Wednesday, June 16, 2021

Varaha Avatar

       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீவராகவதாரம்* 

 *பகுதி 02* 

       என் கருவிலிருக்கும் சிசுவுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் இருக்க தாங்கள் தயவு காட்ட வேண்டும் எனக் கேட்டாள். திதியே! நான் எத்தனையோ முறை கூறியும் நீ காதில் போட்டுக் கொள்ளவில்லை. சந்தியா காலத்தில் உன் உதிரத்தில் சேர்ந்த கருவிலிருந்து இரண்டு பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் அரக்க குணம் உடையவர்களாக தர்ம விரோதமான காரியங்களில் ஈடுபட்டு மூவுலகையும், தேவர்களையும் துன்புறுத்துவார்கள். அப்போது பெருமாள் அவதாரம் எடுத்து அவர்களை வதம் செய்வார் என்றார் கஸ்யபர். சுதர்சனத்தை கையில் ஏந்திய பரந்தாமன் கையில் என் பிள்ளைகள் மரணமாவதில் எனக்கு ஒரு குறையும் இல்லை, எனினும் அந்தணராகிய உங்கள் சாபத்துக்கே நான் அஞ்சினேன் என்று அழுதாள். 

        திதியே! கவலை வேண்டாம், இப்போது நீ பரந்தாமனிடத்தும், சிவபெருமானிடத்தும், என்னிடத்திலும் கொண்ட பக்தியால் உன் பிள்ளைகளில் ஒருவனுக்குப் பிறக்கும் பையன் ஹரி பக்தியில் சிறந்தவனாக இருப்பான். அவன் மேலானவர்களுக்கும் மேலானவனாக இருந்து புகழ் பெறுவான் என்றார். இதைக் கேட்ட திதி தன் பிள்ளைவழிப் பேரனாவது ஹரி பக்தனாக இருக்கிறானே என சந்தோஷமடைந்தாள். கரு உருவாகி வளர்ந்தது. பிள்ளைகள் பிறந்தால் தேவர்களுக்கு இடையூறு ஏற்படுமே என்றெண்ணிய திதி அப்பிள்ளைகளை நூறு வருடங்கள் வயிற்றில் சுமந்தாள். அதனால் அந்தக் கருவின் ஒளி எங்கும் பறந்து விரிந்து சூரிய சந்திரனின் ஒளியை மங்க வைத்தது. நாலாத் திசையும் இருண்டன. இதைக் கண்ட தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர்.பிரம்மன் அவர்களிடம் தேவர்களே! ஒரு நாள் என் மனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட என் புதல்வர்களான சனகாதி முனிவர்கள் நாராயணனை தரிசிக்கச் சென்றனர். அப்போது அவர் வாயிற்காப்பாளர்களாக ஜெய, விஜயர் இருந்தனர்.

        நாராயணனை தரிசிக்க விடாமல் தடுத்த காரணத்திற்காக முனிவர்களின் சாபத்திற்கு ஆளாகினர். தங்கள் தவறை உணர்ந்த ஜெய, விஜயர்கள் நாங்கள் தண்டனை அனுபவிக்கும் காலத்திலும் ஸ்ரீமந் நாராயணனையே நினைக்க வேண்டும் என்று வேண்டினர். இதை அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் முனிவர்கள் முன் தோன்றினார். முனிவர்களே! பக்தர்களாகிய உங்களுக்குச் செய்த அபசாரம் கண்டிக்கத்தக்கது. அது மட்டுமல்ல. என் ஊழியர்கள் அறியாமல் செய்த பிழைக்கு நான் பொறுப்பேற்கிறேன், அவர்கள் அதி சீக்கிரமே பூமியில் ஜனித்து சாபம் நீங்கி என் திருவடிகளை சரணடைய வேண்டும் என்றார்.

