தசாவதாரமும் கீதையும்
வராஹாவதாரம்
ஹிரண்ய என்ற பதம் பொன்னைக் குறிக்கும் . ஹிரண்யாக்ஷன் என்றால் ஹிரண்யே அக்ஷீணி அஸ்ய , அதாவது பொன்னின் மேல் கண் என்று பொருள். இது பொருள் மேல் அல்லது உலக இன்பத்தின் மேல் ஆசையைக் குறிக்கும். இதன் உட்பொருள் என்னவென்றால், ஹிரண்ய புத்தி அதாவது உலக இச்சைகளில் நாட்டம் பெருகிய போது பகவத் புத்தி அல்லது ஆன்மீக நாட்டம் மறைந்து பூமி உலக வாழ்வே உண்மை என்னும் அறியாமைக் கடலில் மூழ்குகிறது. வராஹாவதாரம் பூமியை உலக நோக்கில் இருந்து வெளிக் கொணர்ந்து பகவத் புத்தியில் னிலை பெற ச்செய்ததைக் குறிக்கிறது.
மஹாவராஹம் வ்ருஷாகபி என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது( விஷ்ணு சஹஸ்ர நாமம் ) வ்ருஷ என்றால் தர்மம். கபி என்ற சொல் சாதாரணமாக குரங்கு என்ற பொருளில் அறியப்பட்டாலும் அதற்கு வராஹம் அல்லது காட்டுபன்றி என்றும் பொருள். அதன்படி வராஹப் பெருமான் தர்மமே வடிவானவர். பாகவதம் வராஹ அவதாரத்தை யக்ஞவராஹம் என்று குறிப்பிடுகிறது. கீதையில் ,' சர்வகதம் ப்ரம்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம் ,' (ப.கீ. 3.15) என்றபடி, ப்ரம்மம் யக்ஞத்தில் நி,லை பெற்று உள்ளது. இதனாலேயே ஹிரண்ய கசிபு கோபம் கொண்டு எல்லா யக்ஞங்களையும் நிறுத்தி விட்டான்.
வராஹவதாரத்தின் மகிமை வராஹபுராணத்தில் சொல்லப்படுகிறது.
ஸ்திதே மனஸி ஸுவஸ்தே சரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபம் ச மாம் அஜம்
ததஸ்தம் ம்ரியமாணானாம் து காஷ்டாபாஷாண ஸன்னிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்
இதன் பொருள் என்னவென்றால் வராஹப்பெருமான் சொல்கிறார். "எவனொருவன் என்னை எப்போதும் உடல் நலமாக இருக்கும்போது நினைக்கிறானோ அவனுக்கு கடைசி காலத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்தாலும் நான் அவனை நினைக்கிறேன் அவனுக்கு நல்ல கதி கொடுக்கிறேன்" என்பது
. கீதையிலும்
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸன்ன்யஸ்ய மத்பரா:
அனந்யேநைவ யோகேன மாம் த்யாயந்த உபாஸதே
தேஷாம் அஹம் சமுத்தர்த்தா ம்ருத்யுஸம்ஸார ஸாகராத்( பகீ. 12.6)
என்று காண்கிறோம். இதன் பொருள்
"எவனொருவன் எல்லா கர்மங்களையும் எனக்கே அர்ப்பணித்து என்னையே நினைக்கிறானோ அவனை இந்த சம்சாரமாகிற சமுத்திரத்தில் இருந்து நான் தூக்கிவிடுகிறேன்."
இதுதான் வராஹவதாரத்தின் உட்பொருள்.
No comments:
Post a Comment