கலம் என்ற ஊர் வரும். அதற்கு வட கிழக்கில் அந்த ஊர் இருக்கிறது. காவேரியின் தென் கரையிலுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களின் வரிசையில் அது ஸரியாக நூறாவதாகும். அப்பர் ஸம்பந்தர் இருவரும் பாடிய ஸ்தலம்.
அந்த ஊரில் ரொம்ப காலம் முந்தி ஒரு குருக்கள் இருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள். அந்த இரண்டு பேரும் ஏறத்தாழ ஒரே ஜாடையாக இருப்பார்கள். ஆதி சைவர், சிவாசாரியார், சிவப்ராமணர் என்றெல்லாம் சொல்கிற தங்களுடைய குருக்கள் ஜாதிப் பிள்ளைகள் இரண்டு பேருக்கு இரண்டு பெண்களையும் அப்பாக்காரர் கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்.
பெரிய மாப்பிள்ளை காசி யாத்ரை போனார். கல்யாணத்தில் ஊஞ்சலுக்கு முன்னாடி போகிற 'உளஉளாக்கட்டை' காசி யாத்ரை இல்லை; நிஜமான காசி யாத்ரை.
அந்த நாளில் அந்த யாத்ரை முடித்துத் திரும்பப் பல வருஷங்கள் பிடிக்கும். அப்படி அவர் நாலைந்து வருஷத்துக்கப்புறம் திரும்பி வந்தார். வேட்டகத்துக்கு வந்தார்
*இனி இன்றைய தொடர்ச்சி*.....
இதற்கு நடுவில் என்ன ஆயிருந்ததென்றால் அவருடைய பத்னியான குருக்களின் மூத்த பெண்ணுக்குப் பெரியம்மை போட்டி, பிழைத்ததே புனர்ஜன்மமாக அவள் உயிர் தப்பினாள். ஆனால் உக்ரமான அம்மை அவளிடம் கைவரிசையைக் காட்டி விட்டது; முகமெல்லாம் பொளிந்து தள்ளி, கண்ணை நொள்ளையாக்கி, அவள் நிறமும் கறுத்து, தலை மயிர் கொட்டிக் குரூபமாகும்படிப் பண்ணி விட்டது.
காசி போய்த் திரும்பிய பதி நாம் கல்யாணம் பண்ணிக் கொண்ட அவள்தானா இவள் என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அந்தப் பெண் உருமாறியிருந்தாள்.
இந்த அனர்த்தம் போதாதென்று இந்த ஸமயத்தில் இளைய பெண்ணும் புக்ககத்திலிருந்து பிறந்தகம் வந்திருந்தாள். காலப் போக்கில் அவளுடைய ரூபத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல்களால் அவள் அக்காக்காரி அழகாக இருந்தபோது எப்படியிருந்தாளோ அப்படியே அஸலாக ஆகிவிட்டாள். கல்பனையாக வின்யாஸம் பண்ணத் தெரிந்த கதாசிரியர்கள் இங்கே பொருத்தமாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஆதியிலே அக்கா இவளை விடச் சிவப்பு, இப்போது அவள் கறுத்துப் போக இவள் சிவந்து விட்டாள்; ஆதியில் அவளுக்குத்தான் தலைமயிர் ஜாஸ்தி, அவளுக்குக் கொட்டிப் போன இப்போதானால் இவளுக்கு அடர்த்தியாக வளர்ந்திருந்தது, என்றெல்லாம்!
ஆக மொத்தத்தில், காசி யாத்ரை முடித்து வந்தவர் தன் பத்னியைப் பத்னியில்லை என்று நினைத்த அனர்த்தத்துக்கு மேல் மச்சினியைப் பத்னி என்று நினைக்கும்படி ஆயிற்று!
'வைசூரியில் விரூபமானவள் மச்சினிதான். அவளைப் புக்ககத்தினர் தள்ளி வைத்து விட்டிருக்க வேண்டும். அவளையே இப்போது தன்னுடைய வேட்டகத்தினர் தன் பத்னி என்று சொல்லித் தலையில் கட்டப் பார்க்கிறார்கள்' என்று அவர் நினைத்து விட்டார். வாஸ்தவமான பத்னியை ஏற்க மாட்டேன் என்று மறுத்து, பத்னியில்லாதவளிடம் பாத்யதை கேட்டார்.
