Friday, June 7, 2019

Sanskrit Sloka while keeping food to Crow

காகத்திற்கு சோறு வைக்கும் போது பலி மந்திரம் சொல்லுங்க!

தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த 'பலி மந்திரம்' சொல்வது சிறப்பு.

பெருமாள் பக்தர்கள்,

"பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன!
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா!"

என்று சொல்லி சோறு இட வேண்டும்.
இதை சொல்ல முடியாதவர்கள்

'மகாபலி, விபீஷணர், பீஷ்மர், கபிலர், நாரதர், அர்ஜுனர் முதலிய விஷ்ணு பக்தர்கள் இந்த விஷ்ணு பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும்' என்று சொல்லி வழிபடலாம்.

சிவ பக்தர்கள்,

"பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய!
மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவா"

என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

'பாணாசுரன், ராவணன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், பிருங்கி முனிவர் முதலிய சிவனடியார்கள் இங்கு வைத்திருக்கும் சிவ பிரசாதத்தை அன்புடன் ஏற்க வேண்டும்' என்பது இதன் பொருள்.

இரண்டையும் சேர்த்தும் சொல்லலாம்.

No comments:

Post a Comment