Wednesday, September 16, 2020

On Bhagavan Naama

*17/08/2020* முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் யுகதர்மம் என்ற வரிசையில் மேலும் தொடர்கிறார். *18/08/2020* *ஒளிபரப்பு இன்று இல்லை.*

இந்தக் கலியில், நாம் செய்யக்கூடிய கர்மாக்களில், எப்படி எப்படி எல்லாம் அபராதங்கள் ஏற்படும், மந்திரங்களை சொல்வதிலும் அல்லது மனதிலோ, நம்முடைய தேகத்திலே எந்த விதமான தோஷங்கள் எல்லாம் சம்பவிக்கும், அதையும் தாண்டி ஒரு கர்மாவினுடைய முழு பலனை நாம் எப்படி அடைவது என்கின்ற உபாயத்தை தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது. 

*இந்தக் கலியின் உடைய ஒரு பிரபாவத்தினாலே, திரவியங்களில் சுத்தம் இருக்காது. நாம் உபயோகிக்கக் கூடிய வஸ்துக்களில்/மனதிலும் என்ன என்னவோ குப்பைகளை போட்டு குழப்பிக் கொண்டு எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை இல்லாமல் அவன் நம்பிக்கையோடு கூட, எதை எதையோ நம்பி, தேகத்திலும் சுத்தி இல்லாமல் சாப்பிடக்கூடாத வஸ்துக்களை சாப்பிட்டு, போகக்கூடாத இடங்களுக்கெல்லாம் போய்க்கொண்டு, பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசிக்கொண்டு,  சுத்தம் குறைவாக இருக்கும்.*

இப்படி ஒரு அசுத்தங்கள் உடன் மந்திரங்களை நாம் சொல்லி நம்முடைய கர்மாக்களை, செய்தால் அது எப்படி பலனை கொடுக்கும்?  ஆகையினாலே நமக்கு மிகவும் குறைவான பலன்கள் தான் அதில் கிடைக்கும்.  *ஆகையினாலே தான் இந்தக் கலியில் ஒவ்வொருவருக்கும் எது துணையாக இருக்கும், இவ்வளவு கஷ்டங்களில் இருந்தும் எது நம்மை மீட்டெடுக்கும், என்றால் சத்தியம்.* வாக்கில் பேசக்கூடிய தான ஒவ்வொரு வார்த்தையும், சாத்தியமானதாக இருக்க வேண்டும். சத்தியம் என்பது தான் ஒவ்வொருவருக்கும் பெரிய உபகாரமாக இருக்கும் இந்தக் கலியில்.

*எப்போதும் உண்மையையே நினைக்க வேண்டும்.  உண்மையே பேச வேண்டும். உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அப்படி சத்தியத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதினால்தான் வேதமே, சத்தியம் வதா என்று  ஆரம்பிக்கின்றது. உண்மையையே பேச வேண்டும் என்று முதலில் ஆரம்பித்து காண்பிக்கின்றது. அதை நாளை அனைவரும் சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும்.*

உண்மையாக வாழ வேண்டும் பேச வேண்டும் நடத்தையிலும் இருக்க வேண்டும். *எந்த விஷயத்திலும் பொய் சொல்வது, பொய்யாக வாழ்வதோ கூடாது என்பதை தர்மசாஸ்திரம் காண்பித்து, எந்த கர்மாவையும் நாம் விடுவதற்கு / மாற்றுவதற்கு அதிகாரம் கிடையாது. அந்தந்த கர்மாக்களை எப்போ எப்போ, எப்படி எப்படி சொல்லி இருக்கிறதோ, அப்படித்தான் நாம் நம்முடைய கர்மாக்களை செய்தாக வேண்டும். அதிலே குறைபாடுகள் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதினால், மந்திரங்களிலும், கிரியைகளிலும், நமக்கு பகவான் நாம உடன் வைத்திருக்கிறார்கள். பகவன் நாமா என்பது ஒரு அங்கம் நாம் செய்யக்கூடிய கர்மாக்களில். எந்த ஒரு மந்திரத்தை நாம் சொன்னாலும் அதில் பிரணவம் முதற்கொண்டு, ஒவ்வொரு மந்திரத்தையும் நாம் ஆரம்பித்து சொல்கிறோம்.* அந்தப் பிரணவம் என்பதே ஒரு பகவான் நாமாவாக உபநிஷத் காண்பிக்கின்றது. 

*பகவான் நாமா என்றால் உடனே இராமநாம அல்லது நாமசங்கீர்த்தனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. நாம சங்கீர்த்தனம் ஒருபகவான் நாமதான். ஆனால் நாம் சொல்லக்கூடிய தான மந்திரங்களில் நாமசங்கீர்த்தனம் நடுவிலே சேர்ப்பதற்கு நமக்கு அதிகாரம் கிடையாது. மந்திரங்களுக்கு நடுவில் வேற நாமாக்களையோ, நாம் சொல்லக்கூடிய தான சோஸ்திரங்களுக்கு நடுவிலேயே, அதிகப்படியாக நாமாக்களை சேர்க்கக்கூடாது.*

ஆகையினாலே தான் நம் பெரியோர்களே, நமக்கு அதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். *ஆசமனம் செய்யும்பொழுது, அச்யுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ, இதுதான் வேத மந்திரம்.* அந்த வேத மந்திரத்திலேயே பகவான் நாமாவை நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி அந்த மந்திரங்களை சரியான முறையில் நாம் சொல்வதினால் நடுவிலேயே பகவான் நாமம் வந்துவிடுகிறது.

