Thursday, October 17, 2019

Vishnu Sahasranama 743 to 752 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

743. ஸுவர்ணவர்ண:-பொன்மயமான ஒளியை உடையவர்.

உபநிஷத் கூறுகிறது,
ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய: புருஷ: த்ருச்யதே- சூரியனின் உள் ஒரு பொன்மயமான புருஷன் காணப்படுகிறான் . அதுதான் பிரம்மம்.

744. ஹேமாங்க:- பொன்மயமான அங்கங்களை உடையவன். உபநிஷத் மேலும் கூறுவதாவது, 
அந்த புருஷனுடைய , மீசை, கேசம், முதலியவை, நகத்திலிருந்து எல்லாமே பொன் மயம்.

பிரம்மத்திற்கு உருவம் உண்டா என்ர்பால் இங்கு பொன் மயம் என்பது சத்துவ ஸ்வரூபத்தைக் குறிக்கும்.

745.வராங்க:-சிறந்த அவயவங்களை உடையவர். தேவகி வசுதேவருக்குத் தன் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டினார்'

பிரம்மத்தைப் பற்றிய உபநிஷத் வர்ணனைகள் எல்லாமே கிருஷ்ணனுக்கும் பொருந்தும் ஏனென்றால் லீலாசுகர் கண்ணன் உரலில் கட்டுண்டதைப் பற்றி கூறுகையில் 'உபநிஷத் பிரம்மம் உலூகலே பத்தம்,' உபநிஷத்தில் காணப்படும் பிரம்மமே இங்கு உரலில் கட்டுண்டு நிற்கிறதே என்கிறார்.

746. சந்தனாங்கதீ – அவருடைய அங்கம் சந்தனம் போல் குளுமையானவை . அல்லது ஆனந்தத்தை கொடுக்கும் தோள்வளைகளை உடையவர் ( சங்கரர்)

747.வீரஹா- குழந்தைப்பருவத்தில் இருந்தே அசுரர்களைக் கொன்றவர்

748. விஷம: -விகத: ஸம: விஷம: . அவருக்கு சமமானவரும் அவரை விட உயர்ந்தவரும் இல்லை. 
ந த்வத் ஸமோ அசதி அப்யதிக: குதோ அன்யோ 
லோகத்ரையே அபி அப்ரதிமப்ரபாவ- ( ப. கீ. 11.43)

அர்ஜூனன கூறுகிறான்,
"அளவிலா மகிமையை உடைய உனக்கு ஸமமானவரே மூவுலகிலும் இல்லை. அப்படியிருக்க உன்னை விட உயர்ந்தவர் யாருளர்!"

விஷம என்ற சொல்லுக்கு முரண்பட்ட என்று ஒரு பொருள் . சாதுக்களுக்கு க்ஷேமத்தையும் துஷ்டர்களுக்கு பயத்தையும் தருவதால்.

749. சூன்ய: நிர்குண ரூபமாதலால் இல்லாதுபோல இருப்பவர். (சங்கரர்) மனுஷ்யாவதாரம் எடுத்த போதும் அதன் குற்றங்கள் இல்லாதவர்.

750.. க்ருதாசீ: -க்ருதா: ஆசய: அஸ்ய இதி. தமது திருக்கல்யாண குணங்களினால் உலகத்தை செழிப்பிப்பவர்.

க்ருதே ஆசாஅசய இதி வா. அல்லது வெண்ணை நெய் இவற்றில் ஆசை உள்ளவர். 
க்ருதா: விகலிதா: ஆசிஹாப்ரார்த்த்னா அஸ்ய- வேண்டுதல் இல்லாதவர்

( சங்கரர்) 
751. அசல: -அசைவற்றவர். பக்தர்களுக்கு கொடுத்த வாக்கை மீறாதிருப்பவர். வானமே இடிந்து விழுந்தாலும் இமயமலை பொடிப்பொடிடியாகத் தகர்ந்தாலும் என் வாக்கு மாறாது என்று திரௌபதியிடம் கூறினார். 
துரியோதனாதியரால் அசைக்க முடியாதவர்

752. சல:- அசையும் பொருள்களாக இருப்பவர். அல்லது பக்தர்கள் சொல்லைக் காப்பாற்றத் தன் பிரதிக்ஞையையும் விட்டுக் கொடுப்பவர். 
ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று கோரியவர் பீஷ்மரின் பிரதிக்ஞையைக் காக்க சக்ராயுதம் ஏந்தினார் அல்லவா?

No comments:

Post a Comment