Wednesday, August 18, 2021

Adhyatma Ramayana Aranya kand am adhyaya 6 in tamil

ஆரண்யகாண்டம்-அத்தியாயம் 9

அத்தியாயம் 9
சீதையைத் தேடிச் செல்கையில் ராமனும் லக்ஷ்மணனும் ஒரு விசித்திர உருக்கொண்ட ராக்ஷசனைக் கண்டனர். அவனுக்கு வயிற்றில் ஒரு முகமும் , கால்கள் இல்லாமல் ஒரு யோசனை விஸ்தீரணமுள்ள இரு கைகளும் மட்டுமே காணப்பட்டன. அந்தக் கைகளை விரித்து அதன் நடுவே அகப்பட்ட பிராணிகளைக் கொன்று சாப்பிட்டு இருந்த கபந்தன் என்ற அசுரன் இருந்த இடத்திலேயே கிடந்தான்.
அந்த இருகைகளுக்கு நடுவே அகப்பட்டுக் கொண்ட அவர்கள் இருவரும் அவன் கைகளை ஒரே சமயத்தில் வெட்டிவிட எண்ணம் கொண்டவராய் இடது கையை லக்ஷ்மணனும் வலது கையை ராமனும் ஒரே சமயத்தில் துண்டித்தனர். அதைக்கண்டு ஆச்சரியம் அடைந்த அந்த அசுரன், தேவர்களும் செய்தற்கரிய அந்த காரியத்தை செய்த அவர்கள் யாரென வினவினான்.
ராமன் தாங்கள் யாரெனக் கூறி சீதை அபகரிக்கப் பட்டதையும் அவளைத் தேடி செல்வதையும் கூறி அவனைப் பற்றிய விருத்தாந்தத்தை வினவ அவன் உண்மையில் ஒரு கந்தர்வன் என்றும் ,தன் சௌந்தர்யத்தில் கர்வம் கொண்டு அஷ்ட வக்ரரை அவமதிக்க அவர் சாபத்தால் அந்த நிலையை அடைந்ததாகவும் அவரிடம் மன்னிப்பு வேண்ட அவர் தசரதனின் புத்திரனால் அவன் சாபம் நீங்கும் என்று கூறியதாகத் தெரிவித்தான்.
பிறகு அவன் ராமனிடம் தன் சரீரத்தை ஒரு குழியில் போட்டு எரித்து விட்டால் தன் சுய ரூபத்தை அடைந்துவிட முடியும் என்று கூற ராமனும் அப்படியே செய்ய அவன் சரீரம் எரிக்கப்பட்டு மறைந்தவுடன் ஒரு கர்வ புருஷன் தோன்றினான்.
அவன்ரானை விராட் புருஷனாக வர்ணித்து மனதாலும் புத்தியினாலும் அறியப்படாத ஸ்தூல சூக்ஷ்ம உருவான பிரம்மமே மரவுரி தரித்து நீல வண்ணத்தில் வில்லேந்தி நிற்பதாகக் கூறி, ஜீவர்களுக்கு எந்த நாமத்தை உபதேசிக்கிறாரோ அந்த பரமசிவனால் என்றும் த்யானிக்கப்பட்டுவரும் அந்த உருவமே தகன் மனதில் என்றும் நிலைத்திருக்கட்டும் என்று வேண்டினான்.
ராமன் அவனுக்கு பரமபதம் கிட்டுமாறு அருளினார்.

No comments:

Post a Comment