Friday, July 5, 2019

Vishnu Sahasranama 449 to 457 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்-43

449. யக்ஞ:- பகவான் யக்ஞஸ்வரூபன்.
450. இஜ்ய:- யக்ஞங்களால் பூஜிக்கப் படுபவன். 
451. மஹேஜ்ய:-யாகங்களால் ஆராதிக்கப்படுபவரில் சிறந்தவர். ஏனெனில் அவரைக் குறித்து செய்யப்படும் யாகங்கள் மோக்ஷபலனைத் தருபவை.

452.க்ரது:-க்ரது என்பது ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் செய்வதாகும். அக்னிஷ்டோமம் முதலிய எழுவகை யாகங்களால் ஆராதிக்கப்படுபவர். ஔபாசனம் முதலிய பாக யக்ஞங்களும் அக்னிஹோத்ரம் முதலிய ஹவிர்யக்ஞங்களும் இதில் அடக்கம்.

இதைத்தவிர க்ருஹஸ்தருக்கு விதிக்கப்பட்ட பஞ்ச மஹாயக்ஞங்களான பிரம்ம யக்ஞம் ( வேதம் ஓதுவது, கற்பிப்பது) தேவயக்ஞம் ,(தேவர்களுக்கு ஆஹுதி அளிக்கும் யக்ஞம் அல்லது தெய்வ ஆராதனை) பித்ரு யக்ஞம்(பித்ருக்களுக்கு அளிக்கப்படும் தர்ப்பணம் முதலியவை), மனுஷ்ய யக்ஞம் ( அதிதி ஸத்காரம் முதலியவை) , பிராணி யக்ஞம் ( பிராணிகளுக்கு உணவளிப்பது முதலியவை), இவைகளும் க்ரது என்பதன் கீழ் வருகின்றன. 
எல்லாம் பகவதர்ப்பணமாக செய்வதால் அவனே க்ரது எனப்படுகிறான். 'அஹம் க்ரதுரஹம் யக்ஞ: ' – கீதை. 
இன்னொரு பொருள் க்ரியத இதி க்ரது. எல்லாம் அவன் செய்கை.

453. ஸத்ரம்- இது கால வரையறையின்றி செய்யப்படுவதாகும். உலக க்ஷேமத்திற்காக பலரால் செய்யப்படுவது. அவனே க்ரது, அவனே யக்ஞம் என்பதைப் போல் அவனே ஸத்ரம் எனப்படுகிறான். 
ஸத: த்ராயதி இதி ஸத்ரம்- சாதுக்களைக் காப்பவன்- (சங்கரர்)

454. ஸதாம் பதி:- மோக்ஷத்தை நாடுவோர்க்கு அடைக்கலமாகியவர். 
455.ஸர்வதர்சீ-ஸர்வம் ஸர்வதா தர்சயதி இதி- எல்லாவற்றையும் எப்போதும் காண்பவர்.

456. நிவ்ருத்தாத்மா-நிவ்ருத்தி மார்க்கம் அதாவது உலகப்பற்றை விட்டு மோக்ஷத்தை அடையும் வழியில் செல்பவரின் உள்ளத்தில் ஆத்மாவாக இருப்பவர். நிவ்ருத்தி மார்க்கத்தை உபதேசிக்கவும், வைராக்யத்தை அனுஷ்டானத்தினால் வெளிப்படுத்தவும் நர நாராயணராக அவதரித்து எல்லா பற்றுகளையும் விட்ட ஆத்மாவாக இருப்பவர்.

457. ஸர்வக்ஞ:-ஸர்வஸ்ச அஸௌ ஞஸ்ச இதி சர்வக்ஞ:- எல்லாம் ஆகவும் எல்லாம் அறிந்தவராகவும் இருப்பவர். 
458. ஞானம் உத்தமம்- ஸத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம – தை. உப. பிரம்மம் என்பது ஸத் சித் ஆநந்தம் , உண்மையில் உள்ளது, ஞானம் , ஆனந்தம்.

  

No comments:

Post a Comment