ஊரார் எத்தனை சொல்லியும் அவர் கேட்கவில்லை. பரம்பரையாக அர்ச்சனை செய்யும் குடும்பத்தில் வந்து பஹூ காலமாக அர்ச்சகராக இருந்துவரும் மாமனார்க்காரர் பக்கம்தான் அந்த ஊரே பேசும் என்று முடிவு பண்ணிவிட்டார். அதனால் அவர்கள் ஸாக்ஷியத்துக்கு அவர் ஒரு மதிப்பும் தரவில்லை.
மாமனார்க்காரர், தான் எத்தனையோ வருஷங்களாக ஆறு காலமும் பூஜை பண்ணிவரும் கோவில் ஸ்வாமிதான் இப்போது ஸாக்ஷிக்கு வர வேண்டும் என்று நெஞ்சுருகி ப்ரார்த்தனை செய்து கொண்டார்.
'ஸந்நிதிக்கு எல்லாரையும் அழைத்து வாரும். யாம் உண்மை உரைப்போம்' என்று அசரீரி கேட்டது.
அப்படியே மாப்பிள்ளை, பெண்கள் எல்லாரையும் குருக்கள் அழைத்து வந்தார்.
ஸ்வாமியும் சொன்னபடியே, மாப்பிள்ளையிடம் அம்மை வார்த்துக் குரூபமாயிருந்த பெண்ணைக் காட்டி, "ஆதியில் நீ யாரை அக்னி ஸாக்ஷியாகக் கல்யாணம் செய்து கொண்டாயோ அவள் இவள் தான்" என்று சொன்னார்.
கருணாமூர்த்தியாகையால், அவர்கள் எதிர்பார்க்காத இன்னொரு விஷயம் அந்தப் பெண்ணிடம் சொன்னார் – வைசூரியால் கொடுமைப்பட்டதோடு, பதியிடமும் சிறுமைப்பட்டு மனஸ் ஒடிந்து போயிருந்தவளிடம் சொன்னார் "இந்தக் கோயில் திருக்குளத்தில் முழுகி எழுந்திரு. குரூபம் போய் முன்னைவிட ரூபவதியாவாய்" என்று வரம் கொடுத்தார்.
அப்படியே நடந்தது. மாப்பிள்ளை நிஜ பத்னியை ஏற்றுக் கொண்டார். அஸம்பாவிதம் நேராமல் அந்த அர்ச்சகக் குடும்பம் ஸ்வாமி ஸாக்ஷியால் க்ஷேமமடைந்தது. அந்த ஸ்வாமிக்கு ஸாக்ஷி நாயகேஸ்வரர் என்றே அதற்கப்புறம் பேராகிவிட்டது.
இந்த வரலாறு அந்த ஆலய கர்ப்பக்ருஹத்திலேயே ஸ்வாமிக்குப் பின்பக்கச் சுவரில் சில்பமாகச் செதுக்கப் பட்டிருக்கிறது.
பாகம் முடிவு.
*ஸாக்ஷி நாதேச்வரர்*
ஸாக்ஷி நாதேச்வரர் என்ற பேரில் ஈச்வரன் இருப்பது திருப்புறம்பயம் என்ற க்ஷேத்திரத்தில். அது கும்பகோணத்துக்கு வடமேற்கே ஐந்து, ஆறு மைலில் மண்ணியாற்றின் வடகரையிலிருக்கிறது. அந்த ஊருக்கு வடக்கே ஒரு மைலில் கொள்ளிட நதி.
சோணாட்டு ஸ்தலமானாலும் பாண்டிய ராஜதானியான மதுரையோடு அந்த ஊரை ஸாக்ஷிநாத ஸ்வாமி ஸம்பந்தப்படுத்தி ஒரு குட்டி மாகாண (மாநில) ஒருமைப்பாடு காட்டியிருக்கிறார்.
வடமதுரை கோபாலன் கதை பார்த்தோம். வரப்போகிற கதையில் தென்மதுரை சிவனின் லீலை பார்க்கப் போகிறோம். மதுரை என்றால் அறுபத்து நாலு திருவிளையாடல் நினைவு வந்து விடும். ஸுந்தரேச்வரரின் கடைசியான அறுபத்து நாலாவது லீலையாகத் திருப்புறம்பய ஸாக்ஷிநாதர் ஸமாசாரந்தான் வருகிறது.
