Friday, June 18, 2021

Ragnyee- Periyavaa

_வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்_

*ராஜ்ஞீ*

கிராமாஹூர்–தேவீம் த்ருஹிண–க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர–ஸஹசரீம் அத்ரி–தநயாம் |
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம–மஹிஷி ||
(ஸௌந்தர்ய லஹரி - ஸ்லோகம் 97)

சாஸ்திரமறிந்தோர் [அம்பிகையான உன்னையே] பிரம்மாவின் இல்லாளான வாக்தேவியாகவும் திருமாலின் பத்னியான கமலையாகிய லக்ஷ்மியாகவும், சிவபெருமானின் இல்லறத் துணைவியான மலைமகளாகவும் கூறுகின்றனர். 

நீயே [அம்மூவருக்கும் மேம்பட்ட] நான்காமவளாகவும்,  இத்தகையவள் எனக் கூறவொண்ணாதவளாகவும், அடையவொண்ணாத எல்லையற்ற பெருமை பொருந்தியவளாகவும் பரப்பிரம்மத்தின் பட்டத்தரசியான மஹாமாயையாக [இருந்து கொண்டு] பிரபஞ்சத்தை சுற்றிச் சுழற்றுகிறாய்.]

"பரப்ரஹ்ம மஹிஷி" என்று ஒரு அஸாதாரணப் பேரை இங்கே அம்பாளுக்குக் கொடுத்திருக்கிறார். பராசக்தியைத்தான் எல்லாவற்றுக்கும் மேற்பட்டதாக சாக்த சாஸ்திரம் சொல்கிறது. இந்த ஸ்தோத்ரமும் அப்படித்தான் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறது. 

அவள்தான் ஆட்சியதிகாரம் படைத்த ஸாவரின் பவர்; லோகத்திற்கு மாதா-பிதாக்களாகக் காட்டணுமென்பதற்காகத்தான் அவள் பதி ஸ்தானம் கொடுத்துக் காமேச்வரன் என்று ஒருத்தனை வைத்துக் கொண்டிருப்பது என்று நிறையச் சொல்லியிருக்கிறேன். 

ஆனால் இங்கே "பரப்ரஹ்ம மஹிஷி" என்பதற்கு என்ன அர்த்தமென்றால் -– விஸ்தரித்துச் சொல்லும்போது என்ன அர்த்தமென்றால் -– பரப்ரஹமமாக இருக்கும் ஈச்வரந்தான் ஆள்கிற ராஜா, அவனுடைய பத்னியாக இரண்டாவது ஸ்தானத்தில் இருப்பவளே அம்பாள் என்று அர்த்தம். 

'மஹிஷி' என்றால் ராஜாவின் பட்டத்து ராணி. தானே ஆட்சி செலுத்துபவளை மஹிஷி என்பதில்லை; மஹா ராஜ்ஞீ, சக்ரவர்த்தினி என்றே சொல்வது.

_ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 71 / நாமம் 306 – ராஜ்ஞீ - காமேச்வரரின் பட்ட மஹிஷி_

*பெரியவா சரணம்!*

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org*

No comments:

Post a Comment