       உடனே முனிவர்கள் இவர்கள் இருவரும் வெகுசீக்கிரமே அரக்கர்களாக பிறந்து உன்னை அடைவார்கள் என்றார். இவர்கள் தான் இப்போது திதியின் கருவில் இருக்கும் ஜெய, விஜயர்கள் என்று சொல்லி முடித்தார். திதி நூறு வருடங்கள் சென்றதும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவர்கள் பூமியில் ஜனனம் ஆகும் போது பல கெட்ட சகுனங்கள் பூமியின் தோன்றின. முதலில் பிறந்தவன் ஹிரணிய கசிவு என்றும், இரண்டாவது பிறந்தவன் ஹிரண்யாட்சன் என்றும் பெயரிடப்பட்டனர். விரைவிலேயே அவர்கள் பூதாகாரமாக மலை என வளர்ந்து நின்றனர். அவர்கள் செய்த அட்டூழியங்களைக் கண்டு மூன்று உலகமும் நடுங்கியது. இதற்கு காரணம் பிரம்மாவிடம் யாருக்கும் இல்லாத பராக்கிரமத்தைக் கேட்டுப் பெற்ற வரத்தின் விளைவே ஆகும். ஹிரண்யாட்சன் தேவர்களை ஓட ஓட விரட்டினான். மிகவும் துன்புறுத்தினான். இதனால் தேவர்கள் அனைவரும் காணாமல் போயினர். இவன் அவர்களைத் தேடி பாதாள லோகத்திற்கு செல்ல சமுத்திரத்தில் மூழ்கினான். சமுத்திர ராஜனான வருணனை யுத்தத்திற்கு அழைத்தான். ஹிரண்யாட்சனிடம் யுத்தம் செய்து பலன் எதுவும் இல்லை, பிரம்ம வரத்தால் பராக்கிரமம் கொண்ட இவனை ஜெயிக்க முடியாது என்பதை வருணன் உணர்ந்தான். அசுர முதல்வனே! உன் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன். தினவு எடுக்கும் உன் தோள்களுக்கு சிறந்த விருந்து தர ஸ்ரீ ஹரி ஒருவராலே முடியும். நீ அவரைத் தேடிச் சென்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள் என்று தந்திரமாக பதில் கூறினான். வருணன் இவ்வாறு சொன்னதும் ஹிரண்யாட்சன் கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை செய்த வண்ணம் ஹரியைத் தேடி புறப்பட்டான். அவன் வைகுண்டத்தை நோக்கிப் போகும் சமயம் அவனை நாரதர் தடுத்தார். 

        அசுர தலைவனே! உன்னிடம் கொண்ட அச்சத்தால் தேவர்கள் எங்கோ ஓடி ஒளிந்தார்களே, நீ இப்போது எங்கே போகிறாய், என்றார். நான் ஹரியைத் தேடி வைகுண்டம் போகிறேன். அங்கே போனால் தான் தினவு எடுக்கும் என் தோள்களுக்குத் தகுந்த தீனி கிடைக்கும் என நினைக்கிறேன்! என்றான். நல்ல காரியம் செய்யப் போகிறாய், ஆனால் நீ தேடிப் போகும் ஸ்ரீஹரி வைகுண்டத்தில் இல்லை. பாதாளத்தின் கீழ் அழுந்திக் கிடக்கும் பூமியை வெளிப்படுத்த சென்றிருக்கிறார். அப்படியா? இதோ பாதாள லோகத்திற்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு பாதாளத்திற்குள் புகுந்தான். அங்கே ஸ்ரீஹரி பகவான் வராக மூர்த்தியாக எழுந்தருளி தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியைத் தமது கோரப்பற்களால் தாங்கி மேலேற்றிக் கொண்டு இருந்தார். இந்தக் காட்சியைக் கண்ட ஹிரண்யாட்சன் சிரித்தான். பன்றி வடிவில் இருந்த பகவானைக் கேலி செய்தான். பகவான் அவனுடன் யுத்தம் செய்ய ஆயத்தமானார். இரண்டு மலைகள் மோதுவது போல மோதிக் கொண்டனர். யுத்தத்தை நேரில் காண பாதாள லோகத்திற்கு தேவர்களுடன், பிரம்மா வந்து சேர்ந்தார். அண்ட சராசரங்களும் அப்போது கிடுகிடுத்தன. ஹிரண்யாட்சன் தன் கதையை எடுத்து ஹரியை நோக்கி வீசினான். அதை ஹரிபகவான் தன் சக்கராயுதத்தால் தடுத்தார். பின் ஹிரண்யாட்சனின் மாய லீலைகளால் லட்சக்கணக்கான அசுர கணங்கள் ஆயுதங்களோடு தோன்றின. தன் சுதர்சன சக்கரத்தால் அத்தனையையும் அழித்தார் ஹரி பகவான். 

