வேளுக்குடி உபன்யாசத்தில் கேட்டது 
*ஒரு பிராமணன் தினந்தோறும் மூன்று வேளை செய்யும் நித்திய கர்மாவான சந்தியாவந்தனத்தில் கர்மா, பக்தி, ஞானம், நாம சங்கீர்த்தனம், யோகம், ஜபம், தியானம், பிராணாயாமம், ப்ரணவம் போன்ற அனைத்தும் உள்ளது.*
*1."ஓம்" எனப்படும் ப்ரணவம் உள்ளது 
*2.பகவந் நாமா/நாம சங்கீர்த்தனம்---*
*90 தடவை 
*3.பிராணாயாமம்/யோகம் 
*4.ஜபம்---*
*காயத்ரீ ஜபம் 
*5.தியானம்---*
*காயத்ரீ தியானம் 
*6.தேக ஆரோக்கியத்திற்கும், கண்கள் நன்றாக இருப்பதற்கும் சூரிய பகவான் உபாசனை 
*7.இது நித்திய கர்மா ஆனதால், "கர்ம யோகம்" ஆகிறது.*
*8.நாம சங்கீர்த்தனம் செய்வதால் "பக்தி யோகம்" ஆகிறது.*
*9."அஸாவாதித்யோ ப்ரம்மா ப்ரம்மை வாஹமஸ்மி" என்று சூரியனை ப்ரம்மமாகவும், தானும் பரம்மம் என்றும் தியானிப்பதன் மூலம் "ஞான யோகம்".*
*10."அபிவாதயே" சொல்லி நமஸ்காரம் செய்வதன் மூலம், நமது ரிஷி பரம்பரையை ஸ்மரித்து/நினைத்து அவர்களது ஆசீர்வாதத்தையும் பெறுகிறோம்.*
*11.இறுதியாக, "காயேனவாசா" சொல்லி முடித்து, சர்வேஸ்வரனான பகவான் ஶ்ரீமந் நாராயணணுக்கு ஸமர்ப்பணம் செய்வதன் மூலம், நமது நித்யகர்மா "கர்மயோகம்" ஆகிறது.*
*இவ்வளவு பலன்/பயன்/புண்ணியத்தை அள்ளித்தரும் சந்தியாவந்தனத்தை அனைத்து பிராமணர்களும் இயன்ற அளவு தினமும் செய்ய முயற்சிக்கலாமே.
No comments:
Post a Comment