திருகோவிலுள் ப்ரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் {விக்ரஹங்கள்} மூன்று காரணங்களால் தெய்வத்தன்மையை அடைகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன.
" அர்சகஸ்ய ப்ரபாவேந அர்சநஸ்யாதி சாயநாத், ஆபிருப்யாச்ச பிம்பாநாம் சிலாபவதி தேவகி"
अर्शकस्य प्रभावेन, अर्शस्याथि सायानाथ्
आभिरुप्यास्स बिम्बानाम्, सिलाभवथि धेवकि.
அர்ச்சகருடைய மனோபாவனையாலும், அர்ச்சனையின் சிறப்பாலும், விக்ரஹத்தின் அழகினாலும் சிலையானது தெய்வத்தன்மை அடைகிறது.
இறைவனது ஸாந்நித்யம் நிலை பெறுவதற்கு ஆச்சார்யனின் தவ வலிமையே காரணம் என்கிறது.
மற்றொரு வாக்யம்
"அர்சகஸ்ய தபோயோகாத், தேவ சாந்நித்ய ம்ருச்சதி:"
अर्शस्य थपोयोगाथ्, धेव सान्निढ्य म्रुछथि.
மூர்த்திகளை {விக்கிரஹங்களை} எண்ணை தேய்த்து, நீராட்டி, வஸ்த்திரம் சாற்றி தன் குழந்தைகயைப் போல கவனிக்கும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பல்வேறு நேரங்களில் எவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
"ஆவாஹனாதி காலேது ஆசார்யோ குரு ரூப த்ருத்
அபிஷேகாத்யலங்காரே ஆசார்யோ மாத்ரு ரூபவாநு,
நைவேத்ய தூப தீபாதௌ அர்ஸ்நே மந்த்ர ரூபவாநு
ஸ்தோத்ர ப்ரதக்ஷிணே காலே ஆசார்யோ பக்த ரூபவாநு. _சிவாகமம்.
आवाहनाथि कालेधु आशार्यो गुरु रूप ध्रुक्
अभिशेकाध्यलन्गारे थ्वाशार्यो माथ्रु रूपवानु
नैवेध्य प्रधक्षिणे कालेथ्वाशार्यो भक्थ रूपवानु.
ஆவாஹனம் முதலான காலத்தில் ஆச்சார்யன் குரு ரூபமாகவும், அபிஷேக, அலங்கார காலத்தில் தாயைப் போலவும், நைவேத்யம் முதலான சமயத்தில் மந்த்ர ரூபமாகவும், ஸ்தோத்ரம், மற்றும் ப்ரதக்ஷிண காலத்தில் பக்தனைப்போலவும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பாவித்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாக்யமோ இன்னும் ஒரு படி மேலாக 7 வித லிங்கங்களில் அர்ச்சகனும் ஒன்று என்று கூறுகிறது.
" கோபுரே சிகரே த்வாரே, ப்ராகாரே பலி பீடகே.
அர்ச்சகே மூல லிங்கேச சப்த லிங்கஸ்ய தர்ஸநம்."
गोबुरे सिखरे ध्वारे प्राकारे बलिपूटके
अर्श्के मूल लिन्गेश सप्थ लिन्गस्य धर्स्नम्.
அதையே "அர்ச்சகஸ்து ஹரஸ்ஸாக்ஷாத்" அதாவது அர்ச்சகர் சிவபெருமானே என்று ஒரு பழமொழி தெளிவு படுத்துகிறது.
இவ்வளவு பெருமை கொண்ட அர்ச்சகர்கள் இன்று கூலிக்கு வேலை செய்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அது அவர்கள் பிழை அல்ல. காலத்தின் கோலமே என்பதையும் அதன் காரணத்தையும் கீழ்க்காணும் திருக்குறள் உணர்த்துகிறது.
" ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்,
காவலன் காவான் எனின்"_திருக்குறள்.
இதையே பாரதியும் சொன்னான்
" பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்த்திரங்கள்" என்று. அது உண்மையே என்பதை நம்மால் நிதர்சநமாக காணமுடிகிறது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் ஆண்டவனே துணை என்பதை உணர்ந்து அர்ச்சகர்கள் தன் கடமையை செவ்வனே செய்யட்டும்
No comments:
Post a Comment