Wednesday, November 25, 2020

Uttana ekadashi

॥ श्रीगुरुभ्यो नम:। धर्मो रक्षति रक्षित:|| 
अपार करुणा सिन्धुं ज्ञानदं शान्तरूपिणम् । श्री चन्द्रशॆखर गुरुं प्रणतॊऽस्मि मुदाऽन्वहम् ॥
वागीशाद्या: सुमनस: सर्वार्थानामुपक्रमे ।यन्नत्वा कृतकृत्यास्यु: तं नमामि  गजाननम्  ॥

நமது ஸநாதன தர்மத்தில் விரதங்களில் பலவிரதங்கள்  உள்ளது. அவைகளில் முதன்மையானது   மாதம் இருமுறையாக வருடத்தில்  இருபத்திநான்கு ஏகாதசி வரும். விரதங்களில் ஏகாதசி மட்டும்தான் அவசியம் கடைபிடிக்கவேண்டியதாக சாஸ்திரம் கூறுகின்றது. மற்ற விரதங்கள் காம்ய விரதமாக (அதாவது  பலனுக்காக ) கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எகாதசி விரதத்தை தகுதியுள்ள 5 வயது முதல் 80 ) வயது வரை உள்ள அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும். மேற்கூறியபடி  தகுதியுள்ளவர்கள்   ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கவில்லையென்றால் அது சாஸ்திரப்படி தோஷ்மாகும்.(குற்றமாகும்)  அப்படி மிகமுக்கியமான இந்த ஏகாதசி விரதங்களில்  மூன்று ஏகாதசி   மிக விசேஷமாக கூறப்பட்டுள்ளது. அவைகள்

1.)     சயன ஏகாதசி-   ஆனி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு வரும் ஏகாதசி (ஆஷாட சுத்த ஏகாதசி ) - ஆகும். இதில்  மஹாவிஷ்ணு சயனிக்கின்றார் . )

2.)   பரிவர்த்தனை ஏகாதசி - இது ஆவணி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு வரும் ஏகாதசி (பாத்ரபத சுத்த ஏகாதசி) இதில் மஹாவிஷ்ணு      திரும்பி சயனிக்கின்றார்.

3.)  உத்தான ஏகாதசி. - இது ஐப்பசி மாதத்தில் வரும் அமாசைக்குப் பிறகு வரும்    ஏகாதசி (கார்த்திக சுத்த ஏகாதசி) ஆகும். இதில் மஹாவிஷ்ணு  துயிலெழுகின்றார். 

இந்த விசேஷமான மூன்று ஏகாதசிகளில் மிகவும் முக்கியமானதும் விசேஷமாக கடைபிக்கவேண்டியதுமான     உத்தான ஏகாதசி என்று சொல்லக்கூடிய  ஏகாதசி. இந்த உத்தான ஏகாதசியில் விரதம் இருந்தால் அந்த ஆண்டில் வரும் 24ன்கு ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பதாகும். இந்த ஏகாதசிதான் பெரிய ஏகாதசியாக இந்தியா முழுதும் கொண்டாடப்படுகின்றது. 

இந்த உத்தான ஏகாதசி விரதமிருந்து மறுநாள் பிருந்தாவன துவாதசியாக   கொண்டாட வேண்டும். அன்று   துளஸீதேவி, மஹாவிஷ்ணு விவாஹம் செய்து வைத்து ,பூஜித்து பக்தியுடன் தியானித்து அவரவர் சக்திக்குத்தகுந்தவாரு தானம் செய்து இறையருளுக்கு பாத்திராகவேண்டும்.. .

இப்போது   குறிப்பாக    தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி இக்கலியுகத்தில் மஹான்களால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த ஏகதசியில்தான் ஆழ்வார்களுக்கு பெருமாள் மோக்ஷம் அளித்ததாகக் கூறப்படுகின்றாது.

ஆதலால் இந்த மார்கழி அமாவாசைக்குப் பிறகு வரும் ஏகாதசியை   வைகுண்ட ஏகாதசியாக   குறிப்பாக  தமிழ் நாட்டில்  விசேஷமாகக் கொண்டாடுகின்றார்கள், இது வைணவ சம்பிரதாயமாகக் கூறப்படுகின்றது. . 

எனினும்  எல்லா ஏகாதசியும் முடிந்தவரை விரதம் அனுஷ்டித்து விஷ்ணுவை     பக்தியுடன் தியானித்து இறையருள் பெறுவோமாக.
இந்த *உத்தான ஏகாதசியானது  வைகுண்ட ஏகாதசியைவிட விசேஷமானது* ஏனெனில் இந்த உத்தான ஏகாதசி பற்றி விசேஷமாக புராணங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால்தான்  இந்த உத்தான ஏகாதசியை இந்தியா முழுவதும் கடைபிடிக்கின்றார்கள் .  ஆகையால் இந்த உத்தான ஏகாதசியை முறையாக கடைபிடித்து  மஹாவிஷ்ணுவின் ப்ரீதிக்கு பாத்திரமாவோமாக.

No comments:

Post a Comment