ஶபரீ பாக்யம் - தொடர்ச்சி
மதங்காச்ரம ரிஷிகள் விதிப்படி அக்னி ஆராதனங்கள் செய்து அடைந்த புண்யலோகங்களை அடைய ஶபரீயானவள் செய்த புண்ய கார்யங்கள் என்ன?
அவள் ஔபாஸனாதிகள் செய்தாளா, அன்றி கடுந்தவமியற்றினாளா, ஆத்ம விசாரம் செய்தாளா? எதுவுமே இல்லை. பின் எப்படி அவள் புண்ய லோகங்களுக்குப் பாத்திரமானாள்?
ராமாயணத்தில் ஶபரீ முதன்முதலாக கபந்தனால் அறிமுகப்படுத்தப் படுகிறாள். அப்போது கபந்தன் கூறியதாவது ஶபரீ ஒரு ஶ்ரமணீ (உழைப்பாளி). அவள் செய்த புண்ணியம் தன் குருவினருக்குச் செய்த பரிசாரம் (சேவை). வேறொன்றுமில்லை. வெறும் பரிசாரம் எப்படி மோக்ஷ ஸாதனமாயிற்று?
இந்தவிடத்தில் சில சாஸ்த்ர விஷயங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு, மேலே யோசிக்கலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறப்பிற்கேற்ப கர்மாக்கள் உண்டு (ஸந்த்யாவந்தனாதிகள், தேவதார்ச்சனம் போன்றவை). அந்த கர்மாக்களைக் குறைவின்றிச் செய்து சித்தசுத்தியினால் அதற்கு மேலான நிலைமைகள் (ப்ரஹ்மஞானம் அல்லது பகவான் திருவடி, ஸ்வர்க்க ப்ராப்தி போன்றவை - depending on the stage of the person on his spiritual journey). இந்தக் கர்மாக்களை செய்யாமல் விடுபவன் ப்ரஷ்டன், தன்னுடைய கர்மாவை விட்டுவிட்டு அடுத்தவனுடைய கர்மாவைச் செய்பவன் ப்ரவிஷ்டன். இருவரும் பாவிகள். பலனேதும் அடைவதில்லை. (தற்போது உங்களுக்கு ஸந்த்யாவந்தனம் செய்யாமல், நவ குருமார்கள் சேர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் intellectual ஆக பகவத்கீதையையும், உபநிஷத்களையும் மனம் போன போக்கில் வ்யாக்யானம் பண்ணிக்கொண்டு அதே சமயம் லௌகிஹத்தில் பணத்திற்காகவும், புகழுக்காகவும், சுகங்களுக்காகவும் எல்லாவிதமான தகிடுதத்தங்களையும் செய்து கொண்டு, அந்த தகிடுதத்தங்களை justify செய்ய பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் Do your duty என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்வோர் நினைவிற்கு வரலாம். அவர்கள் ப்ரஷ்டர்கள், ப்ரவிஷ்டர்களே!)
இங்கே ஶபரீ தன் குருவினரை copy அடிக்கவில்லை. நானும் மந்திரம் சொல்வேன், அக்னிஹோத்ராதிகள் செய்வேன் என்று புறப்படவில்லை. அவளுக்கு உரித்தான தர்மத்தை எந்தவித விக்னமுமின்றிச் செய்தாள். அவளுடைய பரிசாரமே மிகப்பெரிய யஞ்ஞம். அவளுடைய யஞ்ஞமானது அவளுக்கு ஞானத்தை அளித்தது. வேதமாதாவானவள் இவ்வாறு நிகழுமென்பதை உரைக்கிறாள்.
'ஆயுர் யஞ்ஞேன கல்பதாம்
ப்ராணோ யஞ்ஞேன கல்பதாம்
அபானோ யஞ்ஞேன கல்பதாம்
வ்யானோ யஞ்ஞேன கல்பதாம்
சக்ஷுர் யஞ்ஞேன கல்பதா ्ँ
ச்ரோத்ரம் யஞ்ஞேன கல்பதாம்
மனோ யஞ்ஞேன கல்பதாம்
வாக் யஞ்ஞேன கல்பதாம்
ஆத்மா யஞ்ஞேன கல்பதாம்
யஞ்ஞோ யஞ்ஞேன கல்பதாம் - யஜுர் வேத ஶ்ரீ ருத்ரம்- சமகம்'
இதற்குச் சமமான ஒரு கதையும் சாந்தோக்யத்தில் உள்ளது. கௌதமரிடம் ஸத்யகாம ஜாபாலன் சிஷ்யனாகிறான். அவர் அவனிடம் இளைத்தும் பலங்குன்றியுமிருந்த 100 பசுக்களைக் கொடுத்து அவற்றைப் பாலிக்கச்சொலகிறார். அவன் அப்பசுக்கூட்டத்தை ஆயிரமாக்காமல் திரும்பேன் எனக்கூறி அவற்றை ஓட்டிச் சென்றான். பல வருஷங்கள் வெளியே வசித்து அந்தக்கூட்டத்தை ஆயிரமாக்கித் திரும்புகிறான். குரு பார்க்கிறார். ப்ரஹ்ம தேஜஸுடன் சிஷ்யன். அதைக்கேட்கிறார்.