         பிரம்மா அந்நேரம் ஹரியைப் பார்த்து, சந்தியா காலம் நெருங்குவதற்குள் அவனை அழித்து விடுமாறு கூறினார். ஹரியும் அவ்வாறே ஹிரண்யாட்சனின் காதோரம் லேசாக ஒரு தட்டு தட்டினார். அவன் விழிகள் பிதுங்கி மரம் போலச் சாய்ந்தான். அந்நேரம் தேவர்கள் ஸ்ரீஹரியைப் போற்றி துதித்துப் பாடினர். பாதாளத்தில் அழுந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்து நிலை நிறுத்தினார். அவனுடன் யுத்தம் செய்ததால் அவர் உடல் முழுவதும் சூரியனைப் போல் சிவந்து காணப்பட்டது. பிரமாதியர் அப்பொழுதும் இடைவிடாது வேத தோத்திரங்கள் செய்தனர். அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த பகவான் அகமகிழ்ந்து சாந்தமாகி அந்தர்த்தானம் ஆனார். பிரம்மன் சுவாயம்புமனுவை அழைத்தார். நீ உன் பிரஜைகளுடன் பூமண்டலத்தை அடைந்து ஆட்சி செய்து வாழ்வாயாக! என்று அனுக்கிரகித்தார்.      

       பின்னர் சுவாயம்புமனுவும், சத்ரூபாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து பிரியவரதர், உத்தானபாதர் என இரண்டு ஆண் குழந்தைகளும், ஆஹுதி, தேவஹுதி, ப்ரசூதி என்ற மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களுமே ஆதிமனிதர்கள் ஆவர். இந்த வராகஅவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீவராகவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீவராகவதாரம்* 

