Tuesday, August 13, 2019

Oothukaadu Venkata Kavi

ஊத்துக்காடு வேங்கடகவி

வேங்கடகவி

காலங்கள் உருண்டோடின. கண்ணனைப் பார்க்காமல் அன்னம் உண்ணமாட்டேன் என்று சில காலங்களாகவே ஆகாரம் உண்பதையே அவர் முற்றுலுமாக தவிர்த்து வந்தார். இதன் காரணமாக உடல் மெலிந்து கண்கள் சொருகி பார்வை மங்க ஆரம்பித்தது. பிரதிக்க்ஷனம் செய்யக் கூட அவரால் முடியவில்லை. தன் முழங்கால் வாயிலாகவே மிகவும் சிரமப்பட்டு ஒரு பிரதிக் பிரதிக்க்ஷனம் செய்து முடித்தார். அடுத்த பிரதிக்க்ஷனம் செய்ய முடியவில்லை. தன் பிராணன் இன்றுடன் பிரியப் போவதை உணர்ந்தார். இன்று எப்படியாவது பாடி கண்ணனை வரவழைத்துவிடலாம் என்றெண்ணி என்ன பாடலாம் என சிறிது யோசித்து பின் தாமதமில்லாமல் 'அலைபாயுதே கண்ணா!' என்று பாட ஆரம்பித்துவிட்டார். அந்த பாடல் முழுநிறைவு தருவாயை நெருங்கிவிட்டது. (நீங்கள் இனி எப்பொழுது இந்த பாடலைக் கேட்டாலும் இந்த உணர்வுடனே அந்த பாட்டில் வரும் வார்த்தைகளைக் கேளுங்கள். உயிர் பிரியும் தருவாயில் தான் பாடினார் என்று உங்களுக்கு புரிய வரும்.) 

ஆனாலும் கண்ணன் வரவில்லை. மெய்மறந்து தன் தொடைகளில் தாளம் போட்டுக்கொண்டே பாடிக் கொண்டிருந்தார் வேங்கடகவி. திடீரென்று ஜவ்வாது மனமும், நாகலிங்க பூ வாசனையும், குளிர்ந்த காற்றும் அவர் மேனியில் பட ஆரம்பித்தது. அச்சமயத்தில் அவர் பார்வை முற்றிலுமாக பறிபோய்விட்டது. ஆனாலும் தான் பாடுவதை நிறுத்தவில்லை. முழு பலத்தைக் கூட்டி சங்கீதத்தைக் கூட பாட முடியவில்லை. தொடையில் தாளம் போட முடியாதபடி கை இடறியது. எதோ ஒரு குழந்தை மடியில் படுத்திருப்பது போன்று உணர்வு தோன்றியது. அப்பா யாரது? நான் கண்ணனைக் காண வேண்டுமென்று வேகத்துடன் பாடிக் கொண்டிருக்கின்றேன். அந்தக் குழந்தையிடமிருந்து பதில் இல்லை, மீண்டும் மீண்டும் கேட்டார், பதில் இல்லாத காரணத்தினால் சற்றே சினம் வந்து அந்தக் குழந்தையைக் கீழே தள்ளிவிட்டார். உடனே அந்தக் குழந்தை இதழ்களை பிரித்து பேசத் தொடங்கியது. வேங்கடசுப்பையரே! யாரைக் காண வேண்டுமென இத்துணைக் காலம் பாடினாயோ! அவன் நான் தான் என்னை நன்றாகப் பார்! என்றார். கண்ணா! என்று விழவும் சக்தியில்லாமல் கண்ணனைப் பார்த்து, என்னுடைய உடலுறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்கக் கூடிய காலகட்டத்தில் நீ காட்சி தரவில்லை. இப்பொழுது என் பலமும் மனபலமும் சோர்ந்தபிறகு வந்திருக்கிறாயே கண்ணா! உன்னை கையெடுத்துக் கூட வணங்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் போது வேங்கடகவியின் உடலிலிருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து கொண்டிருந்தது. 

அந்த உயிரை முழுவதும் பிரியவிடாமல் கிருஷ்ணன் அனுக்கிரகித்து, பக்தா! உன் வாழ்நாள் முழுவதையும் நான் வருவேன் என்று என் பொருட்டு உன் காலங்களைக் கழித்தாய். அப்படிப்பட்ட உயர்ந்த பக்தனாகிய உன்னை பூலோகத்தில் இறக்கவிடமட்டேன் என்று தன்னுடன் வேங்கடகவியை அழைத்து தன் இருப்பிடமான பிருந்தாவனத்திற்கு சென்றார். அங்கே குசேலருக்கு நடந்ததை விட பன்மடங்கு உபசாரம் செய்தார் கிருஷ்ணர். எப்பொழுதும் இவன் என் பக்தன் என் பக்தன் என்று கூறிக் கொண்டே இருந்தார் கிருஷ்ணபரமாத்மா. பக்தா உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் கண்ணன், அதற்கு வேங்கடகவி மறுபடியும் ஊத்துக்காட்டில் 'நான் பாடி நீ ஆடவேண்டுமடா கண்ணா' என்று கேட்டார். அவ்வாறாகவே மீண்டும் இருவரும் ஊத்துக்காட்டிற்கு வந்தார்கள். பக்தா உனக்கு நான் எப்படிக் காட்சி தர வேண்டும் எனக் கேட்டார். அதற்கு வேங்கடகவியும், காளிங்க நர்த்தனாகவே வா என்றார். அவ்வாறாகவே வந்து உன்னால் உன் வாயால் என் நர்த்தனத்திற்கு ஏற்றாற்போல் எப்பொழுது பாட முடியவில்லையோ அப்பொழுதே நான் இதே இடத்தில் மீண்டும் விக்கிரகமாக மாறிவிடுவேன் என்று கூறினார். 

வேங்கடகவி அப்பொழுது 'தாம்தீம் தரநதாம்............' என்று தொடங்கும் பாட்டை பாடினார். 

பாடல் முடியும் வரை பாடலுக்கு ஏற்றாற் போல் கிருஷ்ணனும் நர்த்தனம் செய்தார். நர்த்தனத்திற்கேற்றாற்போல் வேங்கடகவியும் பாடினார். இருப்பினும், சில நர்த்தன பாவனைகளுக்கு ஏற்றாற்போல் வேங்கடகவி பாட முடியாமல் தடுமாறினார். உடனே, கிருஷ்ணன் சொன்னது போல் அதே இடத்தில் மீண்டும் விக்ரகமாக மாறினார். வேங்கடகவி தன் தோல்வியை ஒப்பு கொண்ட பிறகு, அவர் அவதார நோக்கத்தை கூறி நீங்கள் நாரதராக சஞ்சரிக்கலாம் என்று கிருஷ்ணன் அனுக்கிரகம் பண்ணினார். பதிலுக்கு வேங்கடசுப்பையர், சுவாமி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று வெங்கட சுப்பையரிடம் கேட்க நான் என் பக்தர்களாகிய நந்தினி பட்டிக்கு கொடுத்த வரத்தில் கலியுகம் முழுவதும் இங்கயே இருக்க போகிறேன் என்றார். அதற்கு நாரதர் வைகுண்ட வாசனே வைகுண்டத்தில் இல்லாத போது பக்தனாகிய எனக்கு வைகுண்டத்தில் என்ன வேலை என்று கேட்டு கலியுகம் முழுவதும் நானும் உங்களுடன் இருந்து நான் தற்போது செய்து கொண்டிருக்கும் கைங்கரியத்தையே தொடர்ந்து செய்வேன் மற்றும் அல்லாது கலியுகத்தில் தேடி கிடைக்காத பக்தியுடன் யார் வந்து உங்களிடம் பிராத்திக்க வருகிறாரோ அவர்களின் குறைகளை நான் கேட்டு உங்களிடம் கூறும் பெறும் பாக்கியத்தை தாருங்கள் என கூறினார். இனி நான் தேவலோகத்துக்கோ வைகுண்டதுக்கோ சென்றால் உம்மிடம் தான் செல்வேன் என்று பிராத்தித்தார். அவ்வாறாகவே கிருஷ்ணன் அனுகிரகம் செய்தார். தொடர்ந்து இன்னும் கூட இரவு நேரங்களில் கண்ணனின் மீது பாடல்களை பாடிகொண்டிருக்கிறார். பாடல்களுக்கு ஏற்றார் போல் கோபிகா ஸ்திரிகளுடன் கிருஷ்ணன் நர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணனின் சலங்கை (கொலுசு) சத்தம் இன்னும் இரவு நேரங்களில் கேட்டு கொண்டிருக்கிறது. அதை இந்த ஊரில் பலரும் கேட்டுக் கொண்டிருகின்றனர். நாரதர் இங்கயே இருப்பதை கண்டு அத்தனை தேவர்களும் நாங்களும் கலியுகம் முழுவதும் நாங்களும் இங்கயே இருப்பதாக இறங்கி வந்தனர். கிருஷ்ணனும் இங்கயே இருக்கும் படி அனுகிரகித்தார். திரு கோவிலின் பிரகாரத்தை சுற்றி இன்னும் அத்தனை தேவர்களும் காவல் காத்து கொண்டிருகின்றனர். 

