Wednesday, October 9, 2019

Vishnu Sahasranama 716 to 742 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

716. அனல: -அலம் என்றால் போதுமளவு. அனலம் என்றால் போதாது. அதாவது அவனைக் காணும்போதும் அவனைப்பற்றி கேட்கும்போதும் திருப்தியே ஏற்படாது.முடிவிலா சக்தி படைத்தவன்.அனந்த கல்யாண குணங்கள் கொண்டவன்.
717.தர்பஹா – தர்ம விரோதிகளுடைய செருக்கைப் போக்குகின்றவர். செருக்கை மட்டும் அழிப்பான். இந்திரன் பிரம்மா இவர்கள் கர்வம் கொண்டு கிருஷ்ணனை மனிதப் பிறவி என நினைத்தபோது அவர்கள் கர்வத்தைப் போக்கி தன் ஸ்வரூபத்தை உணர்த்தியவன்.
718. தர்பத: -பக்தர்களுக்கு பெருமிதம் அளிப்பவன் 
719. அத்ருப்த: - தன் சக்தியால் பெருமிதம் இல்லாமல் இருப்பவர். க்ருஷ்ணன் அற்புக லீலைகளை அனாயாசமாகச்செய்தான். தன் நிஜ ஸ்வரூபத்தை மறைத்து சாதாரண இடைச்சிறுவனாகவே தன்னைக் காட்டிக் கொண்டான். 
720. துர்தர:-மனதில் சிரமப்பட்டு நிறுத்தக் கூடியவர். துஷ்டர்களால் பிடிக்க முடியாதவர். துரியோதனன் முதலியவர்கள் ஜ்வலிக்கும் அக்னியை துணியில் பிடிக்க முயலும் பித்தனைப்போல் கண்ணனைப் பிடிக்க முயன்றனர் என்று மகாபாரதம் கூறுகிறது. 
721. அபராஜித: - வெல்லக்கூடாதவர். பீஷ்மர் கூறினார் . 
"சக்தோஹம் தனுஷா ஏகேன நிஹந்தும் ஸர்வ பாண்டவான் 
யத்யேஷாம் ன பவேத் கோப்தா விஷ்ணு: காரண புருஷ: 
காரண புருஷராகிய விஷ்ணு அவர்களுடைய காப்போனாக இல்லையேல் ஒரே வில்லினால் பாண்டவர் அனைவரையும் அழிப்பேன். "
722.விச்வ மூர்த்தி: - விச்வ ஏவ மூர்த்தி:- ப்ரபஞ்சமே அவனது உருவம்.
இதை கிருஷ்ணாவதாரத்தில் விஸ்வரூப தரிசனத்தின் போது காட்டினார்.
723. மஹாமூர்த்தி: -அவரது விச்வரூபத்தைக் குறிக்கும் நாமம். 
724. தீப்தமூர்த்தி:- ஞான மயமாக பிரகாசிக்கும் ரூபம் கொண்டவர். 
சஞ்சயன் விஸ்வரூபத்தை வர்ணிக்கிறான். 
திவி சூர்யஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபத் உத்திதா 
யதி பா: சத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மன: (ப.கீ. 11.12)
ஆயிரம் சூரியர்கள் ஒரே சமயம் உதித்தால் எவ்வாறு இருக்குமோ அப்படிப்பட்ட ஒளியே அவரது ஒளிக்கு சமமாக ஆகும். 
725. அமூர்த்திமான் – உண்மையில் உருவமற்றவர்.. 
726. அநேக மூர்த்தி:- ஆயினும் எல்லாமே அவர் ஆனதால் பல உருவம் கொண்டவர். கிருஷ்ணாவதாரத்தில் எல்லா கோபர்களாகவும் கன்றுகளாகவும் உருவம் தரித்தார் கோபியருடன் ராசக்ரீடை செய்கையில் ஒவ்வொரு கோபியினிடையும் ஒவ்வொரு கிருஷ்ணராக தோற்றமளித்தார் . எல்லாம் அவர் மாயையே.
