Thursday, March 25, 2021

matsya avatar

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீமத்ஸயாவதாரம்* 

 *பகுதி 06* 

 *நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில்* 
         தமிழ்நாடு-ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டை அருகில்  முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகலாபுரத்தில் காணலாம்.

    இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே.

     மூலவர் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி–பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது.

   ஆண்டுதோறும் நடைபெறும் சூரிய பூஜையுடன் கூடிய தெப்பத் திருவிழாவும், பிரம்மோத்ஸவமும் முக்கியமானவை.

        மூலவர் மீது சூரிய ஒளி: ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதத்தில் சில நாட்கள் மூலவர் நாராயணன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகிறது. மேற்கு திசையை பார்த்து நிற்கும் நாராயணன் மீது, 25ம் தேதி பாதங்களிலும், இரண்டாம் நாள் 26ம் தேதி நாபியிலும் (வயிறு), மூன்றாம் நாள், 27ம் தேதி சுவாமியின் சிரசிலும் (தலை) சூரிய ஒளிக்கதிர்கள் விழும்.

 *ஜோதிடர்கள்* 

வேதத்தை மறைஎன்றும் கூறுவார்கள். எனவேதான் வேதத்திற்க்கும் மீன ராசிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கால புருஷ ராசியில் பன்னிரெண்டாமிடமாகிய மறைவு ஸ்தானத்தை குறிக்கும் மீன லக்ன ராசி காரர்கள் வேதத்திலோ அல்லது வேதத்தின் கண்கள் என போற்றப்படும் ஜோதிடத்திலோ சிறந்து விளங்குவார்கள்.

மீனராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரன் 4ம் பாதங்களும் மீன ராசிக்குரியவையாகும். சம ராசியான இது பகலில் வலுப்பெற்றதாகும். எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும் இவர்கள் பக்கம் வீசிக்கொண்டே தானிருக்கும்.

    மத்ஸ்யாவதாரத்தைப் பற்றி மத்ஸ்ய புராணம், மகாபாரதத்தில் வனபர்வம், பாகவதத்தின் எட்டாம் மற்றும் இரண்டாம் ஸ்கந்தம் ஆகிய இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. தசாவதாரத்தின் மேல் பல ஸ்தோத்திரங்கள், பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. தாச சாகியத்திலும் சொல்லப்பட்டுள்ளது. 

 *மத்ஸ்யாவதாரத்தை பூஜிக்கும் வழிமுறை* 

படத்தை வைத்து பூஜிக்கும் வழிமுறை இல்லை. ஆனால், மத்ஸ்ய சாலிக்ராமம் மிகவும் அரிதானது. மத்ஸ்ய சாலிக்ராமத்தை பூஜிப்பதால் சிறந்த செல்வம் மற்றும் கல்வியை பெறலாம். வால் பகுதியில் ஒரு சக்கரம், வாய் பகுதியில் இரு சக்கரங்கள், கண்களைப் போல் நீளமாக இருந்தால், அதனை 'மத்ஸ்ய சாலிகிராமம்' என்று அழைக்கின்றனர். 
 
 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளைமுதல்  கூர்மாவதாரம்  பற்றி காணலாம் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment