சிவகடாக்க்ஷம்
----------------------------
இவ்வளவு பிரச்சனைக்கும்,
நாம் நம் குழந்தைகளுக்கு ஆன்மீகம் பற்றியோ, கோவில்கள்
பற்றியோ,
சொல்லி கொடுப்பதே இல்லை.
குழந்தையின் 3 வயதில் இருந்தே பள்ளி கூடம், ஆஸ்பத்திரி, கேளிக்கை, சினிமா
என்றே கூட்டிக் கொண்டே அலைகிறோம்.
இறைவனையோ, சமயத்தையோ,
நாம் சிறிது அளவேனும் சொல்லி கொடுப்பது இல்லை.
ஏன் என்றால் அது நம் குழந்தைகளின் பாடதிட்டதத்தில் இல்லை.
இருந்து இருந்தால் அதற்கும் டியூஷன் வைத்து இருப்போம்.
இன்று ஒரு செங்கல் விலை ஆறு ரூபாய்.
ஆனால், ஒரு அற்புதமான கோவிலை கட்டியவர்களின் உழைப்பும்,
தர்ம சிந்தனையும், பற்றி நாம் நம்
குழந்தைகளுக்கு சொல்லி தருவது இல்லை.
அவர்களுக்கு தேவைபடும் போது அவர்களாகவே தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறோம்.
முதலில், படிக்கட்டும் பின்பு,
நல்ல உத்யோகம் கிடைக்கட்டும் என்று,
நமது சமயத்தை பற்றி தெரியாமலே வளர்த்து விடுகிறோம்.
அவர்களும் 40 வயது வரும் போது நமது சமயத்தில் உள்ள யோகம், அனுஷ்டானம்,
ஓழுக்கம் இவைகளை பற்றி தெரியாமல்,
வசதி படைத்தவர்கள்.... ஹை டெக் சாமியார்களிடமும்,
அப்பர் மிடில் கிளாஸ் கோவில் சிவாசாரியார்களிடமும்,
லோயர் மிடில் கிளாஸ் ஜோஷ்யர்களிடமும்,
ஏழைகள் ..
குறி சொல்பவர்கள் இடமும் சென்று மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
நம் போன்றவர்கள், நீங்கள் இறைவனை நம்புங்கள்.
நித்தம் கோவில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினால்,
உங்களால் மட்டும் முடிகிறதே என்றும்,
அது அவன் அருள் இருந்தால் தான் அவன் அருள் கிடைக்கும் என்றும்,
ஒரு ரெடிமேடான பதிலையே வைத்து இருக்கிறாரகள்.
இது திருவாசகத்தை பற்றி சரியாக அறியாததினால் வருவது.
"சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்
அவன் அருளாளே அவன் தாள் வணங்கி"
இவர்கள் சிவனை சிந்தையில் வைக்காமல் எப்படி அவன் அருள் கிடைக்கும்
ஆகவே, முதலில் உங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அடிக்கடி அழைத்து செல்லுங்கள்.
சிவன், விநாயகர் முருகர் பற்றிய புராணங்களை எளிமையாக கூறுங்கள்.
10 வயது அல்லது 5 வது வகுப்பு படிக்கும் போதே,
உழவாரப்பணி செய்ய அனுப்புங்கள்.
திருமறைகளை பாடச் சொல்லுங்கள்.
10 -12 வயதுக்குள் தீட்சை வாங்க சொல்லுங்கள்.
14 - 21வயதுக்குள் சித்தாந்தம் பயிலச் சொல்லுங்கள்.
இப்போது பாருங்கள், 22 வயதில் உங்கள் மகனோ, மகளோ எவ்வளவு தெளிவுடனும், சிவகடாக்ஷத்துடன் இருக்கிறார்கள் என்று.
🌹scv.kmk🌹
No comments:
Post a Comment