மாண்டவ்ய மகரிஷி
அறம், உண்மை {சத்தியம்}, துறவு ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்துத் தனது கடமைகளில் தெளிவுடன் இருந்தார்.
மாண்டவ்ய மகரிஷி
தீர்த்தயாத்திரை விரும்பி.
எல்லாத் தர்மங்களும் தெரிந்தவர்.
ஸத்யமும் தவமும் அவருக்கு இரு கண்கள்.
தேசம்தோறும் இருக்கும் கிராமங்களில் தங்கி புனித நீர் நிலைகளில் நீராடுதல்
செய்துவந்தார்.
அப்படியிருக்கும்போது ஒரு புண்ணிய தீர்த்தத்தின் அருகில் ஆசிரமம் கட்டிக்கொண்டு வசித்தார்.
தனது ஆசிரமத்திற்கு அருகில் உள்ள அரசமரத்தின் அடியில் அமர்ந்து, உள்ளங்கைகளை வானம் பார்க்கத் தனது மடியில் வைத்துப்
பேசா நோன்பு (மௌன விரதம்) இருப்பது வழக்கம்.
இதை அவர் பல வருடங்களாகச் செய்து வந்தார்.
திருடர்கள் சிலர் பொருட்களை கொள்ளையடித்து மூட்டையாய்க் கட்டி தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்கள்.
திருடர்களை
ராஜாங்க காவலாளிகள் துரத்தியபடி வந்தார்கள்.
சுற்றும்முற்றும் பார்த்த அவர்கள் மாண்டவ்ய மஹரிஷியின் அருகே திருடிய பொருட்களை போட்டுவிட்டு
அவரது ஆசிரமத்தின் உள்ளே போய் பதுங்கினர்.
காவலர்கள் திருடர்களை பிடித்து இழுத்து வந்து மாண்டங்யரிடம்
கேள்வி மேல் கேட்க
அவர் மௌனமாக இருந்தார்.
திருடர்களின் கூட்டாளியாக இருங்குமோ என சந்தேகமடைந்த காவலர்கள்,
திருடர்களோடு மாண்டல்ய மகரிஷியையும் கைது செய்து மன்னரின் முன் நிறுத்தினர்.
மன்னர் சரியான முறையில் விசாரிக்காமல்
அனைவரையும் சூலத்தில் ஏற்றி கொல்ல ஆணையிட்டார்.
திருடர்களையும் மாண்டவ்யரையும்
சூலத்தில் ஏற்றினார்கள்.
பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூலங்களில் ஏற்றப்பட்ட திருடர்கள் உடனே உயிரிழக்க மாண்டவ்யர் மட்டும் ஆகாரமில்லாமல் உயிரையும் விடாமல் கழுவிலேயே சூலம் சொருகிய நிலையில் தவமியிற்றி நின்றிருந்தார்.
அதனை பார்த்த
காவலர்கள்
பயந்து அரசனிடம் ஓடினார்கள்.
ராஜாவுக்கு தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று தோன்றியது. அவரும் மாண்டவ்யரின் இடத்திற்கு விரைவாக வந்தார்.
"நான் உங்களுக்கு அநீதி இழைத்துவிட்டேன். தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும்" என்று அவரை ஏற்றியிருக்கும் கழுவின் முன் மண்டியிட்டான். அவரும் அவ்வரசனை மன்னித்தார்.
"இவரை கழுவிலிருந்து இறக்குங்கள்" என்று உத்தரவிட்டான்.
சூலத்தைப் பெயர்த்து நான்கைந்து பேர்களாய் அவரை இறக்கி அந்த சூலத்தை அவரது உடலிலிருந்து உருவினார்கள்.
கழுத்துக்கும் விலா எலும்புக்கும் நடுவில் சிக்கியிருந்த இரும்பை அகற்ற இயலவில்லை.
அதனால் அதை அடியில் வெட்டிவிட்டான் அந்த அரசன்.
அந்த சூலத்துண்டுடன் அவர் எங்கும் சஞ்சரித்தார்.
இறைவனுக்கு அர்ச்சனை செய்வதற்கு மலர் பறித்து வைத்திருக்கும் புஷ்பக்குடலையை அதில் மாட்டிக்கொண்டு பகவானையே நினைத்துத் திரிந்தார்.
அந்த சூலம் அவருடனேயே ஒட்டி இருந்ததால் அவரை ஆணி மாண்டவ்யர் என்று அழைத்தார்கள்.
மாண்டவ்யர் தர்மதேவன் எமதர்மனின் எமலோகத்திற்கு போனார்.
தான் என்ன செய்தேன்
எனக்கு ஏன் இந்த தண்டனை என்று கேட்டார்.
அதற்கு தர்மதேவன்
நீங்கள் சிறு வயதில் தட்டாணைப்
பிடித்து கொன்று ஒரு குச்சியில் கோத்து விளையாடினீர்கள்
ஆகையால் இதை அனுபவிக்கிறீர்கள். " என்றார்.
" சாஸ்திரங்கள் சொல்வது
பன்னிரெண்டு வயது வரை எதைச் செய்தாலும் அதனால் பாபம் வந்து சேராது."
"ஏன்?"
"அந்தப் பிராயம் வரை சாஸ்திரங்களை அவன் அறியான். உபதேசங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிடையாது. சிறிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
தர்மதேவன் ஆணி மாண்டவ்யரின் குரலுக்கு நடுங்கினான்.
பெரிய தவறு இழைத்துவிட்டோம் என்று அப்போது வருந்தினான்..
இது முதல் இந்த உலகத்தில் தான் செய்த வினைக்கு ஒரு பயன் உண்டாவதற்கு ஒரு வயது வரம்பு சொல்கிறேன். பதினான்கு பிராயங்கள் வரை பாபம் வந்து சேராது" என்றார் மாண்டவ்யர்
"தர்மராஜரே, நீர் தருமத்தின் காவலர். உமக்குத் தெரியாதா? தண்டனை கொடுக்கும் முன் குற்றவாளியின் வயது, அவனுடைய அறிவுத்திறன் அறிந்து குற்றத்திற்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்பது நியதி.
நான் செய்தது அறியாப் பருவத்தில். என் குற்றத்திற்கு நீங்கள் அளித்தது பெரிய தண்டனை.
நீங்கள் தருமத்திலிருந்து தவறிவிட்டீர்கள்.
ஆகையால்
இதோ நான் உமக்கு ஒரு சாபமிடுகிறேன்.
நீ பூலோகத்தில் மானிடனாகப் பிறந்து நான் பட்ட அவமானத்தைவிட நூறு மடங்கு அவமானத்தை அடைவீர்" என்று சாபமிட்டார் மாண்டவ்யர்.
அந்த சாபத்தின் பாதிப்பு தான், எமதர்மராஜர் விதுரராகப் பிறந்தார்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்....
No comments:
Post a Comment