Monday, September 14, 2020

Shannavati Tharpanam

*31/08/2020* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் செய்யவேண்டிய ஷண்ணவதி தர்பணம் முறையை பார்த்துக்கொண்டு வருகிறோம்.*

*இந்த ஷண்ணவதி தர்பணம் நம்முடைய தகப்பனார் காலம் ஆனதிலிருந்து ஆரம்பித்து ஒரு வருடத்தில் 96 முறை வருகிறது அதை நித்தியம் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது கட்டாயம் இதை நாம் செய்ய வேண்டும் இதற்கு தான் ஷண்ணவதி தர்பணம் என்று பெயர்.*

*அம்மாவாசை முதற்கொண்டு 96 புண்ணிய காலங்கள் எல்லாம் வரும், நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து நாம் செய்யக்கூடிய தர்பணம்.*

*இந்த புண்ணிய காலங்களில் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து எதெல்லாம் நாம் செய்கின்றோமோ அது நமக்கு நிறைய பலன்களைக் கொடுக்கிறது.*

*அமாவாசையா, யுகாதி, மன்வாதி, மாதப்பிறப்பு வைகிரிதி, யதிபாதம், மஹாலயம் திரிஸ்ரோஸ்டகாஹா என்ற புண்ணிய காலங்கள். இவைகளைத்தான் ஷண்ணவதி என்று சொல்கிறோம்.*

*இதையெல்லாம் கட்டாயம் நாம் செய்யவேண்டும் செய்யாவிடில் தோஷம் வருகிறது என்பதோடு மேலும் பிராயச்சித்தம் நாம் செய்து கொள்ள வேண்டும். அதாவது சிலவற்றை செய்கிறோம் சிலவற்றை செய்வதில்லை என்ற நிலையிலேயே நாம் இருக்கிறோம்.*

*96 செய்வதில்லை மாச பிறப்புகளை மட்டும் செய்கிறோம். அம்மாவாசை மட்டும் செய்கிறோம். இந்த மகாளய பட்சத்தில் சிலவற்றை செய்கிறோம் என்றால், இதனால் அந்த 96ம் செய்ததாக ஆகாது. அமாவாசையில் செய்யக் கூடியதாக தர்ச ஸ்ராத்த்தை தர்பணம் ஆக செய்தால், வரக்கூடிய புண்ணியத்தை விட, மற்ற தர்ப்பணங்களை செய்யாது விட்ட பாவங்கள் தான் முதலில் வேலை செய்யும்.*

*புண்ணியத்தை விட பாவம் தான் முதலில் நமக்கு பலனைக் கொடுக்கும். ஆகையினாலே சிலதை செய்கிறோம் சிலதை விடுகிறோம் என்று சொன்னால் விட்டதினால் வரக்கூடிய பாவம் தான் முதலில் வேலை செய்யும்.*

*நாம் செய்த தன்னுடைய பலன்களை இன்னும் அனுபவிக்கவே ஆரம்பிக்கவில்லை என்கின்ற நிலையிலே இருக்கிறோம். நமக்கு இதிலே ஒரு சரியான விழிப்புணர்வு இல்லாததினால், முக்கியமான புண்ணிய காலங்களை தவிர்க்க விட்டதுதான் காரணம்.*

*இப்படி நாம் தவிர்த்து விடுவோம் என்பதினால் தான் தர்ம சாஸ்திரம் சில ஷண்ணவதி தர்பணம் பலன்களை  காண்பிக்கின்றது. ஏனென்றால் இந்த சிராத்தத்தை நீ செய் அது பித்ருக்களுக்கு நிறைய பலன்களை கொடுக்கும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*

*எங்கு ஒரு பலனை காண்பிக்கின்றதோ அதற்கு காம்யம் என்று தானே அர்த்தம் ஆகும். இந்த நித்தியமான கர்மாக்களில்  சிலவற்றிக்கு பலன்களை சொல்கிறது. காரணம் நமக்கு முழுமையான ஈடுபாடு வர வேண்டும் என்பதற்காகவும், அதை செய்வதினால் வரக்கூடிய பலன் இந்த ரூபமாக இருக்கட்டும் என்பதற்காகவும் தான் பலனை காண்பிக்கிறது.*

*இந்தக் காரியத்தை செய் அதனால் உனக்கு இந்த பிரயோஜனம் உண்டு என்று சொன்னால்தான் அந்த காரியத்தில் நமக்கு ஒரு ஈடுபாடு வரும். இந்த காரியத்தை செய்து அதனால் ஒன்றும் பலனில்லை என்று சொன்னால் நமக்கு ஈடுபாடு வராது அதனால் தான், நமக்கு ஆங்காங்கு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.*

*நாம் செய்வதற்காக அந்த பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் அவைகள் நமக்கு வருமா வராதா? கட்டாயம் வரும் ஏனென்றால், ரிஷிகளினுடைய வாக்கியம் நம்முடைய முழுமையான ஈடுபாடு, ஆம் செய்யக்கூடிய தான அந்த புண்ணிய காலம், இது எல்லாம் சேர்ந்து கட்டாயம் அந்தப் பலனை நமக்கு கொடுக்கும்.*

*ஆனால் நாம் இதை தவிர்த்தால் அந்தப் பாவம் தான் முதலில் நமக்கு பலனைக் கொடுக்கும். இன்று வரையிலும், நாம் செய்யக்கூடியது ஆன புண்ணிய கர்ம பலன்களை  சுவாசிக்கவே ஆரம்பிக்கவில்லை.*