*மேலும் இந்த  பகவான் நாமாவை சொல்லியை நாம் செய்யலாம், என்று ஆரம்பித்தாலும் கூட, உடனே நமக்கு இந்த கலியின் தோஷத்தினால், பத்து விதமான அபராதங்கள் சம்பவித்துவிடும். பகவன் நாம தானே நாம் சொல்லி விடலாம் என்ற எண்ணம் வரும். அதுவும் சுலபமாக நம்மால் சொல்ல முடியாது, பகவான் நாமாவை அவ்வளவு சுலபமாக சொல்லி பலனை அடைந்து விட முடியுமா? கண்டிப்பாக முடியாது என்பதை காண்பிக்கிறார். இந்த நாமாவை சொல்லி பகவான் நாமாவையே சொல்லுவோம், பகவான் நாமாவே நம்மை காப்பாற்றும், அதுவும் அவ்வளவு சுலபமில்லை அப்பா. பகவன் நாமாவை நாம் சொல்ல ஆரம்பித்தவுடன், மனதிலேயே நமக்கு நிறைய மாறுதல்கள் உண்டாகும் எப்படிப்பட்டது என்றால், அபராதம் ஆன மாறுதல்கள்.*

சாதுக்கள் என்றால் யார். தன்னுடைய கர்மாக்களை விடாது செய்கின்ற ஒருவருக்கு சாதுக்கள் என்று பெயர். அவர்களை நிந்தனை செய்யக்கூடாது. அவரவர்கள் கர்மாக்களை அவர்களுடைய நம்பிக்கையிலே செய்கிறார்கள். அதை நாம் குறைவாகப் பேசக்கூடாது. அந்த விஷயத்திலே ஒரு குறைபாடு ஏற்படும், நாமாவை சொல்கின்ற பொழுது. அந்தக் குறைபாடு ஏற்பட்டால் அது ஒரு அபராதம். 

*பகவன் நாமாவை நாம் நமக்காக சொல்லிக் கொள்ள வேண்டுமே தவிர, ஊருக்காகவோ, மற்றவர்களுக்காக நாம், நாமாவை சொல்லவேண்டிய அவசியமில்லை. அந்த எண்ணம் இருந்தால், அதாவது பகவான் இல்லை என்று சொல்லக்கூடிய நாஸ்திகர் இடத்திலே, நாம் போய் பகவான் நாமாவை சொல்வது, பகவான் நாமாவை உபதேசிப்பது என்பது, ஒரு அபராதம்.*

விஷ்ணு சிவ பக்தர்களை, நிந்திக்கும் படியான, நாமாக்களை சொல்லக்கூடாது. அது ஒரு அபராதம். அசிரத்தை வரக்கூடாது எந்த ஒரு விஷயத்திலும் சுருதி, வேதம் நமக்கு காட்டக்கூடிய தான தர்மங்களிலே, அசிரத்தை வந்தால் அதுவும் ஒரு அபராதம். 

நம்முடைய தர்ம சாஸ்திரங்களில், அசிரத்தை வரக்கூடாது. அவநம்பிக்கை வந்தால் அதுவும் ஒரு அபராதம்.

*நம் குரு ஆச்சாரியன், அவர்கள் ஒரு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்தால், அந்த வழியை நம்பி நாம் செய்ய வேண்டும். ஆச்சாரியன் இடத்திலோ அல்லது குருவின் இடத்தில்  நமக்கு பக்தி குறைகிறது அவர் சொல்லி கொடுக்கின்ற வழியிலே நாம் ஈடுபடவில்லை என்றால், அதுவும் ஒரு அபராதம்.*

வேதம் சரித்திரங்கள்/புராணங்கள் மூலமாக நமக்கு தர்மத்தை காண்பிக்கின்றது என்றால் அர்த்த வாதம் என்று தோன்றும், *அது எல்லாம் ஒரு கற்பனையாக சொல்கிறது, என்கின்ற ஒரு எண்ணம் வரும் இந்த கலியின் தோஷத்தினால்.* இராமாயணத்தை பார்த்தால் இராமன், என்கின்ற ஒரு சத்ரியன் இருந்தார் அவர் இராஜ பரிபாலனம் செய்தார் அவர் பத்தினியை, ஒருவன் அபகரித்துக் கொண்டு போனான், அவளை மீட்டுக்கொண்டு வந்தார், இதுதான் இராமாயணம். வழியிலேயே நிறைய நடந்தது வனவாசம் செய்தார், இது எல்லாம் கற்பனை என்று, சொல்லத் தோன்றும் இந்தக் கலியினுடைய தோஷத்தினால். ஆனால் அது ஒரு நாமபராதம். எந்த ஒரு புராணத்தையும் கற்பனை என்று சொல்லி தள்ளக்கூடாது.

*பகவான் நாம இருக்கின்றது அது நம்மை காப்பாற்றி விடும், என்று செய்யவேண்டிய காரியங்களை விட்டுவிடுவதோ, செய்யக்கூடாத காரியங்களை செய்வதோ, அதுவும் ஒரு நாமபராதம். இப்படி எல்லாம் யார் செய்கிறாரோ, அவரை எந்த பகவான் நாமம் காப்பாற்றாது/கை கொடுக்காது.  இப்படியாக இந்த பத்துவிதமான அபராதங்கள் சம்பவிக்கும் பகவான் நாமாவை சொல்கின்றனவனுக்கு, பகவான் நாமாவை சொல்கின்றவன் இந்த பத்து விதமான அபராதங்களையும் செய்யக்கூடாது என்று புராணங்கள் நமக்கு காண்பிக்கின்றது.*

மேற்கொண்டு அடுத்த பாகத்தில் பார்ப்போம்

No comments:

Post a Comment