Monday, July 15, 2019

Guru's padhuka are more than the GURU himself

குருவைக் காட்டிலும் மேலானது குருவின் பாதுகைகள்

ஸ்ரீ ராமனுஜருக்கு அமைந்த சீடர்களில் வடுக நம்பி என்பவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர்தான் அவருக்கு தளிகை செய்யும் பாக்கியம் பெற்றவர்.ஸ்ரீ ராமானுஜர் சில வேளைகளில் உணவு அருந்த மறந்தாலும் அவருக்கு நினைவூட்டி அவரை உணவு அருந்தச் செய்வது அவருடைய வேலை.குருவின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர் .தினமும் ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ ராமனுஜர் இருக்கும்போது அவருடைய வீட்டின் வழியே ஸ்ரீ ரங்கநாதர் பவனி வருவார். உடையவர் எல்லா சிஷ்யர்களையும் போய் வண்ங்கச் சொல்லுவார். ஆனால் வடுக நம்பி போகமாட்டார். அவருக்கு எல்லாமே ஸ்ரீராமனுஜர்தான் பகவானை விட குருவையே கொண்டாடினார்.குரு பக்திக்கு உதாரணமாக்த் திகழ்ந்தவர்.

ஸ்ரீ குருப்யோ நமஹ !

ஒரு முறை ஸ்ரீராமனுஜர் மைசூரிலிருந்து வேறு ஊருக்கு பயணம் புறப்பட்டார்.பயணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் வடுக நம்பிதான் கவனித்தார். எல்லா பொருட்களையும் மூட்டைகட்டிக் கொண்டு வண்டியில் ஏற்றியாகி விட்டது.ஸ்ரீ ராமனுஜர் வடுக நம்பியை கூப்பிட்டு பெருமாள் இருக்கும் பெட்டியை பத்திரமாக வைத்தாகி விட்டதா என்று கேட்டார். அப்படியே வைத்தாகி விட்டது என்று கூறினார்.கிளம்புபோது உடையவர் தன்னுடையா பாதரக்ஷைகள் எங்கே என்று கேட்டார்.

உடனே வடுக நம்பி ஆச்சாரியரே நான் அப்போதே அதை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டேன் என்றார். எங்கே வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை பெருமாள் வைக்கும் பெட்டியோடு வைத்து விட்டேன் என்றார்.உடையவர் அபசாரம் செய்து விட்டீர்களே என்னுடைய பாத ரக்ஷைகளைப்போய் பகவானுடன் சேர்த்து வைக்கலாமா?அபசாரம் அபசாரம் என்றார். அதற்கு வடுக நம்பியின் பதில்தான் அவருடை குருபக்தியை காண்பித்தது.ஆச்சார்யரே பெருமாளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டாமா உங்கள் பாதரக்ஷையுடன் சம்பந்தம் வருவதற்கு என்றார்.அப்பேற்பட்ட சஞ்சலமில்லாத குருபக்தி.குருவை விட, பகவானை விட குருவின் பாதுகைகளே சிறந்தது என்கிறது பக்தி.

No comments:

Post a Comment