courtesy:smt.Padma Gopal
சற்றே இரங்குவாயோ?..)
சுற்றிச் சுற்றி ஓய்ந்து விட்டேன்:
சொந்தம் தெரியல!
பற்ற உந்தன் தாள்மறந்தேன்;
பயமும் அறியல!
கற்ற கல்வி ஏதொன்றும்−
கைவரவில்ல!
உற்ற துணை நீயென்று−
உருதொழவில்ல!
பற்றுவிட்டு ஒழிப்பதற்கோ−
புத்தியுமில்ல!
புற்றீசல் போலஆசை−
தெளியவுமில்ல!
அற்றைத் திங்கள் அபயமென்று−
அலறவுமில்ல!
இற்றையநாள் இன்பம் விழைய−
ந்யாயமுமில்ல!
பெற்றவனே, என்று இன்றே−
வந்தடைந்தேனே;
சற்று என்மேல் இரங்கி நீயும்−
சரண்ஏற்பாயா?..
No comments:
Post a Comment