Wednesday, November 25, 2020

Bharani deepa

வரும் சனிக்கிழமை பரணி தீபம் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை தீபம்
------------------------------
பரணி தீபத்தின் உட்பொருள்: 
பரம் பொருளானது அங்கிங்கெனாதபடி எங்கும்   பேரொளி மயமாக நிறைந்திருக்கின்றது என்பதை காட்டுகின்றது. இன்பப் பொருள் எல்லா உயிர்களுக்கும் கருனை காட்டும் பொருள், எண்ணிலடங்காமல்  பரந்து விரிந்து செறிந்து நிற்கும் அகண்ட  கோடி உயிர்களையும் தன்னகத்தே அடக்கிக்    கொண்டிருக்கிற    பொருள், எல்லா உயிர்களையும் இயக்கும் பொருள், மன வாக்கிற்கும் எட்டாமல் நிற்கின்ற பொருள். பிறப்பிறப்பு  இல்லாத  எல்லாம் வல்ல எங்கும் உள்ள பரம் பொருள் ஐந்தொழில்      செய்ய பஞ்ச மூர்த்திகளாவதை விளக்குவது பரணி தீபம்.

 இவ்வாறே உண்ணாமுலை  அம்மனின் சன்னதியிலும் ஐந்து தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இவை பஞ்ச சக்திகளை குறிக்கின்றன. பின்னர் வினாயகர், முருகர் முதலிய அனைத்து சன்னதிகளிலும் காலை தீபம் ஏற்றப்படுகின்றன. சிவ சக்தி ஐக்கியத்தில் தான் இந்த பிரபஞ்சம் முழுவதும் தோன்றியது என்பதை உணர்த்த.  மாலை இந்த தீபங்கள் அனைத்தும் அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்படுகின்றன. இறுதியில் அனைத்து உயிர்களும்  அந்த பரமேஸ்வரரின் திருவடிகளில் தான்  ஒடுங்குகின் றது என்பதை உணர்த்த.   அண்ணா மலையாரின் தீபத்தில் இருந்து ஏற்றப்பட்ட ஐந்து தீபங்களில் ஒன்று தான் திருவண்ணாமலை உச்சிக்கு பரதவ குல மக்களால் ஒரு மண் பானையில் வைத்து எடுத்து  செல்லப்படுகின் றது மஹா தீபத்திற்காக.
 
காலை முதலே திருவண்ணாமலை நகரமெங்கும் மக்கள் கூட்டம் வந்து குவியத் துவங்குகின்றது, அதே சமயம் மலை உச்சியில் பரதவ (செம்படவர்) குல மக்கள் மஹா  தீபக்கொப்பரையை  தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். மஹா தீப கொப்பரை தாமிரத்தால் ஆனது 92 கிலோ செம்பு மற்றும் 110 கிலோ இரும்பு சட்டங்கள்   கொண்டு தயாரிக்கப்பட்டது இந்த இராட்சச கொப்பரை. இதன் உயரம் 7 அடி,கொள்ளவு  சுமார் 3500 கிலோ நெய், அதில் போடப்படும் திரி  1000 மீட்டர் காடாத்துணியால் தயாரிக்கப்படுகின்றது. தீபம் ஏற்றிய பின் இடைவிடாது 11 நாட்கள ஒளி தரும். இதன் ஒளி சுமார் 15 கி.மீ தூரம் சுற்றளவு ஒளிர் விடுகின்றது.  தீபத்திற்கு நெய்க்குடம் செலுத்த வேண்டிய பக்தர்கள் அந்த நெய்க்குடத்தை தங்கள் தலையில் சுமந்து சென்று  புண்ணிய மலை ஏறி  தங்கள் காணிக்கையை  செலுத்து கின்றனர். நேரம் செல்ல செல்ல அனைவரது எதிர்பார் ப்பும் அந்த  மஹா தீபம் ஏற்றப்படும் தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றது. ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும் பக்தர்களில் பலர் காலையில் இருந்தே உண்ணாமல் உமாமஹேஸ்வர  விரதமிருக்கி ன்றனர். அவர்கள் தீப தரிசனம் கண்ட பிறகே  உணவு உண்பர். இன்று ஐயனுக்கு அவலாலும், பொரியாலும் உருண்டை பிடித்து இறைவனுக்கு நிவேதனம் செய்கின்றனர்.  அண்ணாமலையானுக்கு அரோகரா என்னும் மந்திரமும் ஓம் நமச்சிவாய என்னும் மந்திரமும் எங்கும் ஒலிக்கின்றது.
 
