Wednesday, August 18, 2021

Namaskara tatvam part2 - Periyavaa

______________________________________
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர*

*தெய்வத்தின் குரல்*

( *1858*) *09.07.2021*                   
_________________________

                   *நமஸ்காரத் தத்வம்*
                             
_________________________

                                  *நமோ நம:*
                                   👉பகுதி - *17*
_________________________
*ஸாஷ்டாங்க நமஸ்காரம்*

Part - *3*👆
_________________________

*ஸ்ரீமஹாபெரியவா*

*Volume 7*. *பக்கம்* *940*

 ****************************************
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி*
*(*மஹா பெரியவா அருளுரை*)*

*தெய்வ விஷயம்*. 

*நமஸ்காரத் தத்வம்* 
(தற்போதய பகுதி)

*நமோ நம*: (17)
(தலைப்பு)

*ஸாஷ்டாங்க நமஸ்காரம்*
(இந்த பாகத்தின் நேற்றைய உரைகள்மீண்டும் இன்றும்)

பூர்வ சாஸ்த்ரங்களில் இரண்டில் இந்த எட்டு அங்கங்களில் ஏழு அங்கங்களை ஒரே மாதிரி சொல்லியிருக்கிறது.

ஒன்று வ்யாஸ ஸ்ம்ருதி. அதில்

தோர்ப்யாம் – பத்ப்யாம் – ஜாநுப்யாம் – உரஸா – சிரஸா த்ருசா |

மனஸா – வசஸா சேதி ப்ரணாமோ(அ)ஷ்டாங்கமீரித ||

என்று இருக்கிறது.

இன்னொன்று, பரமேச்வர ஆராதனையில் விசேஷமாக உள்ள 'மஹா ந்யாஸ'த்தில் உமா-மஹேச்வரர்களை எப்படி நமஸ்காரம் பண்ணுவது என்பதற்கு ஆபஸ்தம்ப மஹர்ஷியின் வாக்கில் சொல்லியிருப்பது:

உரஸா-சிரஸா-த்ருஷ்ட்யா-வசஸா-மனஸா ததா |

பத்ப்யாம்-கராப்யாம்-கர்ணாப்யாம் ப்ரணாமோ(அ)ஷ்டாங்க உச்யதே||

முதலில் சொன்னதன்படி வரிசை க்ரமமாக 1) கை, 2) பாதம், 3) முழங்கால் முட்டி, 4) மார்பு, 5) தலை, 6) கண், 7) மனஸ், 8) வாக்கு என்பது எட்டு அங்கங்கள்.

இரண்டாவதாகச் சொன்னதில் முழங்கால் இல்லை. அதற்குப் பதில் காது இருக்கிறது. வரிசைப்படி அவற்றை ச்லோகத்தில் 1) மார்பு, 2) தலை, 3) கண், 4) வாக்கு, 5) மனஸ், 6) கால், 7) கை, 8) காது என்று சொல்லியிருக்கிறது.

இரண்டு ச்லோகங்களிலும் மனஸ், வாக்கு, கண் என்ற மூன்றைச் சொல்லியிருக்கிறது. இங்கே கேள்வி வருகிறது. 'உடம்பையே சேர்ந்த எட்டு அங்கங்களை பூமி படப் போடுவதுதான் ஸாஷ்டாங்க நமஸ்காரம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் மனஸும் வாக்கும் எப்படிச் சேரும்? கண் உடம்பைச் சேர்ந்த அங்கந்தான் என்றாலும் அதை எப்படி பூமியில் படும்படிப் பண்ணுவது?" இப்படிக் கேள்வி.

இதற்குப் பதில், இந்த மூன்றும் க்ரியையாய், கார்யமாக இல்லாமல் பாவமாக நம் எண்ணத்தில் இருக்க வேண்டியவை. மனஸை நாம் நமஸ்கரிக்கும் பெரியவரிடம் தாழக் கிடத்த வேண்டும். வாக்கையும் அப்படியே. கண்ணிலே அவர் ஸ்வரூபத்தை நிறுத்தி அதையும் அவருக்குப் பணியச் செய்ய வேண்டும்.

பாவனையான இந்த மூன்று அங்கங்களைத் தள்ளி விட்டால், பாக்கியுள்ள – வாஸ்தவத்திலேயே அங்கம் என்று ஸ்தூலமாக இருக்கப்பட்ட – ஐந்து மிஞ்சுகின்றன.

ஒரு கணக்கின்படி இந்த ஐந்து 1) கை, 2) பாதம், 3) முழங்கால், 4) மார்பு, 5) தலை. இன்னொன்றின்படி 1) மார்பு, 2) தலை, 3) கால், 4) கை, 5) காது.

இவற்றிலே ஒன்றில் முழங்காலையும், அதை மாற்றி இன்னொன்றிலே காதையும் சொல்லியிருக்கிறது.

இப்படி ஐந்து ஐந்தாக இரண்டு இருப்பதில் நமக்குத் தலையும், மார்பும் ஒவ்வொன்றுதான் இருக்கின்றன. முதல் கணக்கில் வரும் பாதம் என்பதை foot என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கணும். அதாவது கணுக்காலுக்குக் கீழே விரல்களோடு உள்ள பாகம் என்று மாத்திரம். அந்தப் பாதம், முழங்கால், கை ஆகிய ஒவ்வொன்றும் இரண்டிரண்டு இருக்கின்றன. ஆக ஒரு தலை, ஒரு மார்பு, இரண்டு பாதங்கள், இரண்டு முழங்கால்கள், இரண்டு கைகள் என்று மொத்தம் கூட்டினால் நமஸ்காரத்தில் பிரயோஜனப்படுகிற எட்டு ஸ்தூலமான அங்கங்களே கிடைத்து விடுகின்றன!

இன்னொரு கணக்குப்படி முழங்காலை தள்ளி விட்டுக் காதை எடுத்துக் கொண்டோமானாலும் நமக்கு இரண்டு காதுகள் இருக்கின்றனவே! ஆகையினால் இங்கேயும் அஷ்டாங்கம் என்ற கணக்கு, நமஸ்கார க்ரியையில் நாம் ஸ்தூலமாகப் பயன்படுத்தக்கூடிய எட்டு சரீர உறுப்புக்களாக இருக்கின்றன.

இரண்டிலும் 'உரஸ்' என்று வருவது வக்‌ஷ (மார்பு) ப்ரதேசத்தை மட்டும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிலேயே வயிறும் சேர்ந்திருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். வக்ஷம் பூமியில் படிய நமஸ்கரித்தால் வயிறும் பூமியிலே பட்டுத்தான் ஆக வேண்டும். அதைத் தனிப்படச் சொல்லவேண்டியதில்லை. அதனாலேயே, கபந்த பாகம், torso என்றேனே, அந்த முழு பாகத்தையுமே உரஸ் என்பதாக இந்த இரண்டு ச்லோகங்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு ச்லோகத்தையும் சிஷ்டர்கள் (மேலோர்) எடுத்துக் கொண்டாலும், இந்த இரண்டிலும் கூடப் பின்னால் சொன்னேனே, காதைச் சேர்ந்த ச்லோகம், அதைத்தான் விசேஷமாகப் போற்றி நடைமுறையிலும் செய்கிறார்கள்.

முதல் ச்லோகம், இரண்டாவது ச்லோகம் இரண்டிலுமே பாதங்களை 'பத்ப்யாம்' என்று சொல்லியிருக்கிறது. ஆனால் முதல் ச்லோகத்தில் அதை foot ஓடு முடித்திருக்கிறது. முழங்கால்களை 'ஜாநுப்யாம்' என்று சொல்லியிருக்கிறது. இரண்டாம் ச்லோகத்தில் அதே 'பத்ப்யாம்' என்ற வார்த்தையால் இடுப்புக்குக் கீழேயிருந்து கால் விரல்கள் வரை உள்ள leg என்ற முழு அவயவத்தையும் குறிப்பிட்டிருக்கிறது. இப்படி அந்த பாகம் முழுதையும் சொன்னதால்தான் இங்கே தனியாக முழங்காலை மறுபடிச் சொல்ல வேண்டியதில்லை என்பதால் அதைத் தள்ளி, குறைகிற அந்த அவயவத்துக்குப் பதிலாகக் காதைச் சேர்த்திருக்கிறது. இதைத்தான் சாஸ்த்ரஜ்ஞர்கள் விசேஷமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றேன்.
*இனி இன்றைய தொடர்ச்சி*.......