"இன்று நான் பிறந்தேன்" என்று வெங்கடகவி ஒரு பாடல் பாடியுள்ளார். கண்ணனால் அவர் பெருமை பெற்றதும் அவரால் ஊத்துக்காடு பெருமை பெற்றதும் உலகறிந்த செய்தியாகும். 

நாள் தோறும் கோவில் அர்ச்சகர், வெங்கட கவி துளசி மாடத்தருகே அமர்ந்து கண்ணனிடம் பாடங்கேட்டு வந்ததை நேரில் கண்டு வியப்பில் ஆழ்ந்து நிற்க நேரிட்டது. இறையருள் பெற்று வேங்கடகவி பாடிய பாடல்களைப் பக்தியோடு கேட்டு இன்புற்று மகிழ்ந்தார் அர்ச்சகர். தன் சுகனுபாவங்களைப் பிறர்க்கும் கூறி அவர்களும் அந்த பேரின்பம் பெற உதவி செய்தார். இவரால், பிறரும் வேங்கடகவியின் செயல்களைக் கண்டு வியந்து பாராட்டினார். அவர் பாடிய பாடல்களைக் கேட்டு எல்லோரும் இன்புறும் நிலையும் ஏற்பட்டது. வேங்கடகவி 65 ஆண்டு காலம் வாழ்ந்தார். வெங்கடகவியின் அமர பாடல்கள் 

இசை மூவருக்கும் முற்பட்ட வேங்கடகவியின் பாடல்கள் அமரத்தன்மை கொண்டவை. கண்ணன் ஆடலை நேரில் தரிசித்த கவியின் வாக்கில் வெளிப்படும் பாடல்கள் கண்ணன் ஆடும் நடனத்தின் தாளத்திற்கு ஏற்ப அமைபவை. "பால் வடியும் முகம்" எனத் தொடங்கும் பாடலுக்கு பொருள் புரியவேண்டுமா? நேரே வாருங்கள் ஊதுக்காடுக்கு. காளிங்க நர்த்தன பெருமாளை கண்டு களியுங்கள். அப்பாடல் முழுவதும் உண்மையே என்பது அப்போது புரியும். அவரது அற்புதக் கீர்த்தனைகள் மேலும் சில. (பாடல்களின் தொடக்கம் மட்டும் தரப்படுகின்றன) 

1. ஸ்ரீவிக்ன ராஜம் பஜே (கம்பீர நாட்டை) 2. நீரதஸமா நீல கிருஷ்ணா (ஜயந்தஸ்ரீ) 3. அசைந்தாடும் மயில் ஒன்று (சிம்மேந்த்ர மத்திமம்) 4. அலை பாயுதே கண்ணா (கானடா) 5. ஆடாது அசங்காது வா கண்ணா (மத்யமாவதி) 6. பார்வை ஒன்றே போதுமே (சுருட்டி) 7. நீல வானம் தனில் (புன்னாகவராளி) 8. யாரென்ன சொன்னாலும் (மணிரங்கு) 9. நீதான் மெச்சிக்கொள்ள வேண்டு (ஸ்ரீரஞ்சனி) 10. தாயே யசோதே உந்தன் (தோடி) 11. பால் வடியும் முகம் (நாட்டைக்குறிஞ்சி) 12. ஸ்வாகதம் கிருஷ்ணா (மோகனம்) 13. குழலூதி மனமெல்லாம் (காம்போதி) 

எனவே, பக்தர்களே! வாழ்வில் ஒரு முறையாவது ஊத்துக்காடு சென்று கண்ணனைத் தரிசிக்க வேண்டும். கட்டாயம் சென்று பாருங்கள். 

கிருஷ்ணம் சரணம் ம ம
ஷர்வம் கிருஷ்ணாய சரணம் ம ம

No comments:

Post a Comment