Monday, July 15, 2019

Glory of Shraddha

*ஶ்ராத்தத்தின் பெருமை* 

वसुरुद्रादितिसुताः पितरः श्राद्ध देवताः ।
प्रीणयन्ति मनुष्याणां पितृन् श्राद्धेन तर्पिताः ।
आयुः प्रज्ञां धनं विद्यां स्वर्गं मोक्षं सुखानि च ।
प्रयच्छति तथा राज्यं प्रीता नृणां पितामहाः ।।

வஸுருத்ராதிதிஸுதா: பிதர: ஶ்ராத்த தேவதா: ।
ப்ரீணயந்தி மநுஷ்யாணாம் பித்ருந் ஶ்ராத்தேந தர்பிதா: ।।
ஆயு: ப்ரக்ஞாம் தநம் வித்யாம் ஸ்வர்கம் மோக்ஷம் ஸுகாநிச ।
ப்ரயச்சந்தி ததா ராஜ்யம் ப்ரீதா ந்ருணாம் பிதாமஹா: ।।

வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் என்றவர்கள் ஶ்ராத்த தேவதைகளான பித்ருக்களாவர். அவர்கள் ஶ்ரார்த்தத்தினால் த்ருப்தி செய்யப்பட்டவராய் மனுஷ்யர்களின் பித்ருக்களை திருப்தி செய்விக்கின்றனர். மனிதர்களின் பித்ருக்கள் த்ருப்தர்களாய் ஆயுஸ், நல்லபுத்தி, தனம், வித்யை, ஸ்வர்கம், மோக்ஷம், ஸுகங்கள், ராஜ்யம் இவைகளைக் கொடுக்கின்றனர்.

ஆகையால் எவ்வித முயற்சி செய்தாவது இந்த மஹா புண்யமான ஶ்ராத்தத்தை ஶ்ரத்தையாக அனுஷ்டிக்க வேண்டும்.

*स्मृति मुक्ताफळे*

No comments:

Post a Comment