சோழ தேசத்தில் பிறந்து வளர்ந்து மதுரையில் கொலையானவனின் கதையைச் சொல்லும் சிலப்பதிகாரத்திலும் இதே மாதிரி ஒரு கதை பற்றி 'ரெஃபரன்ஸ்' வருகிறது. அதன் கதாநாயகி பத்தினிப் பெண்டிர் பல பேரைப் பற்றிச் சொல்லும் போது இந்த ஸ்தல புராணத்துக் கதாநாயகி மாதிரி அதற்குப் பூர்வகாலத்தில் இருந்த இன்னொருத்தியையே முதலாவது கற்புக்கரசியாகச் சொல்கிறாள்.
கதைக்கு வருகிறேன். சிலப்பதிகாரம் மாதிரியே காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு வணிகர், வைசியர் இருந்தார். அவருடைய ஸஹோதரியை மதுரையிலிருந்த ஸ்வஜாதிக்காரர் ஒருத்தருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தது.
கொஞ்ச நாளில் அவளுக்கு ஒரு பிள்ளையும் பிறந்தது. அவள் மதுரையில் புருஷன் வீட்டில் 'ஸெட்டில்' ஆனாள். அப்புறம் எதனாலோ அவளுடைய பிறந்தகம், புகுந்த அகம் ஆகிய இரண்டு குடும்பங்களுக்கும் ஸம்பந்தம் கத்தரித்துப் போய்விட்டது.
ஸஹோதரி வணிகருக்கு ஒரு பெண் பிறந்தது. உடனே அவருக்கு முறைப்பிள்ளை நினைவு வந்தது. 'மருமகன் பிறந்தானே! அவனுக்கு இப்போ பத்து, பன்னிரண்டு வயஸு இருக்குமே! வயஸு வித்யாஸம் சித்தே ஜாஸ்தியாயிருந்தாலும் முறை விட்டுப் போகாம அவனுக்குத்தான் பெண்ணைக் கொடுக்கணும்' என்று முடிவு பண்ணினார்.
ஸஹோதரி பிள்ளை, ஜாமாதா இரண்டு பேரையுமே 'மருமகன்' என்றுதானே சொல்கிறது!
முடிவு பண்ணினாரே தவிர, கத்திரித்துப் போன உறவை 'ரின்யூ' பண்ணுவதில் அவருக்கு ஒரு 'ரிஸர்வேஷன்' ஏற்பட்டு, அப்புறமும் அநேக வருஷங்கள் ஓடிப் போயிற்று. பெண்ணும் கல்யாண வயஸை, அதாவது அந்தக் காலக் கல்யாண வயஸை அடைந்தாள்.
துரத்ருஷ்ட காலம், வணிகர், அவருடைய ஸம்ஸாரம் ஆகிய இரண்டு பேரும் கண்ணை மூடிவிட்டார்கள்.
கல்யாண வயஸுக் கன்யாப் பெண் அநாதையாக நின்றது. தனக்கு ஒரு அத்தான் உண்டு; அவனுக்குத்தான் தன்னைக் கொடுக்க அப்பா உத்தேசித்திருந்தார் என்று அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அப்பா அப்படி நிச்சயம் பண்ணி விட்டதால் அந்தப் பிள்ளைதான் தன் பதி என்று அவள் பாதிவ்ரத்யம் (கற்பு நெறி) அநுஷ்டிக்க ஆரம்பித்து விட்டாள், அப்பர் ஸ்வாமிகளுடைய தமக்கையான திலகவதியார் மாதிரி!
அப்பா பண்ணத் தவறியதை அந்தப் பெண்ணிடம் அபிமானமும் இரக்கமும் கொண்ட ஊர் ஜனங்கள் பண்ணினார்கள். மதுரையிலிருந்த மருமான் அட்ரஸைக் கண்டு பிடித்து விஷயங்களைத் தெரிவித்து அவனுக்கு ஓலை அனுப்பினார்கள்.
அவனும் காவிரிப்பூம்பட்டினம் வந்தான்.
*மேலும் நாளையும் தொடரும்*.......
*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
**********************************
*"Deivathin Kural*-Part-7*
*Maha Periyava's Discourses*
Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma in advaitham.blogspot*. Our thanks.
