Thursday, August 19, 2021

How to identify a Hindu? - Periyavaa

6*"ஆ ஸேது ஹிமாசலம்"*

 (காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள் 
சம்பிரதாயமாயிற்றே!" -பெரியவாள்)

சதாராவில் பெரியவா தங்கியிருந்த போது,
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். வெகுநேரம் பல விஷயங்களைப் பற்றி அவரிடம் பெரியவா பேசிக் கொண்டிருந்தார்கள்.

நீதிபதி தயங்கியபடியே கேட்டார்.

"கிறிஸ்தவர்கள் சிலுவை அணிந்து கொள்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, தொப்பி போட்டுக் கொள்கிறார்கள்.
பெண்கள் பர்தா அணிகிறார்கள். அது போல ஓர் அடையாளம் ஹிந்துக்களுக்கு இல்லாதது ஒரு
குறையாகத் தோன்றுகிறது. நமக்கு என்ன அடையாளம் என்று மஹாராஜ் சொன்னால் தேவலை."

பெரியவா சற்றே சிரிப்புத் தோன்ற தன் செவிகளைத் தொட்டு காட்டினார்கள். பின் அதன்
கீழ்ப்பகுதியில் துளை போடுவது போல் ஒரு விரலை வைத்துக் காட்டினார்கள்.

"ஆ ஸேது ஹிமாசலம், காது குத்திக் கொள்வது
ஹிந்துக்கள் சம்பிரதாயமாயிற்றே!" என்றார்கள்.

நீதீபதிக்கு ரொம்ப ஆனந்தம்.

"பெரியவாளைத்தவிர வேறு யாராலும் இவ்வளவு
நுட்பமான பதிலைக் கூற முடியாது.
His Holiness is really great" என்று முகம் மலரக் கூறி பிரசாதம் பெற்றுச் சென்றார்.

*kn*

No comments:

Post a Comment