 *பகுதி 05* 

 *திருமலை* *திருவேங்கடம்* 

    திருமால் வராஹ அவதரம் எடுத்து பூமாதேவியை பாதாள லோகத்தில் இருந்து மீட்டு பின் தன் இருப்பிடமாக திருமலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கேயே வசிக்கலானார். அதனால் அந்த இடத்திற்கு வராஹ ஷேத்ரம் என்ற பெயரும் வந்தது. நைமிசாரண்யத்தில் முனிகளும் ரிஷிகளும் சூத பௌராணிகரிடம் எந்த ஸ்தலம் மஹா விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமானது என்று கேட்டனர். அதற்கு அவர் திருமலையை சுட்டிக் காட்டினார். அந்த மலைக்குக் கேட்டதைக் கொடுக்கும் பலமும் வந்து வணங்குவோர்க்கு அனைத்துச் செல்வங்களையும் தரும் சக்தியும் இருப்பதை எடுத்துரைத்தார். ஒரு யுகம் அழிந்து மறு யுகம் பிறக்க வேண்டிய வேளை வந்தது. மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது. அதில் பூமியும் கரைந்து பாதாள லோகத்துக்குச் சென்று விட்டது. அதனால் மாஹா விஷ்னு வெள்ளை பன்றி ரூபத்தில் பாதாள லோகத்திற்குச் சென்று ஹிரண்யாக்‌ஷன் என்ற கொடிய அரக்கனுடன் போரிட்டு பூமியை மீட்டு வந்தார். புது யுகம் பிறந்தது. இந்த காலம் ஷ்வேத வராஹ கல்பம்! பூமியை ஸ்திரப்படுத்திய பின்னர் மஹாவிஷ்ணு (பூவராஹர்) கருடனை அழைத்து, வைகுண்டத்தில் இருந்து க்ரிடாசலாவையும் தேவர்களையும், விஷ்வக்சேனரையும் கொண்டுவரச் செய்தார். க்ரிடாசலா ஒரு தேவ மலை. தங்கமும், வைரமும், வைடூரியமும் நிறைந்தது. வானளாவிய மரங்கள், நறுமணம் கமழ்கின்ற மலர்கள் நிறைந்த பூங்காவனம் அது. பறவைகள் இனிய கானங்களை எழுப்பிய வண்ணம் இருக்கும் ஒரு ஆனந்த மலை அது! கின்னரர்களும் பாட்டு இசைத்து சலசலத்து ஓடும் நீரோடைகளுக்கு இணையாக இனிய ஒலியை எழுப்பிய வண்ணம் இருப்பர். மொத்ததில் ஹரியின் உறைவிடமாக இருக்க முழுத் தகுதி நிறைந்த வாசஸ்தலம் அந்த நாராயண மலை! அந்த மலையை வராஹர் எந்த புனிதமான இடத்தில் வைக்க வேண்டும் என்று கருடனுக்கு உத்தரவு இட்டார். நீண்ட மலையானது ஆதிசேஷனை ஒத்து இருந்தது. அங்கு அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்ந்து வந்தனர். வருவோர்க்கு மோக்‌ஷம் அளிக்கும் இடமாக அது ஹரியின் அருளால் மாறியது. அந்த மலையில் ஸ்வேத வராஹராக மஹாவிஷ்ணு வாசம் செய்ய ஆரம்பித்தார். பக்கத்திலேயே ஸ்வாமிபுஷ்கரணி என்ற புனித குளம் உதயமாயிற்று. அதற்கு தெற்கு புரத்தில் தான் பின்னாளில் சங்கு சக்கரதாரியாக ஶ்ரீனிவாச பெருமாள் திருமகளுடன் வீற்றிருக்கப் போகிறார். இந்த மலைக்குப் பல பெயர்கள் உள்ளன. அதில் சில, சிந்தாமணி, நாராயணாத்ரி, சிம்மாசலம், சேஷாசலம் ஆகியவை. ஒரு சமயம் விஷ்ணு நாரதரிடம் வைகுண்டத்தை விட்டு சில காலம் வேறு இடம் தங்க வேண்டும், நல்ல இடமாகச் சொல் என்றாராம். நாரதர் சொன்ன இடம் இதே சேஷாசலம் இருக்கும் இடம் தான். ஆனால் அது எப்படி உருவானது என்பதற்கு ஒரு உப கதை உள்ளது. ஒரு சமயம் வாயுவும் ஆதிசேஷனும் யார் பலசாலி என்று சண்டை இட்டனர். சேஷன் மேரு மலையை தன் பாம்பு உடலால் நன்றாகச் சுற்றிக் கொண்டு வாயுவை அழைத்து நகர்த்த முடியுமா பார் என்று சவால் விட்டார். வாயு எவ்வளவு முயன்றும் மலையை நகர்த்த முடியவில்லை. அப்பொழுது ஆதிசேஷன் மூச்சு விட வாயைத் திறந்த பொழுது வாயு அவருக்குள் புகுந்து மலையின் ஒரு பகுதியை ஊதித் தள்ள ஆரம்பித்தார். பல யோஜனை தூரங்கள் பறந்து சென்ற பின் மேரு வாயுவிடம் அந்த மலையை அங்கேயே விட்டுவிடுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டது. ஆதிசேஷனுக்கு அவமனமாகப் போய் விட்டது. தன் தோல்வியை எண்ணி வெட்கி விஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்தார். மஹாவிஷ்ணுவும் அவர் முன் தோன்றி ஒரு வரம் அளித்தார். ஆதிசேஷன் தான் ஒரு மலையாக மாறி விஷ்னு அவர் தலை மேல் வாசம் செய்யவேண்டும் என்றும் அந்த மலைக்கு சேஷாசலம் என்றும் பெயரிடப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இன்னுமொரு கதை உள்ளது. ஒரு முறை நிறைய முனிவர்கள் சேர்ந்து கங்கைக் கரையில் ஒரு யாகம் நடத்தினர். அங்கு வந்த நாரதர் அந்த யாகம் எந்த பகவானுக்காக நடத்தப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பினார். அதுவரை அதைப் பற்றி யோ ஐக்கியமாகி இவரை கண்டுக் கொள்ளவில்லை. பிறகு ப்ருகு வைகுண்டம் சென்றார். அங்கேயும் இதே கதை தான். திருமால் திருமகளுடன் ஆனந்தமாக இருந்தார். கோபம் வந்து ப்ருகு முனிவர் திருமாலின் மார்பில் காலால் எட்டி உதைத்தார். உடனே எழுந்த மாஹா விஷ்ணு ப்ருகு முனியின் பாதங்களைப் பற்றி என்னை உதைத்ததில் உங்கள் கால் வலித்திருக்குமே என்று பிடித்து விட்டார். அதனால் முனிவர் திரும்பி சென்று யாகத்தின் பிராசதத்தை விஷ்ணுவிற்கே அளிக்கவேனண்டும் என்று எடுத்துரைத்தார். ஆனால் மஹாலக்‌ஷ்மி தன் வாசஸ்தலமான பெருமாளின் இதயத்தை ப்ருகு முனிவர் உதைத்து விட்டதால் கோபம் கொண்டு பூலோகம் வந்து கோலாபூரில் குடிகொண்டார். தனிமையில் வாடிய திருமால் அங்கும் இங்கும் திரிந்து பின் சேஷாசலத்தை அடைந்தார். அந்த இடம் பிடித்துப் போய் ஸ்வாமி புஷ்கரணியின் கரையில் ஒரு எறும்புப் புற்றில் வசிக்கத் தொடங்கினார். அவரின் வராஹ தோற்றம் அதி பயங்கரமாக இருந்தது. தேவர்களும் முனிவர்களும் பிரார்த்தித்துக் கொண்டதன் பேரில் வராஹ பெருமான் அழகிய ரூபத்தை எடுத்துக் கொள்ள இசைந்தார். ஶ்ரீதேவி பூதேவியுடன் அங்கு வசிக்க வாக்குக் கொடுத்தார். இந்த மலைக்குப் பல கல்யாண குனங்கள் உண்டு. விரஜா நதியைப் போல கங்கையின் பிறப்பிடமான இந்த மலைக்குப் பாவங்களை போக்கும் வல்லமை உள்ளது. பார்ப்பதற்கு சாதாரண மலையைப் போல இருந்தாலும் பக்தர்களின் பக்தி இந்த மலையில் புனிதமடைகிறது. பக்தியின் சக்தி பன்மடங்காகப் பெருகி கேட்ட வரத்தை அடையச் செய்கிறது. அதே போல ஸ்வாமிபுஷ்கரணியில் நீராடினாலும் பாவங்கள் தொலைகின்றன. வெங்கடேச பெருமாள் பல லீலைகளை மலையில் நிகழ்த்தி இருக்கிறார்.  ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம், தொல்காப்பியத்தில் இத் திருமலையைப் பற்றி "வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறு நல்லகம்" என்று குறிப்பும் உள்ளது. சிலப்பிதிகாரத்தில் "நெடியோன் குன்றம்" என்று திருமலையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்த பாடல் வேங்கடமே விண்ணோர் தொழுவதும் மெய்ம்மையால் வேங்கடமே மெய்வினை நொய்தீர்ப்பதுவும் —வேங்கடமே தானவரை வீழத் தானாழிப் படைத் தொட்டு வானவரைக் காப்பான் மலை. 

 *எண்ணற்ற இடங்களில்* 
 
     மத்திய பிரதேசத்திலுள்ள கஜுராஹோ எண்ணற்ற ஆலயங்களைக் கொண்ட ஒரு கலைக் கூடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற சூரியனார் கோயிலும் இங்குதான் உள்ளது. சத்ரப்பூர் மாவட்டம் கஜுராஹோ கிராமத்தில் லட்சுமணா ஆலயத்திற்கு எதிராக அமைந்துள்ள வராஹர் சிற்பம் கிபி 900க்கும் 925க்கும் இடையே செதுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒன்பது அடி நீளமும் ஆறு அடி உயரமும் கொண்ட இந்த வராஹர் சிற்பத்தில் 672 சிற்பங்கள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டிருப்பது பார்ப்போரை வியக்க வைக்கின்றன.  நாசித்துவாரங்களுக்கும் வாய்க்கும் இடையே வீணை ஏந்திய  சரஸ்வதி காட்சி தருகிறாள். வராஹத்தின் காலடியில் பூமியைத் தாங்கியிருப்பதாகக் கருதப்படும் ஆதிசேஷன் காட்டப்பட்டுள்ளார். அடுத்து மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஏரன் ஊரில் உள்ள வராஹர் ஆலயத்தில் கிபி 510ம் ஆண்டைச் சேர்ந்த குப்தர் கால கல்வெட்டுகள்  உள்ளன.
இங்குள்ள வராஹரின்  உருவம் 14 அடி நீளம், 5 அடி அகலம், 11 அடி உயரம் கொண்டது. மத்திய பிரதேசத்தில் அமைந்த மிகவும் பழமையான,  வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாக ஏரன் கருதப்படுகிறது. பன்றியின் ஒரு கொம்பை பிடித்துக் கொண்டு பூதேவி நின்று கொண்டிருப்பது போல இந்தச் சிற்பத்தில்  காட்டப்
பட்டுள்ளது. கஜுராஹோ மற்றும் ஏரன் வராஹர் சிலைகளையடுத்து மிகப் பழமையானது ஜபல்பூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நகரமான மஜ்ஹோலியில் உள்ள  வராஹர் சிற்பமாகும். இந்தச் சிற்பம் 11வது நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு ஒரு சதுர கருவறையில் வராஹர் சிற்பம் உள்ளது. கருவறை  நுழைவாயிலில் கங்கை, யமுனை சிற்பங்களும், மேற்புறம் விஷ்ணு, நவகிரகங்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன.

    கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் அனக்கரா என்னுமிடத்தில் அமைந்த பன்னியூர் ஸ்ரீவராகமூர்த்தி ஆலயம், தொடுப்புழா அருகில் பண்ணூர் என்னுமிடத்தில் உள்ள ஸ்ரீவராக ஸ்வாமி ஆலயம்

ஞானப்பிரானயல்லால் நான் கண்ட நல்லதுவே......

  *ஆழ்வார் எம்பெருமானார்* *ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளைமுதல்  ஸ்ரீநரசிம்மாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கர்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment