*21/08/2020* முசிறி அண்ணா யுக தருமங்கள் என்கின்ற வரிசையில் தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்ட விவரங்களை மேலும் விவரிக்கிறார்.
*22/08/2020* *இன்று உபன்யாசம் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.*
*இந்தக் கலியில் தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் நம்முடைய கர்மாக்களை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை விரிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.*
*கலி நிஷித்தம் என்று மகரிஷிகள் சில காரியங்களை காண்பித்திருக்கிறார்கள்*
*சில காரியங்களை கலியில் செய்ய முடிந்தாலும் கூட கட்டாயம் செய்யக் கூடாது என்று காண்பித்துள்ளனர்.*
*முக்கியமாக பராசர மகரிஷி கலி நிஷித்தம் என்கின்ற ஒரு பகுதியை காண்பிக்கின்றார். சில தர்மங்களை கலிலேயே செய்யக்கூடாது என்று வரிசைப்படுத்தி காண்பிக்கக் கூடிய நிலையில் முதலாவதாக, அதாவது நம்முடைய குழந்தைகளுக்கு மறு திருமணம் என்பது கூடாது.*
*முக்கியமாக இரண்டாவது திருமணம் கூடாது அதிலும் பெண் குழந்தைகளுக்கு கூடவே கூடாது. இதை மகரிஷிகள் காண்பிக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்றால் அதிலே தர்ம சூட்சமம் நிறைய இருக்கிறது.*
*இதையெல்லாம் நாம் மனதிலேயே வாங்கி கொண்டோமேயானால் நம்முடைய குழந்தைகளுக்கு மிகவும் ஜாக்கிரதையாக கல்யாணத்தை செய்வோம். சரியானதொரு விழிப்புணர்வு இந்த கல்யாண விஷயத்திலேயே நமக்கு இல்லை. நாம் இதை நன்றாக முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.*
*கல்யாணம் என்பது இரண்டு குடும்பங்கள் சேர்ந்து முக்கியமாக செய்யக்கூடிய ஒரு காரியம். அதை ரொம்ப ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.*
*கல்யாணம் நம்முடைய குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய வயது இருக்கிறது, அதற்கான காலம் இருக்கிறது, தேசம் இருக்கிறது கல்யாணம் செய்ய வேண்டிய இடம் இருக்கிறது, கல்யாணம் செய்ய வேண்டிய முறை இருக்கிறது. அதையெல்லாம் முறையாக தீர தெரிந்துகொண்டு கல்யாணத்தை செய்ய வேண்டும்.*
*ஏதோ ஒரு கல்யாணம் என்று முடிக்க கூடாது. அப்படி முடித்தால் அது விளையாட்டாக போய்விடும். அதனால் அந்த விஷயத்திலே ரொம்ப விழிப்புணர்வு நமக்குத் தேவை.*
*அந்த விஷயத்தில் மகரிஷிகள் நமக்கு நிறைய எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மகரிஷிகளும் கல்யாணத்தைப் பத்தி ஆரம்பிக்கின்ற பொழுது, முதலில் வர லக்ஷணம், வது லக்ஷனம், என்றுதான் ஆரம்பிக்கின்றனர்.*
*நம் பெண் குழந்தைகளுக்கு வரனை பார்க்கும்பொழுது வர லக்ஷனம் பார்த்து கல்யாணம் செய்யவேண்டும். வர லட்சணம் என்றால், வரன் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர விசாரிக்க வேண்டும், பின்பு கல்யாணம் செய்ய வேண்டும்.*
*இது விஷயமாக சொல்லும்பொழுது, நாம் பார்க்கக் கூடியதான வரன் நல்ல குலமாக இருக்க வேண்டும். நல்ல சீலம் இருக்க வேண்டும் அதாவது ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும். லட்சணமாக இருக்க வேண்டும். சரியான வயதாக இருக்க வேண்டும். படித்தவனாக இருக்க வேண்டும். முக்கியமாக வேத வித்யை தெரிந்தவனாக இருக்கவேண்டும். பணம் காசு வைத்துக் கொண்டு இருப்பவன் ஆக இருக்க வேண்டும். பந்துக்களோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிருப்பவன் ஆக இருக்க வேண்டும். இந்த ஏழு குணங்களையும் பார்த்துதான் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும்.*
*முக்கியமாக, குலத்தை விசாரித்துக்கொண்டு தீர்மானம் செய்யவேண்டும். ஏன் அப்படி சொல்கிறார் என்றால், அவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அப்போதுதான் ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள். நல்ல குணம் உள்ளவர்கள் ஆகவும் நன்கு படிக்கக் கூடியவர் களாக இருப்பார்கள்.*
*முக்கியமாக இந்த கல்யாணம் பெண் குழந்தைகளுக்குத்தான், நித்தியமாக சொல்லப்பட்டிருக்கிறது. நித்தியம் என்றால், செய்யாவிடில் பாபம் உண்டு. கட்டாயம் பெண்கள் கல்யாணம் என்பதை செய்து கொள்ள வேண்டும். இதை மகரிஷிகள் காண்பிக்கிறார்கள்.*
*ஏனென்றால் புருஷர்கள் உபநயனம் ஆகி, வித்தையை படித்து அதை நன்றாக மனதில் வாங்கிக் கொண்டு, ரொம்ப தெய்வங்களை ஆராதனை செய்து, ரொம்ப உடம்பை வருத்திக் கொண்டு அவன் பிறவிப் பயனை அடைய வேண்டும். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அவர்கள் சுலபமாக பிறவி பயனை அடைய முடியும்.*
*இந்த மனித ஜென்மம் எடுத்தது சபலமாக செய்துகொள்ள முடியும் ஸ்திரீகள். எப்படி என்றால், குழந்தை ஒன்று பிறந்து விட்டால் அவர்கள் பிறவிப் பயனை அடைந்து விட்டார்கள். ஆகையினாலே தான் ஸ்திரீகளுக்கு சந்ததிகள் கட்டாயம் தேவை என்று மகரிஷிகள் வலியுறுத்தி காண்பிக்கிறார்கள்.*
*பெண்களுக்கு குழந்தை பிறந்து விட்டால் அவர்களுக்கு மோட்சமே கிடைத்துவிடும் என்று மகரிஷிகள் காண்பிக்கின்றனர். அதிலே சந்தேகமே இல்லை. புருஷர்களுக்கு அப்படியில்லை. இவர்கள் கல்யாணத்திற்கு முயற்சி செய்ய வேண்டும். எவ்வளவு வயது வரையிலும் திருமணத்திற்காக முயற்சி செய்யவேண்டும் என்று பார்க்கும்போது தர்ம சாஸ்திரம் சொல்கிறது 49 வயது வரையிலும் விடாமல் முயற்சி செய். எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்றால், ஏதோ மேட்ரிமோனியில் பதிவு செய்தாகி விட்டது என்றால் அது முயற்சி இல்லை, இந்த நாட்களில் கல்யாண முயற்சி அப்படித்தான் இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு கல்யாணம் என்பது பகவானால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இருக்கிறது.*
*ஒவ்வொரு கர்மாவையும் நாம் ஆரம்பிக்கின்ற பொழுது வாத்தியார், ஒரு மந்திரம் சொல்லி பவித்திரம் கொடுப்பார். அந்த மந்திரத்திற்கு என்ன அர்த்தம் என்றால், சவீராஹா சதம்ஜீவேம, மித்திர தேயம் என்று அந்த மந்திரம் சொல்கிறது அதாவது இன்னாருக்கு இன்னார், என்று பகவான் ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் பொழுதே, இந்தப் பெண் குழந்தைக்கு வேண்டிய மித்ரன், பர்தாவை பகவான் முன்னரே தீர்மானித்து ஸ்ருஷ்டி செய்து வைத்திருக்கிறார். அதை சரியான காலத்திலேயே நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பவர் இந்திரனும் சூரியனும் என்று அந்த மந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*
*அப்படியாக அத்தனை குழந்தைகளுக்கும் தானாகவே கல்யாணம் வரும் ஒரு குறிப்பிட்ட வயதில், அப்படி வருகின்ற பொழுது நாம் அந்த கல்யாணத்தை செய்ய வேண்டும் நம் குழந்தைகளுக்கு. முக்கியமாக பெண்குழந்தைகளுக்கு, காலத்திலேயே இந்த கல்யாணத்தை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் என்பது மிகவும் முக்கியம். ஆண் குழந்தைகளுக்கு அப்படி சொல்லப்படவில்லை.*
முடிந்தால் கல்யாணம் செய்துகொள்ளலாம் மந்திர ஜெபங்கள் நிறைய செய்து
நிறைய மந்திர சக்தியை ஏத்திக்கொள்ள
வேண்டும். தானாகவே கல்யாணம் வரும்.
*அப்படி வரவில்லை என்றால் பிரம்மச்சாரியாகவே இருக்கலாம் ஆண் குழந்தைகளுக்கு. பெண் குழந்தைகளுக்கு அப்படி சொல்லப்படவில்லை. அதிலேயே நிறைய தர்ம சூக்சுமங்கள் காண்பிக்கின்றது நம்முடைய தர்மசாஸ்திரம்.*
மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.
No comments:
Post a Comment