*Deiva Sãkshi* – *Divine Witness*
( A new section currently goingon)
*Sãkshi Gopal*
(Yesterday's last few texts repeated again today)
There is a saying in Tamil which means, 'Did you give your daughter in marriage or your darling' – 'peNNai koduththãyo kaNNai koduththãyo' – 'பெண்ணை கொடுத்தாயோ கண்ணை கொடுத்தாயோ'? So this King of Kanchipuram gave his darling daughter as well as the statue of KaNNan, in marriage!
51. The bride-groom returned to his state with his new acquisition of a wife and Bhagawan Sri Krishna who was already famous as Sãkshi Gopal. As there was already the famous Puri Jagannath in their capital, a new temple was constructed in a place near Mukundpur, which became famous as 'Sãkshi Gopal', a place name as well as the name of the Presiding Deity. Starting from Uttar Pradesh, having come to Kanchipuram in Tamil Nadu in support of a poor orphaned boy and then finally having created a name for himself and his abode as 'Sãkshi Gopal' in Orissa; doesn't he stand as a proof of national unity and integrity than all the politicians of this land? Whatever the reason for his having to stand as a witness in the story I told you all, now he stands as Sãkshi Gopal as a proof of the fact that it is devotion for God that can re-unite us all in this country.
End of chapter.
*Sãkshi Nãyakeshwar / Nãdeshwar*
52. Siva that is, Easwara also has been a witness on occasions in two different places known as 'Sãkshi Nãyakeshwar' and 'Sãkshi Nãdeshwar', both places located within Tanjavur district. The first one, Sãkshi Nãyakeshwar is located in a place known as 'AvaLivaNallur'. You are likely to wonder as to what is this place name all about! In Tamil the place name seems to mean a combination of 'AvaL + IvaL or Ivan + Nallur', meaning 'that she + this she or this man + Nallur' as 'அவளிவணல்லூர்'. It is the place where God Himself gave evidence that 'that girl and this girl are one and the same'!
53. When we go from Needamangalam towards Tanjavur, there is a place known as 'Sãliyamangalam', near which just NE of it, is this place known as 'AvaLivaNallur'. Amongst the series of places called 'Pãdal Petra SthalangaL', on the southern bank of the Cauvery River, this place is exactly the 100th where both Appar and Sambandar have composed and sung Thevãram songs. In that place there was a GurukkaL who had two daughters, very similar in appearance. They are from a Jãti known as Ãdi Saivar or Sivãchãriyãr or Siva Brahmins. He got both his two daughters married off to two eligible boys of a similar caste. After the marriage the elder of the two bride-grooms went on Kãsi Yãtra. Not a feigned ritual as done during marriages, (unreal 'ULauLãkkattai Kãsi Yãtra' – 'உளஉளாக்கட்டை' Kãsi Yãtra,) but a real voyage of thousands of miles undertaken to the North Indian city of Kãsi. During those days such a Yãtra would take a number of years to get completed. This elder bride groom returned from his Yãtra to his father-in-law's house.
*To be continued*.............
54. By that time much water had flown in the River Cauvery.
The elder daughter had been afflicted with small pox very seriously, barely avoiding death! She had marks all over her face and body with loss of eye sight in one eye and hair falling. She was looking rather ugly with all that, becoming totally unrecognizable. The boy who had returned from Kãsi Yãtra was wondering if this was the same girl whom he had married! To complicate the situation the younger girl had also returned from her in-law's place during that time. By the passage of time she was looking exactly like how her sister used to look! You can just give full play for your imagination. The elder sister used to be fairer than the younger one with a thick growth of hair on her head. Now the younger one had bloomed and looked as attractive as her elder sister used to be. So this boy who had returned from Kãsi Yãtra was wondering if his in-laws were trying to dupe him. So, he declared that he will not accept the girl. However much the villagers said to the contrary, he was thinking that, as his father-in-law had been the GurukkaL for long in that place, he was refusing to accept the villagers' claim in support of the GurukkaL. He was in fact looking at the younger girl, his sister-in-law and claiming that she must be his wife!