*காரணம் விட்டதினுடைய பாவம் தான் இன்றுவரை நமக்கு வேலை செய்து கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஆகையினாலே, தர்ம சாஸ்திரம், அதாவது இந்த இந்த ஸ்ராத்தங்களை நீ தர்பணமாக செய், என்று வேதமும் தர்ம சாஸ்திரமும் நமக்கு காண்பிக்கின்றதோ, மன்வாதி யுகாதி போன்ற புண்ணிய காலங்கள், அதை நாம் கட்டாயம் செய்வதினால், பித்ருக்களுக்கு 2000 வருடங்கள் நிறைய திருப்தியை முழுமையாக கொடுக்கிறது என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.*

*அந்த அளவுக்கு திருப்தியைக் கொடுப்பதினால் பித்ருக்கள் நமக்கு என்னதான் செய்ய மாட்டார்கள்? நாம் கேட்க கூடியதான எந்த பலன்களையும் கொடுக்கக் கூடிய சக்தி பித்ருக்களுக்கு உண்டு.*

*தேவதைகளுக்கு இருக்கக்கூடிய சக்தியைவிட, பித்ருக்களுக்கு உள்ள சக்திகள் அதிகம். பிதுருக்களால் உடனே பலன்களை கொடுக்க முடியும். அதனால்தான் நாம் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் முதலில் பிதுர்க்களை ஆராதனை செய்கிறோம்.*

*மகரிஷிகள் சூத்திரங்களில் சொல்கின்ற பொழுது, முதலில் நாந்தீ ஸ்ராத்த்தை தான் காண்பிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களை முதலில் உத்தேசித்து செய்து விட்ட பிறகுதான் மற்றவை ஆரம்பிக்க வேண்டும்.*

*அந்தக் கர்மாவை முதலில் அவர்களுக்காக நாம் செய்துவிட்ட பிறகு அதனுடைய முழு பலன்களையும் நமக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள்.*

*அந்த அளவுக்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது அதனால்தான் ஸ்ராத்தத்தில் நாம் பிரார்த்தனை செய்கிறோம். ஸ்ரார்த்தம் பூர்த்தியாகும் பொழுது அந்த பிராமணர்களிடம் பிரார்த்தனை செய்கிறோம், ஸ்ராத்தத்தின் பலன் என்ன என்றால், பித்ருக்களை உத்தேசித்து ஒரு சிராத்தமோ அல்லது ஒரு தர்ப்பணமோ செய்வதினால், எவ்வளவு பலன்கள் கிடைக்கிறது என்றால் தீர்க்கமான ஆயுசு கிடைக்கின்றது, நல்ல சொல் பேச்சு கேட்கும் குழந்தைகள் கிடைக்கின்றது, ஐஸ்வர்யம் நிறைய கிடைக்கின்றது, வித்யாம் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு நல்ல எண்ணங்கள், என்னதான் கொடுக்கமாட்டார்கள்? அனைத்து சுகங்களையும் கொடுப்பார்கள். மோக்ஷத்தை கொடுக்கக் கூடிய சக்தி பித்ருக்களுக்கு உண்டு என்று கருட புராணம் காண்பிக்கிறது.*

*நாம் எந்த காரியத்தையும் செய்ய ஆரம்பித்தாலும் அதற்கான முழு பலன்களைக் கொடுக்கக் கூடியவர்கள் பிதுருக்கள் தான். நாம் எந்த ஸ்ராத்தம் அல்லது தர்பணம் செய்தால் முழு பலன்களையும் நமக்கு கொடுப்பவர்கள் அவர்கள்தான் என்று கருடபுராணம் காண்பிக்கிறது அவ்வளவு முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது.*

*அதிலே தான் இந்த ஷண்ணவதி தர்பணங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையினாலே கட்டாயம் ஒவ்வொருவரும் இதை செய்ய வேண்டும் இதில் முடிந்ததை செய்வது முடியாததை விட்டுவிடுவது, என்பது கூடாது. தர்ம சாஸ்திரம் 96 தர்ப்பணங்களை தான் காண்பிக்கிறது.  இந்த 96 செய்யமுடியவில்லை என்றால் பிரித்து இதை மட்டும் செய் என்று காண்பிக்கப்படவில்லை. இதை செய்யாவிடில் நாம் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் ஆகையினாலே, எந்தக் கர்மாவை ஆரம்பித்தாலும், கிர்சராசரணம் என்று செய்து கொள்கிறோம்.*

*இந்த கர்மாவிலே அதிகாரம் வருவதற்காகவும், செய்யவேண்டிய கர்மாக்களை விட்டதினால் வரக்கூடிய பாவம் போவதற்காகவும், என்று சங்கல்பம் செய்து கொண்டு, கிர்சராசரணம் செய்து கொள்கிறோம். அதனால் இந்த சங்கல்பம் செய்து கொள்ளாமல் நாம் எதையும் செய்வதில்லை ஏனென்றால் அந்த பாவம் நமக்கு சம்பவிக்கின்றது விட்டதினால், என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி இந்த ஷண்ணவதி தர்பணம் விரிவாக நாம் தெரிந்து கொண்டோம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

No comments:

Post a Comment