581. த்ரிஸாமா-மூன்று ஸாமங்களினால் துதிக்கப்படுபவர். மூன்று ஸாமங்கள் ப்ருஹத் , ரதாந்தர , வாமதேவ்ய எனப்படும்.
582. ஸாமக: - பகவானே சாமகானம் செய்கிறார் என்று பொருள். அல்லது சாமவேதத்தினால் துதிக்கப்படுபவர் .
ஸாம என்றால் முடிவு என்று ஒரு பொருள். ஸாமம் கமயதி இதி ஸாமக: எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டு செல்பவர்.
583.ஸாம- ஸாமவேதமாக இருப்பவர். 'வேதானாம் ஸாமவேதோ அஸ்மி,' – கீதை.
ஸாம என்றால் அமைதியுடன் இருப்பவர் . சாந்தமானவர்.
யத் கலு ஸாது தத் ஸாம இதி ஆசக்ஷதே – சாந்தோக்ய உபநிஷத்
எது நல்லதோ அது ஸாம எனப்படுகிறது.
584. நிர்வாணம்- எல்லா துன்பங்களுக்கும் அப்பாலான ஆனந்த வடிவினர்.
585. பேஷஜம் – பேஷஜம் என்றால் மருந்து . பகவான் பிறவிப்பிணிக்கு மருந்தாக உள்ளவர்.
வ்யாமோஹபிரசமௌஷதம் முநிமனோவ்ருத்திப்ரவ்ருத்யௌஷதம்
தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் த்ரிஜகதாம் சஞ்சீவனைகௌஷதம்
பக்தாத்யந்த ஹிதௌஷதம் பவபயப்ரத்ஹ்வம்ஸனைகௌஷதம்
ஸ்ரேய;ப்ராப்திகரௌஷதம் பிப மன ஸ்ரீக்ருஷ்ணதிவ்யௌஷதம்
மன- மனமே , வ்யாமோஹபிரசமௌஷதம் – மயக்கங்களைத் தெளிவிக்கும் மருந்தும் , முநிமனோவ்ருத்திப்ரவ்ருத்யௌஷதம்- முனிவர்களின் மனப்போக்கை இயக்க வைக்கும் மருந்தும்,
தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் – அரக்கர் தலைவர்களுக்கு இன்னல் விளைவிக்கும் மருந்தும் த்ரிஜகதாம் சஞ்சீவனைகௌஷதம்- மூவுலகையும் வாழ வைக்கும் மருந்தும்,
பக்தாத்யந்த ஹிதௌஷதம்- பக்தர்களுக்கு மிகவும் ஹிதம் அளிக்கும் மருந்தும், பவபயப்ரத்ஹ்வம்ஸனைகௌஷதம்- சம்சார பயத்தைப் போக்கும் சிறந்த மருந்தும்
ஸ்ரேய;ப்ராப்திகரௌஷதம்- எல்லா நலன்களையும் அளிக்கும் மருந்துமான
ஸ்ரீக்ருஷ்ண திவ்யௌஷதம் – ஸ்ரீகிருஷ்ணன் என்னும் திவ்ய மருந்தைப்
பிப – பருகுவாயாக. (முகுந்த மாலை )
சம்சாரம் என்னும் பிணிக்கு மருந்தான கீதையை உபதேசித்தவர்.
586.- பிஷக் –அதனால் அவரே பரம வைத்தியர்
587.ஸன்யாசக்ருத் –தன்விஷயமான பொறுப்பை பகவானிடம் ஒப்படைப்பதுதான் சன்யாசம். அதுதான் சம்சாரத்திற்கும் சிகிச்சை
மோக்ஷத்திற்காக சந்யாஸாஸ்ரமத்தை ஏற்படுத்தியவர் (சங்கரர்)
588. சம: -அனைத்தையும் அடக்குபவர். பக்தர்களின் காமக்ரோதாதிகளை அடக்குபவர்.
பிரளய காலத்தில் எல்லா உயிர்களையும் சமப்படுத்துபவர். அறியாமையை ஒழிப்பவர்.
589. சாந்த: - அலையற்ற கடல் போன்று அமைதியானவர். உபநிஷத் பிரம்மத்தை நிஷ்கலம், நிஷ்க்ரியம் சாந்தம் , என்று வர்ணிக்கிறது. சாந்தியை அளிப்பவர்.