55. The father-in-law GurukkaL prayed to the very God to whom he had been doing Pooja all these years in extreme agony, to somehow resolve the faux-pas. They all heard an 'asareeri' – 'அசரீரி', which is a divine announcement from the skies, "Come ye all of you to my Sannidy and I shall sort out the muddle". So they all went to the Sannidy of Nãyakeshwar Temple. God physically coming in front of them all pointed out the girl who had been afflicted with small pox and told the boy, that she was the girl to whom he had been married with Agni as the Sãkshi. As God is the very incarnation of kind-heartedness, He did also something none of them had expected. He gave a boon to the ugly looking girl who had not only suffered by the horrible disease, but also was further pained by the refusal of her own husband to accept her, "Go to the Temple pond and take a dip. You will come out as a beautiful girl regaining all your lost looks and health"! That is what happened. The elder son–in-law happily accepted his wife. As the GurukkaL family had been saved from ignominy, the Swami came to be known as 'Sãkshi Nãyakeshwara' from then onwards and the place name became 'AvaLivaNallur' – 'அவளிவணல்லூர்''. This episode has been depicted on stone, sculptured on the back side of the Sanctum-Sanctorum in that temple.
End of chapter.
*Sãkshi Natheshwar*
56. Sãkshi Natheshwar temple is located in a place known as Thiruppurambiyam – 'திருப்புறம்பியம்', which is some five miles NW of Kumbakonam on the northern banks of Maniyaru River which is a branch of the KoLLidam River that flows one mile north of it generally in the West – East direction. Though it is a part of Sozha Nãdu, that place is closely related to Madurai, the capital of Pãndya Nãdu by 'Sãkshi Nãtha Swami' thereby creating integrity between states of India at the district level. We covered the story of Gopala of Mathura, known in Tamil as 'Vada Madurai' – 'வட மதுரை'. In the ensuing episode, we are going to see the playfulness of Siva Perumãn of 'Ten Madurai' – 'தென் மதுரை'. (Here the 'Ten' is a transliteration of a Tamil word meaning south and not a number, to be pronounced also softly as 'then' than ten!) The moment we think of the playfulness of Siva Perumãn, the 64 playful episodes of his known as 'Thiru ViLayãdalgaL' will come to one's mind. In fact the 64th such caper by Sundareswara is this story enacted in this Thiruppurambiyam Sãkshi Nãtha Swami temple environs replayed at Madurai!
57. Silappadigãram is a Tamil classic which talks about a man born and brought up in Sozha Nãdu who goes to Madurai due to financial constraints. There while defending the honesty of her husband who had already been wrongly accused of theft and killed, the heroine talks about women known for their faithfulness in their devotion and integrity of love for their husbands, known as 'paththinip peNdir' – 'பத்தினிப் பெண்டிர்'; quotes the names of such women of the past. Amongst them the first name quoted seems to be that of the heroine of the story that I am going to narrate now that happened in Thiruppurambiyam. O K, enough of preludes. Let me now come to the story.
58. In Cauvery Poombattinam there was a business man of the Vaisyas caste. He had got his sister married to another businessman of the same caste in Madurai. After some time she got a male child. For some reason it so happened that there was no interaction between the two families for a number of years. In the meantime, this elder brother was blessed with a daughter. Then he remembered about his sister in Madurai and that she had a son who may be about ten years old by now. (As per the customs and traditions present even today in South India, children of brother and sister are mutually considered as rightfully suitable for being paired as husband and wife. But children of brothers are as good as siblings and so are children of sisters between themselves.) So anyhow, this gentleman came to the conclusion that though the age difference may be a little too much, he should give his daughter in marriage to his sister's son only, when the day comes.
59. Though he had so decided, somehow he never contacted his sister or brother-in-law and years rolled by. The girl reached a suitable age for getting married as was the custom those days. But, it so happened that the businessman and his wife died within a short period of time! This young girl became an orphan in her own house. She knew that there was a son of her father's sister, to whom her father intended to give her in marriage. Father's sister is 'Aththai' – 'அத்தை' as the name of the relation and son of 'Aththai' is known as 'Aththãn' – 'அத்தான்'. So, anyhow the girl started living as though she is already betrothed to that boy, maintaining a sort of self-discipline as required in 'Pãtivratyam', like Appar's elder sister Thilakavathiyar did when her would-be died in battle!
60. What the parents had failed to do was done by the village elders who had much respect and love for the family of this orphaned girl. They searched for and identified the address of this girl's father's sister's son in Madurai and wrote a letter to him in detail as to how her parents had died. So this boy came to Cauvery Poombattinam, completed all the transactions of business accounts on behalf of his uncle.
*To be continued*............
*Maha Periyava thiruvadigal Saranam*
***************************************
No comments:
Post a Comment