அத்யாத்மராமாயணம்-அயோத்யா காண்டம்
அத்தியாயம் 5
ராமன் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் வனம் செல்லத்தயாராவதைக் கண்ட சாதுக்கள் மனம் வருந்தி தருமம் அற்ற நாட்டில் இருக்க விரும்பாதவர்களாக ராமனுடன் வன்ம் செல்லப் புறப்பட்டனர். அப்போது அங்கு வந்த வாமதேவர் அவர்களிடம் ராமன் உண்மையில் யார் என்பதைக் கூறி அவர்களைத் தேற்றினார்.
நாரதர் ராமனிடம் வந்து அவனுடைய அவதாரத்தின் நோக்கத்தை சீக்கிரமாக நிறைவேற்றும்படி கூறியதால் அவனுடைய சங்கல்பத்தின்படி கைகேயியும் தசரதரும் செயல்பட்டனர் எனக்கூறி அவர்களை ராமநாமத்தை ஜபிக்கும்படியும் அதுவே அவர்களை ஸம்சார துக்கத்தில் இருந்து காப்பாற்றும் கூறினார்.
இதற்கிடையில் ராமனும் சீதையும் கைகேயியின் அரண்மனைக்குச் சென்று தாங்கள் வனம்செல்ல் ஆயத்தமாக உள்ளதைக் கூற அவளும் உடனே மரவுரியை தருவித்து அவர்களுக்கு அளித்தாள். சீதை அதை எப்படி அணிவது கொள்வது என்றறியாமல் தவிப்பதைப் பார்த்து ராமன் அவளுக்கு அதைக் காட்ட அதைக்கண்ட அரண்மனைப் பெண்கள் அனைவரும் கதறி அழுதனர்.
அப்போது அதைக்கண்ட வசிஷ்டர் சினந்து கைகேயியிடம் ராமன் மரவுரி அணிந்து வனம் போகவேண்டும் என்பதுதான் அவள் விருப்பமாக இருக்க சீதைக்கு எதற்கு அவள் மரவுரி கொடுத்தது தகாது என்றும் வனம் செல்வது அவள் விருப்பம் ஆனால் அவள் ஒரு அரசகுமாரியாகத்தான் செல்லவேண்டும் என்று கூற உடனே தசரதர் அவளுக்கு பட்டாடைகளும் ஆபரணங்களும் தருவித்து சுமந்திரனை கூப்பிட்டு அவர்களை தேரில் ஏற்றி அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
இவ்வாறு அவர்கள் காட்டுக்குப் புறப்பட்டனர். தசரதர் "நில் நில்" என்கையில் ராமன் "செல் செல் " எனக் கூற பல மக்கள் தொடர ரதம் தமசா நதிக்கரையை வந்தடைந்தது. அங்கே அவர்கள் இரவைக் கழித்தனர். மக்கள் ராமனுடன் காட்டுக்கு வரத் தயாராக இருந்ததைக் கண்ட ராமன் அவர்கள் உறங்குகையில் புறப்பட்டுச் செல்ல தூங்கி எழுந்தவர்கள் ஏமாற்றத்துடன் அயொத்திக்குத் திரும்பினர்,.
பிறகு கங்கை நதிக்கரையில் உள்ள ஸ்ருங்கிபேரபுரம் சென்று அங்கு அதன் தலைவனான குஹனால் வரவேற்கப்பட்டனர். ராமனைக் கண்ட குஹன் தான் பிறவி எடுத்த பயன் அடைந்த்தாகக் கருதி ராமனை அங்கேயே 14 வருடமும் தங்க வேண்டினான். ஆனால் ராமன் தேச எல்லைகளை கடந்து காட்டில் தவவாழ்க்கையையே 14 வருடம் மேற்கொள்ளவேண்டும் என்று கூற ராமனும் லக்ஷ்மணனும் ஆலம் விழுதால் சடை தரித்துக் கொண்டு அந்த இரவை அங்கே கழித்தனர்.
சீதையும் ராமனும் லக்ஷ்மணன் அமைத்த தர்ப்பைப்புல்லினால் ஆன படுக்கையில் அரண்மனையில் பஞ்சணை மெத்தையில் படுத்தது போலவே ஆனந்தமாக உறங்கினர்.
No comments:
Post a Comment