727.அவ்யக்த: -இவர் இப்படிப்பட்டவர் என்று யாராலும் அறிய முடியாதவர். 
728.சதமூர்த்தி:- மாயையினால் பல உருவங்களாகத் தோன்றுகிறவர். 
விஸ்வரூப தரிசனத்தின் போது, 
பச்ய மே பார்த்த ரூபாணி சதசோ அத ஸஹஸ்ரச: , அர்ஜுனா. நூற்றுக்கணக்கானவும் ஆயிரக்கணக்கானவும் தோறும் என் வடிவினைப் பார் என்று கூறினார் 
729.சதானன:-பல முகங்களுடையவர். 'அநேக வக்த்ரநயனம் அநேகாத்புத தர்சனம் ,' (ப. கீ. 11.12
730.ஏக: -ஒன்றேயாகியவர். 'ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்' – சாந்தோக்யோபநிஷத். – முதலில் பிரம்மன் மட்டுமே இருந்தது அதைததவிர வேறு இல்லை. 
731. நைக:-மாயையினால் பல உருவமாக இருப்பவர் 
732, 733. ஸவ:-, ஸ: வ:-ஸவ:-யாக வடிவாக இருப்பவர். ஸ: வ: என்று இருநாமமாகக் கொண்டால் , ஸ:- ஸ்யதி, நிஸ்ச்சயதி ஸ்வவிஷயம் ஞானம் – தன்னைப்பற்றிய ஞானத்தை அளிப்பவர். வ: - எல்லோருடைய ஹ்ருத்யத்திலும் வசிப்பவர். 
734.க:- கனதி இதி க: - ஜ்வளிப்பவர். க என்றால் சுகம் என்று ஒரு பொருள். கிருஷ்ணன் எல்லோருக்கும் சுகமளிப்பவன். 
735.கிம்- விசாரித்து அறிவதற்குரியவர் . அதாவது பிரம்மம்.
736.யத்- தானே விளங்குவதான பொருளைக் குறிக்கும் யத் என்னும் சொல்லால் துதிக்கப்படுகிறவர். யத் என்பது பிரம்மத்தைக் குறிக்கும்.யத் எதுவோ தத் அதுதான் பிரம்மம் . அதாவது யத், எதிலிருந்து எல்லாம் தோன்றினவோ எதனால் எல்லாம் காக்கப்படுகிறதோ எதில் எல்லாம் ஒடுங்குகிறதோ தத் , அதை தெரிந்துகொள் அதுதான் பிரம்மம் – உபநிஷத். 
737.தத்- இதுவும் பிரம்மத்தைக் குறிக்கும் சொல். தத் தவம் அஸி- த்வம் நீ , தத் பிரம்மமாக , அஸி இருக்கிறாய் – உபநிஷத் மஹாவாக்கியம் 
738. பதம் அனுத்தமம் –முமுக்ஷுகளால் அடையத்தக்க ஒப்புயர்வற்ற பதவியாக இருப்பவர். 
739. லோகபந்து: -உலகிற்கு ஒரே உறவானவர். 
'பிதா அஹம் அஸ்ய ஜகத: மாதா தாதா பிதாமஹ: '(ப.கீ.9.17)
இவ்வுலகிற்கு தகப்பனும் தாயும் தாங்குபவனும் பாட்டனும் நானே 
740.. லோகநாத: - உலகை ஆள்பவர்
741.மாதவ:- லக்ஷ்மீ பதி. அல்லது உபநிஷத் கூறும் மது வித்தையால் அறியப் படுபவர். 
மௌனத்தினாலும் தியானத்தினாலும் யோகத்தினாலும் அறியப்படுபவர் 
மௌனாத் த்யானாத் ச யோகாத் ச வித்தி பாரத மாதவம் ( மஹா. உத். 69.4)
.மா தவ: யஸ்ய – அவருக்கு மேல் யாரும் இல்லாதவர். 
742. பக்தவத்சல: - கன்றிடம் பசுவைப்போல் பக்தர்களிடம் அன்பு பூண்டவர்

  

No comments:

Post a Comment