Tuesday, August 13, 2019

Vishnu Sahasranama 544 to 550 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

544. மஹாவராஹ: -பகவான் வராஹ ரூபம் தரித்தபோது சமுத்திரம் அவர் கணுக்கால் மட்டம்தான் இருந்ததாம். அவர் உருவம் வானளாவி இருந்ததால் மஹா வராஹ: எனப்படுகிறார். இதை மஹா+ வர+ ஆஹ என்று பிரித்தால் பெரிய வரங்களைத் தருபவர் என்று பொருள்.

545. கோவிந்த: -காம் விந்ததி இதி கோவிந்தா: கோ என்ற பதத்துக்கு பல பொருள்கள். அதில் ஒன்று பூமி என்பது. பூமியை சமுத்திரத்தில் இருந்து மீட்டதால் கோவிந்தன் என்பது வராஹப் பெருமானின் பெயர்.

வராஹபெருமானுக்கு யக்ஞ வராஹன் என்று பெயர். யக்ஞத்திற்கு ஆதாரம் வேதம். கோ என்றால் வாக்கு என்றும் பொருள் ஆனதால் அது வேதத்தையும் குறிப்பதாகும். கோவிந்தநேன்றால் வேதத்தினால் அறியப்படுபவன் என்று பொருள்.

544. ஸுஷேண: - சோபனா சேனா யஸ்ய ஸ: - அதாவது எவரிடத்தில் சிறந்த சேனை இருக்கிறதோ அவர் என்று பொருள். இங்கு சேனை என்பது பகவானுடைய சக்தி மற்றும் அவருடைய அனந்த கல்யாண குணங்கள். உபநிஷத் மந்திரங்களே அவருடைய சேனை. (சங்கரர்)

545. கனகாங்கதீ –வெளிப்படையான பொருள் பொன்மயமான ஆபரணங்கள் அணிந்தவர் என்பது. ஆனால் பகவானுடைய கல்யாண குணங்களே அவரது ஆபரணங்கள்.கனகம் என்பது பிரகாசத்தையும் குறிக்கும் அங்க் என்ற வினைச்சொல் செல்வதைக் குறிக்கும். அதனால் இந்த நாமம் எல்லா செய்கைக்கும் பிரகாசத்தைக் கொடுப்பவர் என்று கொள்ளலாம்.

சூரிய மண்டலத்தில் ஒரு பொன் மயமான புருஷன் காணப்படுகிறான் அவனுடைய மேனி முழுவதும் பொன் மயமானது என்கிறது வேதம். அதுதான் பகவான். தேசிகர் யாதவாப்யுதயத்தில் தேவர்கள் பூபாரம் தீர்க்குமாறு பிரார்த்தித்தபோது அவைகள் முன் தோன்றிய பகவனை வர்ணிக்கிறார். 
அவருடைய் அங்கங்கள் ஒன்றையொன்று அழகிலும் பிரகாசத்திலும் மிஞ்சுபவையாக இருந்தன. அவர் மேனியே ஆபரணங்களுக்கு அழகு செய்ததே அன்றி அவைகளால் அவர் மேனிக்கு அழகு உண்டாகவில்லை.

546. குஹ்ய: - ரகசியமான உபநிஷத்தால் மட்டுமே அறியக்கூடியவர். வராஹ ரூபம் எடுத்தபோது அவர் யார் என்பதை பிரம்மஞானிகள் ஆகிய ரிஷிகள் மட்டுமே உணர்ந்தார்கள்.

547.கபீர: காம்பீர்யம் உடையவர். 
548. கஹன: - ஆழம் காண முடியாதவர். இந்த்ரியங்களாலும், மனதினாலும் , புத்தியினாலும் அறிய முடியாதவர். 
549.குப்த:- வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாது மறைந்திருபவர். ரக்ஷிப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
550.சக்ரகதாதர: -சுசுதர்சன சக்கரம், பாஞ்சஜ்னயமான சங்கம் இவை தரித்திருப்பவர். மன்ச்த்துவமாகிய சக்கரத்தையும் புத்தி தத்துவமாகிய கதையையும் லோக சம்ரக்ஷணத்திற்காக தரித்திருப்பவர்.

  

No comments:

Post a Comment