மாலை 4:30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பஞ்ச மூர்த்திகள் விநாயகர் தொடங்கி        ஒவ்வொருவராக மூன்றாம் பிரகாரத்தில் , கொடி மரத்திற்கு எதிரில்  தீப தரிசன மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றனர். தீப தரிசன மண்டபத்தில் இருந்து மலை உச்சி  தெளிவாக தெரியும், எனவே தீப தரிசனம் காண பஞ்ச மூர்த்திகள் தயாராகி விட்டனர். மலையிலே சாரை சாரையாக மக்கள் கூட்டம் ஏறுவது அதிகமாக தொடங்கி விட்டது. எதிர்பார்ப்பும் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றது தாயது நோக்கும் குழந்தையைப் போல அனைவது கண்களும் மலை உச்சியையே நோக்கி திரும்பியிருக்கின்றது ஆண்டு தோறும் இலட்சக் கணக்காணோர்   தீப தரிசனம் கண்டு நன்மையடைகின்றனர்.  மெள்ள சூரிய ஒளி குறையத் தொடங்குகின்றது. அண்ணாமலையானுக்கு அரோகரா என்னும் முழக்கம் மெல்ல மெல்ல அதிகரித்துக்       கொண்டு வருகின்றது. கோவிலின் உள்ளே இருப்பவர்கள் அர்த்தநாரீசுவரர் எப்போது ஆனந்த கூத்தாடி வருவார் என்று காத்திருக்க வெளியே இருக்கும் கூட்டம் எப்போது எம்பருமான் ஜோதி வடிவில் மலை உச்சியில் காட்சி தருவார் என்று காத்திருக்கின்றனர். இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும் இன்றும் கார்த்திகை தீபத்திருநாளன்று திருவண்ணாமலை நகரிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் யார் வீட்டிலும் தீபத்திற்கு முன்னால் மாலை விளக்கு ஏற்றப்படுவதில்லை தீப தரிசனம் கண்ட பிறகே அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்றப்படுகின்றது.

அர்த்தநாரீஸ்வரர்
 
பிரதோஷ காலமாம் சரியாக மாலை ஆறு மணிக்கு  கோவிலின் உள்ளே இருந்து ஆனந்தக் கூத்தாடி அர்த்தநாரீசுவரர் வருகின்றார், தாரை தப்பட்டகள் முழங்க அவர் கொடி மரத்தில் வந்தவுடன் காலையில் ஏற்றப்பட்ட பரணி தீபங்கள் அனைத்தும்      கொடி மரத்தின் அருகில் உள்ள அகண்டத்தில் சேர்க்கப்படுகின் றன. பிரம்ம தாளம் இசைக்க அக்னி மண்டலத்தின் நடுவில் ஐயன் ஆடியதைக் குறிக்கும்  வகையில் பெரிய வட்ட வடிவ தீவட்டிகளின் நடுவில் இரண்டு நிமிடம் நடனமாடுகிறார் அர்த்தநாரீஸ்வரர். உடனே வைகுந்த வாசல் வழியாக ஒரு பாணம் வானில் செலுத்தப்படுகின் றது. அதைப் பார்த்தவுடன் மஹா தீபம்ஏற்றப்படுகின்றது, 

அண்ணாமலையானுக்கு அரோகரா என்னும் முழக்கம் வானை முட்டுகின்றது,  காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி, பேச்சிழந்து, நிலை தடுமாறி பகதர்கள் அனைவ ரும் அந்த அண்ணாமலையாரை கை குவித்து வணங்கி ன்றனர், நகரம் முழுவதும் உற்சாகம் பொங்கி வழிகின் றது, வீடுகள அனைத்திலும் விளக்குகள் ஏற்றப்படுகின் றன. நகரமே ஒரு பெரிய தீபமாக காட்சி தருகின்றது. தீப தரிசனம் சாப விமோசனம் என்று அன்பர்கள் மகிழ்ச்சி யடைந்து கிரி வலம் செல்ல துவங்குகின்றனர். அர்த்த நாரீசுவரர் எப்போதும் கோவிலை விட்டு வெளியே வருவதில்லை, அவர் தரிசனம் மஹா தீபத்தன்று மட்டும் சுமார் இரண்டு நிமிடம் மட்டுமே கிடைக்கக் கூடியது. சிவ பரம் பொருளில் இருந்து தோன்றிய அனைத்து தீர்த்தங்களும் மீண்டும் ஒன்றாக அந்த பெருமானிடத்திலேயே ஒடுங்கும் என்பதைக் குறிப்பதே மஹா தீபம்

Thanks Sri Sekar Krish

No comments:

Post a Comment