Thursday, October 17, 2019

Srimad Bhagavatam skanda 10 adhyaya 8 in tamil - Namakaranam

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 10 அத்தியாயம் 8

அத்தியாயம் 8
நாமகரணம்
யாதவர்களின் புரொஹிதரும் சிறந்த தபஸ்வியும் ஆன கர்க்க மஹரிஷி வசுதேவரால் அனுப்பப்பட்டு நந்த கோகுலம் சென்றார். நந்தகோபர் அவரிடம் குழந்தைகளுக்கு ஜாதகர்மம் நாமகரணம் செய்யும்படி வேண்ட அவர் தான் யதுகுலத்தின் ஆசார்யர் என்று அறியப்பட்டதால் தன்னால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டால் கம்சன் இந்தக்குழந்தை தேவகியின் பிள்ளை என்று தெரிந்து கொள்வான்

ஏனென்றால் தேவகியின் எட்டாவது புத்திரனால் தனக்கு மரணம் என அறிந்த கம்சன் எட்டாவது குழந்தை பெண்ணாக இருப்பது இயலாது என எண்ணி நந்தகோபருக்கும் வசுதேவருக்கும் உள்ள நட்பை அறிந்து சந்தேகம் கொண்டு இந்தக் குழந்தையைக் கொல்ல நினைப்பான் எனக்கூறி இதை ரகசியமாகச்செய்வதாகக்கூறினார்.

பிறகு கர்க்க மஹரிஷி இரண்டு குழந்தைகளுக்கும் நாமகரணத்தை யாரும் அறியாமல் செய்வித்தார் .
அயம் ஹி ரோஹிணீ புத்ர: ரமயன் ஸுஹ்ருத: குணை:
ஆக்யாஸ்யதே ராம இதி பலாதிக்யாத் பலம் விது: 
யதூனாம் அப்ருதக்பாவாத் ஸம்கர்ஷணம் உசந்த்யுத

ரோஹிணியின் புத்திரன் தனது குணங்களால் நண்பர்களை இன்புறச் செய்வான் அதனால் ராமன் என்றும் . பலம் மிகுதியால் பலன் என்றும் கூறப்படுவான். யாதவர்களின் ஒற்றுமையை வளர்க்கப் போவதால் ஸங்கர்ஷணன் எனவும் கூறுவார்கள்.

பிறகு அவர் கூறியது. 
ஆஸன் வர்ணத்ரய: ஹி அஸ்ய க்ருஹ்ணதோ அனுயுகம் தனூ: 
சுக்லோ ரக்த: ததா பீத: இதானீம் க்ருஷ்ணதாம் கத: 
ப்ராகயம் வஸுதேவஸ்ய க்வசித் ஜாத: தவாத்மஜ: 
வாசுதேவ இதி ஸ்ரீமான் அபிக்ஞா:ஸம்ப்ரசக்ஷதே

"ஆதிபுருஷனாகிய இவன் ஒவ்வொரு யுகத்திலும் வேறு வேறு உருவத்திலும் வெண்மை, சிவப்பு, மஞ்சள் என்ற மூன்று வர்ணங்களிலும் தோன்றி இப்போது கருமை வர்ணத்தில் காட்சி அளிக்கிறான். உமது புத்திரனான இவன் முன்னொரு காலத்தில் வசுதேவருக்குப் பிள்ளையாகப் பிறந்தவன் ஆதலால் அறிஞர்கள் இவனை வாசுதேவன் என அழைக்கிறார்கள்."

மேலும் அவர் கூறியதாவது, 
"உமது குமாரனுக்கு குணங்களுக்கும் செயல்களுக்கும் இணங்க பல பெயர்களும் வடிவங்களும் உண்டு அவைகளை நான் அறிவேன். மற்ற ஜனங்கள் அறியமாட்டார்கள். இவன் கோபர்களுக்கும் கோகுலத்திற்கும் ஆனந்தம் அளிப்பான் இவனால் நீங்கள் எல்லா கஷ்டங்களையும் எளிதில் கடப்பீர்கள். இவன் குணங்களாலும் கீர்த்தியாலும் பெருமையாலும் நாராயணனுக்கு ஒப்பானவன். ஆகையால் இவனை முழு கவனத்துடன் காப்பாற்ற வேண்டும்."

இவ்வாறு கூறிவிட்டு கர்க்க முனிவர் சென்றுவிட்டார் . 
இங்கு க்ருஷ்ணன் என்ற பெயர் கூறப்படவில்லை. அது நாராயண பட்டாதிரியால் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. 
கர்க்கர் குழந்தையை க்ருஷ்ணன் என்று ஏன் பெயரிட்டார் என்றால் அவன் உலகின் பாவங்களை உழுது வெளியேற்றுகிறான். க்ருஷ் என்றால் உழுவது 'ண;காரம் ஆனந்தத்தைக் குறிக்கும்.

க்ருஷ்ண நாமத்திற்கு மஹாபாரத விளக்கம் பின்வருமாறு
மகாபாரதத்தில் அர்ஜுனனிடம் தன் பெயருக்குப் பொருள் கூறுகிறார். 
க்ருஷாமி மேதினீம் பார்த்த பூத்வா க்ருஷ்ணாயசோ மஹான்
க்ருஷ்ணவர்ணஸ்ச மே யஸ்மாத் தேன க்ருஷ்ண: அஹம் அர்ஜுன. 
( மஹாபாரதம்- சாந்தி பர்வம்) 
"மிகப்பெரிய கலப்பையைப்போல் பூமியை உழுகிறேன். எனது நிறம் கருமையானபடியாலும் என்னை கிருஷ்ணன் என்கிறார்கள். "
இந்த உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளும் அவன் ஸ்ருஷ்டியானபடியால் ஒரு உழவன் பூமியை உழுது பயிரிடுவதைப்போல இந்த உலகத்தை விளைவிக்கிறான். இன்னொரு விளக்கம்.
க்ருஷி பூவாசக: சப்த: ணஸ்ச நிவ்ருத்திவாசக: 
விஷ்ணு: தத்பாவயோகாத் ச க்ருஷ்ண: பவதி சாஸ்வத:
(மஹாபாரதம் –உத்தியோக பர்வம் )
அடுத்து கிருஷ்ணனின் பால லீலைகள்


No comments:

Post a Comment