Friday, November 1, 2019

Karthika massa snanam

கார்த்திக ஸ்நானம் 29-10-19 முதல் 26-11-19 வரை

சாந்த்ரமானப்படி ஐப்பசி மாதம் அமாவாஸைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை மாதம் அமாவாஸை வரை கார்த்திக மாதம் எனப் பெயர். இந்த கார்த்திக மாதம் முழுவதும் தினந்தோறும் விதிப்படி. ஸ்நானம் செய்யவேண்டும் . மஹோன்னதமான ஸ்நான வ்ரதத்தை அனுஷ்டிப்பதால்  நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாபங்கள் விலகும் . ஆண்கள் பெண்கள் என  அனைவரும் அனுஷ்டிக்கலாம் கீழ்கண்ட ஶ்லோகம் சொல்லி ஸ்னானம் செய்ய வேண்டும்.

कार्तिकेऽहं करिष्यामि प्रात:स्नानं जनार्दन ।
प्रीत्यर्थं तव देवेश दामोदर मया सह।
ध्यात्वाहं त्वां च देवेश जलेस्मिन्स्नातुमुद्यतः ।
तव प्रसादात् पापं मे दामोदर विनश्यतु ।।

கார்த்திகேஹம் கரிஷ்யாமி ப்ராத: ஸ்நாநம் ஜநார்தன ।
ப்ரீத்யர்த்தம் தவ தேவேஶ தாமோதர மயா ஸஹ ।।
த்யாத்வாஹம் த்வாம் ச தேவேஶ ஜலேஸ்மிந் ஸ்நாதுமுத்யத: ।
தவ ப்ரஸாதாத் பாபம் மே தாமோதர விநஶ்யது ।।

என்று ஸ்நானம் செய்து வஸ்த்ரம் கட்டிக் கொண்டு  कार्तिक स्नानाङ्गं अर्घ्य प्रदानं करिष्ये கார்திக ஸ்நாநாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து நின்று கொண்டு அர்க்ய்ம் விட வேண்டும்.

नित्ये नैमित्तिके कृष्ण कार्तिके पाप नाशने ।
गृहाणार्घ्यं मया दत्तं राधया सहितो मम ।।
श्रीकृष्णाय नमः इदमर्घ्यम् .
व्रतिनः कार्तिके मासि स्नातस्य विधिवन्मम ।
गृहाणार्घ्यं मया दत्तं राधया सहितो मम ।।
श्रीकृष्णाय नमः इदमर्घ्यम् ।

அநேந அர்க்ய ப்ரதாநேந பகவான் ஸ்ரீக்ருஷ்ண: ப்ரீயதாம் .

இந்த மஹோன்னதமான கார்திக ஸ்நானத்தை  மாஸம் முழுவதும் செய்ய முடியாவிட்டாலும் கடைசி மூன்று தினமாவது அனுஷ்டிக்க முயற்சிக்கலாம்.

ஸ்ம்ருதி கௌஸ்துபம்

No comments:

Post a Comment