'ப்ரஹ்மவிதிவ வை ஸௌம்ய பாஸி - ब्रह्मविदिव वै सौम्य भासि |'
நடந்தது என்ன? அந்தக் கூட்டத்திலிருந்த ரிஷபம், ஸமிதாதானம் செய்தபோது இருந்த அக்னி, ஸூர்யதேவன் ஒரு ஹம்ஸரூபத்தில், ஒரு நீர்க்கோழி ஆகியவை ப்ரஹ்மத்தை அவனுக்கு உபதேசித்தனர். பிறகு குருவானவர் மகிழ்ந்து தானும் உபதேசிக்கிறார்.
Ok, மீண்டும் ஶபரீயிடம் வருவோம்.
மதங்காச்ரம ரிஷிகள் ராமர் சித்ரகூடம் வந்தபோதே மேலுலகம் சென்றுவிட்டனர். அப்போதே ராமர் வருவார் அவருக்கு அதிதி ஸத்காரம் செய்துவிட்டு எங்களை அடைவாய் எனவும் கூறிவிட்டனர். ஶபரீ அவர்கள் சொன்னதை சிரமேற்கொண்டு சிரத்தையாக பத்து வருடங்களுக்கும் மேலாகக் காத்திருக்கிறாள். ராமனுக்குத்தேவையாகவிருக்குமென வனப்பொருட்களைச் சேர்த்து வைக்கிறாள். குருவாக்யத்தில் அவ்வளவு சிரத்தை. விவேகசூடாமணி ச்லோகத்தை நினைவு படுத்துகிறது இந்த இடம்
சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய ஸத்யபுத்த்யவதாரணம்|
ஸா ச்ரத்தா கதிதா ஸத்பிர்யயா வஸ்தூபலப்யதே|| - விவேகசூடாமணி
ராமர் ஶபரீக்கு மோக்ஷத்தைத் தரவில்லை. ராமர் ஶபரீ மோக்ஷத்திற்கு சாக்ஷியாக இருந்தார். மோக்ஷத்திற்கு அவள் தயாரானாளா என்பதையே அவர் கேட்கிறார் "உன் விக்னங்கள் ஜெயிக்கப்பட்டதன்றோ? உன் தவம் வளர்கின்றதன்றோ? க்ரோதம், ஆஹாரம் கட்டுப்பட்டுள்ளதன்றோ? சாருபாஷிணி! உன் நியமங்கள் அடையப்பெற்றதன்றோ? உன் மனம் ஸுகமாக உள்ளதன்றோ? உன் குரு சுஷ்ருஷை பலனுடன் கூடியதாயிற்றன்றோ?". ஒரு பரமகுருவானவர் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நடந்து கொள்கிறார் ராமர். உண்மையில் ராமர் சொல்லொணாத்துயரில் இருந்த நேரமது. ஆனால் ஶபரீயிடத்தில் அதைப் பற்றி அவர் எந்த ப்ரஸ்தாபமும் செய்யவில்லை. குருகீதையில் வரும் சொல்லப்படும் லக்ஷணங்களை ஞாபகப்படுத்துகிறது இந்த இடம்.
सर्वधीसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि ||
ஸர்வதீஸாக்ஷிபூதம் பாவாதீதம் த்ரிகுணரஹிதம் ஸத்குரும் தம் நமாமி|| - குருகீதை
அதன்பின்பு ராமருக்கு ஆச்ரம வனங்களை காண்பித்தவுடன் அவசர அவசரமாக ஶபரீ உடலைத்துறக்க அனுமதி கேட்கிறாள். அரவிந்தலோசனனான ராமரைக் கண்டால், பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றுமே! இருந்தும் அவள் அந்தப்பற்றை அடையவில்லை. பற்றற்ற நிலை. அவள் எல்லாக்காரியங்களையும் முடித்து விட்டாள். அதன்பின்னர் உடல் என்பது அவளுக்கு களேபரமாகிப் போகிறது. அதை ம்ருத்யுஞ்சய மந்திரத்தில் வரும் வெள்ளரிப்பழம் கொடியிலிருந்து விடுவது போலத் துறக்க விரும்புகிறாள். அவ்வாறே ம்ருத்யுவை ஜெயிக்கிறாள்.
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாsம்ருதாத்|| - யஜுர்வேத ஶ்ரீ ருத்ரம் - நமகம்
அதனால் தான் த்யாகப்ரஹ்மம் ஶபரீ பாக்யத்தை வியந்து பாடுகிறார். அந்த பாக்யத்தை இறைஞ்ச, நினைவில் கொள்ள முசிறி சுப்ரமணிய ஐயரின் பாடல் இதோ -
No comments:
Post a Comment