சாஸ்த்ர ரீதியில் காது ரொம்ப முக்யமான அங்கம். ஸகல சாஸ்த்ரத்துக்கும் மூலமான வேதமே 'ச்ருதி' என்பதாகக் காதால் கேட்டு அப்யாஸம் பண்ண வேண்டியதாகத்தானே இருக்கிறது? பஞ்ச பூதங்களின் உச்சியிலுள்ள ஆகாச தத்வத்துக்கே உரியதான சப்தம் என்ற தன்மாத்ரையை க்ரஹிப்பது காதுதான் என்ற பெருமை அதற்கு இருக்கிறது. காதில் கங்கை இருக்கிறாள் என்று ஐதிஹம். அதனால்தான் ப்ராணாயாமம் முடிகிற இடத்தில், மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிற கையில் வெளி ச்வாஸத்தில் அசுத்தம் பட்டுவிடுகிறது என்பதால் அதை சுத்தி செய்து கொள்ள கங்கை இருக்கிற அவயவமான காதை அந்தக் கை விரலால் தொட்டுக் கொள்வது.

"ஸரி, நமஸ்கார க்ரியையில் காது பூமியில் படும்படி எப்படிப் பண்ணுவது?"

அதைச் சொல்வதற்கு நமஸ்காரம் என்பதை ஆரம்பத்திலிருந்து எப்படிப் பண்ண வேண்டும் என்று procedure சொல்ல வேண்டும். அதுவும் அவசியம் சொல்ல வேண்டியதுதானே? பெரியவர்கள் காது உள்பட அஷ்டாங்கங்களால் எப்படி நமஸ்க்ரிக்கிறது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள், அதன்படி:

ஸாஷ்டாங்க நமஸ்காரமாக சரீரத்தைக் கிடத்தும் போது தலையில் நெற்றிக்கு மேல் பகுதியை பூமியில் பதியும்படி வைத்து, மார்பு-வயிற்றுப் பிரதேசங்களும் அப்படியே பதியுமாறு இருக்கவேண்டும். அப்போது தானாக கால் பாகம் முழுவதும் தரையில் படிந்து விடும். அப்புறம் வலது கையை முழு நீளமும் முன் பக்கமாக முகத்தின் வலது பக்கத்துக்கு parallel-ஆக (இணையாக) நீட்ட வேண்டும். இடது கை தோளிலிருந்து முழங்கை வரை ஒட்டியிருக்குமாறு பதித்து முழங்கைக்குக் கீழ்பாகத்தை மேற்புறமாக மடிக்க வேண்டும். இந்த நிலையில் உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து பூமியைத் தொட்டபடி இருக்க வேண்டும். அதற்கப்புறம் இதையே மாற்றி இடது கையை முகத்துக்கு இடப் பக்கமாக முன்னால் நீட்டி, வலது கையை உடம்போடு பின்னால் சேர்த்தாற்போலப் பின்னால் மடித்து நீட்ட வேண்டும். அப்புறம் இரண்டு புஜங்களும் நன்றாக பூமியில் படுகிற மாதிரி இரண்டு கைகளையும் பின் பக்கம் தொடை வரைக்கும் நீட்டி அந்தப் பகுதியோடு ஒட்டினாற்போல் வைத்திருக்க வேண்டும். அதாவது கையை முன் பக்கம் நீட்டுகிற போது உள்ளங்கை பூமியில் படுகிறபடியும், பின் பக்கம் நீட்டும்போது பூமியைத் தொடாமல் தொடைப் பகுதியை ஒட்டியிருக்கும்படியும் பண்ண வேண்டும்.

இதற்கப்புறம்தான் காது ஸமாசாரம் வருகிறது.

சிரஸ் மார்பு-வயிறு ப்ரதேசங்கள், இரண்டு கைகள், இரண்டு கால்கள் எல்லாம் இப்படி தண்டாகாரமாக (கழியைப் போல்) கிடக்கிறவர், இப்போது முகத்தை மாத்திரம் வலது பக்கமாக ஒருக்களித்து, அந்தப் பக்கத்துக் காதை பூமியில் பதிக்க வேண்டும். அப்புறம் அதே போல் முகத்தை இடது பக்கம் ஒருக்களித்து, இடது காதைப் பதிக்க வேண்டும்.

அதற்கப்புறம் இரண்டு கைகளையும் நன்றாக முன்னால் நீட்டி ஒன்று சேர்த்து அஞ்ஜலி  பந்தம் செய்ய (குவித்துக் கும்பிட) வேண்டும். அதோடு நமஸ்கார க்ரியை பூர்த்தியாகிறது.

இந்த மாதிரிப் பல அம்சங்கள் சேர்த்து நமஸ்காரம் பண்ணுவது ஆத்மாபிவிருத்திக்கு உபயோகமான விதத்தில் சரீர அவயவங்களைப் பல தினுஸில் நீட்டி, மடக்கி, திருப்பி எல்லாம் பண்ணுகிறது. இவற்றால் இது ஒரு தேஹாப்யாஸமே ஆகி, யோக சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற பல உத்தமமான நாடி சலனங்கள் ஏற்பட்டு ஆத்மாவுக்கு நல்லது பண்ணும். 'ஸுர்ய நமஸ்காரம்' என்று ஏகப்பட்டதாகப் பண்ணுவது சரீர ரீதியிலேயே எத்தனை பலம் கொடுக்கிறது?.....

டிஸ்க்ரிப்ஷனாக (வர்ணனையாக) நிறையச் சொல்லி விட்டேன். டெமான்ஸ்ட்ரேஷனாக (கண்காணப் பார்க்குமாறு செய்தல்)ப் பண்ணிக் காட்டினால்தான் புரியும். ஆனால் பண்ணுகிற பாக்யம்தான் எனக்கு இல்லையே! இங்கே யாருக்காவது பண்ணிக் காட்டத் தெரியுமா என்று பரீக்ஷை பார்த்து (சிரிக்கிறார்) அவமானப் படுத்துவதும் ஸபை மரியாதையில்லை! கார்யமாகப் பார்த்தால் 'ஈஸி'யாக இருக்கும்! வாயால் சொன்னால் பெரிய புராணமாய் இருக்கிறது!

மனஸிருந்துவிட்டால் போதும். எத்தனை டீடெய்ல் இருந்தாலும் கேட்டுத் தெரிந்து கொண்டு பத்ததிப்படிப் பண்ணி ச்ரேயஸ் அடையலாம்.

வித்யாஸமாயும் ஒரு அபிப்ராயம்.

என்னதான் மனஸிருந்தாலும், பெரிய கூட்டங்களில் கையை முன்பின் நீட்டி மடிப்பது, முகத்தைத் திருப்பித் திருப்பிக் காதுகளைத் தரையில் பட வைப்பது எல்லாம் சிரமமில்லையா? அப்போது முதலில் நான் சொன்னபடி… பொதுவாகவும் ஜனங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறபடி-முன்னந்தலை, இரண்டு புஜங்கள் இரண்டு ஹஸ்தங்கள், torso, இரண்டு கால் என்றே ஸாஷ்டாங்கத்தை வைத்துக் கொண்டாலும் தப்பில்லை என்றே தோன்றுகிறது.

நமக்கென்று ஒன்றுமே இல்லை என்று கொட்டிக் கவிழ்த்துக் காலி பண்ணிக் கொண்டு எளிமையுடன் சரணாகதியாக் விழுகிறதிலேயே ரொம்ப டீடெய்ல் சேர்த்து காம்ப்ளிகேட் பண்ணாமலிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நமஸ்காரத்தில் க்ஷமாபன ப்ரார்த்தனையும் (மன்னிப்பு வேண்டலும்) இருக்கத்தானே செய்கிறது? ஆனபடியால் டீடெய்லில் ஏதாவது தப்பு இருந்தாலும் அதற்கும் பகவான் க்ஷமித்து விடுவான்.
*பாகம் முடிவு*.

*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
**********************************

*"Deivathin Kural*-Part-7*
*Maha Periyava's Discourses* 

Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma in advaitham.blogspot*. Our thanks.

*Deiva Sãkshi* – *Divine Witness*

*NAMASKARA THATHUVAM*
(Current Section)
*Namo Nama*'
(Current Topic)

   *Sãshtãnga* *Namaskãram*.                (Yesterday's few texts of this chapter repeated again today)
   
68.          The sloka as given in Vyãsa Smruti is this.  'Dhorbhyãm padbhyãm jãnubhyãm urasã sirasa dhrusã | Manasã vachasã cheti praNãmo ashtãngameerita:' ||  The sloka as per Ãpasthamba Rishi is this.  Urasã  sirasã dhrushtyã vachasã manasã tathã | Padhbhyãm karãbhyãm karNãbhyãm praNãmo ashtãnga uchyate ||  As per the first sloka, the body parts listed are, 1) Hands, 2) Feet, 3) Knees, 4) Chest, 5) Head, 6) Eyes, 7) Manas aka Mind and 8) Speech, making up the eight parts.  In the second one, knees are not mentioned and ears are included.  The sloka lists 1) Chest, 2) Head, 3) Eyes, 4) Speech, 5) Manas, 6) Legs, 7) Hands and 8) Ears.

69.          Both the slokas have included the Mind, Speech and Eyes.  The question arises as to how to how to lay down mind and speech?  We thought that in Namaskãra we are required to lay down the whole body on the ground!  Then, how are we to lay the eyes down, though they are parts of the body only?  The answer to that is, instead of physically laying them down, one should mentally control oneself while doing Namaskãra, not thinking of anything else, not speaking or conversing and not letting our eyes roam about here and there, thereby being sincere and serious in our act of Namaskãra. 

70.          If these subtle parts occurring in both the slokas are set aside, we are left with five.  In them hands, legs, chest and head are common.  One sloka mentions the knees and the other talks about the ears instead. Within these we get eight body parts as there are two each of the eyes, legs, one head and one chest, two knees or two ears; making up eight.   In both the slokas what is mentioned as 'urasã' should be understood as the torso, inclusive of chest and the stomach.  When the chest touches the ground normally the stomach will also be in contact with the ground.  As given in the second sloka which mentions the ears, you may observe people turning their faces right and left to ensure that both the ears touch the ground. 

71.          Both the slokas make a mention of the feet as 'padbhyãm'.  But in the first sloka it is evidently meaning the feet as there is a special mention of the knees as 'jãnubhyãm'.  In the second the word 'padbhyãm' evidently means the whole leg including the knees, which are not separately mentioned.  Instead the ears are additionally mentioned in the second sloka.  
*Continuing further from here today*.....

Here is a point to take note of.  In the way of Sãstrãs, ears are a very important part of the body.  All Sãstrãs are based on the Vedas, which has a common name as 'Sruti' which means what is 'heard'!  Out of the five basic elements, sound is the defining quality of the Sky / Space and the ears are the one to receive that Tanmãtra of sound.  It is believed that the sacred Ganga is in the right ear.  While doing PrãNãyãmam we are to hold either nostrils open or closed alternately.  At that time the hands are said to get dirty by exhalation, which is cleansed by repeated touching of the right ear between each PrãNãyãma.  You may be ready with a question, "All that is O K Swami, how to ensure that the ears touch the ground?"  To give you a reply to that question, I will have to describe the whole procedure of how to do Ashtãnga Namaskãra.

72.           *Procedure for Sãshtãnga Namaskãra*.   

While doing Namaskãra lay your body down on the ground with legs close together so that your forehead, chest, stomach, knees and the front portion of your feet are all flat on the ground.  Hands should be brought forward so that they are both parallel and stretched forward with the palms touching the ground.  Then the hands are brought back while describing an arc on either side and made to rest with the palms facing inwards, touching the thighs on either side.  Now is the matter of the ears.  This man who is lying on the ground like a log of wood with his hands and legs in a straight line, is to move only the face to the right and left so that his ears may alternately touch the ground first to the right and then to the left.  Then he has to extend both the hands in a reverse arc above the head bringing the palms in contact with each other, hands held straight with the thumbs up, in an Anjali posture.  With that, the act of Namaskãra is completed.

73.          Thus the act of Namaskãra, starting from and ending in the standing erect posture, combines in itself many individual movements variously bending and stretching the body parts, proves to be an excellent exercise.  This has proved to be a good physical exercise, also good for the mind and the inner being creating good vibrations in the nerves, and has become popular as 'Surya Namaskãra' as part of Yoga exercises.  I have described it enough but it will be clearly understood only if demonstrated physically.  But what to do, I do not have the luck to demonstrate the same and to test if someone in the audience is capable of doing so, is not good manners.  (PeriyavãL says so smilingly.)  To do it is quite easy, but to explain it in words becomes a huge narrative like an epic!  If you have the correct intention, it can be done quite easily, once you have noted the details.  One alternate opinion about this is also there.

74.          However sincere you may be, in big crowds we may not be able to do all this, extending and folding our hands and legs in all directions, isn't it?  On such occasions it is not very wrong, if we consider laying our body down on the ground with the two hands, two palms, two legs and torso, to constitute this act of Sãshtãnga Namaskãra.  I am wondering if I have added too many details in the simple act of, totally nullifying ourselves as having nothing of me or mine, falling in absolute surrender!  After all in the act of Namaskãra there is also the intention of asking for pardon for our sins, isn't it?  So, even if there are some mistakes in the explanation of details I am sure, Bhagawan will excuse me.
End of chapter.

*Maha Periyava thiruvadigal Saranam*.

*************************************

No comments:

Post a Comment