590. நிஷ்டா- தியானத்தின் பொருளானவர். பிரலயகாலத்தில் எல்லாம் முடிவுறும் இடமானவர்.
591.சாந்தி:- எல்லா அறியாமையும் நீங்கிய அமைதியின் நிலையாக இருப்பவர்.
592. பராயணம்—மறுபடி சம்சாரத்தில் திரும்பாத உயர்ந்த ஸ்தானமாக இருப்பவர்.' யத்கத்வா ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம,' கீதை. 'எதை அடைந்தால் மறுபடி திரும்புவது இல்லையோ அதுதான் என்னுடைய ஸ்தானம்.."
593. சுபாங்க: -அழகிய அங்கங்களைக் கொண்டவர். அஷ்டாங்கயோகத்தின் அங்கங்களான யமம், தமம், அசனம், ப்ராணாயாமம்., ப்ரத்யாஹாரம், த்யானம் ,தாரணை, சமாதி என்னும் எட்டு அங்கங்களைக் கொண்டவர்.
594.சாந்தித: சாந்தியை அளிப்பவர்.
595. ச்ரஷ்டா- சிருஷ்டிகர்த்தா
596.குமுத: -கு என்றால் பூமி. தத்ர மோததே, அதில் ஆனந்தம் அடைபவர். பகவான் உலகை சிருஷ்டி செய்து அதில் ஆனந்தம் கொள்கிறார். பூமிதேவியுடன் ம்கிழ்ந்திருப்பவர் என்றும் சொல்லலாம்.
கௌ மோததி- வேதங்களின் சப்தத்தால் அல்லது பக்தர்களின் நாமசங்கீர்த்தன சப்தததால் மகிழ்பவர்.
597. குவலேசய: -கு என்றால் பூமி, வல என்றால் சஞ்சரிப்பது, ஈச: என்றால் அதிபதி. எங்கும் சென்று எல்லா விதமான சஞ்சாரத்தையும் கட்டுப்படுத்துபவர். சர்வவ்யாபி , சர்வாந்தர்யாமி ஆதலால்.
கு= நீர். , வல என்றால் வலயமாக சுற்றியிருப்பது அதாவது கடல். (அதனால் தான் பூமிக்கு குவலயம் என்ற பெயர்.)அதில் சாயா: சயநித்திருப்பவர்.
குவல என்றால் ஜீவர்கள் அவர்களின் அந்தரத்யாமியாக ஹ்ருதயத்தின் உள்ளே சயநித்திருப்பவர் என்றும் கொள்ளலாம்.
598. கோஹித: -கோ என்றால் பிரிதிவி. ஸ்தூல பிரபஞ்சம். அதற்கு ஹிதம் , அதாவது நன்மையை செய்பவர். கோ என்றால் ஆநிரை என்று எடுத்துக்கொண்டால் இது கோபாலனாகிய கிருஷ்ணனைக் குறிக்கிறது.
599. கோபதி: கோ என்றால் இந்த்ரியங்களையும் குறிக்கும் அதனால் இது ஹ்ருஷீகேச: என்ற நாமத்துக்கு சமமானது.
600. கோப்தா- ரக்ஷகன். காக்கும் தெய்வம்.
601.வ்ருஷபாக்ஷ:- வ்ருஷ அல்லது தர்மமே கண்ணாயினவர். அக்ஷ என்றால் கண் அல்லது அச்சு. தர்மத்தையே சம்சார சக்கரத்தின் அச்சாக வைத்திருப்பவர். '.தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே,' கீதை
602. வ்ருஷப்ரிய: - தர்மவழியினுள்ள பிரவ்ருத்தி மார்கம் நிவ்ருத்தி மார்க்கம் இரண்டிலும் பிரியமுள்ளவர். இரண்டு வழியில் செல்வோருக்கும் அருள் புரிபவர். பிரவ்ருத்தி மார்கமாவது தர்ம நெறிப்படி வேதத்தில் கூறியுள்ள மார்க்கம். நிவ்ருத்தி மார்க்கம் கர்மங்களைத் துறந்து மோட்சம் அடைவதே குறிக்கோளாகக் கொள்வது.,
No comments:
Post a Comment